Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Tuesday, November 15, 2016

சமுத்திர ஆழங்களில் மண்டிக்கிடக்கும் மையிருள்


أَوْ كَظُلُمَاتٍ فِي بَحْرٍ لُّجِّيٍّ يَغْشَاهُ مَوْجٌ مِّن فَوْقِهِ مَوْجٌ مِّن فَوْقِهِ سَحَابٌ ظُلُمَاتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ إِذَا أَخْرَجَ يَدَهُ لَمْ يَكَدْ يَرَاهَا وَمَن لَّمْ يَجْعَلِ اللَّهُ لَهُ نُورًا فَمَا لَهُ مِن نُّورٍ

    அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள் சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால்  அதைப் பார்க்க முடியாது; எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை. 24:40 سورة النور

    கடல் ஆழங்களில் மண்டிகிடக்கும் மையிருட்டை நவீன கருவி சாதனங்களால் தான் விஞ்ஞானிகளால் உறுதி செய்திட முடிந்தது என ஜித்தாவில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக்கலகத்தில் பணியாற்றிய பேராசிரியர் துர்கா ராவ் கூறினார். எந்த ஒரு பொருளின் துணையில்லாமல் 20 முதல் 30 மீட்டர் அளவுக்கு மேல் மனிதர்கள் கடலுக்குள்ளே மூழ்குவது இயலாத காரியமாகும். அதேப்போன்று 200 மீட்டருக்கும் அப்பாற்பட்ட ஆழத்தில் கடல் பகுதிகளில் மனிதன் உயிர் வாழ்ந்திட முடியாது.

Monday, September 7, 2015

Coccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...


"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான ‪Coccyx ‬... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..?"


...என்று கேள்வி கேட்டு, Tail bone என்று இதற்கு மாற்றுப்பெயரிட்டு... இது மனித உடம்பில் ஒரு தேவையற்ற உறுப்பு.. (vestigial organ) என்று பெரும்பாலான அறிவியலாளர் கருதுகிறார்கள்.

இது முற்றிலும் தவறு..!

இறைவனின் படைப்பான நமது உடலில்..."நான் ஒரு -தேவையற்ற உறுப்பு- vestigial organ" என்று எந்த உறுப்பிலும் எழுதி ஒட்டி இல்லை. நாமாக சிந்தித்து எந்த உறுப்பின் பயனாவது 'தெரியவில்லை' என்றால், அது பற்றிய விளக்கம் இல்லை என்றால், அந்த அறியாமையாகிய தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் 'அது தேவை அற்றது' என்று அவசரப்பட்டு அறிவித்து விடுகிறோம்.

பின்னாளில் உண்மை புரியும்போது அதன் அவசியம் உணரும்போது கருத்தை வாபஸ் வாங்கிக்கொள்கிறோம். நம் உடலில் எதுவும் வேஸ்டாக இருக்காது என்பது என் அனுபத்தில் எடுத்த அசைக்க முடியாத முடிவு. அதை எந்த விஞ்ஞானி வந்து மறுத்து சொன்னாலும் நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

Wednesday, August 6, 2014

மருத்துவம், அறிவியல் & தொழில்நுட்பம் முஸ்லீம் பங்களிப்புக்கள்:



                                                          இலவச மின்புத்தகம்
முஸ்லீம் அறிஞர்கள் சூரியன் செல்லும் கோணம் கணக்கி; பூமியின் அளவை அளவிட; சம இராப்பகல் மாற்றமே கணக்கி; ஒளியியல் மற்றும் இயற்பியல், ஒளி, ஈர்ப்பு, தந்துகி ஈர்ப்பு, மற்றும் அந்தி விலகல் போன்ற நிகழ்வுகள் துறையில், விளக்கினார்; மற்றும் அபிவிருத்தி வான்கோள்கள் அனுபவ ஆய்வு ஆய்வுக்கூடங்கள். அவர்கள் மருந்துகள், மூலிகைகள், மற்றும் மருந்துகளின் உணவுகள் பயன்பாடுகளில் அளித்ததாக; பயிற்சியாளர்களுக்கு மற்றும் externs ஒரு அமைப்பு நிறுவப்பட்டது மருத்துவமனைகள்; சில நோய்கள் மற்றும் அவர்கள் வளர்ந்த சரியான நோயறிதலில் கண்டுபிடிக்கப்பட்டது காரணங்கள்; சுகாதாரம் முன்மொழியப்பட்ட புதிய கருத்துக்கள்; அறுவை சிகிச்சை மயக்கமருந்து செய்யப்பட்ட பயன்பாடு உடன் புதிதாக அறுவை சிகிச்சை கருவிகள் கண்டுபிடித்தனர்; மற்றும் உடற்கூறியல் உள்ள இடர் அறிவியல் அறிமுகப்படுத்தப்பட்டது.

Tuesday, July 15, 2014

கரு வளர்ச்சிப்பற்றி அல்குர்ஆன்!

கனடா நாட்டில் இருக்கும் Toronto நகரில் வாழும் மிகப்புகழ் பெற்ற கரு வளர்ச்சி நிபுணர் Dr.Keith L.Moore என்பவர் நயாகரா நீர் வீழ்ச்சி பகுதியில் நடை பெற்ற இஸ்லாமிய மருத்துவர் சபையின் 18 வது ஆண்டு கூட்டதில் ஓர் உரை நிகழ்த்தினார். அந்த உரையில் டாக்டர் மூர் மனிதக் கரு வளர்ச்சி மற்றும் இனப் பெருக்கத்தைப் பற்றிப் பேசக்கூடிய புனித  திருக்குர்ஆனின் வசனங்களை விளக்கினார். ”

திறுமறை நெடுகிலும் மனித வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்தைப் பற்றிய வசனங்கள் காணக்கிடக்கின்றன” என அப்போது குறிப்பிட்டார். சமீபகாலமாக திருமறையின் ஒரு சில திரு வசனங்களின் பொருள் முழுமையாக விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளன என்றார். அவர் தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வசனங்களையும், அவர் தரும் விஞ்ஞான விளக்கத்தையும் கான்போம்.

Saturday, November 20, 2010

குருவி பறப்பதை கணினியிலாவது பாருங்கள் இரா .இரவி

குருவி பறப்பதை
கணினியிலாவது பாருங்கள்
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
சேதி தெரியுமா ?பாடியது அக்காலம்
சிட்டுக்குருவி எங்காவது
பார்த்திர்களா ?கேட்பது இக்காலம்
குருவிக் கூட்டை களைத்தால்
பாவம் என்றார்கள் அன்று
பாவம் கூட கட்டிட
குருவிகள் இல்லை இன்று
அறிவியல் வளர்ச்சியால்
அற்புதப் பறவைகள் வீழ்ச்சி
செல்கள் பெருகப் பெருக
குருவிகள் அழிந்தது

புறாவிற்காக தன் தசை
தந்த மன்னன் சிபி அன்று

 
சமாதானப்புறாவையே
சமைத்துச் சாப்பிடும் சிபிகள் இன்று

Source : http://eraeravi.wordpress.comகுருவி பறப்பதை கணினியிலாவது பாருங்கள் இரா .இரவி

 -----------------------------------------------------------
என் இளமை காலம் நினைவுக்கு வருகின்றது .எங்கள் வீட்டில் சிட்டுக்குருவி கூடு கட்டி இருக்கும் அது கூவும் ஒலி எல்லோருக்கும் மகிழ்வாக இருக்கும் . என் தந்தை அவைகளுக்கு தனி இடமே தந்திருந்தார்கள் .

seasonsali says:(அ முஹம்மது அலி ஜின்னா,நீடூர்.)

S.E.A.Mohamed+Ali

Tuesday, November 9, 2010

புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி

புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி
           புளங்காகிதம் அடைவதில் நமக்கோர் மயக்கம்;
உள்ளத்தளவில் ஈமானின் தளர்ச்சி
           ஒத்துக்கொள்வதில் நமக்கேன் தயக்கம்?
தாயும் ஒன்றே; தந்தையும் ஒன்றே
           தாரணிக்கு நாம் தந்த சமத்துவம் எங்கே?
ஆயினும் நமக்குள் ஆயிரம் பிளவுகள் உண்டே
           ஆயுதம் கொண்டும் நமக்குள்
சண்டையிட்டு மாய்த்து கொள்வது யாரோடு?
           சகோதரத்துவ மரத்தை சாய்த்து விடுகின்றோம் வேரோடு....!
அண்டை வீட்டார் பசித்திருத்தலாகாது -என்ற
           அண்ணல்நபி(ஸல்) அமுத மொழி மறந்தோம் அடியோடு..
பண்டைய முஸ்லிம்கள் உலகுக்கு
           பயிற்றுவித்தனர் அறிவியல்- கணிதம்*
இன்றைய முஸ்லிம் இளைஞர்கள்
           எத்தனை பேரிடம் உண்டு உயர்கல்வி விகிதம்?
மூளைச்சலவைச் செய்து முஸ்லிம் இளைஞர்களை
           மூலைக்குத்தள்ளி விட்ட முல்லாக்களே....!
நாளை மஹ்ஷரிலே பதில் தர வேண்டும் அல்லாஹ்விடம்
           நானே வந்து சாட்சி சொல்வேன் அப்போது...
"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்

LinkWithin

Related Posts with Thumbnails