Wednesday, August 29, 2012

வர்த்தக, இந்திய அரபு நிறுவனம் வரவேற்கிறது

வர்த்தக, இந்திய அரபு நிறுவனம் வரவேற்கிறது
1993 ஆம் ஆண்டிலிருந்து நவீன அரபு கல்வி, பயிற்சி மற்றும் தொழில் சேவைகள் தலைவர்கள்

வர்த்தக அரபு நிறுவனம், இந்தியாவில் நவீன அரபு மொழியில் தொழில்முறை டிப்ளமோ படிப்புகள், ஆங்கிலம் மொழிகள், மத்திய கிழக்கில் வேலை தேடி அந்த கணினி திறன் வழங்குகிறது மற்றும் அரபு அறிவு திறன் பெறுவதற்கு ஆர்வம் உடையோருக்கு ஒரு சிறந்த வழிகாட்டி  நிறுவனம்
வர்த்தக அரபு நிறுவனம் நவீன அரபு மொழி பல்வேறு பகுதிகளில் இதுவரை 2000 திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி தந்துள்ளது
இந்த வர்த்தக அரபு நிறுவனம் மேலும் மொழிபெயர்ப்பு பகுதியில் வணிக தொடர்பான சேவைகளை வழங்குகிறது. இன்ஸ்டிடியூட் அரபு, ஆங்கிலம் நிறுவனம் விவரக்குறிப்புகளின் மொழிபெயர்ப்பு, பிரசுரங்கள், தயாரிப்பு கையேடுகள், ஆவணங்கள் போன்ற விசா, உரிமையும், பிறப்பு, கல்வி, திருமணம், இறப்பு சான்றிதழ்கள், எந்த வர்த்தக அல்லது சட்ட ஆவணங்கள், புத்தகங்கள், இணைய தளங்கள், போன்றவற்றை இந்த நிறுவனம்  சிறந்த  சேவைகளை வழங்குகிறது


மேலும் வாசிக்க  இங்கு கிளிக் செய்யுங்கள் http://www.arabicinstitute.in/#

Monday, August 27, 2012

ஹதீஸ் கலை

Dr. Ahmad Baqavi Ph.D.

ஹதீஸ் கலை
الفرق بين الحديث والسنة والأثر


இஸ்லாத்தின் இரண்டாவது மூலாதாரம்

இஸ்லாத்தின் இரண்டாவது மூலாதாரமாக ‘ஹதீஸ்’ காணப்படுகிறது. ஹதீஸ்கள் திரட்டப்பட்ட நூல்கள் மிக அண்மைக் காலம் வரை, அவற்றின் மூல மொழியான அரபு மொழியிலேயே இருந்து வந்தன. தற்போது சில நிறுவனங்களாலும், அறிஞர்களின் பெரும் முயற்சியா லும் அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்து கொண்டி ருக்கின்றன..

அதிலும் குறிப்பாக புகாரி, முஸ்லிம் போன்ற நூல்கள் முழுமையாக வெளிவந்துவிட்டன. இது தமிழ் உல கிற்கும், குறிப்பாக தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய அருளாகும். ஆகவே, அனைவரும் அவற்றைப் படித்து தம் வாழ்வில் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.

அவற்றைப் படிக்கும் போது ஹதீஸ் கலையுடன் தொடர்பான சில அடிப்படைகளைத் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். அப்போதுதான் அவற்றின் மூலம் பயன் பெற முடியும். எனவே, ஹதீஸ் நூற்களிலும், ஏனைய இஸ்லாமிய நூற்களிலும் காணப்படும் சில சொல் வழக்குகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஹதீஸ், ஸுன்னத், கபர், அதர், ஹதீஸுல் குத்ஸி ஆகிய 5 சொல் வழக்குகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை முதலில் பார்ப்போம்.

1. ஹதீஸ்:
الحديث

ஹதீஸ் என்னும் சொல்லிற்கு அகராதியில் புதியது, செய்தி என்பது பொருளாகும். மார்க்க வழக்கில் நபி (ஸல்) அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரம், பண்பாடுகள், அங்க அடையாளங்கள் தொடர்பான செயதிகளுக்கு சொல்லப்படும், அவை நபித்துவத்திற்கு முன்னரோ, பின்னரோ இடம் பெற்றவையாக இருக்கலாம்.

மேற்படி வரைவிலக்கணத்தின் அடிப்படையில் ‘ஸுன்னத்’ என்ற வார்த்தையை விட விரிவான, ஆழமான விளக்கம் கொண்டதாகவே ‘ஹதீஸ்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது.

அதேவேளை ‘ஸுன்னத்’ என்பது நபித்துவத்திற்குப்பின்னர் நபி (ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திய சட்டங்கள், மேற்கொண்டு வந்த இபாதத்துக்கள் போன்றவற்றை மட்டுமே குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது ஹதீஸ் – ஸுன்னா இரண்டுக்குமிடையே உள்ள வேறுபாடாகும்.

அறிவுப் பெட்டகம் குரானை பெற்ற நாம் பின்தங்கி இருப்பதேன்?

முஹம்மத் அலி ஐ பீ எஸ் (ஓ)

 நிலம் வெளுக்க நீர் உண்டு மக்கள் மனம் வெளுக்க குர் ஆன் வேதமுண்டு’  என்று நானிலம் போற்றும் வள்ளல் நபி அவர்களுக்கு அறிவூற்றினை தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சந்தததியர் கல்வி கேள்வியில் பின்தங்கியிருக்கலாமா?
     ‘சீனம் சென்றும் சேர்க்க நல்லறிவை’ என்று பகன்ற கோமான் நபி பொன்மொழியினை புறக்கணித்து கண்ணிருந்தும் மூடர்களாக ஆகலாமா?
     ‘கல்வி நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சொர்க்கத்தினை நோக்கி வீறு நடைபோடும் அடிச்சுவடு” என்ற வாக்கினை புறக்கணிக்கலாமா?
     500 ஆண்டுகள் ‘ஆண்ட சமுதாயம’; என்று பீற்றத் தெரிந்த நாம் மற்றவர்களுக்கு முன் மாதிரி ஆக திகழ வேண்டாமா?
போன்ற கேள்விகள் நான் மட்டும் கேட்க வில்லை. மாறாக இந்தியாவில் ஹைதராபாத் நகரிலுள்ள உருது பல்கலைக் கழகத்தின் சமூக புறக்கணிப்புகள் பற்றி பாடம் நடத்தும் இயக்குனர் மேன்மைமிகு கன்சன் இலையா என்பவரும் கேட்கிறார என்றால் அது நியாயம் தானே!.
கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ், ‘எந்த சமுதாயம் ஏன், எதற்கு, எப்படி, எதனால், யார், எப்போது’ என்ற கேள்விகள் கேட்கவில்லையோ அந்த சமுதாயம் பின் தங்கி தான் இருக்குமென்றார்.
ஒரு காலத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆணி வேராக இருந்த முகம்மது அலி ஜின்னா, முகம்மது அலி, சவுக்கத் அலி, அலிஹார் பல்கலைக் கழகத்தினை நிறுவிய சர் செய்யத் அஹமது கான் போன்றோர் அறிவுசார் முஸ்லிம்களாக கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் கேள்விப்படாத சில முஸ்லிம் அறிஞர்களும் இருந்திருக்கின்றனர். உதாரணத்திற்கு பிரிட்டிஷ் கலெக்கெட்டராக இருந்த ஆஷ் துரையினை சுட்டுக் கொன்ற வழக்கில் தீர்ப்புச் சொன்ன ஐந்து நீதிபதிகளில் ஒரு நீதிபதி அப்துல் ரஹீம் ஆகுமென்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?
புpரிட்டிஷ் ஆஷ் துரைதான் வா.உ.சி அவர்கள் சுயாட்சி கப்பலினை தூத்துக்குடி கடலில் செலுத்திய போது தடுத்து நிறுத்தி அட்டூழியம் செய்தவர். அவர் தன் மனைவியுடன் சென்ற போது மணியாச்சி ரயில் நிலையத்தில் தியாகி வாஞ்சி நாத அய்யரால் கொலை செய்யப் பட்பவர். அந்த வழக்கில் சுப்ரமணி பாரதி ஆகியோர் குற்றஞ் சாட்பப்பட்டனர். அந்த வழக்கினை விசாரித்த ஐந்து நீதிபதிகளில் மூவர் ஆங்கிலேயர். ஒருவர் பி.ஆர். சுந்தர ஐயர் மற்றமொருவர் தான் நீதிபதி அப்துல் ரஹீம் அவர்கள். அந்த வழக்கில் ஆங்கிலேய நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுத்தாலும், இன்னொரு நீதிபதியான பி.ஆர். சுந்தர ஐயர் குற்றவாளிகளின் குற்றத்தில் சந்தேகம் எழுப்பினாலும், அவர்களை நிரபராதி என்று தைரியமாக சொல்லவில்லை. ஆனால் நீதிபதி அப்துல் ரஹீம் மட்டும் தைரியமாக அந்த குற்றவாளிகள் நிரபராதிகள் என்றும், நாட்டுக்காக போராடும் வீரர்கள் என்றும் மறுப்பு தீர்ப்பினை தைரியமாக வழங்கினார். இதனை எதற்காக சொல்கிறேன் என்றால் அப்படி கல்வி, கேள்வியல் சிறந்து விளங்கி ‘எப்படியிருந்த நாம் இன்று பின் தங்கி இருப்பதிற்கு’ காரணம் என்ன என்ற அறிய வேண்டும் என்பதிற்குத் தான் மேற்கொண்ட எடுத்துக் காட்டுதல் ஆகும்.
இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஆரம்ப காலத்தில் மாறிய முஸ்லிம்கள் இந்திய ஜாதீய சமுதாயத்தில் அடித்தளத்திலிருந்த மக்களும், தலித்துகள் தான் என்று சொல்லப்படுகிறது. இந்து தலித்துகளுக்கு அரசியல் சாசனத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உறுதி செய்யப்படுகிறது. ஆனால் ஏழை முஸ்லிம்களுக்கு அவ்வாறு எந்த உறுதியும் செய்யப்படவில்லை.. அதனால் அவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதில்லை என்பது ஒருபுறம் இருக்கும் போது, அப்படி முஸ்லிம்கள் படித்திருந்தாலும் வேலை உத்திரவாதமில்லை. தலித்துகள், பழங்குடியினர், மற்ற பிற்பட்ட ஜாதி இந்துக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலக் கல்வி அளிக்க முன்னுரிமை கொடுக்கின்றனர். ஆனால் கிராமப்புற ஏழை முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளை குர்ஆன் ஓத மட்டும் முன்னுரிமை கொடுக்கின்றனர். 3.8.2011 சகர் நேர தொலைக் காட்சியில் பேசிய வளைகுடா வாழ் என்ஙினீயர் ஒருவர் சொல்லும் போது, ‘அவரிடம் வேலை பார்க்கும் ஒரு பிளம்பர் அவரிடம் தன் மகன் தமிழ்நாட்டில் எட்டாவது படிப்பதாகவும் ஏதாவது பிளம்பர் வேலை போட்டுக் கொடுத்தால் போதும் அவனை வளைகுடாவிற்கு அழைத்துக் கொள்வேன்’ என்ற கொன்னாராம். அவருக்கு புத்திமதி சொல்லி அவர் மகனை மேல் படிப்பு தொடர்ந்து படிக்க வையுங்கள் என்றாகவும் தொலைகாட்சிக்கு பேட்டி கொடுத்தார். இது எதனைக் காட்டுகிறது என்றால் பிள்ளைகள் படித்தாலும் வேலை கிடைக்குமா என்ற உண்மையான பயம் முஸ்லிம்கள் மனதில் இருப்பதினைக் காட்டவில்லையா?
அமெரிக்கா இரட்டைக் கோபுர இடிப்பிற்குப் பின்னரும், மும்பை தீவிரவாத தாக்குதல் பின்னரும் முஸ்லிம் குழந்தைகளை இங்கிலிஸ் பள்ளியில் சேர்ப்பதிலும், முஸ்லிம்களுக்கு வீடு கொடுப்பதிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று பல்வேறு மக்களும், பிரபல நடிகர் சாருக்கான், நடிகை ஷாபனா ஆஸ்மி கூட சொல்லியுள்ளார்கள் என்றால் பாருங்களேன் சாதாரண முஸ்லிம்கள் என்ன பாடுபடுவார்கள் என்று.
ஹிந்து ஜெயின் வியாபாரிகள் தங்கள் குழந்தைகளை எப்படியும் மேல் படிப்பிற்கு அனுப்பி அதன் மூலம் தங்கள் வியாபாரத்திற்கு உதவியாக அவர்களை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் முஸ்லிம் வியாபாரிகள் கூட தங்கள் குழந்தைகளை மேல் படிப்பிற்கு அனுப்புவதில்லையே அது ஏன்?


2001 கணக்கெடுப்பின் படி கல்வியறிவு பெற்ற முஸ்லிம்கள் 60 விழுக்காடுகள் ஆகும். ஆனால் கல்வி கற்ற ஹிந்துக்கள் 75.5 சதவீதமாகும், கிருத்துவர்கள் எண்ணிக்கையோ 90.3 சதவீதமாகும். நம்மைப்போன்ற மைனாரிட்டி சமூகம் என்ற கூறிக் கொள்ளும் சீக்கியர்கள் கல்வியறிவில் 70.4 விழுக்காடும், புத்தர்கள் 73 விழுக்காடும், ஜெயின்கள் 95 சதவீதமாகமென்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
கிருத்துவர்களும், ஜெயின் மக்களும் தங்கள் மக்களுக்கு தரமான உயர்கல்வியினை தன்னலமற்ற கல்வி நிலையங்களை அமைத்து அவர்கள் மதத்தினைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். ஆனால் முஸ்லிம் தன்வந்தர்கள் வசதி வாய்ப்பிலிருந்தும் கல்வி நிலையங்களை அமைத்து நாலு காசு பண்ணும் கல்வி நிலையங்களாக மைனாரிட்டி கல்வி நிலையங்கள் என்ற தோரணையில் அமைத்து ஏழை முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல முடியும். சில் முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களை லகர டொனேசன் பெற்றல்லவா நியமிக்கிறார்கள். எங்கே சொல்வது இந்த வேதனையை!
பின் எங்கே முஸ்லிம்கள் கல்வியில் முன்னேறி சமுதாயத்திலும் முன்னேற  முடியும்?

Saturday, August 25, 2012

இறைவன் யார்?

இறைவன் யார்?: இறைவனைப் பற்றி அவன் குணம் யாது என்பது பற்றி குர்-ஆனில் சொல்லப்பட்டதை அக்கறையோடு கவனித்தால் இஸ்லாம் பற்றிய தெளிவு  தெளிவாகவே பிறக்கும்.

அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன்
அவனே இறைவன்

குர்-ஆனின் தொடக்கமே இந்த வரிகள்தாம்!

இறைவன் யார்?

அன்புடையவனே இறைவன்
இறைவனிடம் மட்டுமா அன்பிருக்கிறது
மனிதர்களிடமும்தான் அன்பிருக்கிறது
ஆனால் இறைவனிமிருக்கும் அன்பு எப்படியானது?
நிகரற்றது - அப்படியான நிகரற்ற அன்பினை
மனிதனால் பெறவே முடியாது

அருளுடையோனே இறைவன்.
இறைவனிடம் மட்டுமா அருளிருக்கிறது
மனிதர்களிடமும்தான் அருளிருக்கிறது
ஆனால் இறைவனிடமிருக்கும் அருள் எப்படியானது?
அளவில்லாதது - அப்படியான அளவிலா அருளை
மனிதனால் பெறவே முடியாது

அறிவு என்பதைக் கண்டால்
நீங்கள் அறியாததையும் அறிந்தவன் இறைவன்
அளவற்ற நிகரற்ற அறிவுடையோன் இறைவன்
அதனால்தான் அவன் மனிதர்களிடம் சொல்கிறான்
என்னை அறிவதற்காகவேயன்றி வேறெதற்காகவும்
உங்களை நான் படைக்கவில்லை என்று

இறைவனை அறிவதென்பதென்ன சும்மாவா?
அதற்கு எத்தனை அறிவு வேண்டும்?

என்னை அறிவதற்காகவே உங்களைப் படைத்தேன்
என்று இறைவன் கூறும்போது
எத்தனை அறிவை அவன் மனிதனுக்குத் தந்திருப்பான்
மனிதன் அதைப் பயன்படுத்த வேண்டாமா?

அறிவைத் தேடும் அறிவுடையோனே இஸ்லாமியன்.
அவனே ஈமான் கொண்டவன்


ஆள்பவனே நீ யார்! உன்னிடம் சில கேள்வி ?

ஆள்பவனே நீ யார்! உன்னிடம் சில கேள்வி ?:


ஆள்பவனே நீ யார்? ஆனா ! பெண்ணா அல்லது பல்முகமா.!
ஆணுமல்ல, பெண்ணுமல்ல தனித்தவன்  உருவமற்றவன். 
இப்படித்தான் இருக்க முடியும்.

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.- குர்ஆன்112:1
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.- குர்ஆன்112:2
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.-குர்ஆன்112:3
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. குர்ஆன்-112:4நீ ஆந்திராவா, கேரளாவா, தமிழ்நாடா, அரபு நாடா அல்லது பணக்கார அமெரிக்காவா !
அனைத்தும் உன் ஆதிக்கமாக உள்ளதால் உலகமே உன் நாடுதான். 
ஏன் இத்தனை உலகம் படைத்தாய் ! சுவனம், நரகம்,  பூமி  மற்றும்   பிரபஞ்சம் !
      وَاسَّمَاءَ بَنَيْنَهَابِاَيْدٍ وَّاِنَّالَمُوْسِعُوْن َ “மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்” (51:47)
நாம் வாழும் பூமிப்பந்தானது நமது சூரிய குடும்பத்தின் நவகிரக உறுப்பினர்களில் ஒன்றாகும். நமது பூமியை விட பல மடங்கு பெரிய கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. நமது சூரியன் ஒரு நட்சத்திரம். இதேப்போன்று கோடானுக் கோடி நட்சத்திரங்கள் இந்த விண்ணில் வலம் வருகின்றன. இரவில் வானத்தை அண்ணாந்துப் பார்த்து, நட்சத்திரங்களின் அழகை கண்டு நாம் வியந்து போற்றுகின்றோம்.
2:29. அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.


  4:1. மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.

சுவர்க்கம் மட்டும் படைத்து ஆதம் அவ்வாவை உலவ விட்டு அத்துடன் இப்லீசையும் படைத்து  தவறு செய்ய தூண்டி  பூமிக்கு அனுப்பி வைத்து எங்களை  பன்மடங்காக்கி  மரணமடையச் செய்வதின் நோக்கம் என்ன!
இறந்தால் இறப்பதற்கு ஒவ்வொருவரு
ம்  ஒவ்வொரு காரணம் சொல்கின்றனர். ஆனால் படைத்தவன் அழைத்துக்கொண்டான் என சொல்லாமல் இருக்கும் போது எங்களை படைக்க உனக்கு ஏன் இந்த அக்கறை . உன்னைத் தொழ படைத்தாய். நாங்கள் தொழுது உன் மனம் மகிழ்வடையலாம் என்பதைவிட எங்கள் மனம் மகிழ்வடையும் என்பதனை நீ அறிவாய். 
இன்னும்  உன்னைப் பற்றி கேட்க அறிவினையும் உடல் நலத்தினையும் தா! இன்ஷா அல்லாஹ் உன்னை   எப்பொழுதும் என் நினைவில் வைத்து தொடர விரும்பும்... 

Friday, August 24, 2012

அம்மாவுக்கும் மகளுக்கும் உள்ள நேசம் உயர்வானது .

அம்மாவுக்கும் மகளுக்கும் உள்ள நேசம் உயர்வானது .:


 
     அம்மாவுக்கும் மகளுக்கும் உள்ள நேசம் உயர்வானது . அம்மாவின் அன்புதான் மகளின்  அறிவை வளர்க்கும். தாய்  மகளுக்கு தனக்கு தெரிந்த அத்தனை கலையையும்  சொல்லித் தருவாள்.தனக்கு தெரியாததையும் அறிந்துக் கொள்ள வழி வகுப்பாள். உடை உடுத்துவது முதல் சமைப்பதுவரை தெரியவைப்பாள். பொதுவாக  தாயின்   குணமே மகளுக்கும் இருக்கும்.  அதனால்தான் தாயைப்போல பிள்ளை நூலைப் போல சேலை  என்பார்கள். ஒரு தகப்பன் கெட்டவனாக இருந்தால் அதனால் அந்த தாய் படும் அவதியினைப் பார்த்து அந்த தாய்க்கு  பிறந்த குழந்தைகள் பொறுப்புடன் நடப்பார்கள்.ஆனால் அந்த தாய் நல்லவளாக இல்லையென்றால் அந்த குடும்பமே சீர்கெட்டுவிடும். உன் நண்பனைப் பற்றி சொல் உன்னப் பற்றி  சொல்கின்றேன்
என்பதுபோல் தாயைப்பற்றி சொல் அவள் மகளைப்  பற்றி அறிய முடியும் என்பார்கள். பெண் பார்க்க போகும்போது தாயின் குணங்களை கேட்டு அறிந்துக் கொள்வார்கள். தாயின் வளர்ப்பு முறையும் தாயின் குணமும் பொதுவாக அவள் மகளுக்கு வந்தடைய வாய்ப்பாக உள்ளது.

ஒரு  தாய்க்கு தன்  மகளுக்கு செய்யும்  பணி எளிமையாக  இருக்க முடியாது. தாய் மகளை அன்பு காட்டி நேசமாக வளர்ப்பதால்  இருவருக்கும் நட்பு  மனப்பான்மை உயர்ந்து நிற்கும்.இந்த நிலை தாய்க்கும் அவளது மகனுக்கும் இருப்பதில்லை. தாய்க்கு பணிவிடை செய்வதிலும் மகளே உயர்ந்து நிற்கின்றாள். பெண் பிள்ளை இல்லாத தாய் தனது இறுதிக் காலத்தில் படும் அவதி பரிதாபத்திற்குரியது.
 நபி மொழி
 தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.

பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.

 ''நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்;
முதலாவதாக அவளுடைய செல்வத்திற்காக, இரண்டாவதாக அவளுடைய குடும்ப(வம்ச)பாரம்பரியத்திற்காக, மூன்றாவதாக அவளுடைய அழகிற்காக நான்காவதாக அவளுடைய மார்க்க(நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க(நல்லொழுக்க)ம் உடையவளை மணந்து, வெற்றி அடைந்து கொள். அறிவிப்பவர் : அபு ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி

மணமகள் இருக்குமிடமெல்லாம்....!

மணமகள் இருக்குமிடமெல்லாம்....!:
 மணமகள் இருக்குமிடமெல்லாம் ஆயிரக்கணக்கான விளக்குகள், அவளை சுற்றி புதிய செயற்கை மலர்கள் மற்றும் இயற்கை மலர்கள்.ஒரு நகைக்கடையே அந்த மணப்பெண்ணின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். ஆயிரக்கணக்கான செலவு செய்து அலங்கரிக்கப்பட்ட மேடை, அதில் பலர் மணமகளை சூழ நின்று மகளோடு படம் பிடிப்பவருக்கு கவனம் கொடுத்து தன்னை முன்னிறுத்திக்கொள்ள செய்வார்கள். இதற்கு மணப் பெண்ணோடு சேர்ந்து நிற்க 'தள்ளுபடி' இத்தனையும் இருக்கும்.
 இப்பொழுது இது ஒரு திருமண காட்சி பகுதியாக இருந்து வருகின்றது. இதன் பின் ஒரு விசித்திரமான  கதை ஒளிந்துள்ளது. திருமணம்  என்பது  பெண்ணின் கனவு - அந்த ஒரு சரியான நாள் வர காத்திருந்து அதற்குள் ஆயிரம் கற்பனைகள் அது நினைத்தபடி நடந்ததா! அல்லது அந்தப்பெண் மாப்பிள்ளை திருமணம் சந்தையில் விலை போனாளா! அதற்காக அவள் வீட்டார் கொடுத்த விலை எவ்வளவு! பட்ட கடன்கள் எவ்வளவு! 
மாப்பிளை வீட்டாரின் வலையில் விழ வேறு காரணங்கள் உள்ளதா! இவைபோன்ற உள்ளார்த்தமான நிகழ்வுகள் மறைக்கப் பட்டு திருமண கோலாகல நிகழ்வுகள் பலவகையான உணவுகளுடன் நடந்துக் கொண்டிருக்கும்

 இதில் சிலர் விருந்தையே குறிவைத்து அமர்ந்திருப்பார்கள். ஒரு சிலர் தம்மை திருமணதிற்கு அழைக்கவில்லையே என்ற கோபத்தில் அவர்கள் வீட்டில் அல்லது கடைத்தெருவில் மாப்பிளை மற்றும் பெண்ணைப் பற்றி வாய்க்கு வந்தபடி கதை அளந்து அவதூறு பேசவும் தயங்க மாட்டார்கள் இந்த அவதூறு திருமண மண்டபத்திலேயும்   பேசுவார்கள் .

"எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு".
-திருக்குர்ஆன் 24:23
"எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்."
-திருக்குர்ஆன் 24:4
 திருமண மேடைக்கு வாழ்த்து சொல்ல அழைக்கப்பட்டவர் அரசியல்,மற்ற கதைகளும் சொல்வார்கள். ( இவர்கள் 'எப்படா முடிப்பார்கள்' என்று முனு முனுப்பவர்கள் உண்டு)              
திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் நடக்கும் ஒப்பந்தம். அதோடு சரி. தேவைக்கு இரண்டு சாட்சிகள் மற்றும் ஒரு திருமண ஒப்பந்த பத்திரத்திற்கு ஒரு சான்று பத்திரம்; அத்தோடு முடிய வேண்டியது.
சமூகத்தில் நமது மகள்கள் திருமணம் செய்து கொடுக்க  எத்தனை வகை  பரிசு கொடுக்க அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.  காலணிகள் முதல்  ஒரு நூறு ஆடைகள், மின்சார கருவிகளும், குளிர் சாதனப் பெட்டி,'ஸ்பிலிட்ஏசி' (split a.c) மற்றும் மரச்சாமான்கள், தங்கம், வெள்ளி. வைர நகைகள், ஒரு வாகனம், மாப்பிள்ளையின்  குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பரிசுகள் இப்படியே முடிந்தவரை சுருட்டும் பகிரங்க கொள்ளை.பெண்களுக்கு கொடுத்து திருமணம் செய்ய கடமைப் போய் பெண் வீட்டாரிடமே அதிகாரப் பிச்சை வாங்குவது நடைமுறைக்கு வந்தது மிகக் கேவலமான ஒன்று.
 நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்துவிடுங்கள் அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள் (அல்குர்ஆன் 4:4)
 யார் இந்த சமூக தீய செயல்களை ஊக்குவிக்கும் பொறுப்பு ஏற்றுக் கொள்வது? அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மணமகன் பக்கம் உள்ளது; பெண் அடிமையாவதற்கு பெண்ணும் துணை போகிறாள்   இந்த சமூக தீய ஊக்குவிப்பதனை அவர்களின் பெற்றோர்கள் தடுக்க வேண்டும்.   பழைய மரபுகள் மற்றும் கலாச்சார போலியான திருமண கேலிக் கூத்துகள் ஒழிக்கப்பட வேண்டும்.
நாம் நம் வசதிக்கேற்ப அதிகமான பணம் வீண் விரயம் செய்யப்படுவதை நம்மால் காணமுடிகிறது.
வீண் விரயம் செய்வதை அல்லாஹ் வன்மையாக கண்டிக்கிறான். செல்வத்தை அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்; ஏனென்றால் மிதமிஞ்சி செலவு செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தான் இறைவனுக்கு நன்றி செலுத்தாது மாறு செய்தவன். (அல்குர்ஆன் 17:26,27)
உம்முடைய பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது உம்முடைய கையை கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர்; அன்றி உம்மிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து உம்முடைய கையை முற்றிலும் விரித்தும் விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், முடைப்பட்டவராகவும் தங்கி விடுவீர். அல்குர்ஆன் (17:29)

அவர் வெளியே இருந்தபோது இடி தாக்கியதுபோல் ...

அவர் வெளியே இருந்தபோது இடி தாக்கியதுபோல் ...:
நடந்தது உண்மை .
எனது ஆத்ம நண்பர் ஒருவர் உடல்நலம் குன்றி இருந்தார். அவரால் சரியாக உணவு சாப்பிட முடியவில்ல . நான் அவரிடம் சொன்னேன் 'எனக்கு மிகவும் வேண்டிய மிகவும் பிரபலமான Gastroenterologist M.D.,. D.M.,வயிறு சம்பந்தமாக பார்க்கும் மருத்துவர்  உள்ளார் அவரைப் பார்த்து ஆலோசனைப் பெறலாம்' என்ற என் வேண்டுதலுக்கு உடன்பட்டார். நாங்கள் இருவரும் அந்த மருத்துவரை சந்தித்தோம். நண்பர் தான் முதலில் காட்டிய மருத்துவரின் ஆலோசனைக் குறிப்புகளும்  மற்றும் அந்த வியாதிக்கு தேவையான மருத்துவ டெஸ்டுகளும் மற்றும்  எக்ஸ்ரே போன்றவைகளை எடுத்து வந்திருந்தார். ஆனால் அவருக்கு என்ன வியாதி உள்ளது என்று  அந்த மருத்துவர் நண்பரிடம் சொல்லாமல் மருந்துகள் மட்டும்  எழுதி கொடுத்திருந்தார். அவருக்கு வந்துள்ள வியாதியை  .உண்மையிலேயே அவரது குடும்பத்தார் எனது நண்பருக்கும் தெரியாமல் வைத்துவிட்டனர்.நானும் அதனைப் பற்றி அறியாத நிலை.

 மருத்துவரிடம் நாங்கள் ஆலோசனைக் கேட்க அதற்கு தேவையான மருத்துவ விபரங்களைக் காட்டினோம்.  மருத்துவர் அனைத்தையும் பார்த்த பின்பு எனது நண்பரை சில நேரங்கள் வெளியே இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அவர் வெளியே இருந்தபோது இடி தாக்கியதுபோல் அதிர்ச்சியான செய்தியை டாக்டர் சொன்னார். 'அவருக்கு வந்துள்ளது கேன்சர்  மற்றும் மிகவும் முற்றி விட்டது இனி எந்த வைத்தியமும் உதவாது. அதிகமாக அவர் இன்னும் மூன்று மாதங்கள் உயிருடன் இருப்பதே அதிசியம் , அதனால் இந்த உண்மையை அவரிடம் சொல்லிவிட்டால் அவர் செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்து விடுவார் பிறகு இறை பக்தியில் அதிகம் ஈடுபட்டு அமைதி காண்பார் . இதனை நீங்கள் சொல்கின்றீர்களா  அல்லது நான் சொல்லவா இல்லையென்றால் தேவை இல்லாமல் பல மருத்துவர்களை நாடுவார் என  வினவினார்!;  வேண்டாம் டாக்டர் அவரிடம் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக ஏதாவது சொல்லி அனுப்புங்கள் என்றேன். மனமுடைந்தேன்,என்னை அறியாமல் என்னை நானே  கட்டுபடுத்த முடியாமல் போனதால் கண்களிலிருந்து நீர் கொட்டியது, மனதை அடக்கிக் கொண்டு வெளியில் இருந்த நண்பரை மருத்துவரிடம்  அழைத்து வந்தேன். நான் விரும்பியபடி ' நீங்கள் சாப்பிடும் மருந்தே உயர்வானது மற்ற சிகிச்சிசைகளும் முறையாக உள்ளது .இதனையே தொடர்ந்து செயல்படுத்துங்கள்.தேவை இல்லாமல் பல மருத்துவர்களை அணுக வேண்டாம் ' என்று  டாக்டர் அறிவுரைக் கூறினார். என் கண்கள் கலங்கி  இருப்பனைக் கண்டு  டாக்டர் சொன்னதில் நம்பிக்கை வராமல் வீடு வரும் வரை   ' டாக்டர் என்ன சொன்னார் சொல்லுகள் ' என்று துருவித் துருவி  கேட்கும்போது மனதை கல்லாக்கிக் கொண்டு   மருத்துவர் உங்களிடம் சொன்னதையே நானும்  சொன்னேன். நல்ல காரியத்திற்க்காக பொய் சொல்வது தவறில்லை என மனம் நினைத்தது .

 அத்துடன் அவர் விடவில்லை வீடு சென்ற பின்பு அவர் குடும்பத்தில் மிகவும் வருத்தமாக கேட்டறிந்துக் கொண்டார். வீட்டில் உள்ளவர்களும் முழுமையாக சொல்லாமல் அவர் மனதில் ஓரளவு அறிந்துக் கொள்ளும்படி சொல்லி வைத்தனர் அவர் மிகவும் தைரியம் மிக்கவர் ஒரு சில நாட்கள் அவர் மனதில் ஆழா துயரம் இருந்தாலும்  மருத்துவர்  நினைத்தபடியே செய்ய வேண்டிய கடமைகளை செய்தார் பின்பு இறை பக்தியில் தொடர்ந்து ஈடுபட்டார், அவர் மனம் அமைதியானது .படுத்த படுக்கையிலும் இறைவனைத் தொழுவதிலும் அவன் பெயரை உச்சரித்தும் சில நாட்கள் இருக்க இறைவன் தன வசம் அழைத்துக் கொண்டாம். வியாதி பட்டதினால்  தான் செய்த தவறுக்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்கும் வாய்பு கிடைத்து. பரிசுத்தமான மனிதராக இறைவன் வசம் சேர்ந்தார்.

Indeed we belong to Allah , and indeed to Him we will return." innalillahiwainnailaihirojiun

வியாதியுடையவர்களைப் போய் பார்த்து அவரின் உடல் நலத்திற்காக இறைவனை வேண்டுவது நன்மையான செயல் அத்துடன் அவர் பாவம் மன்னிக்கப் பட்டவராக இருப்பதால் அவரையும் நம் நலனுக்காக  இறைவனை  வேண்டச் சொல்வதும்  நல்லது. இறைவனால் அது அங்கீகரிக்கப்படும்

 Dead man’s heart touching advice: Always be optimistic

 Cancer victim publishes touching message before death

Read more  http://www.emirates247.com/news/region/dead-man-s-heart-touching-advice-always-be-optimistic-2012-05-08-1.457788

நான் திருமணம் செய்து வையுங்கள் என்று உங்களைக் கேட்டேனா?

நான் திருமணம் செய்து வையுங்கள் என்று உங்களைக் கேட்டேனா?:
   நான் இந்த உலகத்திற்கு வந்தது இறைவன் அருளால் உங்கள் மூலமாக, நான் உங்கள் விருப்பத்திற்கு மாறாக உருவாக்கப்பட்டேனா அல்லது விருப்பத்தின் காரணமாக உருவானேனா  என்பது நான் அறியேன், ஆனால் நீங்கள் நான் உலகில் வந்து விழுந்ததிலிருந்து என்னை அழிக்க முயலாமல் பாசம் காட்டி வளர்த்தது மட்டும் உண்மை என்பதனை நான் அறிவேன். நீங்கள் இருவரும் எனக்காக  செய்த தியாகங்களை மறக்க முடியுமா!

   அம்மா, நான் பிறந்த போது உன்னைத்தான்  முதலில் பார்த்தேன் அந்த 'அம்மா' என்ற தமிழ்  வார்த்தையை நீ சொல்லிக்  கொடுக்காமல் உன்னை 'ம்மா'  'அம்மா' என்று  அழைக்க இறைவன் சொல்லித் தந்துவிட்டான். நான் பிறந்தபோது  உங்கள் கண்களில் விழுந்தோடிய ஆனந்தக் கண்ணீர் மகிழ்வானது . அது காலமும் நிலைத்து எனது வாழ்வை செம்மை படுத்த நீங்கள் மேற் கொண்ட முயற்சி உயர்வானது.

  அந்த உங்களது ஆனந்த கண்ணீரும், மகிழ்வும்  இப்பொழுது குறைந்து  வந்தாலும் அதனை நீங்கள் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருப்பதனை நான் அறிகின்றேன். இது யார் செய்த குற்றம்! நிச்சயமாக நான் இல்லை. நான் திருமணம் செய்து வையுங்கள் என்று   உங்களைக் கேட்டேனா? நீங்கள்தான் எனக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினீர்கள். உங்கள் விருப்பப் படியே நீங்கள் பார்த்த பெண்ணையே திருமணமும் செய்து வைத்தீர்கள். இப்பொழுது உங்களுக்கும் என் மனைவியுமான  உங்கள் மருமகளுக்கும் கருத்து வேறுபாடு வந்து உங்கள் மகிழ்வில் குறைவு வந்து விட்டதனை நான் அறிகின்றேன். பெற்றோர்களே சிறுது பொறுமையை கடைப்பிடியுங்கள்,  உங்கள் மகிழ்வுக்கு ஒரு வழி கண்டுபிடித்து விட்டேன். உங்களுக்காகவே நாங்கள் உங்களுக்கு பேரக் குழந்தையை பெற்று தருகின்றோம். அது போதும் உங்கள் மகிழ்வின் தொடர்ச்சிக்கு. நீங்களும் குழந்தையோடு குழந்தையாக மாறிவிடுவீர்கள். குழந்தை மனது குறை காணாத மனது,அதனால் இழந்த மகிழ்வு தங்களை வந்தடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.  .

பெண்கள் சட்டத்தினை உருவாக்குவார்கள் ஆனால்...!

பெண்கள் சட்டத்தினை உருவாக்குவார்கள் ஆனால்...!:
  அச்சம் ,மடம், நாணம் ,பயிர்ப்பு  இவை பெண்களுக்கு மட்டும் தேவையா! 
   தவறு செய்வதற்கு அச்சம் இருப்பதுதானே முறை. நாணப் படுவதற்கு நாணப்படுவதுதானே உயர்வு "அஞ்சுவது  அஞ்சாமை  பேதமை" .இது ஆணுக்கும் பெண்ணுக்கும் அவசியம் தேவை . வீரம் நிறைந்தவனாக ஆண் மட்டும் இருந்தால் போதுமா! தனக்கு வரும் ஆபத்தினை எதிர்கொள்ள ஒரு பெண்ணுக்கும் அவசியம் தேவை . குணங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சில வேறுபாடுகள் இருந்தாலும் இக்காலத்தில் பலவகையான குணங்களை ஆணும் பெண்ணும் அவசியம் பெற்றுக்கொள்ள தேவைப்  படுகின்றது. அனைத்துக்கும்  மேலாக நல்ல காரியங்களுக்காக ஆணும் பெண்ணும் அனுசரித்து போகும் நிலை அவசியம் தேவைப் படுகின்றது . ஆணின் காலில் விழும் பெண்ணின் குணமும் பெண்ணின் காலில் விழும் ஆணின் குணமும் அவசியம் அழிக்கப் படவேண்டும். சுமரியாதையை வளர்த்து இறைவன் ஒருவனுக்கே  அடிபணிவேன் என்ற மனப்பக்குவம் வந்தே ஆக வேண்டும். உனது உரிமை எனது உரிமையை பாதிக்கக் கூடாது என்பது பொதுவான சிந்தாந்தம். வாழ்வோம் வாழ விடுவோம் இதுதான் நம் கொள்கையாக மாற வேண்டும்  

 பெண்கள் சட்டத்தினை உருவாக்குவார்கள் ஆனால் அந்த சட்டங்கள் எந்த  முன் அறிவிப்பும் இல்லாமல்   மாற்றப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.  பெண்கள் ஒருபோதும் தவறுகள் செய்ய மாட்டார்கள் அப்படியே அவர்கள் தவறு செய்ய நேர்ந்தால் அது ஆண்களால் தூண்டப்  பட்டவைகளாகவே  இருக்க முடியும். பெண்கள் மனது சபலம் வாய்ந்தது மாற்றம் நாடுவது. ஆண்கள் மனது நிலை கொண்டது விரும்பியதை  அடைய எந்த வழியும் கையாளும் குணம் கொண்டது


   பெண்கள் புகழப்படுவதை விரும்புவாகள் புகழ்ச்சிக்கு அடிபணிவார்கள். ஆண்கள் புகழப்படுவதை விரும்பினாலும் அதில் ஒரு சந்தேகக் கண் இருக்கும்.

  பெண்களுக்கு  மூட நம்பிக்கையின்   மீது நம்பிக்கை வந்தால் அதில் முழுமை இருக்கும் அதனால்தான் சாமியார்கள் கை ஓங்கி நிற்கின்றது , ஆண்களின் மூட நம்பிக்கை சந்தேகக் கண் கொண்டது.

  பெண்கள்  மனம் அலை பாயாது ஒரு காரியத்தில் இறங்கினால் அதில் தங்கள் கவனம் சிறப்பாக இருக்கும் அதன் காரணமாகவே பெண்கள் படிப்பில் அதிக மதிப்பெண்கள் வாங்க முடிகின்றது /ஆண்களுக்கு அறிவு இருந்தாலும் எண்ணங்கள்  சிதறிவிடுவதால் படிப்பில்  பெண்களுக்கு அடுத்த  நிலைதான் வர முடியும் .

  பெண்கள் வீட்டில்  தலைமைப் பொறுப்பில் இருந்தாலும் வெளியில் அடக்கியே தன்னை காட்டிக் கொள்வார்கள்
ஆண்கள் வெளியே  தலைமைப் பதவிக்கு ஆசைப்பட்டாலும் வீட்டில் சித்தாளாகவே  இருந்து நினைத்ததை முடிக்க விரும்புவார்கள்

 பெண்கள் புரிந்துக் கொள்ளும் ஆற்றலுடையவர்கள், வைத்திருக்கும் ஆடையை எப்போது எவ்வாறு  அணிவது என்பதில் மிகவும் கவனம் செலுத்துவார்கள். ஆண்களுக்கு  அதில் அசட்டையான குணமே மேல் நோக்கி நிற்கும்.

   பெண்களுக்குள் தொலைபேசியில் பேசிக் கொண்டால் அதனை துண்டிப்பதற்கே  மனம் வராது .இரண்டு மணி நேரமும் பேசுவார்கள். 'என்ன பேசினாய் என்று கேட்டால்' 'மறந்து விட்டது அல்லது ஒன்றும் பேசவில்லை அவள் என்னன்னமோ கேட்டால் அதற்க்கு பதில் சொன்னேன் நாங்கள் பெண்களுக்குள் எதையாவது பேசுவோம் அதை நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்' என்ற பதில் கடுமையாக வரும்.

   பெண்களுக்கு பதினேழு வயதிலேயே  ஒரு பக்குவம் வந்துவிடும் ஆனால்  ஆண் அப்பொழுதும் விளையாட்டுப்பிள்ளைதான்

  மாதவிடாய் நிற்கும் காலத்தில் வைட்டமின்(சத்து ) மாத்திரைகள் சாப்பிடுவது  நல்லது இல்லையென்றால் மூட்டு  வலிகள் வர வாய்புகள் அதிகம். உடலின் எடைகள் அதிகரிக்கும் உடம்பில் சூடு  அதிகரிக்கும். ஆண்களுக்கு அந்த வயதில் பெண்கள் மீது நாட்டமும் இளம் வயதினருக்கு உள்ள ஆசைகள் வரும்.மோட்டார் சைக்கில் ஒட்டவும் ஆசைப்படுவார்கள்.

  ஆண்களுக்கு குளியல் அறைக்கு தேவைப்படுவது ,ஒரு பல் விளக்கும் ப்ரஸ் , அதற்க்கான பேஸ்ட், சவரம் செய்ய   ரேசர், அதற்கு தேவையான கிரீம்  ஒரு சோப்பும் மற்றும் டவலும் போதும் .பெண்களுக்கு என்னற்ற  உபகரணங்கள் தேவை ஆனால் அதில்பாதி பயன்படுத்தப் படாமலேயே இருக்கும் . காரணம் பார்பதெல்லாம் வாங்குவதிலும் மற்றவர்கள் வைத்திருப்பதை தானும் வாங்கி வைத்திருக்க வேண்டும் என்ற தாளாத ஆசைதான்.

  பெண்கள் பொருட்கள் வாங்க கடைக்கு போகும் முன்பே தேவையான பொருட்களை குறித்துக்  கொள்வார்கள். கடைக்கு போன பின்பு புதுமையான பொருட்கள் இருந்தால் அதனை வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவார்கள். ஆண்கள் வாயைப் பொத்திக்  கொண்டு மறுப்பு சொல்லாமல் பணத்தினை கொடுத்து வர வேண்டியதுதான், இல்லையென்றால் வீட்டில் ஒரே அமைதிதான்,கலகலப்பே போய் விடும்

 பெண் கணவன் கிடைக்கு முன் தன் எதிற்காலத்தினைப்  பற்றி மிகவும் சிந்திப்பாள் கணவன் வரும்வரை. திருமணத்திற்கு முன் ஆண் எதிற்காலத்தினைப்  பற்றிய  சிந்திப்பதில்லை மனைவி வந்த பின்
எதிற்காலத்தினைப் பற்றியே அதிகம் சிந்திப்பான் .

 விவாதத்தின் முடிவு பெண்களிடம் ஆண் ஏதாவது முடிவில் சொல்லிவிட்டால் திரும்பவும் அந்த விவாதம் தொடங்கிவிடும்

  பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு ஆனால்  குறைகளை சுட்டிக் காட்டும் குணம் அதிகம் ஆனால் கதைகள் சொல்வதில் திறமையுடையவர்கள் ஆண்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் அதனால் ஆண்கள்  யாரைப் பற்றியும் கிண்டலும் செய்வார்கள்.ஆண்களுக்கு கதை எழுதத்  தெரிந்தாலும் சொல்லத் தெரியாது.ஆனால் காப்பியடிப்பதில்  கெட்டிக்காரர்கள்.

   ஒரு வெற்றியான ஆண் தன் மனைவி செலவு செய்வதைவிட அதிகம் சேர்ப்பவன்,ஒரு வெற்றியான பெண்   தன் செலவுக்கு அதிகமாக பணம் சேர்க்கும் கணவனை அடைந்தவள்

  பெண்களின் கையழுத்து அழகாக  இருக்கும் ஆண்களின் தலையெழுத்து பெண்கள் வசமே இருக்கும்
 வெளியே  புறப்பட திட்டமிட்டு கிளம்பினால் ஆண்கள் உடனே தயார் நிலை பெண்கள் தயார் நிலைக்கு தயார் செய்வார்கள்

 அன்பு கெட்டால் அலது குறைந்தால் பெண் அழுவாள் ஆண் மவுனம் கொள்வான் முடிந்தால் மேலும் சீண்டிப் பார்ப்பான்.   

  பெண்கள் புகழப்படுவதை விரும்புவாகள் புகழ்ச்சிக்கு அடிபணிவார்கள். ஆண்கள் புகழப்படுவதை விரும்பினாலும் அதில் ஒரு சந்தேகக் கண் இருக்கும்.

  பெண்களுக்கு  மூட நம்பிக்கையின்   மீது நம்பிக்கை வந்தால் அதில் முழுமை இருக்கும் அதனால்தான் சாமியார்கள் கை ஓங்கி நிற்கின்றது , ஆண்களின் மூட நம்பிக்கை சந்தேகக் கண் கொண்டது.

  பெண்கள்  மனம் அலை பாயாது ஒரு காரியத்தில் இறங்கினால் அதில் தங்கள் கவனம் சிறப்பாக இருக்கும் அதன் காரணமாகவே பெண்கள் படிப்பில் அதிக மதிப்பெண்கள் வாங்க முடிகின்றது /ஆண்களுக்கு அறிவு இருந்தாலும் எண்ணங்கள்  சிதறிவிடுவதால் படிப்பில்  பெண்களுக்கு அடுத்த  நிலைதான் வர முடியும் .

  பெண்கள் வீட்டில்  தலைமைப் பொறுப்பில் இருந்தாலும் வெளியில் அடக்கியே தன்னை காட்டிக் கொள்வார்கள்
ஆண்கள் வெளியே  தலைமைப் பதவிக்கு ஆசைப்பட்டாலும் வீட்டில் சித்தாளாகவே  இருந்து நினைத்ததை முடிக்க விரும்புவார்கள்

அப்பாவின் கண்டிப்பும் அம்மாவின் ஆறுதலும்!

அப்பாவின் கண்டிப்பும் அம்மாவின் ஆறுதலும்!:
  தந்தை பணம் செலவழித்து என்னை ‘பெரிய, படிப்பு வைத்தார், படிக்கும்போது அவர் என்னை மிகவும் கவனமாக கண்காணித்து வந்தார். எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றாலும் அவருக்கு மனதிருப்தி அடையாது. ‘இன்னும் நன்றாக படித்திருந்தால் அதிகமாக மார்க் வாங்கி இருக்கலாமே’ என கண்டிப்பார். அத்துடன் மற்றவர்களை ஒப்பிட்டும் பேசுவார். உடனே அம்மா வந்து ‘ஏங்க இப்படி அவனை குறை சொல்லிக்கொண்டே இருக்கீங்க’ என்று சொலும்போதுஎன் மனம் அமைதியடைய ஆரம்பிப்பதற்குள் அடுத்த வார்த்தை தந்தை அம்மாவைப் பார்த்து கோபமாக ‘உனக்கு என்ன தெரியும் நீ படிதிருந்தால்தானே’ என்பதுடன் ‘ நான்ல வாங்கிய சம்பளத்தில் பாதி பணத்தை அவன் படிப்புக்கு வாரி கொட்றேன். முட்டையிட்ட கோழிக்குதானே அதன் சிரமம் தெரியும்’ என்பார் அம்மா. ‘நான் தானே பெற்றேன் அதன் வலி எனக்குத்தானே தெரியுமென்று’ முனுமுனுத்துக் கொண்டே அந்த இடத்தைவிட்டு அகன்றுவிட என் மனது மிகவும் வருத்தமாகி கண்களிலிருந்து நீர் சுரக்கும். படிப்பையே நிறுத்தி விட்டு என்கேயாவது போய்விடலாம் என்று நினைக்கும். அம்மாவை விடுத்துப் போகக்கூடாது என்ற வைராக்கியத்தில் தொடர்ந்து படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று படிப்பை முடித்தேன்.

இனி வேலை தேடும் படலம் ஆரம்பமானது. தினம் அது நிமித்தமாக கடுமையாக முயற்சித்தேன். திரும்பவும் அப்பா ஆரம்பித்து விட்டார் ‘அப்பொழுதே சொன்னேன் கம்ப்யூட்டர் இன்ஜினியர் படிக்க ஆனால் இவன் மெக்கானிகல் படிப்பேன் என்று பிடிவாதம் பிடித்தான்.அதற்கு இவன் அம்மா வேறே சிபாரிசு அவன் இஷ்டத்திற்கு படிக்கட்டுமே என்று அதான் இப்ப வேலை தேடி அலையறான் நான் சொன்னபடி கேட்டிருந்தா அருமையான வேலை நல்ல சம்பளத்தோட கிடைத்திருக்கும்’ என்பார்.

( “குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால் உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. உங்கள் எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளைத் திணிப்பது தவறு.")

நேர்முக தேர்வு சென்று களைத்து போய் வரும்போது அப்பா கேட்பார் ‘இந்த தடவையாவது வேலை கிடைக்குமா?’ கிடைச்சாலும் சம்பளம் ஒன்னும் பெரிசா இருக்காது. பர்மனென்ட் வேலையா இருக்குமா? இவன் நிலையா ஒரு இடத்தில இருக்க தகுதியான தன் திறமையை வளர்த்துக்குவானா? இப்படி அடுக்கடுக்கான வார்த்தைகள் அவர் வாயிலிருந்து அடைமழைப் போல் கொட்டிக் கொண்டேயிருக்கும்.அது எனக்கு நெருப்பில் எண்ணையை ஊற்றியதுபோல் இருக்கும். அந்த நேரத்தில் அம்மா ‘நீ வாப்பா சாப்பிட பசியோட வந்திருப்பாய்’ என்று அழைத்து செல்லும்போது அது எனக்கு சூடான நெருப்பில் நீர் ஊற்றி அனைத்ததுபோல் மன அமைதி அடையும்.

அதுதான் அம்மா.

 “தாயின் மடியில் சுவனம் உள்ளது” என நாயகம் நவின்றார்கள. தாய் மீது நேசம் காட்டு,மாறாத அன்பு செலுத்து அதுதான் நம் வாழ்வின் அடித்தளம். அம்மா இல்லாமல் நாம் ஏது? அந்த அம்மா இருக்கும் போதே அந்த தாய்க்கு பணிவிடைச் செய்து நன்மையைப் பெற்றிடுவோம். தாய் போனபின் அழுவதனால் ஒரு பயனுமில்லை.


for all MOTHER!!!Prophet Muhammad said what for you:)
Holy Quran Lokman/14
And We have enjoined man in respect of his parents-- his mother bears him with faintings upon faintings and his weaning takes two years-- saying: Be grateful to Me and to both your parents; to Me is the eventual coming.

And your Lord has commanded that you shall not serve (any) but Him, and goodness to your parents. If either or both of them reach old age with you, say not to them (so much as) "Ugh" nor chide them, and speak to them a generous word.
HOLY QOR'AN ISRAA/23
Thank you Yusuf Edghouch for helping =)
----L Y R I C S----
Who should I give my love to?
My respect and my honor to
Who should I pay good mind to?
After Allah
And Rasulullah

Comes your mother
Who next? Your mother
Who next? Your mother
And then your father

Cause who used to hold you
And clean you and clothes you
Who used to feed you?
And always be with you
When you were sick
Stay up all night
Holding you tight
That's right no other
Your mother (My mother)

Who should I take good care of?
Giving all my love
Who should I think most of?
After Allah
And Rasulullah

Comes your mother
Who next? Your mother
Who next? Your mother
And then your father

Cause who used to hear you

இருதயம் ஆரோக்கியமாக இயங்க சில குறிப்புகள். (படங்கள் விளக்கத்துடன்)

இருதயம் ஆரோக்கியமாக இயங்க சில குறிப்புகள். (படங்கள் விளக்கத்துடன்):


இருதயம்  ஆரோக்கியமாக இயங்க சில குறிப்புகள்.
படத்தினை கிளிக் செய்து பெரிது படுத்தி பாருங்கள்
 இதயம் கெட்டால் உடலும் கெட்டுவிடும்


நீர் துளிகள் நமது உடலில் தெளிக்க பன்னீர் தெளிப்பது போல் மகிழ்வு கிடைக்கும்.

நீர் துளிகள் நமது உடலில் தெளிக்க பன்னீர் தெளிப்பது போல் மகிழ்வு கிடைக்கும்.:  நீர்வீழ்ச்சிகளை பார்ப்பதிலும் அங்கு குளிப்பதிலும் அனைவருக்கும் மிகுந்த ஆர்வம் இருக்கும் . ஒர் வாரத்திற்கு முன்பு கோனார் நீர்வீழ்ச்சியில் நண்பர்களுடன் குளித்து மகிழ்ந்தேன். அனைவருக்கும் மூனார் நீர்வீழ்ச்சி தெரிந்திருக்கும். கோனார் நீர்வீழ்ச்சி ஆந்திராவில் திருப்பதி அருகில் உள்ளது. ஒரே அருவிதான்.ஆனால் கோடையிலும் நீர் கொட்டுகின்றது .குளித்தவுடன் பசி . ஒரு விடுதியும் இல்லை .இந்த நிலை வராமல் இருக்க பிலிப்பைன்ஸ் குசான் மாகாணத்தில் இருக்கும் நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டே பசியைத் தீர்த்துக் கொள்ள அருவியின் அருகிலேயே அருமையான உணவு கிடைக்கும் விடுதி உள்ளது. நீர்வீழ்ச்சியில் குளிக்காதவர்களும் நீர்வீழ்ச்சியின் அழகை பார்த்துக் கொண்டே அந்த அருவியின் குளிர்ந்த நீர் நமது கால்களில் தவழ்ந்து ஓட நீர் துளிகள் நமது உடலில் தெளிக்க பன்னீர் தெளிப்பது போல் மகிழ்வு கிடைக்கும். 
படத்தினைப் பாருங்கள்
 by mail from 'musheer'
 நீடூர் & நீடூர் நெய்வாசல் பெயர் எப்படி வந்தது!

நீடூர் & நீடூர் நெய்வாசல் பெயர் எப்படி வந்தது!:
 எப்பொழுதும் அழிவில்லாது நீடியிருத்தலின் நீடூர் எனப் பெயர் பெற்றது என்பர்.இந்நீடூர் இராஜாதி ராஜவள நாட்டைச் சேர்ந்ததாகும்.
நெய்வாசல் பெயர் எப்படி வந்தது
நெய்த வாசல் என்பது நெய்வாசல் ஆக வந்தது . ஆடைக்கு வேண்டிய நூல்கள் இங்கும் அருகிலுள்ள கூறைநாட்டிலும் நூல்கள் நெய்து வந்தார்கள், நெய்வாசல் கீழத் தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு பட்டுக்காரர் வீடு என்று இன்றும் சொல்வார்கள், அவர்கள் தெருவில் பட்டு நெய்ததை வைத்து அந்த பெயர் அடைமொழியாக வந்து விட்டது

ஒரே தெருவில் உள்ள ஒரு வரிசை வீடுகள் அடங்கிய பகுதி நீடூர் ஊராட்சியை சார்ந்தது
அதே தெருவில்அமைத்த எதிர் வரிசை வீடுகள் அடங்கிய பகுதி கங்கணம்புத்தூர் ஊராட்சியை சார்ந்தது.
இந்த தெருவிற்கு பெயர் கீழத் தெரு. இந்த தெரு நீடூர்-நெய்வாசல் மஹல்லா ஜமாஅத்தை சார்ந்தது.

நீடூர் ஒரு தனி ஊராட்சி ஆனால் புகழ்பெற்ற பழைமை வாய்ந்த நீடூர்-நெய்வாசல் பெயரில் ஊராட்சி கிடையாது. இது கங்கணம்புத்தூர் ஊராட்சியில் அடக்கம் .
நீடூர்-நெய்வாசல் மற்றும் நீடூர் ஆகிய இரண்டு ஊரிலும் முஸ்லிம்கள் அதிகம்.
உங்கள் ஊர் எது என்று நீடூர்-நெய்வாசல் மக்களைக் கேட்டால் எங்கள் ஊர் நீடூர் என்றுதான் சொல்வார்கள் நீடூர்-நெய்வாசல் என்று சொல்வதில்லை. இது ஒற்றுமைக்கு ஒரு உதாரணமா அல்லது நீடூர்-நெய்வாசல் என்று சொன்னால் மற்றவருக்கு புரியாதா!
நம் நாட்டில் எதனையோ பட்டணத்தின் பெயர்கள் மாற்றப் பட்டுவிட்டன மற்றும் சில நாடுகளின் பெயரே மாற்றப் பட்டுவிட்டன.
இந்த இரண்டு (நீடூர்-நெய்வாசல், நீடூர்) ஒரே ஊரின் பெயரை வைத்துக் கொண்டு பல மஹல்லா ஜமாஅத்தாக ஒற்றுமையுடன் செயல்படலாமே! (இப்பொழுதும் அல்லாஹ்வின் அருளால் ஒற்றுமையாகவே இருக்கின்றோம்) அதிகாரங்கள் பிரித்து அளிக்கப் பட்டால்(Distribution of powers) விளைவு நன்றாகவே இருக்கும். நீடூர் - நெய்வாசல் - பள்ளிவாசல்கள்
Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah.

S.E.A. முஹம்மது அலி ஜின்னா
Jazakkallahu Hairan நன்றி
http://nidurseasons.blogspot.com/2010/07/blog-post_7298.html

அனைவருக்கும் தான் தலைவராக வேண்டுமென்ற ஆவல்!

அனைவருக்கும் தான் தலைவராக வேண்டுமென்ற ஆவல்!:
   அனைவருக்கும் தான் தலைவராக வேண்டுமென்ற ஆவல் இருப்பது இயல்பு. ஆனால் அதற்கு யார் தகுதியானவர் என்பது பற்றி   மக்களுக்கு சிந்தனை இருந்தாலும் சரியான தலைமையை தேர்ந்தெடுப்பதில் நாட்டம் வருவதில்லை. தற்காலத்  தலைவர்  பொறுப்பில் இருக்கும் பலர்  சுயநலப் போக்கினை தன கையில் எடுத்துக் கொள்வதால் தலைவரை தேர்ந்தெடுப்பதில் மக்களுக்கு ஆர்வமில்லை, ஆனால் தலை இல்லாத உடம்பில்லை, வழி நடத்துவதற்கு ஒரு தலைமை அவசியம் தேவைப்படுகின்றது. தலைமை ஏற்று வழி நடத்துபவர் ஒருவர் இல்லையென்றால் குழப்பமே வந்து சேரும் . உங்களில் இருவர் இருந்தாலும் அவர்களில் ஒருவரை உங்களுக்கு தலைமையாகிக் கொள்ள வேண்டும்.
மூவர் ஒரு பிரயாணம் செய்தாலும் அதில் ஒருவரை தலைவராக நியமித்துக் கொள்ளுங்கள்” (புகாரி, முஸ்லிம்)

தலைமைப் பொறுப்பினை தேடி அலையக் கூடாது அது நமது ஆற்றலைக் கண்டு மற்றவர்கள் நமக்குத் தரப்பட்டதாக இருத்தல் சிறந்தது. பொறுப்பு கிடைத்த பின்பு ஆதிக்க மனப்பான்மை இல்லாமல் சேவை உணர்வே உயர்ந்தோங்கி இருக்க வேண்டும். தமக்கு கொடுக்கப்படும் தலைமைப் பொறுப்பினை 'வேண்டாம்.' என தட்டிக் கழிக்கக் கூடாது. அது இறைவனால் கொடுக்கப் பட்ட மக்களுக்கு சேவை செய்யும்  அருள். இத்தகைய அறிய வாய்ப்பினை  இறைவன் அனைவருக்கும் கொடுப்பதில்லை. தலைமைப் பொறுப்பினை ஏற்ற பின்பு அதன் சேவையை செய்ய முடியாத நிலை ஏற்படும்போது அதனை விட்டு விலகி விடுதல் உயர்ந்த செயல்.
தலைமைப்  பொறுப்பிலிருந்து செயல்படுவதற்கு சிறந்த வழிகாட்டி திருக்குர்ஆன்,அடுத்து நபிமொழிகள் இறுதியாக இவைகளில் காணப்படாதவற்றில் சந்தேகம் வருமானால் மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்து அறிவுப் பூர்வமாக  முடிவுக்கு வர வேண்டும்.   

.
 தலைவராக தேர்ந்தெடுப்பவரை நல்லவராகவும் ,சிந்தனைத் திறன் மிக்கவராகவும்,இறை நம்பிக்கை உள்ளவராகவும்,செயல்பாட்டுத் திறமை மிக்கவராகவும் உள்ளவராக தேர்ந்தெடுக்க வேண்டும்.
 “மக்களை கண்காணிக்கும் தலைவரிடம் அவருடைய பொறுப்பில் உள்ள குடிமக்கள் குறித்து கேள்வி கேட்கப்படும்” (புகாரி முஸ்லிம்) என்பது  நபி மொழி.
“மக்களில் ஒரு சாரார் மேலுள்ள வெறுப்பு அக்கிரம் செய்யும்படி உங்களை தூண்டாதிருக்கட்டும் நீங்கள் நீதி செலுத்துங்கள் அது தான் தக்வாவுக்கு மிக நெருங்கியது.” (5:8)
சேவை மனப்பான்மை – “சமூகத்தின் தலைவர் மக்களின் சேவகராவார்” (அத் தாரமி) எனும் நபி மொழிக்கேற்ப சேவை மனப்பான்மை கொண்டவராய் தலைவர் திகழ்தல் வேண்டும்.
“அணுவளவு கர்வம் உள்ளவர் சுவனத்தில் நுழைய மாட்டார்”. (முஸ்லிம்)

 தேர்ந்தெடுத்த பின் நற்காரியங்களை நிறைவேற்றுவதில் நாம்  அவருக்கு துணை நின்று  உற்சாகம் கொடுத்து உதவி செய்ய வேண்டும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"உங்களுக்குத் தலைவராக நியமிக்கப் படுபவர் கருப்பு நிறமுடைய (நீக்ரோவான) உலர்ந்த திராட்சைப் பழம் போன்ற தலையை உடையவராக இருந்தாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள். அவர்சொல்வதைக் கேட்டு நடங்கள்."

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்,"நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர மக்களின் பொறுப்பாளர்ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண்/ தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன்/ தன் பொறுப்புகளுக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண்/ தன் கணவனின் வவீட்டாருக்கும்/ அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள. அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவருடைய பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புபக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்." (நூல்: புகாரீ - ஹதீஸ் எண் : 713

'அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப்படுவீர். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.

'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.

நல்ல காலம் வருது!

நல்ல காலம் வருது!:

வந்தாச்சு வந்தாச்சு நல்ல காலம் வந்தாச்சு
வந்தாச்சு வந்தாச்சு நல்ல ஆட்சி வந்தாச்சு

சிலர் பெட்ரோல் பண்ண சிலர் கண்ரோல் பண்ண
பைக் வாங்க கார் வாங்க பணம்  போட்டாச்சு
மைக் போட்டு வோட்டு கேட்டு வாங்கியாச்சு

பலர்  வோட்டு போட சிலர் காசு பண்ண
சிலர் கோட்டு போட  பலர் வாடி வதங்க

வந்தாச்சு வந்தாச்சு நல்ல காலம் வந்தாச்சு
வந்தாச்சு வந்தாச்சு நல்ல ஆட்சி வந்தாச்சு


நல்லவை வர அல்லவை போக
கெட்டவை வர நல்லவை போக

மகிழ்வு  வர  துயரம் போக
துயரம் வர    மகிழ்வு போக

சிலர் பாசம் காட்ட   சிலர் நேசம் காட்ட
சிலர் கோபம் காட்ட   சிலர் வேசம் காட்ட

சிலர் உதவி செய்ய  சிலர் கேடு செய்ய
சிலர் பதவி நாட       சிலர் பதவி விட

சிலர் மகிழ்வு தர    சிலர் துயரம் தர
சிலர் வேடிக்கை  காட்ட        சிலர் வேடிக்கையாகி  விட

சிலர் ஆசி தர       சிலர் தூற்றி  விட
சிலர் காசி தர    சிலர் காசி பெற

சிலர் நடிக்க   பலர் ஏமாற
சிலர் படிக்க   பலர் தத்தளிக்க

உலகம் சுற்ற  நாமும் சுற்ற
கண்டது என்ன! காணப் போவது என்ன!
கண்டவர் விண்டிலர் விண்டவர்  கண்டிலர்

இருட்டைக் கண்டாலே பயம் !

இருட்டைக் கண்டாலே பயம் !:
இருட்டைக் கண்டாலே பயம்.  மின் விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கு, இருட்டைக் கண்டால் பயம். இது அவரே சொன்னது. இரவு நேர இருட்டில் திருடன் வந்துவிடுவான் என்ற அச்சம் காலம் மாறிப்போச்சு பகலிலேயே திருடன் திருட வரும் காலம்.  அக்காலத்தில் சொல்வோம்  'பகல் கொல்லைக்காரன்' என்று . அவன் நம்மை ஏமாற்றி பிழைப்பதால் அப் பெயர் வந்திருக்கலாம். இது இப்பொழுது சர்வ சாதாரண அன்றாடம் நிகழும் நிகழ்வு.   நமக்கு தெரிந்தாலும் அதனைக் கண்டு கொள்வதில்லை. தெரிந்து சொன்னால் வேலை நடக்காது அல்லது ஆபத்து நம்மை வந்து அடையும் என்ற  மனப்போக்கு.   ஆள் பலம் ,அரசியல் பக்க பலம்,பண பலம் இருப்பவர்களுக்கே இந்த பயம் இருந்தாலும் அவர்கள்  வெளியில் காட்டிக் கொள்ளாமல் 'பந்தா'  பண்ணுவார்கள்


 நாம் எங்கிருந்து வந்தோம்! இருட்டு கருவறையிலிருந்து உருவாகி பின் வெளிச்சமான இந்த உலகத்திற்கு வந்தோம் . கருவறை இருட்டில் பயமில்லாமல் இருந்தோம். வெளிச்சமான உலகில் நம் மீது காற்று வந்து வீசும்போதே நமக்கு அச்சம் வந்து நம்மிடம் சேர 'வீல்' என்று  கதற அதனைக் கண்டு மற்றவர்கள் மகிழ வரவேற்றார்கள். நாம் அன்று அழாமல் ,கத்தாமல் இருந்திருந்தால் நம் வருகையை எதிர்பார்த்த அனைவரும் துடித்துப் போய் 'ஏன் குழந்தை அழவில்லை என்ன செய்வது' என்பதோடு   'குழந்தையை தலை கீழ தூக்கி  தட்டு அப்படியும் அழவில்லையென்றால் மருத்துவரை அழைத்து வா' என்ற  பதட்டத்துடன்   ஆவன செய்வார்கள். அவர்கள் அழுகையுடன் நாம் வருவதனை விரும்பியதால்தான் இன்று வரையும் அழுகையும் அச்சமும் நம்முடன் ஒட்டிக் கொண்டது.
  இருளிலேயே இத்தனை ஒளிந்திருக்க வெளிச்சத்திலேயே நாம் ஏன் ஒளிந்து வாழ்கின்றோம். இருளை போக்க ஒளி தேவை  அதிலுள்ள அழுக்கைப் போக்க  விளக்குமாறு தேவை . அறிவின் ஒளி கொடுக்க ஆசிரியர் தேவை
ஒன்று உறுதி. பிறப்பது நிச்சயமில்லை ஆனால் இறப்பது நிச்சயம். வயிரின் இருட்டு இடத்தில எத்தனை  நிகழ்வுகள்.கருவறைக்குள் உள்ள குழந்தைக்கும்  அறிவு வளர பல முயற்சிகளை கொடுத்து வருகின்றதும் உண்மை.இதுவும் இருளில்தான்  நிகழ்கின்றது. கருவறைக்குள்  சென்று வழிபடவே சிலர் விரும்புவதும் இதுதான் காரணமா!
இறைவன் படைப்பில் எத்தனை வினோதங்கள், அதில் நாம் அறியாதவை கணக்கில் அடங்காதவை.

"வைகல் தோறும் தெய்வம் தொழு" ‘‘தூக்கத்தை விட தொழுகை மேலானது தொழ வாருங்கள்"

"வைகல் தோறும் தெய்வம் தொழு" ‘‘தூக்கத்தை விட தொழுகை மேலானது தொழ வாருங்கள்":
"ஃபஜர் பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம்" என்று காலை விடியல் வேளை தொழ அழைக்கும் பாங்குக்கு இரண்டு முறை சொலப்படுகின்றது. இப்பொழுதெல்லாம் பல ஊர்களில் தொழ ஆறம்பிக்கும் சுமார் பத்து நிமிடத்திற்கு   முன் ‘‘தூக்கத்தை விட தொழுகை மேலானது தொழ வாருங்கள்" என்று தமிழில் சொல்லி அழைக்கவும் செய்கின்றனர்
‘‘தூக்கத்தை விட தொழுகை மேலானது எழுந்து வாருங்கள்" ("ஃபஜர் பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம்") என்று விடியல் வேளையில் தொழுகைக்கு அழைப்பவர் இரண்டு முறை குரல் கொடுக்கின்றார்.

 (தொழுகைக்காக மக்களை அழைப்பது பற்றி ஆலோசனை நடந்த போது) சிலர் நெருபபை மூட்டுவோம் என்றனர். சிலர் மணி அடிப்பதன் மூலம் அழைக்கலாம் என்றனர். அவையெல்லாம் யூத, கிறித்தவ கலாச்சாரம் என்று (சிலரால் மறுத்துக்) கூறப்பட்டது. அப்போது பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தை ஒற்றைப் படையாகவும் கூறுமாறு பிலால்(ரலி) ஏவப்பட்டார்கள். அனஸ்(ரலி) அறிவித்தார் (- ஹதீஸ் 603.புகாரி )

12ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த ஔவையார் "வைகல் தோறும் தெய்வம் தொழு" என்பதும் "ஆலயம் தொழுவது சாலவும் நன்று"  என்பதும் இஸ்லாமிய சமுதாயத்தில் பள்ளிவாசலில் சென்று தொழுவதற்கு கொடுக்கும் முக்கியதிற்கும் மற்றும் காலைத் தொழுகையான  ஃபஜர்  தொழுகை மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது என்பதற்கும் பொருந்துவதனைக் காண மகிழ்வாக இருக்கின்றது.

காலையில் எப்படியாவது வைகறை [பஜர் ] தொழுகைக்கு எழுந்தாக வேண்டும்.தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுது வந்தால் உடலின் உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைத்திருக்கலாம்.

ஜமாஅத்து(கூட்டுத்)தொழுகை தொழுகையைக் கடைபிடியுங்கள். ஜகாத்தையும் கொடுத்து விடுங்கள். ருகூஃ செய்வோருடன் சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்! (2:43)

ஒரு மனிதர் தனித்துத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.அறி:இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:புகாரி,முஸ்லிம்,திர்மிதி
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஓதுவதற்கு இஸ்லாம் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றது.
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. 96:௧

இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.(2:151)

(யாவற்றையும்) படைத்த உம்முடைய தொழுகை திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. ( குர்ஆன் 96: 1)

 ஔவையாரும் இதனை "ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்" -ஔவையார்
 மூன்று ஔவையார் வாழ்ந்ததாகவும் அவர்கள் பெண் பாவலர் என்றும் சொல்கின்றார்கள்இயற்கைக்கு மாறாக நெடுநாள் வாழ விருப்பமா!

இயற்கைக்கு மாறாக நெடுநாள் வாழ விருப்பமா!:
பல்லாண்டுகள்  வாழ பல்லோரது விருப்பம்.  அதற்கு ஆசை  மட்டும் காரணமாக இருந்தால் போதுமா! மனதில் உறதி வேண்டும் அதற்கு ஆவன  செய்ய முற்படவேண்டும்
பல்லாண்டுகள் வாழ்ந்து இறைவனைத்  தொழுது நன்மையைத் தேடி செய்த பாவமான காரியங்களுக்கு பரிகாரம் தேட வேண்டும் என்பது சிலரது விருப்பம். அதற்காக நோய்வாய்ப் பட்டாலும் நெடுநாள் வாழ வேண்டும் என்பார்கள் உடல்நிலையில் வியாதி   வரும்போதுதான் நாம் நம்மை உணர்ந்து  தவறு  செய்வதிலிருந்து  திருந்தவும் செய்கின்றோம் அத்துடன் அல்லாமல் நாம் நோய்பட்டிருக்கும்போதுதான் நாம் இறைவனிடம் மனதார  மன்னிப்பு நாடுகிறோம் அதனால் நம் பாவமும் நம்மை விட்டு  நீங்குகின்றது என்ற ஆழமான நம்பிக்கை.
 உடல் நலமாக இருக்கும்போது இனி புகை பிடிக்கக் கூடாது என்று பிரசவ வைராக்கியம் செய்பவர்களுண்டு மற்றும் அதனை நடைமுறை படுத்துபவர்களுண்டு.

இயற்கையாக சில ஆகாரங்களும் மற்றும் சில செயல்பாட்டு முறைகளும்,வந்த வழிகளும் நெடுநாள் வாழ  துணை செய்வதனை நாம் அறிவோம்.தாய்  கொடுக்கும் சீமைப்பாலும் தொடர்ந்து  கொடுத்து வரும் தாய்ப்பாலும் மிகவும் சக்தி வாய்ந்தவை. தாய்ப்பால் குடித்து  வரும்  குழந்தைக்கு  எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கின்றது.
கம்பு, கேவுறு, பூஞ்சை, நல்ல காளான், தேன் மகரந்தம் மற்றும் சில இயற்கை உணவுகள் நன்மை  தரும் 
சிலருக்கு தன முன்னோர்கள்  வழி வந்த சிறப்பான ஜீன்கள் வாழ் நாட்களை அதிகமாக்கிறது. மனிதர்களின் குணாதிசயங்களை அவர்களின் ஜீன்கள்  நிர்ணயிப்பதாகசொல்கின்றார்கள்

நன்கு செயல்படும் மூளை நல்ல ஆரோகியமான வாழ்விற்கு வழிகாட்டி அது அல்லவைகளை தவிர்த்து நல்லவைகளை நாடும் பண்பினை தூண்டக்கூடியது. அறிவு வளர தொடந்து  படிக்கும் முறையினை கையாண்டு வரவேண்டும். படிக்க படிக்க தனது அறிவு வளர்வதோடு  மூளையில் உள்ள செல்களும் பன்மடங்கு பெருகும்.  கலைஞர்  கருணாநிதி, நடிகர் சிவகுமார் போன்றோர்களின் நினைவாற்றலைக்  கண்டு அனைவரும்  அதிசியக்கின்றனர். அவர்கள் தொடர்ந்து படிப்பதும் அதனைப் பயன்படுத்துவதும் அவர்களை நீடித்த மகிழ்வான வாழ்வுக்கு இட்டுச்செல்ல வழி வகுக்கின்றது.    

படிப் பதனை நிறுத்திவிட்டால் அந்த செல்கள் குறைய ஆரம்பிக்கும் அதுவே நம் அறிவு வளர்ச்சியை நிறுத்துவதோடு நினைவாற்றலையும் குறையச் செய்து வாழ்வின் வாழும் நாட்களை குறைத்து விடும்.
அதிகமான மொழிகளை தெரிந்துக்கொள்வது நமது நினைவாற்றலை தூண்டுவதொடு வாழ்வின் ஆயுளை நீடிக்கச் செய்கின்றது.
 Let us read a book every day

வயது வந்தவர்கள் வயதாகிவிட்டதாக  எக்காலத்திலும் நினைக்காமல் தொடர்ந்து தேவையான அளவுக்கு இயற்கையாக பாலியல்  விளையாட்டில் மகிழ  வேண்டும் . அதற்காக செயற்கை முறையில் மருந்து எடுத்துக்  கொள்ளக் கூடாது. மனமிருந்தால் வழியுண்டு. மனமே ஒரு உந்துச் சக்தி .

மலைகளில் வாழும் மக்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர். அவர்களுக்கு இயற்கை அழகை கண்டு மகிழ்கின்றார்கள். தூய்மையான காற்றை சுவாசிக்கின்றனர்.மலை மேடு பள்ளங்களில் நடந்து  உடலுக்கு தேவையான உடம்பின் உறுதியினை உண்டாக்கிக் கொள்கின்றார்கள்.

நாத்திகக் கொள்கை கொண்டவர்களை விட இறை பக்தியுடையோர் நீண்ட ஆண்டுகள் வாழ்கின்றனர்.அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை  ஆனால் பொருளையே நாடியே வாழ்ந்தவர்கள் அவ்வுலகத்தினை இழப்பர் அருளை மட்டும் நாடி வாழ்பவர் இவ்வுலகத்தினை இழப்பர். இரண்டும் இரண்டு கண்கள். பொருளை நாடி ஓடி நன்முறையில்  சேர்த்து அதனை அருள் கிடைக்கும் வழியில் செலவு செய்யும்   போது ஆத்மா திருப்தி வர வாழ்நாட்கள் அதிகமாக வழி உண்டாகும்  

 அசைவ உணவு உண்பவர்களைக்  காட்டிலும் சைவ உணவு சாப்பிடுவதும் நன்மை தரும். வயதான பின்பும் பல் விழுந்த பின்பும் புதிய போலிப் பல் கட்டிக்கொண்டு  மாமிச உணவை சாப்பிட்டு அது செரிக்காமல்  பல வியாதிக்குள்ளாகின்றார்கள்  . பல் விழுவதும் நரை வருவதும் நமக்கு ஒரு எச்சரிகை என்பதனை உணராமல் இருக்கின்றோம்.

  செல்வம் வர மன மகிழ்வுதான்.செலவ்த்தினை தேடுங்கள். பணக்கார நாடுகளின் மக்கள்  வாழும் ஆயூள்   நிலை சதவீதம் அதிகமாக உள்ளது . செல்வம் கிடைத்து அதனை முறையாக பயன்படுத்தி மகிழ  வேண்டும் . பணம் மட்டும் வாழ்வினை மகிழ்வாக்கிடமுடியாது, அது வாழ்கையின் தேவைகளை நிறைவு செய்வதற்கு பயன் படலாம்,அதையே நன்முறையாக பயன்படுத்துவதில்தான் மகிழ்வு உன்டாக்கி வாழ்நாளையும்  கூட்டுகின்றது.

  பொதுநல தொண்டு செய்பவர்கள் மிக மகிழ்வாக இருப்பார்கள். நான் குறிப்பிடுவது அரசியல் சார்ந்ததல்ல..உண்மையான தொண்டு.  வீதியில் தடையாக கிடக்கும் பொருளை  நீக்குவதும் ஒரு தொண்டுதான், மற்றவர்கள் போற்ற   வேண்டும் என்பதர்க்காக இல்லாமல் தன மனதிற்கு இயற்கையாக உண்டாகும  தொண்டு செய்ய வேண்டும் என்ற  மனப்பக்குவம் வாழ்வை நீடிக்கும்.

அனைத்தும் அறிந்தவன் இறைவன். வாழ்வை நீடிப்பதும் குறைப்பதும் அவன் கையில்..இருப்பினும் ஒட்டகத்தைக் கட்டி இறைவனை நாடுவது நம் பொறுப்பு. எல்லாம் அவன் வசம் என்று  இல்லாமல் நம் முயற்சியோடு சேர்ந்த வேண்டுதல் உயர்வானது.     'நீ இறைவனை  நம்பு; ஆனால் உன் ஒட்டகத்தைக் கட்டி வை'  - நபிமொழி
"நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள் "

"நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள் ":
 அரபு நாட்டில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை குடிப்பதும், பெண் குழந்தைகள் பிறந்தால் கொன்று புதைப்பதும், சமூக விரோதச் செயல்களும் ஆக்கிரமித்திருந்தது.   அரபு நாடுகளில்  பெண் குழந்தை பிறந்தால் உயிரோடு புதைத்து விடுவதும் அல்லது கொன்றுவிடும் பழக்கம் இருந்தபோது இறைவனால் இறக்கப்பட்ட வசனம் இவைகள்.

நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.- Qur'an 17:31 திருக்குர்ஆன்-17:31

எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை. - Qur'an 6:140 திருக்குர்ஆன்6:140

 இக் கொடிய பழக்கம் இன்னும் நம் தமிழ் நாட்டிலும் இருப்பதனைப்  பார்க்கின்றோம்.
இஸ்லாம் குழந்தை உண்டானபின் அதனை குடும்பக் கட்டுப்பாடு   என்ற பெயரில் குழந்தையை அழிப்பதனயும்  வன்மையாக கண்டிக்கின்றது. கரு உண்டானபின்பு குழந்தையின் தாய்க்கோ அல்லது   குழந்தையின் உயிருக்கோ ஆபத்து வரும் நிலை உண்டாகும் போது சில விதிவிலக்கு இருக்க முடியும். குழந்தை உண்டாவதற்கு முன் சில தடுப்பு முறை கையாள்வதில் உண்டாகிக் கொள்ளும் குடும்பக் கட்டுப்பாடு தவறல்ல. (இந்திரியத்தினை உள் செல்ல விடாமல் தடுத்துக் கொள்வது)    அது தாயின் உடல்நலம் கருதியாக இருக்கலாம்.
ஆனால் தேவைக்கு பயந்து அதாவது அதிக குழந்தைப் பிறந்தால் கவனிக்க முடியாது என்ற பயத்துடன் குழந்தையைப் பெற வேண்டாம் என்று முடிவுக்கு வருவது மிகவும் பெரிய தவறு.

" நீங்கள் விரும்புகின்ற ஒன்றின்  மூலம் தீங்குகள் இருக்கக்  கூடும்  நீங்கள் வெருப்பவைகளின்  மூலம் உங்களுக்கு    நன்மைகள்  இருக்கக் கூடும்" இது இறைவனின் சொல்.

தமிழில்  தர்ஜமதுல் குர்ஆனை    முதன்   முதலில் மொழி பெயர்த்த ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி  அவர்கள் ,ஆ.கா. . அப்துஸ் சமது  அவர்களின் தந்தைதான்  அவர்கள் . ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்களிடம் ஒருவர் சென்று கர்பத்தடையைப்  பற்றி தங்களது கருத்து என்ன  என்று கேட்டாராராம் . அதற்கு மதிப்புக்குரிய பாகவி அவர்கள் இந்த கேள்வியை உன் தகப்பனார் கேட்டிருக்க வேணும் என்று சொன்னார்களாம் . இதன் பொருள் உன் தந்தை கர்பத்தடையை செய்திருந்தால் இந்த கேள்வி கேட்க இந்த உலகத்திற்க்கே நீ வந்திருக்க மாட்டாய் என்பதுதான் . யோசனை செய்யுங்கள். நம் தகப்பனாரும்  இதை செய்திருந்தால் நாமும் வந்திருக்க மாட்டோம்

மக்கள் தொகை ஒரு நாட்டுக்கே பெரிய பலம். ஒரு நேரத்தில் சிங்கப்பூர்  பிரதமராக இருந்த லி குவான் யூ  குடும்பக் கட்டுப்பாட்டை  ஆதரித்தார். அதன் விளைவு  நாட்டின் மக்கட் தொகை குறைந்து நாட்டின் வளர்ச்சி குறைய ஆரம்பித்ததை  கண்ட பின் மக்களிடம் முடிந்த அளவில் அதிகமாக  குழந்தையை அதிகமாக பெறுங்கள்  என வேண்டிக் கொண்டார்.
இறைவன் நினைத்தால் ஒரே நேரத்தில் மக்கட் சமுதாயமே அழிந்துவிடும். ஒரு பெரிய அலை வீசினாலே சுனாமி வந்து விடுமோ ஏன்று பயப்படுகின்றோம். இன்னும் எதனையோ அழிவுகளை நாம் பார்க்கின்றோம்.

ஒன்று அல்லது இரண்டு குழந்தை இருக்கும்போது அதற்கு ஒரு உடற்கோளாறு  வந்தால் பயம் நம்மை வந்தடைகின்றது. காரணம் ஒன்று அல்லது இரண்டு  குழந்தைகள் பெற்றவர்களுக்கு ஒரு தெளிவு வருவதில்லை..குழந்தைகள் குறைவாக இருக்கும் போது உழைப்பிலும் குறைவு வருகின்றது. ஒன்று அல்லது இரண்டு  குழந்தை பெற்றவர்களை  விட அதிக குழந்தைகள் பெற்றவர்கள்  சிறப்பாக வாழ்கின்றாகள். அந்த குடும்பத்திற்கு பெரிய குடும்ப உறவும் உண்டாகி மகிழ்வாக இருக்கின்றனர்.
எங்கள் ஊரில் நிறைய குழந்தைகள் பெற்றவர்கள்தான் பெரிய செல்வந்தர்கள். நாம் நினைப்பது நம் திறமையால்தான் அனைத்தும்  கிடைகின்றன என்பது ஒரு மாயை .இறைவன் உதவியும் அதற்கு அவசியமாகின்றது.நம் திறமை ஒரு பகுதிதான்.

தேவைக்கு பயந்து குழந்தையை கொள்ளாதீர்கள்.மக்கள் தொகை பெருக்கத்தினால் நன்மையே விளைந்திருகின்றது 


சரியான பராமரிப்புடன்   குழந்தைகளை வளர்ப்பது  பெற்றோர்களது  முதன்மையான  கடமையாக  உள்ளது. ஆனால்   பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இடையே ஒரு பாரபட்சமற்ற முறையில் ஆண் மற்றும் பெண் என வேறுபடுத்தக்  கூடாது. எனினும், உண்மையில்  சமூகங்களில் பெண்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பது வேதனையானயாக உள்ளது.ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாகக் கருதப்படவேண்டும்   பெற்றோர்கள் ஒரு சார்புள்ளவர்களாக  இருக்க உரிமை இருந்தால், விரும்பினால் அது பெண்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். பெண் பெருமை பேசுவோம் நம் பெருமை குலையும் என்றால் பெண்ணையே அழிப்போம்.
  
ஒரு பெண் ஒரு குடும்பத்தை அவமானத்திற்கு உள்ள ஒரு விஷயம் அல்ல என்று சொல்கிறார்கள்  பெண்கள் நமக்கு  பெருமையை தரக்கூடியவர்களாகவும் மிகவும் சேவை செய்பவர்களாகவும் உள்ளார்கள் . நியாயமான, சரியான வழியில் தங்கள்  மகள்கள் மீது பரிவு காட்டும் ஒரு மனிதர்  நியாயத்தீர்ப்பு நாளில் உயர்ந்த இடத்தில இருப்பார்.
 
"ஒரு ஏழை பெண் தனது இரண்டு மகள்கள் சேர்ந்து என்னிடம் வந்தார்கள் . நான் அந்த தாயிடம்  மூன்று பேரித்தம் பழங்கள்  கொடுத்தேன். அத்தாய்   தனது இரண்டு பெண்ணுக்கும் ஒவ்வொரு பேரித்தம்  கொடுத்தாள் பிறகு அவள் தான் ஒன்று  எடுத்து  சாப்பிட தன் வாயில் போட முயலும் போது , அவரது மகள்கள் அதை சாப்பிட  தங்களது ஆசையை வெளிப்படுத்தினார்கள் . உடனே அத்தாய்  தான் உண்ண இருந்த அந்த பேரித்தம் பழத்தினையும் பிரித்து தன் பெண் பிள்ளைகளுக்கு பகிர்ந்தாள், கொடுத்த பாங்கும் நோக்கமும் தனக்கு மிகவும் கவர்ந்தது" என அன்னை ஆயிஷா தெரிவிக்கின்றார்கள். இதுதான் பெண்ணின் பெருமை.

“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி இவ் வையந் தழைக்குமாம்"


"பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள் ளேசிலமூடர் – நல்ல
மாதர றிவைக் கெடுத்தார்.
கண்க ளிரண்டினி லொன்றைக் – குத்திக்
காட்சி கெடுத்திடலாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் – வையம்
பேதமை யற்றிடுங் காணீர்".
பாரதியாரின் பாடிய மறக்க முடியாத  வரிகள்
      ” நகையணிந்த பெண்கள் இரவு நேரத்திலும் தெருக்களில் அச்சமின்றி நடந்து செல்லமுடியும் என்ற நிலை வரும் வரை நாட்டிற்கு முழு சுதந்திரம் கிடைத்தது என்பதை என்னால் ஏற்க முடியாது” காந்தி கூறினார்:
   இது தவிர ஒரு பெண் கரு கலைப்பு  சமூகங்களில் இருந்து வருகிறது அதுவும்  தாய்மார்கள் (அவர்களே பெண்ணாக இருந்து)இதனை செய்வது கொடுமை. பெண்ணை வளர்ப்பதும் பாதுகாப்பதும் திருமணம் சுமையாக வந்து சேரும் என்ற தவறான எண்ணம் கொண்டு இவ்வித முடிவுக்கு வருகின்றனர். தேவைக்கு பயந்து குழந்தைகளை கொள்ளாதீர்கள் அவர்களுக்கு தேவையானதை இறைவன் அளிப்பான். இளவயதிலேயே திருமணம், கணவர்கள் மூலம் சித்திரவதை,  மாமியார் கொடுமை படுத்துவது, நாத்தனாரின் அலட்சியப் போக்கும், கிண்டலும் இவைகள் பெண்ணாக இருந்து பெண்ணுக்கு இழைக்கப் படும் தீமைகளாக இருபதனைக் காண்கிறோம்.


அராபியர்கள் கண்டுபிடித்த கருத்தடை சாதனம்!

அராபியர்கள் கண்டுபிடித்த கருத்தடை சாதனம்!:
 பிறந்த குழந்தையைக் கொலை செய்வது கிரிமினல் குற்றம். குடும்பக் கட்டுப்பாடு என்றால் அதுவல்ல. வருமுன் காப்பதுதான் குடும்பக்கட்டுப்பாடு.


அந்தக் காலத்தில் ஒட்டகங்களைப் பயன்படுத்திய அராபியர்கள் கூழாங்கற்களை ஒட்டகத்தின் யோனியில் இட்டுவைப்பார்களாம். அப்படி இட்டால் ஒட்டகங்கள் கருத்தரிக்காது என்பதற்காக. அதுதான் பின் வளர்ந்து அதை அறிவியலும் எடுத்துக்கொண்டு, காப்பர்-டி போன்ற சாதனங்களை உருவாக்கியது.

அன்புடன் தகவல் தந்தவர்  புகாரி

10 Advanced Methods of Birth Control in Pipeline

சேவை திகைக்க! இனாம் சிரிக்க! நெஞ்சு பதைக்கும் நிலை.

சேவை திகைக்க! இனாம் சிரிக்க! நெஞ்சு பதைக்கும் நிலை.: ஒரு நாள்  ஒரு பூ வியாபாரி முடிதிருத்தகம்  சென்றார். முடி வெட்டிய பிறகு   பூ வியாபாரி முடிதிருத்துபவரிடம் பணம் கொடுத்தார் . 'நான் பணம் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் இந்த வாரம் சமூக சேவை செய்கிறேன்'.என்றார் அந்த நாவிதர்.
 
அடுத்த நாள் காலை, முடி திருத்தும் கடை திறக்க சென்ற போது ஒரு வாழ்த்து  அட்டை 'நன்றி' என்று எழுதி  இருந்தது மற்றும் ஒரு டஜன் ரோஜாக்கள் ஒரு பையில் இருந்தது

அன்று ஒரு மளிகை கடைக்காரர் முடி வெட்டிக்கொள்ள வந்திருந்தார். முடி வெட்டி முடிந்தவுடன்  மளிகை கடைக்காரர்  முடிதிருத்துனரிடம் அதற்குரிய பணம் கொடுத்தார் அதற்கு அந்த நாவிதர் 'மன்னிக்கவும் நான் இந்த வாரம் சமூக சேவை செய்கிறேன்' அதனால் தயவு செய்து பணம் கொடுக்க வேண்டாமென்றார்.  அதற்கு மரியாதை கொடுத்து மளிகை கடைக்காரர்  நன்றி சொல்லி விட்டு சென்றார் . அடுத்த நாள் முடித்திருத்தகம் திருக்கும்போது 'தயவுசெய்து எனது அன்பான அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற வாசகத்துடன் ஒரு  வாழ்த்து அட்டையுடன்  ஒரு பை நிறைய மளிகை பொருள்களும் இருந்தன.

அந்தநாள்  பாராளுமன்ற உறுப்பினகள் இருவரும் அவரது கட்சியைச் சார்ந்த சிலரும் முடிதிருத்தகம் திறப்பதற்கு முன்பே காத்திருப்பதனைக் கண்டு  முடிதிருத்துபவர் அதிர்ச்சியுற்று  'நாம் ஒன்றும் தவறு செய்யவில்லைங்களே' சொன்னார். அதற்கு  அவர்கள் 'நாங்களும் உங்கள் சமூக சேவையில் முடி வெட்டிக் கொண்டு  உங்கள் சேவையைப் பாராட்டிவிட்டு போகலாம் என்பதற்கு வந்துள்ளோம்' என்றார்கள்'.

இனாம் கொடுத்துவிட்டு வாக்குச் சீட்டினை வாங்கிவிட்டு இனாமாக  நம்மிடம் பல வகைகளில் நன்மை அடைந்துவிடும் காலத்தில் நாம் வாழ்கின்றோம்!  

LinkWithin

Related Posts with Thumbnails