Tuesday, April 10, 2012

சகோதரியே! - 3

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்(இறைவனின் சாந்தியும், சமாதானமும் தாங்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!).

பள்ளி கோடை விடுமுறையில் சமுதாயத்தில் நிறைய வரதட்சணை திருமணங்கள் நடக்க இருக்கிறது. அதனால் இந்த அத்தியாயத்தை வரதட்சணையிலிருந்து தொடங்குவது பொருத்தமாக இருக்கும் என்பதால்: வரதட்சணை, கைக்கூலி என்ற பெயரை யார்??? கண்டுபிடித்திருப்பார்கள்!!! இந்த வார்த்தை எங்கிருந்து வந்திருக்கும். இதன் சரியான விளக்கம் என்ன என்று யோசித்து... விடை கிடைக்காமல்  இணையத்தில் தேடினேன் கடைசியில் விக்சனரி என்ற தமிழ் தளத்தில் கீழ்க்கண்ட விளக்கம்  கிடைத்தது:
வரதட்சணை:
 1. திருமணத்தின் போது மணமகள் மணமகனுக்குத் தரும் (அல்லது மணமகன் மணமகளுக்குத் தரும்) பணம், நகை முதலிய சீர் வரிசை.
கைக்கூலி:
 1. நாட்கூலி
 2. லஞ்சம்
 3. அடியாள்
 4. கையிலே கொடுக்கும் விலைப்பொருள்
 5. வரதட்சணை; மணக்கூலி; மணமகனுக்குப் பெண்வீட்டார் கொடுக்கும் தொகை
மொழிபெயர்ப்புகள்:
ஆங்கிலம்
 1. daily wages
 2. bribe
 3. agent; underling
 4. cash payment
 5. money paid by the parents of the bride to the bridegroom
விளக்கம்
·  'கைக்கூலி'- இந்தச் சொல்லுக்கு கையூட்டு,​​ லஞ்சம் என்ற அர்த்தமும் உண்டு.​ வரதட்சிணை என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு தமிழில் சரியான வார்த்தை கைக்கூலி என்பதுதான்.
 (விக்சனரி தளத்திற்கு நன்றி!)

வரதட்சணை பெயர் வந்த விபரம்:
மேற்கண்ட விளக்கத்தில் வரதட்சணை என்ற சொல் சம்மஸ்கிருதத்தில் இருந்து வந்துள்ளது. வரதட்சணை என்ற சொல்லுக்கு தமிழில் கைக்கூலி என்று பெயர். (கைக்கூலிக்கு : லஞ்சம் என்ற பெயராம்) இந்த வரதட்சணை என்ற பழக்கம் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு சொந்தக்காரர்களான இந்தியாவின் பூர்வகுடி மக்களிடமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. (பிறகு எங்கிருந்து? வந்தது!).

இந்தியாவிற்குள் ஆரியர்களின் வருகை:
மத்திய ஆசியப்பகுதியிலிருந்து கைபர், போலன் கணவாய் வழியாக ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் காட்டித் தந்த பழக்கமாக இந்த வரதட்சணை இருக்கிறது. (வரும் தட்சணை - வரதட்சணையாக மாறி இருக்குமோ? ) ஏனென்றால் தட்சணை தட்டில் நீங்கள் எதையும் போடவில்லை என்றால் காரியம் நடக்காது. தர்காவிலும் ஒன்றேகால், பதிணொன்றே கால் இப்படி தட்சணையை அவர்கள் வைத்திருக்கும் தட்டில் போடவில்லை என்றால் கையில் இருக்கும் விளக்கமாறு போன்ற மயில் இறகால் ஆசி கிடைக்காதுபாத்திஹா என்ற  சடங்கும் நடக்காது. ஆக இந்த தட்சணை பல வழிகளில்  இறை மறுப்பாளர்களிடம் குடி கொண்டுள்ளது. (தட்டில் தட்சணை வாங்குவதால் அதை பிச்சை என்றும் அழைக்கலாமா?).

ஆட்டையும், மாட்டையும் மண்ணின் மைந்தர்களின்  கையில் கொடுத்து விட்டு அவர்களின் வசதிக்காக மக்களை பல ஜாதிகளாக பிரித்து ஆண்டான், அடிமை என்ற நிலையை உருவாக்கி அவர்கள் மட்டும் உயர்ந்த ஜாதி என்று  இந்தியாவின் வளங்களை தங்களுக்குச் சொந்தமானதாக ஆக்கிக் கொண்டு வரலாறு நெடுகிலும் மனித இரத்தங்களை கொடூரமான முறையில் சிந்த வைத்து எத்தனை விதமான கொடுமைகள் இருக்கின்றதோ? அத்தனையையும் செய்து மனித விரோத அராஜகமான ஆட்சியை அன்று முதல் இன்று வரை செய்து வருகிறார்கள் ஆரியர்கள். ( 3 சதவீத ஆரியர்கள் 97 சதவீத இந்திய மண்ணின் மைந்தர்களை அடிமைகளாக வைத்து அவர்களின் வளங்களை அனுபவித்து வருவது கொடுமையல்லவா??? )  

ஆரியர்கள் இந்தியாவிற்குள் குடியேறியது போல் இத்தாலி, கிரீஸ், ஜெர்மன் போன்ற நாடுகளுக்கும் சென்றிருக்கிறார்கள்.  அங்கெல்லாம் இந்தியாவில் உருவாக்கியது போல் வர்ண பாகுபாடு, ஜாதிபாகுபாடு என்ற கொடுமையெல்லாம் அவர்கள் செய்யவில்லை. இந்தியாவின் அப்பாவியான மண்ணின் மைந்தர்களை வர்ண பாகுபாட்டால் பிரிப்பது அவர்களுக்கு சுலபமாகிவிட்டது (அவர்களின் பரம்பரை உறவுகள் மற்ற நாடுகளில் இருப்பதால்தான் இந்திய மக்களின் வரிப்பணத்தில் படித்து விட்டு அந்த நாடுகளின் விசுவாசிகளாக மாறி விடுகிறார்கள்).

(என்ன காக்கா சிந்து சமவெளி நாகரீகத்திற்கு போய்விட்டீர்களே! நாங்கள் அந்த பாடத்தை வாத்தியார் நடத்தும்பொழுதே கவனிக்கவில்லையே! என்று சொல்பவர்களும், தூங்கிவிட்டவர்களும் இப்பொழுது பெஞ்சின் மேல் ஏறி நிற்க வேண்டும். முட்டி போடும் சிரமத்தைத் தரவில்லை. (பெஞ்ச் இப்பொழுது இல்லையே! நாற்காலிதான்  இருக்கிறது என்றால் அதன் மேலாவது ஏறி நிற்க வேண்டும். இன்னும் தொடர்ந்து வரலாறு வர இருப்பதால் லீடர்: அபுஇபுறாஹிம் பெஞ்சில் மீது நிற்பவர்கள் இறங்கி விடாமல் பார்த்துக் கொள்ளவும்,   வாத்தியார் திரும்பி வரும் வரை).

ஆரியர்களின் வரலாற்றுப் புரட்டு:
ஆரியர்களை வந்தேறிகள் என்ற வார்த்தைகளால் அழைப்பது அவர்களுக்குப் பிடிக்காத காரணத்தால், குள்ளநரிகள் நீண்ட காலமாக யோசித்து வந்தார்கள். ஆட்சி அவர்கள் கையில் வந்தவுடன் உடனடியாக வரலாற்றுத்துறையை தங்கள்  வசம் எடுத்து எப்படி புரட்டு வேலை செய்யலாம் என்று திட்டமிட்டு  (பூர்வ குடி மக்களை) மண்ணின் மைந்தர்களை வந்தேறிகளாகவும், ஆரியர்கள்தான் உண்மையான மண்ணின் மைந்தர்கள் என்றும் வரலாற்றை மாற்றி எழுத ஆரம்பித்து விட்டார்கள் (என்ன புரட்டு செய்தாலும் உண்மையை மறைக்க முடியுமா?).

இந்தப்புரட்டுக்கார ஆரியர்கள்   மனித குலத்திற்கு அன்று முதல் இன்று வரை செய்த, செய்து கொண்டு இருக்கின்ற  துரோகத்தை எழுத ஏடு போதாது, இதுவே தொடராகி விடும். அதனால்  வரலாறு முழுவதும் மனித குலத்திற்கு துரோகம் செய்தே வாழ்ந்து வருகின்ற இவர்களைத்   தட்டிக் கேட்கும் பொறுப்பை வல்ல அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டு, வரதட்சணை என்ற பழக்கம் இஸ்லாத்திற்குள் நுழைந்தது எப்படி என்பதை இனி பார்ப்போம்.

இந்தியாவில் இஸ்லாம் ஒளி வீச ஆரம்பித்த விபரம்:

அய்யாமுல் ஜாஹிலிய்யா (அறியாமைக்காலம்) அரபுகளிடமும் பெண்களிடம் பணமும், தங்கமும், வீடும் கை நீட்டி வாங்கும் பழக்கம் இருந்ததில்லை. பிறகு எப்படி நுழைந்தது. இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் யாரும் பரம்பரை முஸ்லிமும் கிடையாது. நமது முன்னோர்கள் இரண்டு, மூன்று தலைமுறைக்கு (அதற்கு மேலும் இருக்கலாம்)  முன்பாக பல தெய்வ நம்பிக்கைக்கு உரியவர்களாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். (இந்த பல தெய்வ நம்பிக்கையை கொண்டு வந்ததும் ஆரியர்கள்தான் என்று தெரிகிறது).

ஆரியர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியால் மக்களை பல ஜாதிகளாக பிரித்து அடிமையாக வைத்திருந்தார்கள்.  மண்ணின் மைந்தர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவும், ஒடுக்கப்பட்டவர்களாகவும் வாழ்ந்து வந்த நிலையில் ஜாதிப் பாகுபாட்டால் சம உரிமை, கடவுளை வழிபடும் உரிமை, சுதந்திரமாக வாழும் உரிமை எதுவும் இன்றி விடுதலையை எதிர்பார்த்து மிகப்பெரிய ஏக்கத்துடன் நடைப்பிணமாக வாழ்ந்து வந்த நிலையில்; அரபு வணிகர்கள் இந்தியாவிற்குள் வர ஆரம்பித்தார்கள். வல்ல அல்லாஹ்வின் அருளால் இஸ்லாம் ஒளி வீசு ஆரம்பித்தது.

இந்த அரபு வணிகர்களின் நேர்மை, வாக்குத்தவறாமை, இறைவனை வழிபடும் முறைகள், சகோதரத்துவம் போன்றவைகளால் கவரப்பட்டு இஸ்லாமே சிறந்த மார்க்கம் என்று ஆரத் தழுவிக் கொண்டார்கள். (ஆரம்ப காலங்களில் பயான் செய்யவில்லை, வாள் கொண்டு  மிரட்டவில்லை, கட்டாயப்படுத்தவில்லை, சுயவிருப்பத்தின் அடிப்படையில் இந்திய மண்ணின் மைந்தர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்). (அன்று முதல் இன்று வரை இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையை, சகோதரத்துவத்தை  கண்டு வியந்து நேர்வழி பெற்றவர்கள்தான் அதிகம். இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அல்ல என்பதற்கு வரலாறு நெடுகிலும் ஆதாரங்கள் மலைபோல் குவிந்துள்ளது ).

பிறகு ஏன்? இஸ்லாத்தை வாளால் பரப்பினார்கள் என்று இந்த ஆரியப்பண்டாரங்களும், உலகப்பண்டாரங்களும் அலறுகிறார்கள். எல்லாப்பண்டாரங்களுக்கும் இஸ்லாம் நல்ல மார்க்கம் என்பது தெளிவாகத் தெரியும். மனமுரண்டின் காரணமாக வெறுக்கிறார்கள். (இறை மறுப்பில் இருந்த அக்கால அரபுக்கள் குர்ஆன் ஓதப்பட்டால் காதில் விழுந்து விடக்கூடாது என்பதற்காக காதை அடைத்துக் கொள்வார்களாம். காதில் நுழைந்து விட்டால் இஸ்லாம் தம்மையும் ஈர்த்து விடும் என்ற பயத்தில்) வெறுப்பதற்குக் காரணம் இஸ்லாம் வந்து விட்டால் முதலில் அடி வாங்குவது இவர்களின் சொகுசு வாழ்க்கை. மனிதர்கள் அனைவரும் சகோதரர்களாகி விட்டால் யாரையும் அடிமைப்படுத்தி இவர்கள் தங்களை வளப்படுத்திக் கொள்ள முடியாது. இவர்களின் பதவிகளும் பறிக்கப்படும்உண்மையான ஜனநாயகம் ஆட்சிக்கு வரும்.

முன்னோர்களிடம் வரதட்சணை :
இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட முன்னோர்களிடம்;  ஆரியர்கள் இவர்களுக்கு காட்டித் தந்த பழக்கங்களில் ஒன்றான வரதட்சணையை இஸ்லாத்திற்குள்ளும் கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள்.

நம்மிடம் உள்ள வரதட்சணை பழக்கம்:
மலேசியா மாப்பிள்ளை, ரங்கூன் மாப்பிள்ளை, இலங்கை மாப்பிள்ளைகளுக்கு எல்லாம் சந்தை விலை மிக மிக குறைவாகத்தான் இருந்து வந்துள்ளது. அரபு நாடுகளுக்கு 1975 ஆம் வருடத்திற்கு பிறகு நம் சமுதாய இளைஞர்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். இதன் பிறகுதான் மாப்பிள்ளைகளின் சந்தை விலை உயர ஆரம்பித்தது

அரபு நாட்டுக்குச் சென்ற கப்பலுக்கு போன மச்சான்களின் சந்தை விலை ராக்கெட் வேகத்தில் சந்திர மண்டலத்தைத் தொட்டு விட்டது. வருடா வருடம் வித விதமான பெயர்களில் பெண்களின் வீட்டில் பகல் கொள்ளை பல விதங்களில் நடைபெற்று வருகிறது.

பிற மதங்களில் 7 பவுன் 10 பவுன் வரதட்சணை கொடுத்தாலே அதிகமாம். இஸ்லாமிய திருமணங்களில் 50 பவுன், 100 பவுன் வரதட்சணையாக கொடுப்பது மிக மிகக் குறைவாம்.

வரும்! - தட்சணையும் வேண்டாம். சீ! - தனமும் வேண்டாம்.

''அல்லாஹ்'' அருளியதை நோக்கியும் இத்தூதரை நோக்கியும் வாருங்கள்'' என்று அவர்களிடம் கூறப்பட்டால்  எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்'' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? (அல்குர்ஆன்: 5:104)

நம்பிக்கை கொண்டோரே! உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் நேர் வழி நடக்கும் போது வழி கெட்டவனால் உங்களுக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. நீங்கள் அனைவரும் மீள்வது அல்லாஹ்விடமே. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு (அப்போது) அறிவிப்பான். (அல்குர்ஆன் : 5:105) 

வாசகர்களுக்கு ஒரு கேள்வி?: நம் முன்னோர்கள் மார்க்கத்திற்கு முரணாக நமக்கு காட்டித் தந்த வழி முறைகளை அவசியம் பின்பற்ற வேண்டுமா???


இன்ஷாஅல்லாஹ் வளரும் ...
-S.அலாவுதீன்

Source : http://adirainirubar.blogspot.in/2012/04/3.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails