Friday, August 24, 2012

எப்போழுதுதான்முடிவுக்கு வருவது!

எப்போழுதுதான்முடிவுக்கு வருவது!:
 பலபேர் வாழ்கையில் கணவன் மனைவி இருவருக்கும்  விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் இல்லாமல் பலநாட்கள் தம்பதிக்குள் பேசாமல் இருந்ததனை நான் அறிந்திருக்கின்றேன். ரசத்தில் சிறிது அதிக உப்பு  சேர்தமையால் கணவன் மனைவியை கோபமாக பேச அவள் வருத்தமடைந்து வாயடைத்துப்போய் அதில் இருவருக்கும் மவுன விரதமாக மாறி சில நாட்கள் ஓடியதும் உண்டு .
"நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்)விட்டுவிடுவார்கள்."
 அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி

வாழும் ஒவ்வொரு நாளும் முக்கியமானது, இழந்த  மகிழ்வு இழந்ததுதான், அதற்கு முக்கிய காரணம் கோபதையும் தாபத்தையும்  விட்டுக்  கொடுத்து முடிவுக்கு கொண்டு வராமல் போனதுதான்.
"உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவர்களே" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).
நூல்கள்: அஹ்மத், திர்மிதீ.

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது." - குறள்
மு.வ உரை:
இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.  -
திருக்குறள்  -45

தம்பதிகள் வாழ்வில் எக்காலமும் தனித்து படுக்கக் கூடாது  அது கோபத்தினை முடிவுக்கு வரமுடியாமல் வாழ்வின் முடிவுக்கே வந்துவிடும்.   "கோபக்காரனுக்கு புத்தி மட்டு" . அக்காலத்தில் சிறிய வீட்டில் சிறப்பாக வாழ்ந்தார்கள்.வருத்தம் உண்டானாலும் ஒருவரை  ஒருவர் அடிக்கடி சந்தித்துக் கொள்ள வாய்புகள் அதிகமாக் இருந்தது. இப்பொழுது இருக்கும் பெரிய வீடுகளில் அந்த நிலை குறைவு. 'சிறுக கட்டி பெருக வாழ்' இது வீட்டிற்கும் மிகவும் பொருந்தும் 
பார்வையை விட்டு நீங்கி இருத்தலே மனதை விட்டு விலக வைத்துவிடும்.அதிலும் கோபமாக பிரிந்திருப்பது மிகவும் கொடுமை. பிழைப்புக்காக வெளிநாடு சென்றாலும் குடும்பத்தோடு மடல்வழி அல்லது தொலைபேசி வழி தொடர்பு வைத்துக்கொண்டே இருக்க வேண்டும். (ஆனால் அது கவலையை சொல்வதற்கு  பயன்படுத்தப் படாமல் மகிழ்வை பகிர்ந்துக் கொண்டு உற்சாகப் படுத்துவதாக அமைய வேண்டும்.)  
  நீண்ட காலப் பிரிவு,இல்லற சுகத்தில் ஏமாற்றம்,தம்பதியரிடையே சரியான புரிந்துணர்வு இல்லாமல் போவது,மனைவியிடமிருந்து கிடைக்க வேண்டிய அன்பும் மரியாதையும் கணவனிடமிருந்து கிடைக்க வேண்டிய கனிவும் அரவணைப்பும் குறைந்து காணப்படுவது.

"உறவை முறித்து வாழ்பவன் சொர்கத்தில் நுழைய மாட்டான்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி)
நூல்: புகாரி 5984

கணவனும் மனைவியும் முழுமையாக பிடித்தவர்காக ஒருபோதும் சிறப்பாக வாழ்வை அமைந்துவிட முடியாது. கிடைத்த வாழ்வை சிறப்பாகிக் கொள்ள முயல்வதே சிறந்த வாழ்வு . வாழ்க்கை என்பது பொருள் கொடுத்து வாங்கும் பொருளல்ல.அது மனதைச் சார்ந்தது.வாழும் முறையைப் பொருத்தது.

அவர்களுடன் நல்ல முறையில் இல்லறம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடக் கூடும்' (அல்குர்ஆன் 4:19)

தாமதமான தீர்ப்பு தவறான தீர்ப்புக்கு வழி வகுக்கும். வருத்தம் ,ஆணவம், வீராப்பு கோபம்,அகம்பாவம், நீ பெரியவனா அல்லது நான் பெரியவனா? இவைகள் மனிதனை வாழ்வின் சோகத்திற்கு ஒரு நாள் கொண்டு சேர்த்துவிடும்.  வருந்தும் நாள் வாழ்வின் கடைசி காலமாக மாறுவதற்குள் தன்னை திருத்திக் கொள்ளாதவன் தன வாழ்வை தானே அழித்துக் கொள்பனாக ஆகிவிடுவான் . உன் அகந்தை  எத்தனை நாளைக்கு! இறைவன் நாடினால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு உன் முடிவை,உன் வருத்தத்தை, உன் கவலையை உன்னால் சொல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படலாம். அந்த நிலை எப்பொழுது வரும் என்று நீ அறியாது இருக்கின்றாய். வேண்டாம் உனக்கு இந்த அகந்தை உடனே திருந்து . விட்டுக்கொடு முடிவுக்கு வந்துவிடு .தாமதமான தீர்ப்பு தவறான தீர்ப்புக்கு வழி வகுக்கும்.   
 மூன்று இரவு மூன்று பகல்களுக்கு மேல் பகைமைக் கொண்டு பேசாதிருப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைசெய்திருப்பதாக  ஹதீஸ் கிரந்தங்களில் காணமுடிகிறது.
  ‘தனது சகோதரனுடன் மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருப்பது கூடாத செயலாகும். எனவே மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருக்கும் நிலையில் மரணிப்பவன் நரகம் நுழைவான்’ அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : அஹ்மது, அபூதாவுத்.

பகைமையை விட்டொழித்து பாசத்துடன் வாழ இப்பொழுதே முடிவு செய்யுங்கள்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails