அம்மாவுக்கும் மகளுக்கும் உள்ள நேசம் உயர்வானது . அம்மாவின் அன்புதான் மகளின் அறிவை வளர்க்கும். தாய் மகளுக்கு தனக்கு தெரிந்த அத்தனை கலையையும் சொல்லித் தருவாள்.தனக்கு தெரியாததையும் அறிந்துக் கொள்ள வழி வகுப்பாள். உடை உடுத்துவது முதல் சமைப்பதுவரை தெரியவைப்பாள். பொதுவாக தாயின் குணமே மகளுக்கும் இருக்கும். அதனால்தான் தாயைப்போல பிள்ளை நூலைப் போல சேலை என்பார்கள். ஒரு தகப்பன் கெட்டவனாக இருந்தால் அதனால் அந்த தாய் படும் அவதியினைப் பார்த்து அந்த தாய்க்கு பிறந்த குழந்தைகள் பொறுப்புடன் நடப்பார்கள்.ஆனால் அந்த தாய் நல்லவளாக இல்லையென்றால் அந்த குடும்பமே சீர்கெட்டுவிடும். உன் நண்பனைப் பற்றி சொல் உன்னப் பற்றி சொல்கின்றேன்
என்பதுபோல் தாயைப்பற்றி சொல் அவள் மகளைப் பற்றி அறிய முடியும் என்பார்கள். பெண் பார்க்க போகும்போது தாயின் குணங்களை கேட்டு அறிந்துக் கொள்வார்கள். தாயின் வளர்ப்பு முறையும் தாயின் குணமும் பொதுவாக அவள் மகளுக்கு வந்தடைய வாய்ப்பாக உள்ளது.
ஒரு தாய்க்கு தன் மகளுக்கு செய்யும் பணி எளிமையாக இருக்க முடியாது. தாய் மகளை அன்பு காட்டி நேசமாக வளர்ப்பதால் இருவருக்கும் நட்பு மனப்பான்மை உயர்ந்து நிற்கும்.இந்த நிலை தாய்க்கும் அவளது மகனுக்கும் இருப்பதில்லை. தாய்க்கு பணிவிடை செய்வதிலும் மகளே உயர்ந்து நிற்கின்றாள். பெண் பிள்ளை இல்லாத தாய் தனது இறுதிக் காலத்தில் படும் அவதி பரிதாபத்திற்குரியது.
நபி மொழி
தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.
பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
''நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்;
முதலாவதாக அவளுடைய செல்வத்திற்காக, இரண்டாவதாக அவளுடைய குடும்ப(வம்ச)பாரம்பரியத்திற்காக, மூன்றாவதாக அவளுடைய அழகிற்காக நான்காவதாக அவளுடைய மார்க்க(நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க(நல்லொழுக்க)ம் உடையவளை மணந்து, வெற்றி அடைந்து கொள். அறிவிப்பவர் : அபு ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி
1 comment:
Assalamu Allaikum...var
really nice article every house wife must be read.it is true
yours
naseer ali dubai
Post a Comment