'அறிவைக் கற்பது முஸ்லிம்களின் கடமை' என்பதற்கு இணங்க நெதர்லாந்து
முஸ்லிம்கள் இஸ்லாமிய அறிவைக் கற்பதில் மிக்க ஆர்வம் காட்டி
வருவதும் இஸ்லாம் முறைப்படி வாழ்வதிலும் மிக்க ஆர்வம் காட்டி
வருகின்றனர். நெதர்லாந்தில் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருகின்றது .
நெதர்லாந்தில் சுமார் 825,000 முஸ்லிம் வாழ்கின்றனர் . இவர்களில்
பெரும்பாலானவர்கள் நெதர்லாந்து நாட்டின் நான்கு (ஆம்ஸ்டர்டாம்,
ரோட்டர்டாம், ஹாக் மற்றும் யுட்றேட்)முக்கிய நகரங்களில் வாழ்கின்றனர்
ரோட்டர்டாம்: நெதர்லாந்து மிக பெரிய மசூதி
கம்பீரமாய் காட்சியளிக்கும் இந்த இறை இல்லத்தின் கட்டுமான பணி ஏப்ரல் 2000 ஆம் துவங்கி பத்து ஆண்டுகள் கடந்து தற்போது நிறைவுபெற்றுள்ளது. 50 மீட்டர் மினாராவின் உயரமும், 200 சதுர மீட்டர் பரப்பளவும், மூன்று அடுக்குமாடிகளும் கொண்ட இப்பள்ளியில் ஒரே நேரத்தில் சுமார் 2,200 பேர் தொழுகை நடத்த முடியும்.
நெதர்லாந்து மற்றும் மேற்கு ஐரோப்பவிலேயே இப்பள்ளிதான் மிகப்பெரியது என்பது குறிப்படத்தக்கது.
No comments:
Post a Comment