Tuesday, April 17, 2012

முஸ்லிம்கள் எங்களுக்கு எல்லா வகையிலும் எதிராக நடக்கக் காரணம் என்ன?

    கேள்வி: பொன் வேம்பொழியன்
   நடைமுறை பழக்கத்திலேயே இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அடிப்படை வித்தியாசம் உள்ளன. நான் வேஷ்டி கட்டுகிறேன். நீங்கள் லுங்கி கட்டுகிறீர்கள். நாங்கள் சூரியனை வழிபடுகிறோம்! நீங்கள் சந்திரனை வழிபடுகிறீர்கள்! இப்படி நடைமுறையில் அனைத்திலும் எதிராகவே இருக்கின்றீர்கள். இதன் அடிப்படை நோக்கம் என்ன?


    பதில்:
   முஸ்லிம்கள் எங்களுக்கு எல்லா வகையிலும் எதிராக நடக்கக் காரணம் என்ன? என்று சகோதரர் கேட்டுள்ளார். இதற்கு அவர் இரண்டு உதாரணங்களை கூறினார். அந்த உதாரணங்களுக்கு மட்டும் முதலில் விளக்கம் அளித்து விடுவோம்! நாங்கள் வேஷ்டி உடுத்தினால் நீங்கள் லுங்கி உடுத்துகின்றீர்கள்! இதற்கு என்ன காரணம்? என்று கேட்டார்! நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்! ஆடையைப் பொறுத்தவரை இந்த ஆடையைத்தான் உடுத்த வேண்டும் இதை உடுத்தக் கூடாது என இஸ்லாம் கட்டளை இடவில்லை! ஒரு ஆண் கண்டிப்பாக அவனுடைய தொப்புளில் இருந்து முட்டுக்கால் வரை மறைத்து உடை அணிந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான்! வேஷ்டியைக் கொண்டும் மறைக்கலாம்,லுங்கியைக் கொண்டும் மறைக்கலாம். ஒரு போர்வையைக் சுற்றிக் கொண்டு கூட மறைக்கலாம்! மறைக்க வேண்டும் என்பதுதான் கட்டளையே தவிர இந்த ஆடைகள் கொண்டு தான் மறைக்க வேண்டும் என்ற கட்டளை கிடையாது!

   நபிகள் நாயகம் அவர்கள் கட்டியது லுங்கி அல்ல. வேஷ்டிதான். தைக்கப்படாத ஒரு துணி மாதிரிதான் கட்டியிருந்தார்கள்.வேஷ்டி இஸ்லாத்திற்கு எதிரான ஒரு ஆடை கிடையாது! அது நாம் வெளியில் செல்லும்போது காற்றில் பறக்கும். தொடைப்பகுதி தெரிய வாய்ப்பு இருக்கின்றது! தொடையையும் நாம் சேர்த்து மறைத்துக் கொள்ள வேண்டும்.நபிகள் நாயகம் (ஸல்) வேஷ்டி கட்டும்போது கூட ஒரு முடிப்பால் இணைத்துக் கொள்வார்கள்! தொடைப்பகுதி வெளியே தெரியாத அளவிற்கு அவர்கள் உடுத்தி உள்ளார்கள்.


   இப்போது நாம் வெளியே செல்லும்போது தொடை வெளியே தெரிகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் நம் ஆடை காற்றில் விலகிவிடும். ஒரு ஆணின் தொடையை ஒரு பெண் பார்த்தால் அது நன்றாக இருக்காது! ஆனால் இந்த லுங்கியில் அது ஏற்படாது! எனவே தான் அவர்களாகவே லுங்கியைத்
தேர்ந்தெடுத்து அணிந்து கொள்கிறார்கள்! 'லுங்கி' என்பது மூடப்பட்டது! வேஷ்டி' என்பது மூடப்படாதது. இங்கு வந்திருக்கும் முஸ்லிம்களிலேயே நிறைய பேர் 'லுங்கி' அணியாமல் 'வேஷ்டி' 'பேண்ட்' உடுத்தியிருக்கிறார்கள்! மற்றும் பல மாதிரியான உடைகளை அணிந்திருக்கிறார்கள்.

   அடுத்ததாக நாங்கள் 'சூரியனை' வணங்குகிறோம். நீங்கள் 'சந்திரனை' வணங்குகிறீர்கள் என்று கூறினீர்கள். 'சூரியன் சந்திரனை எல்லாம் வணங்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது! ஒரு கடவுளைத்தான் வழிபடவேண்டும்.கடவுளைத் தவிர சூரியனை வழிப்படக் கூடாது. 'சந்திரனை' வழிப்ப்படக் கூடாது, 'தண்ணீரை' வழிப்படக் கூடாது, 'மனிதனை' வழிப்படக் கூடாது, 'தலைவனை' வழிப்படக் கூடாது, 'தன் தாயை'வழிப்படக் கூடாது, 'கணவனை' வழிப்படக் கூடாது.

   கடவுளைத் தவிர  எதையும்  வழிப்படக்கூடாது  என்று  இஸ்லாம்  கூறுகின்றது!  ஆனால் அவர் அதைக் கேட்கவில்லை.   எல்லோரும்  சூரியன்  அடிப்படையில்  நாட்களை  கணக்குப்  போட்டால்  முஸ்லிம்கள் 'சந்திரனை'வைத்துக்  கணக்கு போடுவார்கள்! அது வேண்டுமானால் இருக்கின்றது! சந்திரனைக் கொண்டு  'ரமலான்'  மாதம்  என்கிறோம்.   'ரமலான்'  மாதம்  என்பது  சூரியனை வைத்து  கணக்கிடுவது இல்லை. பிறையைப் பார்த்துத்தான் அந்த மாதத்தை எண்ணுகின்றோம்! மாதத்தை கணக்கிடுவதற்கு தான் 'சந்திரனை' பயன் படுத்துகின்றோம்! அந்த வகையில் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் இது நல்ல கேள்விதான்!

   ஆனால் இதை நாங்கள் மாறு செய்யவேண்டும் என்று செய்யவில்லை.இதுதான் அறிவுப்பூர்வமானது என்பதற்காகச் செய்கின்றோம்! இப்போது ஜனவரி தேதி 1 என வைத்துக் கொள்வோம். ஜனவரி 10 ம் தேதி, ஜனவரி 20 ம் தேதி, ஜனவரி 30 ம் தேதி என நான்கு தேதிகளை எடுத்துக் கொள்வோம்! இந்த நான்கு தேதிகளிலும் காட்டக் கூடியதற்கு சூரியனில் ஏதாவது இருக்கின்றாதா?

   இது 1 ம் தேதி சூரியன் என்றோ இது10 ம் தேதி சூரியன் என்றோ இது 20 ம் தேதி சூரியன் என்றோ காட்டுவதற்கு ஏதாவது இருக்கின்றதா? இப்படிச் சொல்வதற்கு இயற்கையில் ஏதும் இல்லை! எனவே நாள் காட்டுவதற்கான அமைப்பு சூரியனில் இல்லை. இரவையும் பகலையும் காட்டக்கூடிய தன்மைதான் சூரியனில் இருக்கின்றது. இதற்கு சூரியனை வைத்து நாங்கள் பகல் என்கின்றோம். இப்போது நீங்கள் எங்களை கேட்கின்றீர்கள். நாங்கள் பகல் என்கின்றோம். எதை வத்து நாங்கள் பகல் என்கிறோம்? நாங்கள் சூரியனை வைத்து கூறினோமா? அல்லது சந்திரனை வைத்து கூறினோமா? சூரியன் இருந்தால் பகல் சூரியன் இல்லையேல் இரவு. இப்போது நாங்கள் காலை, மாலை, முற்பகல், பிற்பகல் என்று சூரியனை வைத்துத் தான் கூறுகின்றோம்! சூரியன் இல்லாமல் நாங்கள் இரவு பகல் என்று கூற முடியாது! பகலிலே பார்த்தால் ஒரு சில நேரங்களில் சந்திரன் இருக்கும். ஆதலால் நேரத்தைக் கணக்கிடுவதற்கு பயன்படுவது சூரியன்.

   நாட்களைக் கணக்கிடுவதற்கு பொருத்தமானது சந்திரன்.சந்திரனைப் பார்த்தால் நாளுக்கு நாள் மாறுபடும். அதை வைத்து நாட்களை கணக்கிடுலாம். ஆனால் அப்படி சூரியனில் என்ன இருக்கின்றது? ஒன்றும் இல்லை! ஆதலால் சந்திரன் எங்களுக்கு சூரியன் உங்களுக்கு என்று சூரியனையும் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்! குர்ஆனிலும் அப்படி இருக்கின்றது! சந்திரனும் சூரியனும் காலம் காட்டிகள் என்று. ஆதலால் சூரியனும் சந்திரனும் காலம் காட்டுகின்றன.சூரியன் எதைக் காட்டுகின்றதோ அதையும் ஏற்றுக் கொள்வோம். நாட்களை காட்டுவதில் இரண்டும் ஒன்றுதான்!

   தமிழில் கூட மூன்றாம் பிறை நான்காம் பிறை என்று கூறுவார்கள். மூன்றாம் பிறை என்று எண் போட்டு ஏன் கூப்பிடுகிறீர்கள்? பிறையை நீங்களும் தான் எண்ணுகிறீர்கள். அப்படித்தான் ஆதி காலத்திலும் இருந்துள்ளது! வெள்ளையர்களின் ஆதிக்கத்தால் தற்போது அதை விட்டுவிட்டு இதற்கு மாறிவிட்டீர்கள். பிறை தான் நாட்களைக் கணக்கிடுவதற்கு சரியானது!

   முதல் நாள்  பிறை  கோடு  போன்று  இருக்கும்.  பதினான்காம்  நாள் பிறை பெரியதாக இருக்கும். அதன் பிறகு போகப்போக சிறியதாக ஆகிவிடும். இதனால்தான் சந்திரன் நாட்களைக் கணக்கிட சரியானதாக உள்ளது. அதலால் சூரியனையும் சந்திரனையும் நாங்கள் வணங்குவது கிடையாது! காலம் காட்ட மட்டுமே இந்த இரண்டையும் பயன்படுத்துகின்றோம்!

Spurce : http://www.readislam.net/islam10.htm

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails