Friday, August 24, 2012

உங்கள் அப்பா வாழ்ந்த காலம் அப்படி ! நீங்கள் வாழும் காலம் இப்படி! நூறு வயதிற்கும் வாழ்க்கை

உங்கள் அப்பா வாழ்ந்த காலம் அப்படி ! நீங்கள் வாழும் காலம் இப்படி! நூறு வயதிற்கும் வாழ்க்கை:
 அன்று வாய்ப்புகளை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை . கிடைத்ததை வைத்து நிம்மதியாக,மகிழ்வாக வாழ்ந்தார்கள்.
50,000 மேல் 100 ஆண்டுகள் மேல்( நூறு வயதிற்கும் மேல்) வாழும்  மக்கள் தொகை ஐக்கிய அமெரிக்க உள்ள  நாடுகளில்   வளர்ந்து வருகிறது.
 அவர்களிடமிருந்து   நாம் நூறு வயதிற்கும் மேல்  வாழ்வது எவ்வாறு என்பதனை   கற்று கொள்ள முடியும்.
குற்றம் செய்ய தூண்டுதலும் இல்லை அதற்கு அவசியமும் மற்றும் வாய்ப்புமில்லை அதனால் தவறு செய்துவிட்டு வருந்த வேண்டிய அவசியமுமில்லை. குற்றம் செய்தாலல்லவா குற்றவுணர்வு இருக்கும் .
இக்காலம் குற்றம் செய்துவிட்டு பெருமையாக பேசி மகிழும் காலம் . உத்தமன் என்ற போலி வேடம் போடும் காலம்.
குற்றம் செய்வது இயல்பு அதனை நினைத்து வருந்தி திருந்தி வாழ்வது உயர்வு. சமூகம் ஒரு நல்ல சமூகமாக அமைய வழி நடத்துபவர் உயர்வானவராக இருப்பது அவசியம்.தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி . நாம் தேர்ந்தெடுப்பதெல்லாம் தன்னலம் கருதி ஒரு சார்புடையதாக இருப்பதால் அது  நல்ல கண்ணோட்டத்தில் இல்லை .

நீங்கள் விரும்பும் நல்லதை உங்கள் சகோதரனுக்கும் கொடுக்க வேண்டியது உங்கள் கடமை . அறிவு ஆற்றல் அனைத்தும்  இருந்தும் அதனை நமக்குள் அடக்கி வைத்தல் தவறு. சிந்தனை செயல்படுத்தப்பட்டு அதனை மற்றவர்க்கும் ஏற்றி வைப்பது உங்கள் கடமையல்லவா!

 தலைவராக தேர்ந்தெடுப்பவரை நல்லவராகவும் ,சிந்தனைத் திறன் மிக்கவராகவும்,இறை நம்பிக்கை உள்ளவராகவும்,செயல்பாட்டுத் திறமை மிக்கவராகவும் உள்ளவராக தேர்ந்தெடுக்க வேண்டும்.
 “மக்களை கண்காணிக்கும் தலைவரிடம் அவருடைய பொறுப்பில் உள்ள குடிமக்கள் குறித்து கேள்வி கேட்கப்படும்” (புகாரி முஸ்லிம்) என்பது  நபி மொழி.
“மக்களில் ஒரு சாரார் மேலுள்ள வெறுப்பு அக்கிரம் செய்யும்படி உங்களை தூண்டாதிருக்கட்டும் நீங்கள் நீதி செலுத்துங்கள் அது தான் தக்வாவுக்கு மிக நெருங்கியது.” (5:8)
சேவை மனப்பான்மை – “சமூகத்தின் தலைவர் மக்களின் சேவகராவார்” (அத் தாரமி) எனும் நபி மொழிக்கேற்ப சேவை மனப்பான்மை கொண்டவராய் தலைவர் திகழ்தல் வேண்டும்.
“அணுவளவு கர்வம் உள்ளவர் சுவனத்தில் நுழைய மாட்டார்”. (முஸ்லிம்)

மனிதன் நல்லவன் மக்கள் கொடியோர். "உலகம் ஒரு நாடக மேடை அதில் ஒவ்வொரு மனிதனும் நடிகன்"
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்,"நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர மக்களின் பொறுப்பாளர்ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண்/ தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன்/ தன் பொறுப்புகளுக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண்/ தன் கணவனின் வவீட்டாருக்கும்/ அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள. அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவருடைய பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புபக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்." (நூல்: புகாரீ - ஹதீஸ் எண் : 713விளக்கப்படம்: நூறு வயதிற்கும் வாழ்க்கை 
தயவு செய்து கண்கவர் விளக்கப்படம் பாருங்கள் இதில் சில சுவாரசியமான சிறப்பம்சங்கள் காணக் கிடைகின்றன நூறு வயதிற்கும் மேல் வாழும் மக்கள் தொகை பட்டியல் பார்க்க கீழ் உள்ளதை கிளிக் செய்யுங்கள்.

http://en.wikipedia.org/wiki/Category:Indian_centenarians

 http://en.wikipedia.org/wiki/Lists_of_centenarians


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails