சிலதினங்களாக நான் சென்று வருகிறேன்
நல்ல பல தரவுகள் குவிந்து கிடக்கின்றன ஒரு பெரும் செல்வந்தனாக இல்லையே என்ற
ஏக்கம் எனக்குள் நிரம்பி வழிகின்றது
இன்று(15-1-2015)மாலை6- மணி அளவில் மலைகள் பதிப்பகம் ஸ்டாலில்
நண்பர் நிஷா மன்சூரின்"நிழலில் படரும் இருள்" என்ற கவித் தொகுப்பு வெளியிடப்பட்டது
இனிய நண்பர் நிஷா மன்சூரின் கரங்களால் அவர் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டேன்
மறவாமல் கவிஞர் என்னிடம் கேட்டார்,
"நீங்கள் காயிதெ மில்லத் பேரர்தானே"?என்று.
நான் "ஆம்"என்றேன்
உறவுமுறையிலும் இது உண்மைசொந்தக்
உணர்வு முறையிலும் இது நிஜம்
எனினும் எனக்கென்று ஒரு சொந்தக்
கருத்துண்டு
"சாதனையாளர்கள் எங்கள் முன்னோர்கள் அவர்களின் ரத்த
பந்தங்கள் நாங்கள்"எனச் சொல்லிக்
கொள்வதில் எனக்குப் பூரணமான
உடன்பாடு கிடையாது
இதை ஆணவச் செருக்கில் சொல்லிக் கொள்ளவில்லை
மக்களுக்குச் சேவை செய்வதையே
வாழ்வாக்கிக் கொண்ட அந்தப் பென்னம் பெரியவர்களின் வழிவாறு நாங்கள் என்பதில் மகிழ்ச்சி இருந்தாலும்
அது என்னை அறிமுகப் படுத்திக்
கொள்வதற்கு ஒரு அடையாளமாக
இருக்கும்வரை ஆபத்தில்லை
அதனை ஒரு சலுகைக்காகவும்
பெருமிதத்துக்காகவும் நான் சொல்லித்
திரிந்தாலோ அல்லது பிறர் சொல்லக்
கேட்டுப் பூரிப்படைந்துகொண்டாலோ
அந்தச் சாதனையாளர்களுக்குத் தீங்கிழைத்து விட்டவனாக ஆகிவிட்டேனோ என்கிற பயம் எனக்குள்
எழுகிறது
எனவே ஒரு சின்ன விளக்கம் சொல்ல
வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி விட்டேன்
காயிதெ மில்லத் நெல்லை பேட்டை பகுதிக்குரியவர்கள் என் முன்னோர்
தென்காசிப் பகுதிக்குச் சொந்தக்காரர்கள்
இரண்டு தலை முறையினரும் நீண்ட காலமாக
தொடர்புடையவர்கள்தாம்
ஆடுதுறை ஜமால் முஹம்மது சாஹிபின்
தம்பி ஜமால் அப்துல்லாஹ் அவர்களின்
மூத்தமகளார் ஜமால் ஃபாத்திமா பீவியை
எங்கள் தாதா மு .ந.அப்துர் ரஹ்மான் சாஹிப் திருமணம் புரிந்திருந்தார்
அப்துல்லாஹ சாஹிபின் அடுத்த மகள்
ஜமால் மர்யம் பீவியை எனது சிறிய தாதா மு.ந.முஹம்மது சாஹிப் திருமணம்
செய்திருந்தார்
ஜமால் அப்துல்லாஹ் சாஹிபின் மற்றொரு மகள் ஜமால் ஹிமீதாபீவியை
முஹம்மது இஸ்மாயீல் சாஹிப்(காயிதெ மில்லத்)திருமணம் செய்திருந்தார்
மூன்று சகோதிரிகளை நெல்லையைச்
சேர்ந்த மூவரும் திருமணம் புரிந்திருந்தனர்
காயிதெ மில்லத்திற்கு ஒரே மகன்தான்
அவர் மியான்கான்Ex M L. C
மியான்கானுக்கு இருபெண்கள்(ஹிப்பத் ஃபாத்திமா, நுஸ்ரத்)ஒரே ஆண்மகன்(என் தம்பி தாவூத் மியான்கான்) மட்டுமே பிறந்திருந்தனர்
முஹம்மது இஸ்மாயீல் சாஹிபுடைய பேரர்கள் இந்த மூவர்தாம்
என்னுடைய தாதா அப்துர் ரஹ்மான் சாஹிபிற்கு இருமகன்கள் ஒரேமகள்
மூத்தமகன் A.K.ரிபாய் Ex M.P.இரண்டாவது மகன் A.சாகுல் ஹமீது Ex.M.L.A. மகள் ஹைருன்னிஷா
முஹம்மது சாஹிபிற்கு இருஆண் இருபெண்
மூத்தவர் நெல்லை அநாதை நிலையத்தின் தலைவராக இருந்த
ஜமால் முஹம்மது
நெல்லையைச் சார்ந்த அப்துர் ரஹ்மான்
முஹம்மது முஹம்மது இஸ்மாயீல் என்ற
இந்த மூன்று சகலபாடிகளும் வாழ்க்கை
முழுவதுமே சமூகத்திற்காகத் தங்களை
அர்ப்பணித்துக் கொண்டவர்கள்
அப்துர் ரஹ்மான்1950ஆண்டுகளில் சென்னைச் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்
அவர் தம்பி முஹம்மதுசாஹிப் 1939ஆண்டுகளில் சென்னைச் சட்டமன்ற
மேலவை உறுப்பினராகப் பணியாற்றினார்
தமிழ்நாட்டில் அண்ணலார் வரலாற்றைத்
தமிழில் முதலில் எழுதியவர்(திருநபி சரித்திரம்)இவர்
காயிெ மில்லத்தின் பொதுவாழ்வைச்
சொல்லித் தெரியவேண்டியதில்லை
காயிதெ மில்லத்தின் நேரடியான வாரிசு முதல் பேத்தி டாக்டர் ஹிப்பத் ஃபாத்திமாவை என்னுடன் பிறந்த மூத்த அண்ணன் நத்தர்பாவா ஜலால் திருமணம் புரிந்துள்ளார்
இப்படி எங்கள் குடும்பங்களுக்கு
இடையே பின்னிப் பிணைந்த அணுக்க
நெருக்க உறவுகள் இருக்கின்றன
இங்கே இப்படி சொல்வதற்குக்
காரணம் எங்கள் பரம்பரைக் கீர்த்தியைத்
தம்பட்டம் அடித்துக கொள்ளயல்ல
ஒரு அடையாளத்திற்கு இதைச் சொல்லலாம்
எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்வை
நெறியை எங்களில் எவரும் கடைபடிக்கவில்லை என்றால்
இந்த பரம்பரை வாரிசு எனச் சொல்லிக் கொள்ளும் தகுதியை இழந்து விடுவார்கள்
அவர்களின் பௌதிகச் சொத்துக்களுக்கு வாரிசாகப் பத்திரங்களில் வேண்டுமானால்
பதிவு செய்து கொள்ளலாம்
எங்கள் முன்னோர்களுக்கு கிடைத்த
பெருமைகள் எல்லாம் இறைவன் வழங்கிய அருட்கொடை
இந்தச் சமூகம் அவர்களுக்கு அள்ளித் தந்த ஆனந்த உரிமைகள்
அப்துர் ரஹ்மான் முஹம்மது சாஹிப்
முஹம்மது இஸ்மாயீல் இப்பெயர்கள்தாம் அவர்களுக்கு
இட்ட பெயர்கள்
மேடை பெரிய முதலாளி மேடை சின்ன முதலாளி காயிதெ மில்லத் இவைகள்
சமூகம் அவர்களுக்கு வாரிவழங்கிய
அடைமொழி பாக்கியங்கள்
இவர்களையும் இவர்கள் கோட்பாட்டையும் ஏற்றுக் கொண்ட
என் வயதொத்த அனைவரும் அவர்களின் நேரடி வாரிசுகள்தாம்
அந்த உரிமை அவர்களுக்குத்தாம் உண்டு
நாங்கள் அவர்களின் பௌதிகச் சொத்திற்குத்தான் பேரர்கள்
அவர்களுக்கோ சமுதாயம்தான்
சமுதாயத்திற்கோ அவர்கள்தாம்
சொத்து
அந்தத் தகுதி இருக்கிற அனைவருமே
அவர்களின் பேரர்கள்
அந்தத் தகுதி எங்களில் எவருக்கெல்லாம் இல்லையோ அவர்கள் எல்லாம்
பேரர் தகுதி இழந்தவர்கள்தாம்
இந்த அடிப்படையில் யார் யார் அவர்களின் பேரர்கள் என்பதைச் சமுதாயம்தான் தீர்மானிக்க வேண்டும்
Hilal Musthafa
*******************************************************************************
நிஷா மன்சூர் மற்றும் அவரது பிள்ளைகளுடன் Mohamed Ali
பேரன் சமீர் அலி( நிஷா மன்சூர் குழநதையை வைத்துக்கொண்டு நிற்கிறார் )
2015 இந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் 15-ம்தேதி மாலை ஐந்தரை மணியளவில் நிஷா மன்சூர் இரண்டாம் கவிதை நூலான "நிழலில் படரும் இருள்" வெளியாகிய பொழுது எடுத்த படம்
1 comment:
அண்ணன் அவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்
தங்களின் மீள் பதிவுக்கு மனம் நிறைந்த நன்றி.
எனக்குச் சரியாக டைப் செய்யத் தெரியாததால் சில எழுத்துப் பிழைகள்
மலிந்து விட்டன
இனிமேல்அவற்றைத் தவிர்க்க முனைகிறேன்
Post a Comment