Friday, August 24, 2012

கோபம் கொன்றுவிடும் !

கோபம் கொன்றுவிடும் !:
 உயிரினம் அனைத்துக்குமே கோபம் வருவது இயல்பு. சிந்திக்கும் திறன் கொண்ட மனிதனுக்கும் கோபம்  வரும். மனிதனைத் தவிர மற்ற இனங்களுக்கு வரும் கோபம் தற்காலிகமானது ஆனால் மனிதனுக்கு வரும் கோபம் பல்வகையானது.அது வந்து மறையும் சமயத்தில் மனதில் நிலைத்து நிற்கும். மின்னல் வேகத்தில் வந்து அதே வேகத்திலும் மறையும், கோபம் வருவது இயல்பு. அது மனித உணர்வுக்கு உள்ளடக்கம். கோபம் வர ஒரு காரணமும் இருக்கலாம். கோபப்படுவதற்கு கோபப்பட்டுத்தானே ஆக வேண்டும். கோபத்தின் அளவுகோல் அதிகமாக அதனால் விளையும் பாதிப்பும் அதிகமாகின்றது. கோபம் அதிகமாக வருவது அதிக இரத்த அழுத்தம் உள்ளவருக்கும்,தாழ்வு மனப்பான்மை உடையவருக்கும்.அதிக கவலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தூக்கம் குறைவாக உள்ளவர்களுக்கும், பிரச்சினையை தீர்க்க வழி தெரியாமல் திண்டாடுபவர்களுக்கும்  இது அதிகம் வர வாய்ப்புள்ளது. கடுமையான கோபம் மனதை பாதிப்பதோடு உயிரையே போக்கி விடும் ஆற்றலுள்ளது,  இது குறிப்பாக அதிக இரத்த அழுத்தம் உள்ளவரின் உயிருக்கே ஆபத்து விளைவித்து விடும்.  கோபம் கொள்வதால் .ஆரோக்கியத்தையும் அழித்துவிடும். கோபத்தில் எடுக்கக் கூடிய சில முடிவுகள் வாழ்வையே தலை கீழகாக  புரட்டி எடுத்து விடும் அல்லது வாழ்ந்த சுவடுத் தெரியாமல் அழித்து விடும். 
ஒருவருக்கு கோபம் வந்து அதனால் மற்றவரை பழி வாங்கும் திறனிருந்து ஆனால் கோபத்தை தணித்துக்கொண்டு கோபம் உண்டாகியவரை மன்னித்தாரோ அவர்தான் உயர்ந்தவர். கோபத்தை கட்டுப் படுத்துபவனே சிறந்த வீரன்.


மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான். என்று இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள். நூல்:புகாரி 6114.
 
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.-குறள் 305

ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.
-மு.வ உரை

கோபம்  வந்தால் என்ன செய்வது!

கோபம் வரும்போது இறைவனை நினைத்துக் கொண்டு அவனை மனத்தால் துதியுங்கள் மற்றும் அமைதி காணுங்கள்
முகத்தை நீர் கொண்டு கழுவிக் கொள்ளுங்கள்.
அமைதியாக கோபம் வந்த இடத்திலேயே அமருங்கள் இன்னும் கோபம் தொடர்ந்தால்  படுத்து விடுங்கள்
நன்றாக முச்சை இழுத்து விட்டு சுவாசியுங்கள்.  


 மேன்மையானவர:
 அவர்கள் (எத்தகையோரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்.(குர்ஆன் -42:37.)

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails