Sunday, April 29, 2012

Project Glass: One day...

மணவாழ்வு மகிழ்வுற சில வழிகாட்டல்கள்..

‘நான்கு விடயங்கள் மகிழ்ச்சியைக் கொண்டு வரக்கூடியது: ஸாலிஹான மனைவி, போதுமான இருப்பிடம், ஸாலிஹான அண்டை வீட்டான், நல்ல வாகனம் என்பனவையாகும். (அறிவிப்பவர்: ஸஃது பின் அபீவக்காஸ் (ரழி), நூல்: இப்னுஹிப்பான் 4094, பைஹகீ 9021)

கணவன்மார்கள் பலர் தமது துணைவிகளைப் பற்றி அதிகமாகக் குறிப்பிடும் விமர்சனங்கள் இதோ…

..எனது மணவாழ்விலே நாம் மகிழ்ச்சியை உணர்வதில்லை…..எனது மனைவி என்னோடு அன்பைப் பரிமாறுவதில்லை…எனது மனைவி அதிகம் கோபப்படுகிறாள்…

என் மனைவி என் முன்னால் அழகாக இருப்பதில்லை…என் மனைவியொரு சுயநலவாதி…

என் மனைவி என்னிடம் அதிகம் எதிர்பார்க்கிறாள்…என் மனைவி மார்க்கக் கடமைகளில் கவனம் செலுத்துவதில்லை…

என் மனைவிக்கு அறிவு மட்டு…அவள் ஒரு குழப்பக்காரி…அதிகம் சந்தேகிக்கிறாள்…

குழந்தைகளைக் கவனிப்பதில் அலட்சியம் செய்கிறாள்…எனது குடும்பத்தை மதிப்பது கிடையாது…

இவைகள்தான் இக்கணவர்கள் மகிழ்ச்சியில் தோற்றுவிட்டதாகக் கூறும் காரணிகள்..

யதார்த்தத்தை நாம் ஆய்வு செய்கின்ற போது இத்தவறுகளுக்கெல்லாம் கணவன்மார்களே காரணியாக அமைகின்றனர். குறிப்பாக தெரிவு விடயத்தில் இவர்கள் விடுகின்ற தவறுகள் பிரதான காரணமாகும்.

சில சமயங்களில் கணவன்இ மனைவியின் நல்ல பண்புகளை மறந்து தவறுகளைப் பெரிதாகக் கருதுகின்றவனாக இருந்து விடுகின்றான். நபியவர்கள் கோணலும் குறையும் பெண்ணின் இயற்கையோடு ஒட்டியது என்று கூறிச் சென்று விட்டார்கள்.

எனவே அவளோடு நடந்து கொள்ளும் போது இயற்கைத்தன்மையை மறந்துவிடக்கூடாது. இதனையே நபியவர்கள் பெண்களுக்கு நல்லதையே நாடுங்கள்..என்ற முஸ்லிமில் இடம்பெறும் அறிவிப்பிலே

‘பெண் (வளைந்த) விலா எலும்பைப் போன்றவள் ஆவாள். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை நீ அப்படியே விட்டுவிட்டால், அவளில் கோணல் இருக்கவே அவளை அனுபவிக்க வேண்டியதுதான் என்று அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 2912,2913)

Saturday, April 28, 2012

முஸ்லிம் சகோதரர்கள் பெரிய பணிகளில் அதிக அளவில் இல்லை !

 முஸ்லிம் சகோதரர்கள் பெரிய பணிகளில் அதிக அளவில் இல்லை என்பதை பல ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். என் முஸ்லிம் நண்பர்களிடம் வெதும்பி இருக்கிறேன். அவர்களிடம் உரையாடியதில் இரண்டு/மூன்று காரணங்கள் முக்கியமானதாகத் தெரிகிறது: ஒன்று, பதிவில் சொல்லியபடி, கல்வி என்றால் மதரசாவுக்கு அனுப்பினால், மேல் படிப்புக்கு எவ்வணம் பதிய முடியும்? இரண்டு: குடும்பத்தின் அளவு பெரியதாக இருப்பதால், அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பாமல், ஒன்றிரண்டு பேரை மட்டும் அனுப்புவது; அவர்களையும் ஐந்து, எட்டு, அதிகப்படி பத்தாவதுடன் நிறுத்திவிடுவது; பெண்களை பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பது. வேறு பிரிவுகளில் அதிகம் பேர் மேல்படிப்[பு படிக்கிறார்கள் என்றால் அதில் பெண்கள் இருபது-முப்பது சதவீதம் உள்ளனர்; முஸ்லீம்களில் பெண்கள் கல்வி மீது ஏற்பு இல்லை. (ஆந்திர பிரதேசத்தில், ஒவ்வொரு பொறி இயல் பிரிவு வகுப்பிலும் மூன்றில் ஒன்று பெண்களுக்கு ஒதுக்கீடு உண்டு; என் புதல்வி படித்த வகுப்பில் பதினைந்து பெண்களில் ஒருவரே முஸ்லீம்.) முஸ்லீம்கள் பெரும் அளவில் மேல் படிப்பில், உயர் பதவிகளில் வர வேண்டும் என்றால் அடிப்படை கண்ணோட்டம் மாற வேண்டும்.

இன்னொன்று: சவுதி, காதர் போன்ற செல்வம் மிக்க நாடுகள் இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லீம்கள், வக்ப் நிறுவன் நடத்தும் கல்வி நிலையங்களுக்கு, கல்லூரிகளுக்கு நிதி உதவி செய்யலாம். புனித சேவியர், புனித ஜோசப் முதலிய கல்வி நிறுவங்கள் வெளி நாடு நிதிகளிலேயே வளர முடிந்தது.

கடைசியாக ஒரு விண்ணப்பம்: முஸ்லீம் மாணவர்கள் அதிக அளவில் இல்லாததற்கு அடிப்படை காரணங்கள் இவை என்று கவனித்து சீர் செய்ய சமுதாயத்தின் பெரியவர்கள் முன்னிட வேண்டும். இரட்டை கோபுரம், செப்டம்பர் இருபத்தாறு மும்பை தாக்குதல் என்று திசை திருப்பக் கூடாது.

thumbi
 தம்பி அவர்கள் எழுதிய கருத்துரை
அறிவுப் பெட்டகம் குரானை பெற்ற நாம்

Thursday, April 26, 2012

ஹலாலான உழைப்பின் சிறப்பு

               ஹலாலான உழைப்பின் சிறப்பு
   

    M. முஹம்மது இப்ராஹீம் பாகவி,   பேராசிரியர், மதரஸா காஷிபுல்  ஹுதா, சென்னை.

    இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.

    தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)

    உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

    அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்த மான தொழில் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், (மோசடியில்லாத) நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)

    ஹலாலான உணவைத் தேடுவது (தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற) ஃபர்ளான காரியங்களை அடுத்துள்ள ஃபர்ளாகும். (நூல் : பைஹகீ)

    உண்மையான நம்பிக்கைக்குரிய வியாபாரி (மறுமையில்) நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த்தியாகம் செய்த ஷுஹதாக்களு டனும் இருப்பார். (நூல் : திர்மிதீ)

    பகலெல்லாம் உழைத்துக்களைத்தவர் மாலைக்குள் மன்னிக்கப்பட்டவர் ஆவார் என நபியவர்கள் கூறினார் கள். (ஆதாரம் : முஃஜம்)

அன்னை ஹதீஜா பெண்கள் கலை அறிவியல் கல்லூரி

இன்ஷா அல்லாஹ் 2030க்குள் தமிழக முஸ்லிம்கள் பள்ளிக் கல்வியை மீண்டும் இஸ்லாமிய அடிப்படையில் மாற்றி அமைக்க வேண்டும் என்ற சமூக மாற்றத்தை இலக்காகக் கொண்டு சமூக நீதி அறக்கட்டளையின் பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன. இதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.
பள்ளிக் கல்வியை இஸ்லாமியப்படுத்திட வேண்டும் என்றால் அதற்கு ஆயிரக்கணக்கான இஸ்லாமிக் நர்ஸரி & பிரைமரி மற்றும் மேல்நிலைப்பள்ளிக் கூடங்கள் உருவாக்கப்பட வேண்டும். சமீபகாலமாக தமிழகத்தில் பரவலாக இத்தகைய பள்ளிகள் துவக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல ஊர்களில் இஸ்லாமிய பள்ளிக்கூடங்கள் துவங்க வேண்டும் என்ற வேட்கை பெருகி வருகிறது.

Tuesday, April 24, 2012

ஈயென இரத்தல் Vs. கொள்ளென கொடுத்தல்


ஈயென இரத்தல் Vs. கொள்ளென கொடுத்தல்
ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
----------------------------------------புறநானுறு

மேற்படி வரிகள்... "மனிதனுக்கு தர்மம் செய்யும் சிந்தனை தழைத்தோங்கச் செய்வதற்காக இயற்றப்பட்ட செய்யுட்பா" என என் ஆசிரியர் கூறியபோது, "இல்லை...ஐயா, பிச்சை எடுப்பதை ஒழிப்பதற்காகவும் இயற்றப்பட்ட புரட்சிப்பா... என்றுதான் அதன் உள்ளார்ந்த அர்த்தம் இறுதியில் கூறுவது போல தெரிகிறதே..!" என ஆசிரியருடன் தொடர்ந்து நான் வாதிட்டதால்... பெஞ்சு மேல் ஏற்றப்பட்டேன்.(!?)


'இது என்ன தண்டனையோ..? மற்ற மாணவர்களை விட என்னை உயர்ந்த இடத்தில் வைக்கிறாரா நம் ஆசிரியர் (?!)' என்ற சிந்தனையில் நான் மூழ்கி இருந்த போது, "இதை இயற்றியவர் யார்?" என்று ஆசிரியர் கேட்க, "பொற்கிழி பரிசில் பெறுவதற்காகவே புகழ்ந்து பாடி பாடல் புனையும் புலவர்களை இடித்துரைக்கும் பொருட்டு, தமிழ்ப்புலமை கொண்ட ஓர் அரசனால் இயற்றப்பட்டதாக இருக்கலாம் ஐயா...!" என்று பெஞ்சில் நின்றவாறே என் கருத்தை கூறியபோது... ஆசிரியரால் வகுப்பினின்றும் வெளியேற்றப்பட்டேன்..!

இது ஒருபுறம் இருக்க...பள்ளிக்காலங்களில்  நான் படித்த இந்த வரிகள் என்னை சிந்திக்க வைத்தன. உண்மையில், 'யார் பிச்சை எடுக்கலாம்',  'யார் தர்மம் செய்ய வேண்டும்' என்ற... "இதற்கான சரியான வரைமுறை எது?... இருவருக்குமான தகுதிகள் யாவை..?" என்ற என் கேள்விக்கு பள்ளியில் ஆசிரியரிடம் சரியான விடை எனக்கு கிடைக்கவில்லை. இதற்கு விடை இல்லை என்றால், ஒரு கோடீஸ்வரரும் தன்னை ஏழை எனலாம். ஒரு பெயர் தெரியா சாலையோர பிச்சைக்காரரும் தன்னை பணக்காரர் எனலாம். இவர்களை பிரித்தறிவிக்க என்ன அளவுகோள்..?

அதாவது, நாம் ஓர் ஊரை விட்டு வெளியேறினால்... அதன் எல்லை முடிவை... "நன்றி..! மீண்டும் வருக..!" என்ற அறிவிப்புப்பலகை மூலம் அறியலாம். அதேபோல ஊரின் எல்லை துவக்கத்தை, "நல்வரவு...! அன்புடன் வரவேற்கிறோம்..!" என்ற அறிவிப்புப்பலகை மூலம் அறியலாம். அடுத்தடுத்து ஒட்டியுள்ள  இரண்டு ஊர்களுக்கு ஒரே பலகையில் இரண்டு அறிவிப்புகளையும், அந்த ஒரே பலகையின் இரண்டு புறங்களிலும் கூட காணலாம். இதன் மூலம் இரு ஊர்களின் எல்லைகளை நாம் அறியலாம், அல்லவா..?

நான் கேட்பதும்  அதே போலத்தான்,
"இதுபோல இரண்டையும் பிரித்தறிவிக்கும் ஒரு அறிவிப்பு பலகை... 'இவர் பணக்காரர்- இவர் ஏழை' என்ற ஓர் அலகு அந்த 'ஏழை-பணக்காரன் அளவுகோளில்' எந்த இடத்தில் வருகிறது..?"
----என்பதுதான்..!

உலகின் பல  அரசுகளும் இன்று தத்தம் நாடுகளில் 'வறுமைக்கோடு' என்று ஓர் அளவை வைத்திருக்கின்றன. ஆனால், அது ஒவ்வொரு நாட்டுக்கும் அந்ததந்த நாட்டு பொருளாதாரம் மற்றும் பணமதிப்பின் அடிப்படையில்தான் அந்த வறுமைக்கோடு உள்ளதே தவிர, உலகளாவிய சர்வதேச வறுமைக்கோடு என்று ஒன்று பொதுவாக இல்லை. அது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.

மேலும், எனக்கு ஓரிருமுறை பணநெருக்கடியான சூழல் ஏற்பட்டு, நண்பர்களிடம் கடன் கேட்கும் போது, என் அவசர சூழலைத்தான் விவரித்தேனே அன்றி, இக்கட்டான சூழலில் அழகிய முறையில் தன் சகோதரனுக்கு கடன் கொடுப்பதால் அவருக்கு கிடைக்கப்போகும் மறுமை நன்மைகளை அவரிடம் பட்டியலிட்டதில்லை. கடன் கேட்பவர் இதை கூறாமல் இருப்பதும், கடன் கொடுப்பவர் இதை அறிந்து இருப்பதும்தான் சிறப்பு, அல்லவா..?
.
ஆனால், வெள்ளிக்கிழமை ஜும்மாவில் மட்டுமே இஸ்லாமிய சிந்தனை என்று வளர்ந்த அந்நேரத்தில், மாதத்தில் ஓரிரு வாரங்களில் வெளியூரிலிருந்து பள்ளிக்கு வரும் சில மவ்லானாக்கள், பள்ளியின் இமாமுக்கு பதிலாக ஜும்மா உரை நிகழ்த்துவார்கள். அப்போது, பெரும்பாலும் ஜகாத்(கட்டாய தர்மம்), சதகா(தர்மம்) இவற்றை செய்வோருக்கான இவ்வுலக-மறுவுலக சிறப்புகளை நன்மைகளை எல்லாம் அரைமணிநேரம் பட்டியலிட்டு கூறிவிட்டு, இறுதியாக தங்கள் பொருளாதார தேவைகளை மக்களிடம் கூறி ஜகாத் கேட்கும்போதுதான் என்னுள் ஒரு பரிதாப உணர்வு தோன்றும்... இவ்வளவு சிறப்புகளையும் இவர் அடைந்து கொள்ள, ஈயென இரக்கும் இவருக்கு கொடுத்து வைக்க வில்லையே என்று..! இரப்பவரே இதை கூறாமல் இருப்பதும், ஈபவர் இதை அறிந்து வைத்திருப்பதும்தான் சிறப்பு, அல்லவா..?

மேலும், இவர்களில் சிலர் உழைக்க நல்ல உடல்நலனுடன் திடகாத்திரமான உடலுருப்புக்களுடனும், இளமையாக இருப்பர். அப்படியெனில், இவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் நன்மைகளை அடைந்து கொள்ள இவர்கள் ஏன் ஜகாத் கொடுப்பவராக முயற்சிக்கக்கூடாது..? அப்போது, எனக்குள் தோன்றிய... என்னுடைய இந்த 'யார் ஏழை... யார் பணக்காரன்', 'யார் யாசிக்கலாம்', 'எப்போது ஈயென இரக்கலாம்', 'யாருக்கு, எப்போது கொள்ளென கொடுக்கலாம்?' என்ற பல அரசுகளும் அவற்றின் சட்டங்களும் விடைசொல்ல முடியாத கடினமான இக்கேள்விக்கு... துல்லியமான பதிலை நாம் பெற முடியுமா..? எனது இளம்பிராயத்து இத்தேடலின் இறுதிப்புகலிடம் இஸ்லாமிய ஆவணங்களான அல்குர்ஆன் மற்றும் அல்ஹதீஸ்..!

குர்ஆனில், தர்மம் செய்வது என்பது தொழுகையுடன் கூடவே சேர்ந்து பல இடங்களில் பலமுறை மீண்டும் மீண்டும் வலியுருத்தப்படுவதால், கொள்ளென கொடுத்தலாகிய ஜகாத் & சதகாவின்  முக்கியத்துவத்தை நாம் அறியலாம். அதில் ஒரு வசனத்தில் யார் யாருக்கெல்லாம் நம்முடைய கடமையான தர்மங்கள் உரித்தானவை என்றும் இறைவனால் கூறப்பட்டுள்ளது.

தர்மங்கள் - யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:60)

Tuesday, April 17, 2012

திருமணப் பதிவுச் சட்டம்: முஸ்லிம் சட்ட வாரியம் எதிர்ப்பு!

மத, இனப் பாகுபாடின்றி அனைத்துத்  திருமணங்களையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவை அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் எதிர்க்க உள்ளது.

முஸ்லிம்களின் ஷரியத் சட்டத்தில் தலையிடுவதாக இந்தக் கட்டாயப் பதிவுச் சட்டம் அமைவதால் விரைவில் கூட உள்ள முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் கூட்டத்தில் கடும் எதிர்ப்புக்குரல் எழுப்பப்படும் என்று கூறப்படுகிறது

முஸ்லிம்கள் எங்களுக்கு எல்லா வகையிலும் எதிராக நடக்கக் காரணம் என்ன?

    கேள்வி: பொன் வேம்பொழியன்
   நடைமுறை பழக்கத்திலேயே இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அடிப்படை வித்தியாசம் உள்ளன. நான் வேஷ்டி கட்டுகிறேன். நீங்கள் லுங்கி கட்டுகிறீர்கள். நாங்கள் சூரியனை வழிபடுகிறோம்! நீங்கள் சந்திரனை வழிபடுகிறீர்கள்! இப்படி நடைமுறையில் அனைத்திலும் எதிராகவே இருக்கின்றீர்கள். இதன் அடிப்படை நோக்கம் என்ன?


    பதில்:
   முஸ்லிம்கள் எங்களுக்கு எல்லா வகையிலும் எதிராக நடக்கக் காரணம் என்ன? என்று சகோதரர் கேட்டுள்ளார். இதற்கு அவர் இரண்டு உதாரணங்களை கூறினார். அந்த உதாரணங்களுக்கு மட்டும் முதலில் விளக்கம் அளித்து விடுவோம்! நாங்கள் வேஷ்டி உடுத்தினால் நீங்கள் லுங்கி உடுத்துகின்றீர்கள்! இதற்கு என்ன காரணம்? என்று கேட்டார்! நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்! ஆடையைப் பொறுத்தவரை இந்த ஆடையைத்தான் உடுத்த வேண்டும் இதை உடுத்தக் கூடாது என இஸ்லாம் கட்டளை இடவில்லை! ஒரு ஆண் கண்டிப்பாக அவனுடைய தொப்புளில் இருந்து முட்டுக்கால் வரை மறைத்து உடை அணிந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான்! வேஷ்டியைக் கொண்டும் மறைக்கலாம்,லுங்கியைக் கொண்டும் மறைக்கலாம். ஒரு போர்வையைக் சுற்றிக் கொண்டு கூட மறைக்கலாம்! மறைக்க வேண்டும் என்பதுதான் கட்டளையே தவிர இந்த ஆடைகள் கொண்டு தான் மறைக்க வேண்டும் என்ற கட்டளை கிடையாது!

   நபிகள் நாயகம் அவர்கள் கட்டியது லுங்கி அல்ல. வேஷ்டிதான். தைக்கப்படாத ஒரு துணி மாதிரிதான் கட்டியிருந்தார்கள்.வேஷ்டி இஸ்லாத்திற்கு எதிரான ஒரு ஆடை கிடையாது! அது நாம் வெளியில் செல்லும்போது காற்றில் பறக்கும். தொடைப்பகுதி தெரிய வாய்ப்பு இருக்கின்றது! தொடையையும் நாம் சேர்த்து மறைத்துக் கொள்ள வேண்டும்.நபிகள் நாயகம் (ஸல்) வேஷ்டி கட்டும்போது கூட ஒரு முடிப்பால் இணைத்துக் கொள்வார்கள்! தொடைப்பகுதி வெளியே தெரியாத அளவிற்கு அவர்கள் உடுத்தி உள்ளார்கள்.

Monday, April 16, 2012

முஸ்லிம் பெண் பதிவர்களின் அதிரடி நடவடிக்கை


மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

அஸ்ஸலாமு அலைக்கும்,

  தமிழ் பதிவுலக சகோதரிகள் மற்றும் முகப்பக்கத்தில் இஸ்லாம் குறித்து விளக்கம் அளிக்கும் சகோதரிகளால் ஒரு ஒருங்கிணைத்த முயற்சியாக தொடக்கப்பட்டுள்ள இந்த தளம், இஸ்லாமில் பெண்களின் நிலை குறித்த விமர்சனங்களுக்கு பதில் அளிப்பதை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. '

தொடர்ந்து படிக்க...http://manithaabimaani.blogspot.com/2012/04/blog-post_16.html

வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 

Sunday, April 15, 2012

சிரியாவில் நடப்பது என்ன? - உண்மைச் சூழல் !

அண்மைகாலங்களில் இஸ்லாமிய நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு உண்மை மறைக்கப்ட்ட போராட்டங்களாக நடைபெறும் நாடுகளில் ஒன்றுதான் சிரியா என்பது நாம் அனைவரும் அறிந்திருக்கிறோமா என்பது கேள்விக்குறியே !?.

உலக வல்லரசாக ஆட்கொண்டிருக்கும் அமெரிக்கா, அரபு நாடுகளுக்கு எதிராக போர் / தாக்குதல் தொடுத்தாலோ அல்லது மிரட்டல் அறிக்கை விட்டாலோ உடனே நாமும் பொங்கியெழுந்து எதிர்க்கிறோம். அமெரிக்கா ஏதாவது ஒரு இஸ்லாமிய நாடு(?)க்கு எதிராக ஏன் போர் தொடுக்கிறார்கள்? என்ற பின்னனியறியாமலே போராட்டங்கள், கண்டனங்கள் என்று வீதியில் இறங்கி அறிந்தோ அறியாமலே போராடுகிறோம். இதுபோன்ற போராட்டங்கள் அமெரிக்காவுக்கு ஐரோப்ப நாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் சரியா? அல்லது தவறா? என்பதை அலசவல்ல இந்த பதிவு.

முஸ்லீமாகிய எம்மக்கள் எப்படி தங்களின் ஈமானுடன் சிரியா போன்ற நாடுகளில் அல்லாஹ்வின் மார்க்கத்தை இவ்வுலகில் நிலைநிறுத்த போராடுகிறார்கள் என்பதனை உண்மைச் சம்வங்களோடு காணொளிகள் காட்டுடன் இங்கே உங்களின் பார்வைக்கும் இறையச்சம் உடைய மக்களின் இறைஞ்சலுக்குமாக வைக்கிறோம். மேலும், இஸ்லாத்திற்கு எதிரான இணைவைப்புகளை கொண்டு ஆட்சியாளர்கள் எப்படியெல்லாம் மக்களை நிர்பந்திக்கிறார்கள் என்பதையும் வேதனையுடன் இந்த காணொளிகளில் காண இருக்கிறீர்கள். இதில் நமக்கு மிகப்பெரிய படிப்பினைகள் நிறைய உள்ளது.

இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் வெற்றி வாகை சூடிய கலீபாக்களில் உமர் (ரழி) அவர்கள் முதன்மையானவர்கள். இவர்கள் ஆட்சிகாலத்தில் வெற்றி கொள்ளப்பட்டு இஸ்லாமிய ஆட்சி நிலைநாட்டப்பட்டு இணைவைப்பாளர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது இங்கே. ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ்.

மேலும் வாசிக்க
http://adirainirubar.blogspot.in/2012/04/blog-post_14.html

Syria: a mission to save lives

Fighting in Al-Zabadani (50 kilometres north-west of Damascus) resulted in hundreds of families fleeing to safety in Bludan, Madaya and Buqqin. The Syrian Arab Red Crescent, working closely with the ICRC, sent humanitarian aid to the displaced. The host communities provided warehouses to store the aid, and set up medical posts to treat the sick and the wounded. Some of the wounded were evacuated to a Damascus hospital and returned the next day. There were three separate missions that lasted three days each in Bludan, Madaya and Buqqin, respectively.... Know more

UPDATE: Syria: more aid reaches Homs, Aleppo and Idlib
 

Tuesday, April 10, 2012

சகோதரியே! - 3

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்(இறைவனின் சாந்தியும், சமாதானமும் தாங்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!).

பள்ளி கோடை விடுமுறையில் சமுதாயத்தில் நிறைய வரதட்சணை திருமணங்கள் நடக்க இருக்கிறது. அதனால் இந்த அத்தியாயத்தை வரதட்சணையிலிருந்து தொடங்குவது பொருத்தமாக இருக்கும் என்பதால்: வரதட்சணை, கைக்கூலி என்ற பெயரை யார்??? கண்டுபிடித்திருப்பார்கள்!!! இந்த வார்த்தை எங்கிருந்து வந்திருக்கும். இதன் சரியான விளக்கம் என்ன என்று யோசித்து... விடை கிடைக்காமல்  இணையத்தில் தேடினேன் கடைசியில் விக்சனரி என்ற தமிழ் தளத்தில் கீழ்க்கண்ட விளக்கம்  கிடைத்தது:
வரதட்சணை:
  1. திருமணத்தின் போது மணமகள் மணமகனுக்குத் தரும் (அல்லது மணமகன் மணமகளுக்குத் தரும்) பணம், நகை முதலிய சீர் வரிசை.
கைக்கூலி:
  1. நாட்கூலி
  2. லஞ்சம்
  3. அடியாள்
  4. கையிலே கொடுக்கும் விலைப்பொருள்
  5. வரதட்சணை; மணக்கூலி; மணமகனுக்குப் பெண்வீட்டார் கொடுக்கும் தொகை
மொழிபெயர்ப்புகள்:
ஆங்கிலம்
  1. daily wages
  2. bribe
  3. agent; underling
  4. cash payment
  5. money paid by the parents of the bride to the bridegroom

நெதர்லாந்தில் இஸ்லாம் (நெதர்லாண்ட்ஸ் )ஹாலாந்து.

'அறிவைக் கற்பது முஸ்லிம்களின் கடமை' என்பதற்கு இணங்க  நெதர்லாந்து முஸ்லிம்கள் இஸ்லாமிய  அறிவைக்  கற்பதில்  மிக்க  ஆர்வம்  காட்டி  வருவதும்  இஸ்லாம்  முறைப்படி  வாழ்வதிலும்  மிக்க  ஆர்வம்  காட்டி  வருகின்றனர். நெதர்லாந்தில் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருகின்றது .
நெதர்லாந்தில் சுமார்  825,000 முஸ்லிம் வாழ்கின்றனர் . இவர்களில் பெரும்பாலானவர்கள்   நெதர்லாந்து நாட்டின் நான்கு (ஆம்ஸ்டர்டாம், ரோட்டர்டாம், ஹாக் மற்றும் யுட்றேட்)முக்கிய நகரங்களில் வாழ்கின்றனர்

ரோட்டர்டாம்: நெதர்லாந்து மிக பெரிய மசூதி
கம்பீரமாய் காட்சியளிக்கும் இந்த இறை இல்லத்தின் கட்டுமான பணி ஏப்ரல் 2000 ஆம் துவங்கி பத்து ஆண்டுகள் கடந்து தற்போது நிறைவுபெற்றுள்ளது. 50 மீட்டர் மினாராவின் உயரமும், 200 சதுர மீட்டர் பரப்பளவும், மூன்று அடுக்குமாடிகளும் கொண்ட இப்பள்ளியில் ஒரே நேரத்தில் சுமார் 2,200  பேர் தொழுகை நடத்த முடியும்.

நெதர்லாந்து மற்றும் மேற்கு ஐரோப்பவிலேயே இப்பள்ளிதான் மிகப்பெரியது என்பது குறிப்படத்தக்கது.

Thursday, April 5, 2012

இஸ்லாம் போதிக்கும் தலைவரும் பதவியும் எப்படி இருக்க்க வேண்டும்!

      
  பதவி என்றால் என்ன, இஸ்லாம் பதவியை பற்றி என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்.  அறிவில்லாத காரணத்தினாலும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் எதையும் செய்யலாம் என்ற சுயநலத்தினாலும் இஸ்லாத்தையே மறந்து வாழக் கூடிய முஸ்லிம்களை நாம் பார்த்து வருகிறோம். பதவிக்காக தம்முடைய மானத்தை இழந்து, நம்பகத் தன்மையை இழந்து விழக் கூடிய நிலையையும் நாம் பார்க்காமல் இல்லை. அல்லாஹ் நமக்கு திருக்குர்ஆன் மூலமாகவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்கையின் மூலமாகவும் நாம் எப்படி வாழ்ந்தால் இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றிபெற முடியும் என்பதை ஒவ்வொரு விஷயத்திலும் தெளிவாக கூறியிருக்கிறான். இஸ்லாம் போதிக்கும் விதத்தில் நாம் பதவியை எடுத்துக் கொள்ளாவிட்டால் அதனால் நிச்சயம் நாம் நஷ்டம் அடைந்தவர்களாகிவிடுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


''அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது.'' (அல்குர்ஆன் - அல்அஹ்ஜாப் :21)

Tuesday, April 3, 2012

முஸ்லிம்களும் ஊடகங்களும்.

ஆக்கம் : மாலிக் கான்
விஞ்ஞானம், அறிவியல், மருத்துவம் எனப் பலதுறைகளிலும் மனிதன் உச்சத்தை அடைந்து கொண்டே செல்கின்றான். இதில் குறிப்பாகக் கூற வேண்டுமெனில் மீடியா என்ற ஊடகத்துறை உலகில் அதிவேகமாகப் பரவியும் முன்னேறிக்கொண்டும் இருக்கின்றது. உலகளாவிய (Mass-Media) ஊடகங்களில் முஸ்லிம் சமுதாயமும், இஸ்லாமும் குறிவைத்து அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.


இது போன்ற சூழலில் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு மீடியா என்றால் என்ன? அதன் அவசியம் என்ன? அதில் முஸ்லிம்களின் நிலை என்ன? மீடியாவில் எவ்வாறு நாம் தாக்கத்தை ஏற்படுத்தலாம்? என்று எடுத்துரைத்து துயில் கொண்டிருக்கும் நம் சமுதாயத்தை விழிப்படையச் செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.


மீடியா?
உலகத்தில் பரந்து இருக்கும் இதழியல்கள், தொலைக்காட்சி சேனல்கள், திரைப்படம், வீடியோ கான்ஃபிரன்சிங், இணையம், தனிநபர் பிரச்சாரம், வானொலி மற்றும் அலைவரிசைகள் எனப் பெருவாரியான மக்களைச் சென்றடையும் செய்திகள் மற்றும் இதற்குப் பயன்படும் தகவல் தொடர்புக் கருவிகள், ஜனசக்தி ஆகிய அனைத்தும் ஊடகம் (Media) என்ற கருத்தாக்கத்தில் அடக்கிவிடலாம்.


ஊடகங்களில் முஸ்லிம்கள் எவ்வாறெல்லாம் பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறார்கள், இஸ்லாம் எவ்வாறெல்லாம் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றது என்பதைச் சொல்லிமாளாது. மீடியாவில் இவ்வாறான தீயசக்திகளை அறிந்து ஈடுகட்ட வேண்டிய நிர்பந்தத்தில்தான் முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails