Saturday, July 26, 2014

பால்மணம் மாறாப் பாலகர்களைக் கொல்லும் பாவிகள்!

உதைபந் தாட்டத்தின்

உலகக்  கூட்டத்தில்

வதைபந் தாட்டத்தின்

வலிகள் காணோமே!


வெடிகளே கும்மிருட்டை

வெளுப்பென காட்டுதலால்

விடிவினை காண்பதில்லை

விரயமே வாழ்தலிலே!

Friday, July 25, 2014

பழி போக்க வரும் வழிபோக்கர்கள் !


ரமழான் முதல் பிறை
வரும்போது வரும்
சந்தோஷத்தைப்போல
நீங்கள் வருவதைப்
பார்க்கும்போதும்
சந்தோஷம் வருகிறது!

நீங்கள் -
வனப்பிழந்து கிடக்கும்
எங்கள் வீதிகளுக்கு
வாழ்த்துக்களால்
விளக்கேற்றி வைக்க வரும்
விண் மீன்கள்!

Thursday, July 24, 2014

கத்தார் நாடு தன் பெருநாள் கொண்டாட்டங்களை நிறுத்தி வைத்துள்ளது .....

காலை செய்தி ....கத்தரிலிருந்து ................

எங்கள் மரியாதைக்குரிய மனித நேயருக்குப்பிறந்த மனித நேயர் கத்தார் மன்னர் ஷேக் தமீம் அவர்கள் அறிவித்துள்ளார்கள் ..............செய்தி யாதெனில்

காஸா பாலஸ்தீன மக்கள் படும் அவதியில் பங்கு கொள்ளும் விதமாக கத்தார் நாடு தன் பெருநாள் கொண்டாட்டங்களை நிறுத்தி வைத்துள்ளது .......ஆகவே அரசாங்க கொண்டாட்டங்கள் இந்தாண்டு சிறியதோ பெரியதோ எதுவும் நடைபெறாது.

ரமளான் தூது

(முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ )


அல்ஹம்து லில்லாஹி அகிலத்துப் புகழெல்லாம்

  அன்பாளும் அருளாளும் ஈருலகை அரசாளும் !

அல்லாஹு வல்லவனே ! உன்பாதம் காணிக்கை !

  அருள் தா என் நல்லவனே ! அதுதான் என்கோரிக்கை !

சொல்லாலும் செயலாலும் பேருலகைக் காப்பதற்கு

  சன்மார்க்க நெறிதந்த சாந்தி நபி நாதருக்கு –

ஸல்லல்லாஹு என்ற ஸலவாத்து மலர் தூவி

  சங்கையினை சமர்பித்து கவிதையினைப் பாடுகிறேன் !


Saturday, July 19, 2014

பூக்களைப்போல பிள்ளைகளை நாம் வளர்க்கிறோம் !

பூக்களைப்போல
பிள்ளைகளை நாம் வளர்க்கிறோம் !
காற்றுக்கூட

அதிகம் தீண்டாமல்
அவர்களை நாம் காக்கிறோம் !
முத்தங்களால்
யாரும் அசுத்தம் செய்வதை கூட
அருவருப்பாய் உணர்கிறோம் !

இஸ்லாம் வலியுறுத்தும் நோன்பு என்பது, மதக்கடமை என்பதையும் தாண்டி அறிவியல் பூர்வமான உண்மை

நோன்பு வைக்கும் முஸ்லிம்களை அழைத்து, இப்தார் விருந்து கொடுத்து வருபவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன். அத்தகைய விருந்தில் நோன்பாளிகளுடன் பங்கேற்கும் அவர், நோன்பு நோற்காமல் வெறுமனே கஞ்சி குடிப்பதை தவிர்த்து, அவரும் நோன்பிருந்து வருகிறார். 10 ஆண்டுகளாக நோன்பைக் கடைபிடித்து வரும் அவர், தன் சகாக்களையும் நோன்பிருக்கத் தூண்டுகிறார்.

Wednesday, July 16, 2014

“மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே! "

1. நான் மிகப்பெரிய பணக்காரன் எனக்கு ஏறக்குறைய ஏக்கர் கணக்கில் நிலம் புலன்கள் உள்ளது. ஆகவே எனக்கு “மரணம்” வரவே வராது எனச் சொல்லவோ !

2. நான் சமுதாயத்திற்கு பல சேவைகள் செய்த மிகவும் அந்தஸ்துடன் கூடிய சமுதாயத் தலைவர் ஆகவே எனக்கும் “மரணம்” வராது என்றோ !

3. இல்லை....இல்லை......நான் “அல்ஹாஜ்” பல முறை ஹஜ் செய்துள்ளேன், தினமும் தொழுவேன், பெரிய தாடி வைத்துள்ளேன், அழகியத் தொப்பி அணிந்துள்ளேன் ஆகவே எனக்கும்தான் “மரணம்” வராது என்றோ !

4. அட போங்கங்க......நான் அன்றாடம் உழைத்துச் சாப்பிடக்கூடிய பரம ஏழைங்க.........நான் யாருக்கும் எந்த பாவங்களையும் செய்யாமல் அல்லாஹ்விற்கு அஞ்சி நடப்பவனுங்கோ ஆகவே என்னை “மரணம்” அண்டவே அண்டாதுங்கோ என்றோ !

5. மார்க்கத்தில் பல பட்டங்கள் பெற்ற அறிவாளி நான்............தினமும் வீடும் மஸ்ஜித்மாக அல்லாஹ்வைத் தொழுதுகொண்டே இருப்பேன்.......வேண்டும் என்றால் எனது நெற்றியைப் பாருங்கள் “கருமை நிறத்தழும்பு” அதில் பதிந்து இருக்கும் என்றோ !

Tuesday, July 15, 2014

கரு வளர்ச்சிப்பற்றி அல்குர்ஆன்!

கனடா நாட்டில் இருக்கும் Toronto நகரில் வாழும் மிகப்புகழ் பெற்ற கரு வளர்ச்சி நிபுணர் Dr.Keith L.Moore என்பவர் நயாகரா நீர் வீழ்ச்சி பகுதியில் நடை பெற்ற இஸ்லாமிய மருத்துவர் சபையின் 18 வது ஆண்டு கூட்டதில் ஓர் உரை நிகழ்த்தினார். அந்த உரையில் டாக்டர் மூர் மனிதக் கரு வளர்ச்சி மற்றும் இனப் பெருக்கத்தைப் பற்றிப் பேசக்கூடிய புனித  திருக்குர்ஆனின் வசனங்களை விளக்கினார். ”

திறுமறை நெடுகிலும் மனித வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்தைப் பற்றிய வசனங்கள் காணக்கிடக்கின்றன” என அப்போது குறிப்பிட்டார். சமீபகாலமாக திருமறையின் ஒரு சில திரு வசனங்களின் பொருள் முழுமையாக விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளன என்றார். அவர் தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வசனங்களையும், அவர் தரும் விஞ்ஞான விளக்கத்தையும் கான்போம்.

Friday, July 11, 2014

யா அல்லாஹ் ...!


கருணை உள்ளமாய் என்னை படைத்தாய்
யா அல்லாஹ்
நன்றி செலுத்திடல் வேண்டும்
என் மனமாற உன்னை நினைத்து தொழுது

பிறப்பிலே தந்திட்டாய் முஸ்லிம் நாமம்
மார்க்கத்திலோ பற்றுள்ள மனசு

அருள் மறை திரு மறையில் உலகின் அத்தாட்(ச்)சி
தஜ்விதாய் ஓதிட அவை மனதில்
நிச்சயம் கிடைக்கும் பயன் (பலன் )
உலகம் உள்ளவரையில்

Tuesday, July 8, 2014

" பெண் பிள்ளைகள் விற்கப்படுவதில்லை "

பாத்திமா...
கண்மணி ரசூலுல்லாஹ்வின்
கண்மணி மகள் !
பருவ வயது மகள் ...
மணமுடிக்கும் நேரம் !
மதினாவின் பெரும் பெரும் செல்வந்தர்கள்
நபிகளார் மகளை பெரும் மகர் கொடுத்து
மணமுடிக்கக் காத்திருந்தார்கள் !

ஆனாலும் அண்ணலாரிடம் சென்று
பெண் கேட்க அச்சம் !

இயக்க வெறி தவிர்த்து இயக்கங்கள் கொள்கை தெளிவு பெற வேண்டும்

by: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

எமது நாட்டில் தீவிரவாத இனவாதக் குழுவொன்று சில வருடங்களாகவே இனவாத விஷ விதையை நாட்டில் வளர்த்து வருகின்றது. இக்குழுவினால் சிறுபான்மை சமுதாயங்களுக்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான எண்ண அலைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களது மத, பொருளாதார, சமூக நிலவரங்கள் பேரினவாத சஞ்சிகைகளில் இலக்குகளாக மாறியுள்ளன. முஸ்லிம்களது பள்ளிவாசல்களையும் வர்த்தக நிலையங்களை யும் இதனால்தான் குறிவைக்கின்றனர்.

Monday, July 7, 2014

தமிழ் முஸ்லிம் நூலகம் பற்றி

எல்லையில்லா அருளாளன் இணையில்லா அன்புடையோன்
அல்லாஹ்வின் திருப் பெயரால்...........
இனிய இணைய தள நேயர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த
அஸ்ஸலாமு அலைக்கும்.
இணைய உலகில் இனிய தமிழில் கட்டுரைகள், கவிதைகள், மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் தங்கள் மனதைப் பறிகொடுத்த இணைய ஆர்வலர்களின் ஆவலைப்பூர்த்தி செய்யும் விதத்தில் இணையத்தில் காணக்கிடைக்கும் இஸ்லாமியத் தமிழ் நூற்களை ஒழுங்குப்படுத்தி ஒரு இணைய நூலகத்தை உருவாக்கினால் தமிழ் கூறு நல்லுகம் பயன்பெறும் என்னும் நன்னோக்கத்தில் இந்த 'தமிழ் முஸ்லிம் நூலகம்' என்னும் வலைப்பதிவு வடிவமைக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கியவர்களுக்கு தனது காரைக் கொடுத்து விட்டு ஆட்டோவில் போன அமைச்சர்!

பெங்களூரு: கர்நாடகாவின் சுகாதாரத் துறை அமைச்சர் சாலை விபத்தில் மாட்டியவர்களைத் தன்னுடைய காரில் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு ஆட்டோவில் சென்ற சம்பவம் அங்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் யு.டி. காதர். அவர் நேற்று காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, வயதான தம்பதியர் விபத்தில் சிக்கிப் பரிதவித்ததைப் பார்த்தார். உடனே அவர்களை தன்னுடைய காரின் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு, ஆட்டோ மூலம் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்துள்ளார்.

Saturday, July 5, 2014

அன்ஸாரித் தோழர்கள் அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என பதவிக்காகக் காத்திருந்தவர்களா?


நபித்தோழர்கள் அன்ஸாரிகள், முஹாஜிர்கள் என இரண்டாக வகுக்கப்படுவர். முஹாஜிர் என்றால் மக்காவில் இருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றவர்களைக் குறிக்கும். அன்ஸார் என்றால் உதவியாளர்கள் என்பது அர்த்தமாகும். தம்மை நோக்கி ஹிஜ்ரத் செய்து வந்தவர்களுக்காக அர்ப்பணிப்புக்களைச் செய்த மதீனாவாசிகளே அன்ஸாரிகள் என அழைக்கப்படுகின்றனர்.

ஷியாக்களும், தவ்ஹீதின் பெயரில் தமிழ் பேசும் சமூகத்திற்கு மத்தியில் நபித்தோழர்களைத் திட்டித் தீர்க்கும் வழிகெட்ட கொள்கையுடையவர்களும் இந்த அன்ஸாரி களைப் பதவி மோகம் கொண்டவர்களாக சித்தரித்து வருகின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் மரணித்த பின்னர் அன்ஸாரித் தோழர்கள் “ஸகீபா பனீ ஸாஇதா” எனும் இடத்தில் ஒன்று கூடி அடுத்த தலைமை பற்றி ஆலோசனை செய்தனர். இது பற்றிப் இந்த சம்பவம் சிலரினால் இவ்வாறு சித்தரிக்கப்படுகின்றது.

“நபி(ஸல்) அவர்கள் மௌத்தாஹிவிட்டார்கள் என்பது உறுதியானவுடனேயே அன்ஸாரிகள் அனைவரும் ஸஃத் இப்னு உபாதாவுடைய வீட்டில் ஒன்று கூடினார்கள். நபியவர்கள் மௌத்தானவுடன் இல்லாதிருந்த அந்த நோய் உண்டானது. ஆனா இடம் காலி. இந்த இடத்தை அன்ஸாரிகள் பிடிக்கனும். நபிகளாரின் கதை வேறு, அண்ணன் எப்போது காலியாவான் திண்ணை எப்போது காலியாகும் எனக் காத்துக்கிட்டு இருந்த மாதிரி சித்தரித்துக் கூறி எப்பமா நபியவர்கள் மௌத்தாகுவாங்க? அந்த இடத்த நாம பிடிக்கனும்” என காத்துக் கொண்டிருந்த மாதிரி அன்ஸாரிகள் சித்தரிக்கப்படுகின்றார்கள்.

மறுமையை மறக்கலாகுமா?


அவ்வப்போது உனையழைக்கும்

அலைபேசியின் அழைப்பிற்குத்

தவறாது பதிலளிக்கும் நீ

படைத்தோனின் பள்ளியிலிருந்து

படைத்தோனைத் தொழுதிடவே

பாங்கோசையின் அழைப்பிற்குப்

பதிலளிப்பதில்லையே?


ஏதேதோ பாடங்களை

ஏகமனதோடு

ஏற்றம்பெறக் கற்றிடவே

ஆற்றலுண்டு, நேரமுண்டு

அல்லாஹ்வின் வேதத்தை

அனுதினமும் கற்றிடவே

துளியளவும் நேரமில்லையே?


Friday, July 4, 2014

தத்துவ ரமளான் !

தத்துவ ரமளான் ! (முதுவைக் கவிஞர் மௌலவி உமர் ஜஃபர் மன்பயீ)
எத்தனையோ மாதங்கள் வருடத்தில் வந்தாலும்,


இனிதான மாதமென ரமளானைத் தந்தவனே !

எத்தனையோ வேதங்கள் உலகத்தில் உதித்தாலும்,

எளிதான போதமென குர்ஆனை உதிர்த்தவனே !

எத்தனையோ வணக்கங்கள் அடியார்க்கு விதித்தாலும்,

ஏற்றமிகு நோன்பதனை ‘முடியாக’ வைத்தவனே !

உத்தமனே ! சத்தியனே ! உலகாளும் ரட்சகனே !

உரைக்கின்ற புகழெல்லாம் உனக்காகும் இறையவனே !

தத்துவத்தைத் தரணியிலே தரம்பிரித்துப் பார்க்கையிலே

தனித்திருந்து விழித்திருந்து பசித்திருந்து வாழுவதை

Thursday, July 3, 2014

உதவி செய்வார் யாருமுள்ளார்களா? என்று தேடி வருகிறேன்...

மேலப்பாளையம் ஊரைச்சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட, பல பிள்ளைகள் இந்த ஆண்டு ஆயிரத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் பொறியியல் முதலான படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்து வருகிறார்கள்...

என்னைத்தேடி வந்த பிள்ளைகளில் பெரும்பாலோருக்கு அவர்கள் கேட்ட பள்ளி,கல்லூரிகளில் இடம் கிடைக்க என்னால் ஆன முயற்சிகள் செய்து வந்துள்ளேன்.

எல்லாம் வல்ல இறைவன் என்னை அதற்கு கருவியாக்கி வைத்துள்ளதாகவே எண்ணுகிறேன்..

ஒற்றுமைதான் அமைதிக்கு உயர்வான வழி என்போம் !

உற்றாரும் எதிரிகளாய் உறவினரும் வலம்வருவர்
பற்றாரும் பண்புகளை பகைமூட்டி வளர்த்திடுவார்
அற்றாரும் அதன்நடுவில் ஆட்சியாரால் கைதாவார்
பெற்றவரும் பதைபதைத்தே பீதியாலே பரிதவிப்பார்

மல்லுகட்டி நிற்பதினால் மல்லிபட்டி னம்குழம்பி
சொல்லவிலாச் சோகத்தில் சோர்ந்திட்டே மனம்கலங்கி
நல்லுறவு நசிந்திட்டே நல்வாழ்வு சிதறிவிட்டே
நல்வணக்கம் புரிந்தோர்கள் நாசகரால் மாட்டினரே

Wednesday, July 2, 2014

இட்டு வாழும் இலக்கணத்தை நட்டு வைத்தது ரமளான் (முதுவைக் கவிஞர், ஹாஜி உமர் ஜஹ்பர் )கோடான கோடி ஜீவ இனத்திலே குறிப்பிட்டுச் சொல்லும் மனிதப் பிறப்பாக இறைவன் நம்மைப் படைத்திருக்கிறான் ! அல்ஹம்துலில்லாஹ் ! இதற்காக இறைவனை எப்படிப் போற்றிப் புகழ்ந்தாலும் அது ஈடாகாது !

இந்த மனித இனம் வறுமையிலும், செழுமையிலும் உழன்று நின்று- சிலர் குளுமையிலும் சிலர் கொடுமையிலும் குடித்தனம் நடத்துவதை அன்றாட மனித வாழ்வில் கண் கூடாகக் காணுகிறோம் !

எல்லா மனிதரின் வாழ்வும் ஒன்றுபோல் அமைந்ததில்லை செல்வம் படைத்தவர்கள் சந்தோஷத்தில் வாழுகிறார்கள் ! செல்வம் இல்லாதவர்கள் சஞ்சலத்தில் வாடுகிறார்கள் ! இரு நிலைப்பட்ட மனித வாழ்வை ஒரு நிலைப்படுத்தி இருப்பவர்கள் இல்லாதாருக்கு வாரி வழங்கும் இலக்கணத்தை “ஜக்காத்” – “சதக்கா” – தருமம் என்று வகைப்படுத்தி அழகிய அறவாழ்வை இஸ்லாம் நமக்கு அமைத்துத் தந்திருக்கிறது ! அதன் வழி வாழ நமக்கு அன்புக் கட்டளையும் பிறப்பித்திருக்கிறது !

தருமம் செய்வது ஒரு தனிமனிதனின் விருப்பம் என்றில்லாமல் செல்வம் படைத்திருக்கும் சீமான்கள் தன்னிடமுள்ள செல்வங்களில் நாற்பதில் ஒரு பங்கை வருடம் ஒரு முறை கட்டாய தர்மமாக “ஜக்காத்” கொடுத்தே தீர வேண்டும் என்ற கடமையையும் கட்டுப்பாட்டுடன் கண்ணியமாகச் சொல்லி இருக்கிறது.

எங்கள் நோன்பு ஏற்றுக்கொள்ளப்படுமா?”

என் மருமகன் ஷாஜித் வாட்ஸப்பில் ஒரு செய்தி அனுப்பியிருந்தார். படித்துவிட்டு என் கண்கள் கலங்கின. உங்கள் கண்களும் கலங்கினால் அது நீங்கள் சரியான மனிதர் என்பதற்கான அடையாளம்.

LinkWithin

Related Posts with Thumbnails