Friday, August 24, 2012

அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி-5)

அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி-5):
 அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -1)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -2)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -3) 
 அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி -4 அரபிக் கல்லூரி வளம் பெறுதல்)
by K.M. ஜக்கரியா, B.Com.,எலந்தங்குடி


                                           அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.
மக்கட் பேறு :
 தமது குடும்பம் விரியடையவே தம்மால் விரிவாக்கப்பட்ட நீடூர்  ஜின்னா தெருவில் வீடு ஒன்றைக் கட்டி ஹாஜிமஹால் என அதற்குப் பெயர் சூட்டி அதில் வாழ்ந்து வரலானார்கள். வளமார் விரிந்த நெஞ்சோடு,  விஞ்சு  புகழ் வள்ளற்றன்மையோடு நிறைந்த மக்கட் செல்வத்தையும் பெற்றிருந்தார்கள். ஷபீர் அஹ்மத், அப்துல் ஹமீத், முகம்மது ஜக்கரியா, அப்துல் லத்தீப், அப்துல் ஹக்கீம், முகம்மது சயீத், முகம்மது அலி ஜின்னா  என்ற ஆண் மக்களும்.
ரஹ்மததுன்னிசா, பாதிமாஜின்னா என்ற பெண் மக்களும் பிறந்தனர்.

  நியாயம் வழங்குதல் :
ஹாஜியார் அவர்கள் தஞ்சை மாவட்டம் முழுதும், அதைத் தாண்டியும் அறிமுகம் ஆனவர்கள். சொல்லாலும் வாக்காலும், இறைவழி நின்று செயலால் அதைக் கட்டிக்காத்த அந்த பெருமகனின் சேவை மக்களிடையே ஏற்பட்ட எண்ணிறந்த பிணக்குகளை மனமுறிவுகளை நேர்படுத்தியிருக்கின்றன. எத்தனையோ சச்சரவுகள், சண்டைகள்,
வழக்கு மன்றம் செல்லாமலே ஹாஜியார் அவர்களின் பஞ்சாயத்தால் சுமூகமாக தீர்க்கப்பட்டிருக்கின்றன.

இறையடி சேர்தல்:
அவர்கள் இவ்வுலகில் இறுதி மூச்சு சுவாசிக்கும் வரை மக்கள் நலனும், பொது நலத் தொண்டுமே அவர்களிடத்து முதலிடம் பெற்றன. அவர்கள் பெற்ற செல்வங்களைக் காட்டிலும்,பேணி வளர்த்த   மதரஸா மிஸ்பாஹுல்  ஹுதாவையே பெரிதும் நேசித்தார்கள். உலகமுள்ளளவும் அது ஞான ஒளி பரப்பி சமுதாயத்தின் அகக் கண்ணைக் திறந்து ஹாஜியாரின் உன்னத சேவைக்கு சாட்சியம் கூறிக்கொண்டிருக்கும். 1955 -ம் ஆண்டு அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது, அதே ஆண்டு மே திங்கள் ஐந்தாம் நாள் பகல் சுமார் 2 மணிக்கு ஆண்டவன் கட்டளைப்படி இவ்வுலகை நீத்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்,மெய்யாகவே நாம் இறைவனை சேர்ந்தோர் ஆவோம் மேலும் மெய்யாகவே நாம் திரும்பிச் செல்கின்றோம்.  (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியவர்கள்) ஆவி பிரியும் சில வினாடிகளுக்கு முன்கூட தமக்கு வைத்தியம் செய்த மருத்துவருக்கு நன்றி கூறினார்கள். கண்ணீர் பெருக்கெடுத்தோட  தேம்பி கொண்டு ஒரு கூட்டமே சுற்றிலும் நின்று கொண்டிருந்தது. கடைசி நிமிடத்தில் அனைவரையும் அவர்கள் அழைத்து தாம் அறியாமல் ஏதாவது பிழை செய்திருந்தால் பொறுத்தருளும்படி கேட்டுக் கொண்டார்கள். இறுதி நிமிடம் வரை இறைவனுக்கேற்ற அடியானாகவும் குற்றமற்றவனாகவும் இருக்க நாடியதையே இந்த நிகழ்ச்சி அறிவுறுத்துகிறது. புதல்வர்கள்,புதல்விகள்,உற்றார்,உறவினர், அவர்கள் வளர்ப்பால் வளர்ந்தோங்கி இருக்கும் மதரஸாவும்,மாணவர்களும்,கட்டி முடித்த கல்விக் கூடங்களும் சோகமே உருவாக நின்று அறற்ற இறுதி விடை பெற்றார்கள்.

 ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைக்க வேண்டியதாகும்.(இறுதியில்) நீங்கள் நம்மிடமே திரும்பி வாருங்கள்.
என்ற இறைவசனத்தை  எண்ணி சாந்தி பெறுவோமாக.

Jazaaka Allah khair! :ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா நுற்றாண்டுப் பெருவிழா  வரலாற்று மலர்  
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -1)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -2)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -3)

  நீடூர் - நெய்வாசல் - Nidur - Neivasal
  ஊருக்குப் பெருமை « SEASONSNIDUR
 
K.M. ஜக்கரியா, B.Com.,
( K.M. ஜக்கரியா, B.Com., அவர்களது  சொந்த ஊர் எலந்தங்குடி)

அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப் அவர்களது சரிதத்தை எழுதிய K.M. ஜக்கரியா, B.Com., அவர்கள் மிகவும் புகழ்பெற்ற சிறந்த எழுத்தாளர். பல்வேறு இஸ்லாமிய  இதழ்களில் இவரது படைப்புக்கள்  வெளிவந்துள்ளன. பல்வேறு இஸ்லாமிய  இதழ்களில் இவரது படைப்புக்கள்  வெளிவந்துள்ளன .இஸ்லாமிய இலக்கியக் கழகத்தில்  பல்லாண்டுகளாக பொருளாளராக இருந்து சிறப்பான சேவை செய்து வருபவர் . K.M. ஜக்கரியா அவர்கள் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் படித்தவர்.  படித்த பின்பு மாயூரத்தில் சில காலம் தொழில் செய்த பின்பு  லாவோஸ் சென்று அங்கு அமெரிக்கன் வெளிவுரைத் துறையில் லாவோஸ்-ஒப்பந்த வல்லுநர் வேலையில் பணி செய்தார். பின்பு ஈரானில் அமெரிக்கன்  எண்ணெய் நிறுவனத்தில் ஜெர்மன் எஃகு ஆலை, பின்பு குவைத் மின் நிலைத்தில் பணியாற்றினார் .பலநாடுகளுக்கு சென்று வந்த அன்பவமுண்டு . அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அமெரிக்க அரசால் சிறப்பிக்கப்பட்டவர் .


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails