Wednesday, January 28, 2015

வானுயர்ந்த சோலையிலே.....

அல்ஜீரியாவின் கட்டிடக்கலை உலகப்பிரசித்தி பெற்றதாகும்.
அங்கு உருவாகிக் கொண்டிருக்கிறது உலகின் மிக உயரமான (870 அடிகள்) மினரா கொண்ட பள்ளிவாசல்.

1,20,000 பேர் தொழுகையில் கலந்து கொள்ளும் விதமாக மிக விசாலமாக, அல்ஜீரிய வளைகுடாப் பகுதியின் கடற்கரை ஓரமாக இந்தப் பள்ளிவாசல் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தப் பள்ளியில் குர்ஆன் கல்வி பயிலரங்கம், நூலகம், அருங்காட்சியகம், குடியிருப்புகள், மலர்வனம் மற்றும் பழத்தோட்டம் போன்றவையும் அமைக்கப்படவுள்ளது.

Sunday, January 25, 2015

மெளனமாய் உதிர்ந்த மகுடம்!

முடியரசின் மன்னரவர்
மரணத்தைச் சந்திக்க
துடிதுடித்து மக்களெல்லாம்
துயரத்தைக் கொண்டாலும்

முடியதுவும் உதிர்வதுபோல்
மரணங்கள் இயல்பென்றே
குடிமைகளும் அறிந்ததனால்
கூப்பாடு போடவில்லை.

விடுமுறைகள் வேண்டவில்லை.
வீதியிலே கூடவில்லை
கொடுஞ்செயல்கள் வன்முறைகள்
கொலைகளவு நாடவில்லை.
படபடக்கும் கொடிகூட
பார்வைக்குத் தாழவில்லை.
அடம்பிடித்து படம்பிடித்து
ஆன்மநலம் தே(ற்)றவில்லை.

Wednesday, January 21, 2015

ஹஜ் புனித பயணத்திற்கான விண்ணப்பங்கள், ஜனவரி 19 முதல் விநியோகம்!


சென்னை: தமிழக அரசின் மூலமாக ஏற்பாடு செய்யப்படும் ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தமிழக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் , ''2015 இல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து சில விதி முறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

Saturday, January 17, 2015

இளைய தலைமுறையே….!


இதய நெருப்பை
எரியவிட்டு
நிம்மதியுடன்
இருக்க முடியுமா?

தூரத்தை மனக்கண்ணால்
பார்த்துவிட்டு
படுத்துக்கொண்டால்
பயணம் முடியுமா ?

Friday, January 16, 2015

இந்தியாவில் இன்றைய முஸ்லிம்களின் கல்விநிலை மற்றும் பைத்துல் ஹிக்மா

சகோ. CMN சலீம் அவர்கள் கடந்த ஜனவரி 8. 9 & 10 ஆகிய தேதிகளில் சவூதி அரேபியாவின் கிழக்கு மகாணத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கல்வி கருத்தரங்களில் கலந்துகொண்டார். கடந்த 09-01-2014 அன்று ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ஆற்றிய உரையை, மக்கள் பயன் பெரும் வகையில் வெளியிடுகின்றோம். அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ.

இஸ்லாமிய வழி கல்வி முறையை நடைமுறைப்படுத்த ஆர்வமுடையவர்கள் மேலகதிக விவரங்களுக்கு சகோ. CMN சலீம் அவர்களை தொடர்புகொள்ளவும் +91 98401 52251

தலைப்பு: இந்தியாவில் இன்றைய முஸ்லிம்களின் கல்விநிலை மற்றும் பைத்துல்ஹிக்மா

இடம்: சமி அல்-துகைர் பள்ளி வளாகம் – ராக்கா – சவூதி அரேபியா

நிகழ்ச்சி ஏற்பாடு: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் (தமிழ் பிரிவு)

வீடியோ. தென்காசி SA ஸித்திக் நன்றி : http://www.islamkalvi.com/

Thursday, January 15, 2015

"நீங்கள் காயிதெ மில்லத் பேரர்தானே"?என்று. நான் "ஆம்"என்றேன்/ Hilal Musthafa

சென்னை புத்தகக் கண்காட்சிக்குச்
சிலதினங்களாக நான் சென்று வருகிறேன்
நல்ல பல தரவுகள் குவிந்து கிடக்கின்றன ஒரு பெரும் செல்வந்தனாக இல்லையே என்ற
ஏக்கம் எனக்குள் நிரம்பி வழிகின்றது
இன்று(15-1-2015)மாலை6- மணி அளவில் மலைகள் பதிப்பகம் ஸ்டாலில்

நண்பர் நிஷா மன்சூரின்"நிழலில் படரும் இருள்" என்ற கவித் தொகுப்பு வெளியிடப்பட்டது
இனிய நண்பர் நிஷா மன்சூரின் கரங்களால் அவர் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டேன்
மறவாமல் கவிஞர் என்னிடம் கேட்டார்,

"நீங்கள் காயிதெ மில்லத் பேரர்தானே"?என்று.
நான் "ஆம்"என்றேன்
உறவுமுறையிலும் இது உண்மைசொந்தக்
உணர்வு முறையிலும் இது நிஜம்
எனினும் எனக்கென்று ஒரு சொந்தக்
கருத்துண்டு
"சாதனையாளர்கள் எங்கள் முன்னோர்கள் அவர்களின் ரத்த
பந்தங்கள் நாங்கள்"எனச் சொல்லிக்
கொள்வதில் எனக்குப் பூரணமான
உடன்பாடு கிடையாது
இதை ஆணவச் செருக்கில் சொல்லிக் கொள்ளவில்லை
மக்களுக்குச் சேவை செய்வதையே
வாழ்வாக்கிக் கொண்ட அந்தப் பென்னம் பெரியவர்களின் வழிவாறு நாங்கள் என்பதில் மகிழ்ச்சி இருந்தாலும்
அது என்னை அறிமுகப் படுத்திக்
கொள்வதற்கு ஒரு அடையாளமாக
இருக்கும்வரை ஆபத்தில்லை
அதனை ஒரு சலுகைக்காகவும்
பெருமிதத்துக்காகவும் நான் சொல்லித்
திரிந்தாலோ அல்லது பிறர் சொல்லக்
கேட்டுப் பூரிப்படைந்துகொண்டாலோ
அந்தச் சாதனையாளர்களுக்குத் தீங்கிழைத்து விட்டவனாக ஆகிவிட்டேனோ என்கிற பயம் எனக்குள்
எழுகிறது
எனவே ஒரு சின்ன விளக்கம் சொல்ல
வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி விட்டேன்

Monday, January 12, 2015

முஸ்லிம்கள் தலைப்புச் செய்திகளாக்கப்படுவது எப்போது?

முஸ்லிம்கள் தலைப்புச் செய்திகளாக்கப்படுவது எப்போது?
பிரான்ஸ் அங்கத இதழான 'சார்லி ஹெப்டோ'வை குறிவைத்துத் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் கொல்லப்பட்ட முதல் நபர் அப்பாவியான அகமது மெராபத். இந்தப் பத்திரிகையின் தலைமையகத்தின் சைட்வாக்கில் அந்தப் பிரெஞ்சு இஸ்லாமிய போலீஸ்காரர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சார்லி ஹெப்டோ அலுவலகத்திற்குள் நுழைந்து எடிட்டர், அற்புதமான கார்ட்டூனிஸ்ட்கள் ஆகியோரை கொல்வதற்குச் சில கணங்கள் முன்னால், மூன்று தீவிரவாதிகளில் ஒருவரால் துப்பாக்கி முனையில் மெராபத் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாரீஸ் துப்பாக்கிச் சூடு பற்றிய மீடியாக்களின் கவரேஜ் எல்லாம் ஸ்டேபானே சார்போன்னியர், ஜார்ஜஸ் வோலின்ஸ்கி, ழான் காபுட், பெர்னார்ட் வெர்ல்ஹாக் என்று சார்லி ஹெப்டோ சம்பவத்தில் கொல்லப்பட்ட முக்கியமான சார்லி ஹெப்டோவை உருவாக்கிய மூளைகள் பற்றியே பேசின.

"ஒருவர், அநியாயமாக மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்; ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்" அல்குர்ஆன்: 5:32

"இஸ்லாத்தின் பெயரால்" ஆங்காங்கே நிகழ்த்தப்படும் பயங்கரவாதச் செயல்களுக்கும் அமைதி மார்க்கமாம் இஸ்லாத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இச்சதிகாரர்களின் பின்னணி வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டும். சத்தியமார்க்கம்.காம் குழுமம், இத்தகைய பயங்கரவாதத்தை மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

:"மது" தனிமனித & சமுதாய கேடு

இரண்டு வருடங்களுக்குமுன் எமது தாயார் பஞ்சாயத்து தேர்தலில் நின்றபொழுது என் நண்பர் என்னை அழைத்து "பசங்களுக்கு சரக்கு வாங்கி தந்தால் நிச்சயம் ஜெய்த்துவிடலாம்" என்றார். அதற்க்கு அவர் தோற்பதை நான் பெருமையாக கருதுகிறேன் என்று கூறிவிட்டேன். தனிமனித இழப்புகள் சமுதாய இழப்புகளைவிட பெரிதல்ல என்பதை நாம் உணரவேண்டும்.

இஸ்லாமிய மார்கத்தை ஏற்க்கும் முன் எனக்கும் குடிப்பழக்கம் இருக்கத்தான் செய்தது அதற்க்கு காரணம் அது அவமான சின்னமாக என் சமுதாயத்தில் இருந்ததில்லை. ஊரும் சமுதாயமும் குடும்பங்களும் அதனை ஏற்று பழகிஇருந்தது, எனவே குடியில் பெரும் நாட்டம் இல்லாத எனக்கும் அந்த பழக்கம் இருக்கத்தான் செய்தது. ஆனால் இஸ்லாமிய சமுதாயம் என்னை மாற்றியது! எந்தவொரு மத விழாக்களின்பொழுதும் டாஸ்மாக் நிரம்பி வழிவதையும் பார்க்க முடியும்! ஆனால் இஸ்லாமிய பண்டிகையை கவனித்தவர்களுக்கு தெரியும் குடி பழக்கமு உள்ள ஒருசிலரும் அன்று குடிப்பதை விடுத்து தொழுகைக்கு சென்று விடுவார். ஆனால் மற்ற சமுதாயத்தில் குடிபழக்கம் இல்லாத சிலரும் விழா நாட்கள் அன்று போதைக்கு விலையாகிவிடுவார்.ஒரு முறை குடித்தால் அந்த இஸ்லாமியர் அந்த மது ரத்தத்தில் இருக்கும் வரை அவர் தொழ முடியாது மேலும் 40 நாட்களின் தொழுகை பாழாகி போகும் என்பதை ஒவ்வொரு இஸ்லாமியர்க்கும் தெரியும். எனவே இறையச்சம் அதிகம் கொண்ட சமுதாயத்தில் குடி பழக்கம் வெகு குறைவு, குடிப்பவர் கூட அதை வெளிப்படுத்த வெட்கப்படுவார்.

இருட்டு ... அதுதான் நிஜத்தின் வெளிச்சம் !

இருட்டு ...
அதுதான்
நிஜத்தின் வெளிச்சம் !

இருட்டு...
உலகத்தின்
மாய வண்ணனங்களும்
ஞான எண்ணங்களும்
ஒளிந்து கிடக்கின்ற
அதிசயக் கிணறு !

இருட்டுதான்
வெளிச்சத்தின்
தாய்வீடு !

ஹிராவின்
கர்ப்ப இருட்டில்தான்
இறைவனின் வேதம்
வெளிச்சமாய் பிறந்தது !

இருட்டு இல்லையென்றால்
ஜிப்ரீலின் உருவம்
வெளிச்சப்பட்டிருக்காது !

தவ்ரின் இருட்டு
போர்வைதான்
பெருமான் நபிகளை
போர்த்தி வைத்தது !

அய்யாமுல் ஜாஹிலிய்யா
அகிலத்தை
ஆக்கிரமிப்பு செய்ததால்தான்
நூரே முஹம்மதியா
இறங்கி வந்தது !

இருட்டிலிருந்துதான்
உலகம் தோன்றியது
இருட்டுக்குப் பிறகுதான்
இறுதி நாளும் வருகிறது !

இருட்டு
இறந்து போகும்
ஒரு நாளில்தான்
சொர்க்கமும்
ஜனிக்கப் போகிறது !
 

@ படம் ...
நேற்று நான் எடுத்தது.
இந்த படம் தந்த சிந்தனை
இந்த இருட்டை பற்றிய கவிதை !
 

Friday, January 9, 2015

கடமையென்ற கரு ஒன்று; கற்றுத்தரும் பாடமுண்டு;/ யாசர் அரபாத்

 
 
கடமையென்ற கரு ஒன்று;
கற்றுத்தரும் பாடமுண்டு;
ஐவேளைப் பிரித்துக் கொண்டு;
அழகாய் நீயும் தொழுவது நன்று!

நெருக்கத்தோடுத்
தோளைக்கொண்டு;
நொறுக்கித் தள்ளு;
தீண்டாமை இன்று!

பயிற்சிப் பெற்ற
இராணுவமும்
மிரட்சிக் கொள்ளும்;
நம் ஒழுங்கைக் கண்டு!

தக்பீர் சொன்ன
குரலைக்கேட்டு;
சப்தம் குலையும் நம்
அமைதிக்கண்டு!

தொழுகை என்ற
கவசம் கொண்டு;
தீமையைக் கொல்வாய்
உடனே இன்று!

Monday, January 5, 2015

நெற்றிக் காய்ப்பு - கவிமாமணி பேராசிரியர் தி.மு. அப்துல் காதர்

தலைவணங்காச்
சாத்தானிய நெருப்பணைக்க
ஆண்டவன் எறிந்த
ஆதி ஆத மண் உருண்டை

மூல ஒளி தேடும்
மாதிரிகளின் சுடர்
மகுட மாணிக்கம்

மறுமையில் நிகழும்
மனிதத் தேர்தலில்
என்றும் ஆள்பவனுக்குக் காட்டும்
அடையாள அட்டை
ஐம்புலத்
தலைநிலத்தில்
மண்விதைத்த
மகரந்த விதை
ஆம்
வீடுபேற்றுக் கனி
விதை

LinkWithin

Related Posts with Thumbnails