Wednesday, January 28, 2015

வானுயர்ந்த சோலையிலே.....

அல்ஜீரியாவின் கட்டிடக்கலை உலகப்பிரசித்தி பெற்றதாகும்.
அங்கு உருவாகிக் கொண்டிருக்கிறது உலகின் மிக உயரமான (870 அடிகள்) மினரா கொண்ட பள்ளிவாசல்.

1,20,000 பேர் தொழுகையில் கலந்து கொள்ளும் விதமாக மிக விசாலமாக, அல்ஜீரிய வளைகுடாப் பகுதியின் கடற்கரை ஓரமாக இந்தப் பள்ளிவாசல் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தப் பள்ளியில் குர்ஆன் கல்வி பயிலரங்கம், நூலகம், அருங்காட்சியகம், குடியிருப்புகள், மலர்வனம் மற்றும் பழத்தோட்டம் போன்றவையும் அமைக்கப்படவுள்ளது.
இந்தப் பள்ளிக்கு வருகைபுரிவோருக்கு வசதியாக தரைவழி, நீர்வழி (படகு) மற்றும் ஆகாயவழி (டிராம்) ஆகிய போக்குவரத்து வசதிகள் செய்யப்படுவதாகவும் அந்நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு (2016) திறக்கப்படவுள்ள இப்பள்ளிவாசலின் தொழில்நுட்பப் பணிகளில் ஜெர்மானிய வல்லுநர்களும், கட்டுமானப் பணிகளில் சீன வல்லுநர்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

ஃபிரான்ஸில் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக நடைபெற்ற போரில், உயிர்நீத்த இலட்சக்கணக்கான அல்ஜீரிய விடுதலைப் போர் தியாகிகளை நினைவு கூறும் விதமாக, இந்த வானுயர மினரா அமைக்கப்படுகிறது என்று அந்நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார்.

 
 தகவல் தந்தவர் Rafeeq Friend

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails