Thursday, January 31, 2013

அன்பு சகோதர் கமலுக்கு, ஒரு முஸ்லிம் சகோதரனின் மனம் திறந்த மடல்...

 கோவை: விஸ்வரூபம் விவகாரம் குறித்து நடிகர் கமல் ஹாசனுக்கு மனிதநேயகட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கடிதம் ஒன்றை
எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, உங்கள் மீது
அமைதியும் சமாதானமும் நிலவட்டுமாகtநீங்கள் உலகப் புகழ்பெற்ற தலை சிறந்த நடிகர் என்பது உண்மை; நீங்கள் ஒரு முற்போக்கு சிந்தனையாளர் என்பதும் உண்மை. திரை உலகத்தில் சம்பாதித்து அதை திரை உலகத்திலேயே முதலீடு செய்பவர் என்று உங்களை அனைவரும் பாராட்டுவதும் உண்மை. உங்களின் உன்னைப்போல் ஒருவன்' திரைப்படமும், தற்போது 'விஸ்வரூபம்' திரைப்படமும் முஸ்லிம்களுக்கு எதிராக அமைந்தது துரதிஷ்டவசமானது. இப்படங்கள் குறித்து உங்களோடு கலந்துரையாடி எங்கள் குமுறல்களை கொட்டினோம். நீங்கள் அதை எந்த அளவுக்குப் புரிந்து கொண்டீர்கள் எனத் தெரியவில்லை. நினைவிருக்கிறதா கமல்அவர்களே? முன்பு ஒரு முறை நீங்கள் அமெரிக்கா சென்றபோது உங்கள் பெயரில்
ஹசன் என்ற பெயர் ஒட்டி இருப்பதைப் பார்த்து முஸ்லிம் எனக் கருதி உங்களைஅமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டு அவமானப்படுத்தியதை மறந்துவிட்டீர்களா?

 உங்களைப் போன்றே புகழ் பெற்ற நடிகர் ஷாருக்கானுக்கும், முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமுக்கும் இதே போன்ற அவமானங்கள் 'முஸ்லிம்' என்ற காரணத்திற்காக நடந்தது. முஸ்லிம் எப்படி எல்லாம்
அவமானப்படுத்தப்படுகிறான், தனிமைப்படுத்தப்படுகிறான் என்பதற்கு
இதுவெல்லாம் ஆதாரங்கள். இந்நிலையில் நேற்று காலை (30-01-2013) நீங்கள்
அளித்த பேட்டியை கோவையில் இருந்தவாறு எமது கட்சியின் மாநாட்டுப்
பணிகளுக்கு மத்தியில் பார்த்தேன். மிகவும் உருக்கமாக இருந்தது. உங்கள்
மீது இரக்கம் ஏற்படும் வகையிலும் அனுதாபத்தை திருப்பும் வகையிலும் தங்கள் வார்த்தைகள் இருந்தது. உங்களை யார் தமிழ்நாட்டை விட்டு போகச் சொன்னது?

உங்களை மிரட்டுவதும், உருட்டுவதும் யார்? பின்னணி என்ன? அது உங்கள்
மனசாட்சிக்குத் தெரியும். தங்கள் மீது எங்களுக்கு இப்போதும் மரியாதை
உண்டு. நீங்கள் எங்களின் சகோதரர். அநீதியாக நீங்கள் யாராலும்
பாதிக்கப்பட்டால் நீதியின் பொருட்டு உங்களுக்கு அரணாக இருப்போம்.
கவலைப்படாதீர்கள். ஆனால் உண்மையான பிரச்சனை என்ன என்பதை திசை திருப்பி முஸ்லிம்களை தனிமைப்படுத்துவதற்கு துணை போய் விடாதீர்கள். எங்களின் கோரிக்கை எங்களையும், எங்கள் குர்ஆனையும், வணக்க வழிபாடுகளையும் தவறாக சித்தரிக்க வேண்டாம் என்பதே! நீங்கள் உலக நிகழ்வுகளைத் தான் படமாக எடுக்க வேண்டும் என விரும்பி இருந்தால் ஏன் முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதை படமாக எடுக்கவில்லை? பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து மும்பையில் 2 ஆயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை ஏன் படமாக எடுக்கவில்லை? ஈராக்கில் அமெரிக்காவினால் 6 லட்சம் ஈராக்கியர்கள் கொல்லப்பட்டது பற்றி ஏன் படம் எடுக்கவில்லை? இப்படி பல துயர நிகழ்வுகள் உலகமெங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதையெல்லாம்
படமாக எடுக்காமல் அமெரிக்காவை திருப்திப்படுத்தி, இந்தியர்களை
கேவலப்படுத்தி, அதில் தமிழ்நாட்டு முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி ஒரு படம் எடுத்தது ஏன்? இது தேவையா? 30-1-2013 அன்று உங்கள் படம் வெளியான சில தியேட்டர்களின் மீது சில விஷமிகள் தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள்; பெட்ரோல் குண்டுகளை வீசி இருக்கிறார்கள். இவற்றை வன்மையாகக் கண்டிக்கிறோம். இப்படி தமிழ்நாடு முழுக்க உங்களுக்கு எதிராக, வேறு ஏதோ காரணங்களுக்காக யார் யாரோ செய்யும் எதிர்ப்புகளுக்கு எங்கள் சமூகத்தை காரணமாக்கக் கூடாது. எங்களுக்கு அதில் எல்லாம் உடன்பாடு இல்லை. உங்களை தான் எங்களுக்கு நோக்கம்; எதிர்ப்பது அல்ல. தமிழ்நாடு எங்கும் விஸ்வரூபத்தை முன் வைத்து ஒரு பதற்றம் உருவாக்கப்படுகிறது. இதற்குப் பின்னணியில் இருப்பது யார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

 உங்களுக்கும், அந்த பெரிய இடத்து தொலைக்காட்சிக்கும் இடையே நடந்த வணிகமோதல்கள் மற்றும் ப.சிதம்பரம் பிரதமராக வேண்டும் என்று நீங்கள் பேசியது இப்பொழுது உங்களுக்கு எதிராக அரசியல் வடிவம் பெறுகிறது.
இதற்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தம் இல்லை. நல்லவேலையாக 30-01-2013
மறுபடியும் விதிக்கப்பட்ட தடைக்குப் பிறகு உங்களை ஹாருண் எம்.பி., தேசிய லீக் பசீர், முஸ்லிம் லீக் ஜைனுல் ஆபுதீன் ஆகியோர்
சந்தித்திருக்கிறார்கள். என்ன பேசினீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் சில
காட்சிகளையும், வசனங்களையும் அவர்களின் வேண்டுகோளை ஏற்று
நீக்கப்போவதாகவும், முஸ்லிம்களுக்கும், எனக்கும் உள்ள பிரச்சனை இதன்
மூலம் தீர்ந்துவிட்டதாகவும். நீங்கள் பேட்டியளித்துள்ளீர்கள். இதை
கூட்டமைப்பு எப்படி அணுகப்போகிறது என்று தெரியவில்லை. எது எப்படி ஆயினும் இப்பிரச்சனை சுமூகமான முறையில் முடிக்கப்பட வேண்டும். எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த பின்னால் கூட நாங்கள் அமைதி வழியிலேயே அனைத்தையும் சந்திக்கிறோம். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்; இதை உங்கள் ரசிகர்களுக்கும் சொல்ல வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். இப்பிரச்சனையைக் காரணம் காட்டி பதற்றம் உருவாவதை யாரும் விரும்பவில்லை.அதே சமயம் உங்கள் மீது எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்தக் கோபமும் இல்லை. நீங்கள் எங்களையும் புரிந்து கொண்டு எங்களோடு சகோதரனாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம்.

 உங்களுக்கு இறைவன் நேர்வழி (ஹிதாயத்) காட்ட வேண்டும் என பிரார்த்திக்கிறோம். உங்கள் கடன் தீரவும், நீங்கள் அமைதியைப் பெறவும், இம்மண்ணிலேயே வாழவும் ஆண்டவன் உங்களை ஆசீர்வதிப்பானாக. நாம் எல்லோரும் இந்தியர்கள்; தமிழர்கள். ஒருவரை ஒருவர் மதிக்கும் சகோதரர்கள் என்பதை உணர்ந்து அன்பையும், நேசத்தையும் கட்டிக்காப்போம். இப்படிக்கு, உங்கள் முஸ்லிம் சகோதரன் தமிமுன் அன்சாரி, பொதுச்செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/31/tamilnadu-dear-kamal-letter-from-muslim-brother-168948.html

--
மின் அஞ்சல் வழி தகவல் தந்தவர் : அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர் --------------------------------------------------------------------------

விஸ்வரூபம்-சில காட்சி நீக்கி வெளியிடலாமா! TNTJ மாநில தலைவர் பீஜே அவர்களின் பி .ஜே விளக்கம்

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டு வி்ஸ்வரூபம் படத்தை வெளியிடலாமா ? !
TNTJ மாநில தலைவர் பீஜே அவர்களின் பி .ஜே விளக்கம்

Wednesday, January 30, 2013

ஆத்மீகம் எளிய பக்தியிலிருந்துதான் துவங்க வேண்டும்.


இன்று ஆத்மீகம் என்றால்!
தொழுகுமிடம் நாடிப் போவது ,
இறைவனைத் தொழுவது ,நோன்பு வைப்பது,
இறை வசனங்களை ஓதுவது
புனித பிரயாணம் மேற்கொள்வது,
இறைவனைப் பற்றியும் இறையடியார்களைப் பற்றியும் பேசுவது,
மார்க்க புத்தகங்களைப் படிப்பது ,மார்க்க சொற்பொழிவுகள் செய்வது, கேட்பது மற்றும் மார்க்கத்தைப் பற்றி பிறருடன் விவாதிப்பது,.
ஆன்மீகப்  பெரியவர் அடக்கப்பட்ட சமாதிக்குச் செல்வது , அந்த சமாதிக்கு முக்கியம் கொடுத்து அங்கேயே முடங்கிக் கிடப்பது மற்றும் ஆன்மீகப்  பெரியவர் பற்றி துதி பாடுவது.
மார்க்கத்தைப் பற்றியே விவாதித்துக் கொண்டிருப்பது
இப்படியே வாழ்நாளை போக்கிக் கொடிருப்பதுதான் என்று  சிலர் நினைக்கிறார்கள் அவ்விதமே சில மார்க்க போதகர்கள் மற்றவர்கள் மனதில் உறைய வைக்கிறார்கள்.


   மார்க்கத்தில் தன்னை தாங்கள்தான் மிகவும்  மார்க்கம் சொல்லியபடி வாழ்வை இணைத்துக் கொண்டதாக வறட்டு சடங்குகளில் வாழ்நாளை கழித்துக்கொண்டிருப்பார்கள். பெரிய ஞானம் பெற்றவர்களாக பெருமையடைவார்கள் அவ்விதம் மற்றவர்களும் நினைக்க வேண்டுமென்று அரும்பாடு பெற்று ஆதாயம் தேட முயல்வார்கள்.
தன்னலம் ,மார்க்கம் ,ஆத்மீகம் ,சுவனம் பற்றி சிந்திப்போர் உடன் வாழும் மக்களை அறிவோர் இல்லை.அவர்களுக்கு உதவுவதுமில்லை. மார்கத்தோடு தம் வாழ்கையை குறுக்கிக்  கொள்கின்றார்கள்.இறைவனை அறிந்துக் கொள்ளும் ஞானம் வேத நூல்கலைப் படிப்பதனால் அதனை மற்றவருக்கு எடுத்து சொல்வதால் மட்டும் வருவதில்லை.தினசரி நாம் மக்களோடு பகிர்ந்துக் கொள்ளும் நேர்மையான உதவிக் கரம் நம்மை உயர்த்தி வைக்கும். எளிமையான வாழ்கை, அனுசரித்துப் போதல் ,தம்மால் முடிந்ததை மட்டும் செயல் படுத்த முயலவேண்டும். இல்லையெனில் விரக்தி வர ஆத்மீகம் அகன்றுவிடும் . ஆத்மாவை நேசித்து  அடுத்தவர்களுக்காகவும் நாம் விடும் மூச்சு இருக்க வேண்டும். ஆத்மீகம் எளிய சேவை மற்றும்  பக்தியிலிருந்துதான் துவங்க வேண்டும்     

Tuesday, January 29, 2013

சிதறி கிடக்கும் சிறுபான்மையினரை ஒரு முகப் படுத்திய .....கமலுக்கு நன்றி !

சிதறி கிடக்கும் சிறுபான்மையினரை
ஒரு முகப் படுத்திய .....கமலுக்கு நன்றி !

சமத்துவத்தை போதிக்கும் சன் மார்கத்தை
சாமானிய மக்களையும் - திரும்பி பார்க்க செய்த
கமலுக்கு நன்றி !

உறங்குகின்ற முஸ்லீமின்
உணர்வுககளை விஸ்வரூபம் - எடுக்க செய்த
கமலுக்கு நன்றி !

கமல்...நீ சிந்திக்க .... நீ சீர்பட... நீ செயல் பட
உம்மோடு ஒரு சில வரிகளாய் நான் !

இந்திய இறையாண்மையை
இரு கரமாக கொண்டவர்கள் நாங்கள்!
இந்திய ஜனநாயகத்தின்
மொத்த உருவம் நாங்கள்!

இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக
எங்களின் எண்ணிக்கையை விட
மற்றவர்களின் தியாகத்தை விட
எங்களின் தியாகம் பெரிது !

Thursday, January 24, 2013

இஸ்லாமிய தீவிரவாதம்' என்று போடுவது ஏன்?

இஸ்லாமிய தீவிரவாதம்' என்று போடுவது ஏன்? தீவிரவாதத்தை இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்கவில்லை. தனி மனிதன் செய்யும் தவறுக்கு ஒரு மார்க்கத்தை சார்ந்த மக்களை குறிப்பிட்டு பேசுவது அல்லது படம் எடுப்பது முறையா!
அடுத்து வாழும் மக்கள் உணர்வை அறிந்துக் கொள்ளாமல் பிரிவு உண்டாக்கும் முயற்சி ஏன்! சினிமா பொழுது போக்கும் இடமாகவோ அறிவைத் தருமிடமாக இருக்க முயலுங்கள் .சாராயம் விற்று பொருள் ஈட்டுவதுபோல் தீங்கான கருத்துகளை புகுத்தி படமெடுத்து மனிதர்களை கெடுக்க முயலாதீர்கள். புதிதாக படம் எடுப்பவர்கள் அருமையாக படமமெடுக்க கோடிக் கணக்கில் பணம் போட்டு படமெடுத்து மக்களுக்குள் பிரிவு உண்டாக்காதீர்கள் . விஸ்வரூபம் தமிழ் பெயரே அல்ல . ஒரு நலம் விரும்பும் தமிழன் குழப்பதை உருவாக்க முயல்வது முறையா? கமல் நல்ல மனிதனாக இருக்கலாம். அவர் சரித்திர படம் எடுப்பதுபோல் இத்தனை கோடி பணம் போட்டு ஒரு சமூகததையே வருந்த வைப்பது நன்மையாக இருக்க முடியாது.அவர் அடுத்தவருக்கு தவறான பாதையை காட்டிவிடக் கூடாது.
----------------------------------------------------------------------------------------------------------------------
இங்கு விமர்சனம் செய்பவர்கள் ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டும் எங்களுக்கு கமலஹாசன் என்ற தனிப்பட்ட கலைஞன் மீது எந்த கோபமும் இல்லை அரங்கேற்றம் என்ற திரைப்படத்தில் மிக ஆச்சார்யமான பிராமண குடும்பத்தில் பிறந்த பெண் தனது குடும்பத்தை விபசாரம் செய்து காப்பாற்றுவதாக இயக்குனர் காட்டி இருப்பார் இதை காரணம் காட்டி இன்று உள்ள அத்தனை பிராமணர்களும் அப்படி தான் என்று சொல்வது எந்த அளவுக்கு அபத்தமோ அந்த அளவுக்கு அபத்தம் இஸ்லாமியர்கள் அனைவரையும் தீவிரவாதிகளாக சித்தரிப்பது. தீவிரவாதி எந்த மதத்தில் இல்லை ,அதுவும் அல்லாமல் திரை படம் என்பது ஒரு சக்தி மிகுந்த மீடியா. நூறு பேனாக்கள் செய்ய முடியாததை ஒரே ஒரு காட்சி செய்து விடும் இந்த திரைப்படம் அனுமதிக்கப்பட்டால் அதை பார்க்கும் குறிப்பாக பிஞ்சுகளின் மனதில் முஸ்லிம் என்றால் இப்படி தான் என்று ஆழமாக பதிந்து விடும்

தான் செலவு செய்திருக்கும் சில கோடிகளை மட்டுமே அவர் மனதில் நினைக்கிறாரே தவிர அந்த திரைப்படம் வெளியானால் அதன் மூலம் ஏற்படும் அசம்பாவிதங்கள் விலை மதிப்பற்ற பல உயிர்களை பலி வாங்கி விடும் அபாயம் இருக்கிறது அதுவும் அல்லாமல் இப்படி ஒரு சம்பவத்திற்காக காத்திருக்கும் ரத்த வெறி பிடித்த ஓநாய்கள் தமிழகத்தை குஜராத்தாக மாற்ற துடித்து கொண்டு இருக்கிறார்கள் வேண்டாம் விபரீதம்

அமைதியை விரும்பும் தமிழர்கள் இஸ்லாமியர்களுக்கு தோள் கொடுப்பது இந்த நேரத்தில் நல்லது
by Riaz Ahamed to yuva//

Saturday, January 19, 2013

வெளிநாட்டு உத்தியோகம்

உள்ளக்குமுறலை வார்த்தையால்
வர்ணிக்க வார்த்தை கிடைக்காமல்
வருத்தப்பட்ட சமயத்தில்…

எதிர்பாராமல் கண்ணில் பட்ட ஒரு கவிதையின்
உந்துதலில் வந்து கொட்டிய
என் கவிதை இது…!

“வெளிநாட்டு உத்தியோகம்”
தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை
இன்று அதையும் பிரியப்பட கற்றுகொண்டேன்.

“வெளிநாட்டு பயணம் ”
இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைபடனுமா ?
என்று தத்துவம் பேசிய வசனம் இன்று திரும்பி என்னை நோக்கி…

“விமான நிலையம்”
பலருக்கு பிடிக்காத இடம் அது தான் – வழியனுப்பும்போது
பிடித்த இடமும் அதுதான் – வரவேற்கும்போது.

“இப்ப நீங்க எங்க இருக்கீங்க”
என்று நான் அருகில் இருக்கும்போதே
பலர் கேட்ட கேள்வியின் அர்த்தம் புரிந்தது இன்று…

“ஊர் செய்தி என்ன” என்று கேட்கும் வெளிநாட்டு
சொந்தங்களுக்கு பதில் சொன்ன காலம் போய்..
அதே கேள்வியோடு இன்று நான் !

திருமணத்திற்கு முன்பு தாயகம்
திருமணத்திற்கு பின்பு வெளிநாட்டு பயணம்
இது தான் இப்போ LATEST TREND..!

பிடிக்காத ஒன்றை பிடித்தவர்களின்
பிரியமான வார்த்தைக்கு கட்டுப்பட்டு
பிடிக்காமல் ஒத்துக்கொண்டு ஏறிய முதல் விமான பயணம் – ரணம்.

வெளிநாட்டு வேலையா ?
அதெல்லாம் நமக்கு சரிபட்டுவராது என்று அன்று
பேசிய வார்த்தைகள் இன்று சற்று சலிப்போடு சிரிப்பையும் தருகிறது.

[3D HD] (ஹஜ் 2012)காணவேண்டிய பிரத்தியேகமான படப்பிடிப்பு! சுப்ஹானல்லாஹ்  !  தெளிவான  காட்சிகள் அடங்கிய  அற்புதமான,ஒரு சிறந்த வீடியோ.
2012 க்கு முன்பு பார்த்திருக்க வாய்ப்பில்லை ! இறுதி பகுதி பிரத்தியேகமாக ஒரு பகுதியாக  பதிவு செய்யப்பட்டது! (ஹஜ் 2012)
படப்பிடிப்பு வெளியிடப்பட்டது 18 Oct 2012

Thursday, January 17, 2013

"உங்களுக்குள்ள ஒரு சின்ன பொறி" - (காணொளி) + குழந்தைகளைத் தயார்படுத்துங்கள் - வெ.இறையன்பு

------------------------------------- --------------------------------------------------------------

எளிமையான வாழ்க்கைக்கு குழந்தைகளைத் தயார்படுத்துங்கள்: வெ.இறையன்பு
வளர்ந்து வரும் நுகர்வோர் கலாசாரத்திலிருந்து எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்ற எளிமையான வாழ்க்கைக்கு குழந்தைகளைத் தயார்படுத்தும் பணியில் பெற்றோர்கள் ஈடுபட வேண்டும் என பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.

 திருவொற்றியூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு சிறப்புக் கூட்டம் திருவொற்றியூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவொற்றியூர் பொதுவர்த்தக சங்க கெüரவத் தலைவர் ஜி.வரதராஜன் தலைமை வகித்தார். மையத்தின் செயலாளர் என்.துரைராஜ் வரவேற்புரையும், பொருளாளர் கு.சுப்பிரமணி நன்றியுரையும் ஆற்றினர். கூட்டத்தில் இறையன்பு பேசியதாவது:

 உலகம் முழுவதும் நுகர்வோர் கலாசாரம் அதிகரித்து வருகிறது. தேவைக்கு அதிகமாக வாங்கும் எண்ணம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு சைக்கிள்கள் வைத்திருந்தால் அவர் பணக்காரர். ஒரு கிராமத்தில் ஒருவர் மோட்டார் சைக்கிள் வைத்திருப்பார். நான்கு வேட்டி, சட்டைகள் வைத்திருந்தால் அவர் வசதியானவர் என அர்த்தம்.  விவசாயத்தைத் தவிர வேறு வேலைவாய்ப்புகள் அப்போது இல்லை.  ஆனால், இன்றைய நிலை என்ன?  ஓட்டுநர் வேலைக்கு மட்டும் 2 லட்சம் பேர் தேவைப்படுகிறார்கள். இதற்குக் காரணம் தொழில் புரட்சிதான்....
  இங்கு க்ளிக் செய்து மேலும் படியுங்கள் http://dinamani.com/

Dr. அப்துல்லாஹ் பெரியார் தாசன் அவர்கள் "குழந்தை வளர்ப்பு" பற்றி சிறப்பு சொற்பொழிவு

Dr.அப்துல்லாஹ் பெரியார் தாசன் அவர்கள் "குழந்தை வளர்ப்பு" பற்றி சிறப்பு சொற்பொழிவு

Wednesday, January 16, 2013

அழகிய அழைப்பு.......

அன்பான சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...

சக்திவேல் முதலியார் என்பவர் இஸ்லாத்தை குறித்து விமர்சனம் செய்வதனை இக்குழுமத்தில் ஏற்கனவே சில சகோதரர்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள். இந்நிலையில் அவரை நேரடியாக போய் சந்தித்து தூய இஸ்லாத்தை எடுத்துரைப்போம் என நாம் முடிவு செய்த அடிப்படையில் சென்ற சனிக்கிழமை அன்று அபுதாபியிலிருந்து 125 கிமீக்கு அப்பால் இருக்கும் ஸ்வேஹான் சென்று அவரை நேரடியாக சந்தித்தோம்.

தனக்கு இஸ்லாத்தை விமர்சிக்க வேண்டும் என்ற வெறி எல்லாம் கிடையாது என்றும் சில முஸ்லிம் சகோதரர்கள் எங்கள் இந்து கடவுள்களை மிகவும் கொச்சையாக விமர்சித்த காரணத்தினால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டதால் தான் அவ்வாறு விமர்சித்தேன் என்றும் குறிப்பிட்டார். மேலும் அவரது குடும்பத்தை கூட விட்டு வைக்காமல் சிலர் விமர்சித்து உள்ளனர், இதே இடத்தில் படிக்காத பாமரன் ஒருவன் இருந்திருந்தால் அவன் தூக்கு மாட்டி தற்கொலை செய்திருப்பான் அந்த அளவுக்கு தனது பிறப்பையும், தனது மனைவியையும் உங்கள் இஸ்லாமிய சகோதரர்கள் விமர்சித்துள்ளனர் என்று ஆதங்கப்பட்டார். இதன் விளைவுகள் தான் என்னையும் அசிங்கமான முறையில் கருத்திட வைத்து விட்டது. ஒருவர் அல்ல பலர் இப்படி கமெண்ட் செய்யும் போது ஒட்டு மொத்த முஸ்லிம்களும் இப்படி தான் இருப்பர் போல என்று தான் எண்ணியதாகவும் குறிப்பிட்டார்.

ஜாமிஆ மனாருல் ஹுதா அரபுக் கல்லூரி

                     ஜாமிஆ மனாருல் ஹுதா அரபுக் கல்லூரி

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்
ஜாமிஆ மனாருல் ஹுதா அரபுக் கல்லூரி
அதிபர்     தேசமனிய லங்காபுத்ர சாமஸ்ரீ, தாஜுல் உலமா அஷ்ஷேக்
      அல்ஹாஜ் கே.எம்.எம். ஹலாலுத்தீன் (மிஸ்பாஹி).

 -----------------------------------------------------------------


தேசமானிய லங்காபுத்ர சாமஸ்ரீ, தாஜுல் உலமா
அஷ்ஷேக் அல்ஹாஜ் கே.எம்.எம். ஹலாலுத்தீன் (மிஸ்பாஹி)

அவர்களின் இதயத்திலிருந்து

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

மனாருல் ஹுதா மத்ரஸாவை உருவாக்க எண்ணத்தை தந்து அதை வழி நடாத்த ஆற்றலைத்தந்து உலமாக்களையும், ஹபிழ்களையும் உருவாக்க அருள் புரிந்து கொண்டிருக்கும் அல்லஹ்வுக்கே எல்லப் புகழும் அல்ஹம்துலில்லாஹ்.

சன்மார்க்கத்தின் சகல அறிவுகளையும் வழிமுறைகளையும் காட்டித்தந்த அருமை நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர் வழி நடந்த ஸஹாபாக்கள், இமாம்கள், உலமாக்கள், நல்லோர்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

       30 வருடங்களுக்கு முன் திவுரும்பொலையிலும் அயல் கிராமங்களிலும் மக்களுக்கு வழிகாட்ட உலமாக்கள் இல்லாத சூழலில் உருவாகிய மனாருல் ஹுதா மத்ரஸாவின் மூலம் இவ்வூர் மக்கள் மட்டுமல்ல பக்கத்து ஊர் மக்களும் இலங்கை வாழ் முஸ்லீம் மக்களும் அடைந்து வரும் பிரயோசனங்களை காண்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். குறைந்த வளங்களுடன் உருவாகிய இந்த மத்ரஸா இன்று பல்வேறு வசதி வாய்ப்புக்களுடன் காட்ச்சியளிப்பதற்கு நிர்வாகமும், ஆசிரியர் குழாமும், மாணவர் சமுதாயமும் ஊர் மற்றும் பிரதேச மக்களும் அரசியல் பிரமுகர்களும் நன்பர்களும் நலன் விரும்பிகளும் வழங்கிவரும் நிதி, பொருளுதவி ஒத்துழைப்புக்களுடனும் உலமாக்கள், பெரியார்கள் வழங்கும் ஆசிகளும் ஆலோசனைகளும் காரணமாக அமைந்துள்ளதை மறுக்க முடியாது.

      எமது அரபுக்கல்லூரியில் ஆரம்பிக்கப்படும் இனணயத்தள வசதி மூலம் எமது அரபுக் கல்லூரியின் சிறப்பை உலகிலுள்ள அனைவரும் அறிந்துகொள்ள வசதி கிடைக்கிறது இந்த வசதியை ஏற்படுத்தித் தந்த அல்லஹுத்தஆலாவுக்கே எல்லப் புகழும் அல்ஹம்துலில்லாஹ்.

நான் இந்த மத்ரசாவை குறுகிய காலத்துக்காக ஆரம்பிக்வில்லை. கியாமம் வரைக்கும் இதன் சேவை சமுதாயத்துக்கு கிடைக்க வேண்டும் என்பதே எனது அவா. எனவே சமுதாயத்தின் சகல தரப்பினரும் இதன் வளர்ச்சிக்கும் நிலைப்பாட்டுக்கும் என்றென்றும் ஒத்துழைக்க வேண்டுமென வினயமாக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் இதுவரை இங்கு பட்டம் பெற்ற ஹாபிழ்களும், உலமாக்களுக்கும் எனது நல்லாசிகள் உரித்தாகட்டும்.

இன்று இம்மத்ரஸாவை சிறப்பாக நடாத்த என்னுடன் ஒத்துழைக்கும் அனைவருக்கும் எனது இதய பூர்வ நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

(அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் ஈருலகிலும் நல்லருள் புரிவானாக , ஆமீன்)

ஏன் மறைபொருளாக்கி வைக்க வேண்டும் !


மீலாதுன் நபி ,மௌலூது - பிரச்சனை எதில்?

நாயகத்தின் பெருமையை பற்றி விளக்கும் மீலாது நபி சொற்பொழிவினை நடத்துவதில் தவறு ஒரு காலமும் இருக்க முடியாது.

சிலர் இதனை விரும்புகிறார்கள். சிலர் இது கூடாது என்று சொல்கின்றார்கள் .

இரு கருத்துகளும் முஸ்லிம்களிடமிருந்துதான் வருகின்றன.

இவர்கள் அனைவரும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை பின்பற்றுபவர்கள்தான்

இவர்களும் ஆதாரங்களை வைக்கின்றனர் .அவர்களும் ஆதாரங்களை தருகின்றனர் .

அனைத்து ஆதாரங்களும் ஹதீஸ் குர்ஆன் இவைகளிலிருந்து தருவதாக சொல்கின்றனர்

பிரச்சனை எதில்?

நாயகம் அவர்களைப் பற்றி சொற்பொழிவுகள்  நிகழ்துவதிலா!

இல்லை.

நாயகம் அவர்களைப் பற்றி கவிதை எழுதுவதிலா?

இருக்கவே முடியாது

நாயகம் பற்றி பாடுவதிலா?

இருக்க முடியாது .

பின் எதற்காக வீணான பிரச்சனை?

மௌலூது ஓதுவதில் முக்கிய பிரச்சனை ஏன்?

மௌலூது புத்தகத்தில் என்னதான் எழுதப்பட்டுள்ளது?

அதில் அடங்கிய வாசககங்களின் மற்றும் கவிதைகளின் பொருள் அதன் விளக்கம்தான் என்ன?

 மௌலூது புத்தகம் (கிதாப் )தனிப்பட்ட நபரால் எழுதப்பட்டது. அது நபிகள் நாயகம் புகழ் பாடும் புத்தகம்(கிதாப் ) என்று சொல்கிறார்கள்.நாயகத்தின் புகழ் பாடுவதை யார் தவறு சொல்வார்கள்!

அது மார்க்கத்தில் ஓத வேண்டிய கட்டாயமில்லை. ஓதினாலும் தவறாக முடியாது அதில் மார்கத்திற்கு புறம்பாக இல்லாதவரை.

அது தெளிவாவது எப்பொழுது!

அதனை அறிந்த மொழியில் ஓதினால் அல்லது பாடினால் ஒரு தெளிவும் முடிவும் மக்களுக்கு கிடைத்து விடும்.

மௌலூது புத்தகத்தில்(கிதாப் ) உள்ளதை தழிலேயே ஓதுவதில் பாவமுமில்லை தவறுமில்லை அதில் குறை இல்லாதவரை. அதனை ஏன் மறைபொருளாக்கி  வைக்க வேண்டும் !


Tuesday, January 15, 2013

ரஹீக் - இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி (ஸ் ல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

ரஹீக் - இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி (ஸ் ல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு உலகளாவிய போட்டியில் முதல் பரிசு பெற்ற நூல்

அக்கறையோடு பேசுவாள் நான் அக்கரையிலிருக்க !

அக்கரைமீது அக்கறை வர
இக்கரை விட்டு அக்கரை போக
அக்கறை இல்லை அக்கரையில்
இக்கரைக்கு அக்கரை பச்சை

இக்கரைவந்தால் அக்கரை எப்பொழுது போவாய் என அக்கறையோடு கேட்க
அக்கரையிலலிருந்து  அக்கறையோடு அனைத்தும் கொண்டு வந்திருப்பேன் என பெட்டி திறக்க
அக்கறையிருந்தால்தானே கொண்டு வருவீர்கள் யெனச் சொல்ல
கறைபிடித்த மனம் கொண்டோரை கண்டு கொண்டேன்

அக்கறையோடு பேசுவாள் நான் அக்கரையிலிருக்க
இக்கரை வந்தால் பேச்சும் அக்கறையாக அமையும்
இக்கரையில் வைகறை நாட்கள் பல ஓட
'அக்கரைக்கு எப்போது' யென்பாள் நக்கலாக

அக்கரை வாழ்கையில்  நடந்ததை வெளியில் சொல்லமுடியாது
இக்கரையில்  வீட்டிற்குள் நடந்தவைகள் வெளியில் சொல்லமுடியாது
அக்கரைபோகும்போதேல்லாம் பெற்ற  மக்களை விட்டுப் பிரிய மனம் அழுகும்
அக்கறையோடு அனைத்தையும் அடக்கிக் கொண்டு அக்கரை போக வேண்டும்

Monday, January 14, 2013

நபிகள் நாயகத்தின் வாழ்வு ஒரு பார்வை -Reflection on The Prophet's Life


நபிகள் நாயகத்தின் வாழ்வு ஒரு பார்வை -Reflection on The Prophet's Lifeபெருமானாரின்அடிச்சுவடுகள்
தாரிக் ரமழான் அவர்களின் நூலிலிருந்து)
 

(மனிதர்களே!) உங்களிலிருந்தே ஒரு ரஸ{ல்உங்களிடம்திட்டமாக வந்து விட்டார்: நீங்கள்வருத்தப்படுவது அவருக்கு கஷ்டமாயிருக்கும். (நீங்கள்நேர்வழி பெற்று நன்மையடைய வேண்டுமென்று) உங்களின்மீது பேராசை கொண்டவர். (அன்றியும்) முஃமின்களின்மீது அன்பும், கிருபையும்உள்ளவர். (சூரா தவ்பா: 128)

கண்மணி நாயகம்முஹம்மது ஸல்லல்லாஹ{ அலைஹிவஸல்லம்) அவர்களின் உயரிய வாழ்வு, எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் வாழ்ந்த, வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு ஒளிமயமான வழிகாட்டியாகவும், சக்தி வாய்ந்த படிப்பினைகள்நிறைந்ததாகவும்உள்ளது. அருமை நாயகம்ஸல்லல்லாஹ{ அலைஹிவஸல்லம் அவர்கள், ஒவ்வொரு மனிதனும்தன்னைப்  படைத்த இறைவனுடனும், தன்சக மனிதர்களுடனும், தன்னைச்சுற்றியுள்ள பிரபஞ்சத்துடனும் கொள்ள வேண்டிய உண்மையான, உறுதியான உறவுகளைப்பற்றி தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். நம்உயிரினும்இனிய உத்தம நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹிவஸல்லம் )  அவர்களின் சிறப்பான பிறந்த நாளை, இந்த மங்களகரமான ரபீவுல்அவ்வல்மாதம்12-ம் தினம,;  மகிழ்வுடன்கொண்டாடும் நாம், அவர்களின் ஒளிமயமான வாழ்வையும், மரியாதைக்குரிய நடைமுறைகளையும் நம்வாழ்விலும் பிரதிபலிக்கவும், அவர்களின் அழகிய அடிச்சுவட்டை பின்பற்றி, மார்க்கப்பற்றும், சமுதாய நல்லிணக்கமும்கொண்ட, எல்லோருக்கும்பிரயோஜனமான நல்ல முஸ்லிம்களாக திகழ முயற்சிப்போமாக!

Sunday, January 13, 2013

தாயும் சேயும் பொருள் அறியா இனிய ஓசை

வயிற்றில்  பாரத்தைக் கொடுக்க
வயிற்றை வீட்டுப் பிரிய
தொப்புள் கொடி அறுவை முடிய
மார்பகத்தில் பால் சுரக்க
மார்பகம் பாரமானது

வயற்றிலிருந்து பிரிந்த
து பாசத்தைக் கொடுத்தது
மார்பகத்திலிருந்து பிரிந்தது பசியைப் போக்கியது
பசிப்போனபின் அழுகைக் குரல் நின்றது
வயிறு நிறைந்தபின் உறக்கம் வந்தது

Wednesday, January 9, 2013

"அந்த ஏமாற்றம்! அந்த வலி ! அந்த ஒத்தடம்!"

 ஊற்றுக்கண் (பகுதி - 20)
 
by டாக்டர் ஹிமானா செய்யத்
அது 1994 -ம் வருடம் ஜூலை மாதம். சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கத்தின் அழைப்பில் சிங்கை சென்று மீலாது விழாவில் பேசிவிட்டு மலேசியாவழியாக டிரான்ஸிட் எடுத்து மாஸ் விமானத்தில் தமிழகம் திரும்பவேண்டும். என்னுடன் அண்ணன் ஜே.எம் சாலி அவர்கள் ஏர்போர்ட்டுக்கு வந்தார்கள். வழியில் டிராஃபிக் ஜாம். நாங்கள் வந்து சேர்ந்தபோது நான் செல்ல வேண்டிய கனெக்டிங் ஃபிளைட் மலேசியாவுக்குப் புறப்பட்டு விட்டது. அடுத்த ஃபிளைட் எடுத்தால் சென்னை செல்லும் விமானத்தைப் பிடிக்க முடியாது; மலேசியாவில் நுழைவதற்கும் விசா இல்லை. சிங்கப்பூரில் தங்கிவிட்டு அடுத்த நாள்தான் புறப்பட வேண்டும் என்ற நிலை.

ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. அன்றிரவு நான் சென்னை சென்று அதற்கடுத்த நாள் மயிலாடுதுறை மீலாதில் தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள் தலைமையில் பேச வேண்டும் . ஒரு மாதத்துக்கு முன்பே கொடுத்திருந்த அப்பாய்ன்மெண்ட். அதை விட்டுவிட மனசில்லை. வீட்டுக்குத் திரும்புவதற்கு முன் பளிச்சென்று ஒரு யோசனை. சகோதரர் நஜீம் பிரதர்ஸ் அப்துல் பாரி அவர்களிடம் டெலிபோனில் இத்தகவலைச் சொல்வோம்; அவர் அடிக்கடி விமானப் பயணம் செய்யக் கூடியவர் ஏதாவது வழி சொல்வார் என்ற நம்பிக்கை.

ஃ பேஸபுக், ட்விட் டர் மற்றும் எதிலும் ...!

ஃ பேஸபுக், ட்விட் டர் மற்றும் எதிலும் ...!
படம் போடுங்கள் .எழுதுங்கள் ஆனால் இதை நினைவு கொள்ளுங்கள்

"ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகிறது "
-------------------------------------------------------------------------------

குர்ஆன் 50:16 وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ ۖ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ

50:16. மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.

குர்ஆன் 50:16 50:17 إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ

50:17. (மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது-

குர்ஆன் 50:16 50:18 مَّا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ

50:18. கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.

குர்ஆன் 50:23 وَقَالَ قَرِينُهُ هَٰذَا مَا لَدَيَّ عَتِيدٌ

50:23. அப்போது அவனுடன் இருப்பவர் (மலக்கு) “இதோ (இம்மனிதனின் ஏடு) என்னிடம் சித்தமாக இருக்கிறது” என்று கூறுவார்.
http://www.tamililquran.com/qurandisp.php?start=50

Tuesday, January 8, 2013

கவனம் : “இறைச்சி” வாங்கும் முன் !

“வெள்ளிக்கிழமை” என்றாலே முஸ்லிம்களின் பெரும்பாலான வீடுகளில் அன்றைய உணவில் இறைச்சி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அதுவும் “மட்டன்” என்றாலே செம்மறி ஆடு இறைச்சிதான்.....மிகவும் ருசியானது......சாப்பிடுவதற்கு தெவிட்டாதது......இதனால் உலகில் பெரும்பாலான மக்கள் விரும்பி உண்ணக்கூடியதாக இருக்கின்றது.

மேலும் விஷேச தினங்கள், திருமண வலீமா விருந்துகள், பெருநாள் தினங்கள் போன்ற நாட்களிலும் இறைச்சிகள் உணவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆட்டு இறைச்சி 100 கிராம் உண்பதில் அடங்கியுள்ள சத்துக்கள் :
(Source : National Institute of Nutrition – Hyderabad )

சக்தி (Energy) 118 கலோரிகள்
ஈரப்பதம் / நீர் (Moisture) 74.2 கிராம்
புரதம் (Protein) 21.4 கிராம்
கொழுப்பு (Fat) 3.6 கிராம்
தாதுக்கள் (Minerals) 1.1 கிராம்
கால்சியம் (Calcium) 12 மி.கி
பாஸ்பரஸ் (Phosporous) 193 மி.கி
போலிக் அமிலம் (Folic acid) 4.5 மை.கி

 ஆட்டிலிருந்து அறுக்கப்படும்  பெறப்படும் அனைத்து பாகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

அதன் விலைகள் பின் வருமாறு :
கறி (எலும்புடன்)  - 1 கிலோ - 400 ருபாய்
தலை + கால் - 250 ருபாய்
கால் - 100 ரூபாய்
குடல் - 60 ரூபாய்
நுரையீரல் - 60 ரூபாய்
தோல் - 300 ரூபாய்
இரத்தம் - 50 ரூபாய்

அனைத்து மொழிகளிலும் புனித குர்ஆன் .. ! The Holy QUR'AN in All language..!

அனைத்து மொழிகளிலும் புனித குர்ஆன் .. ! The Holy QUR'AN in All language..!

Monday, January 7, 2013

‎18 கட்டளைகள்


18 கட்டளைகள் பிறப்பித்து 13 வயது மகனுக்கு ஐபோன் வாங்கிக் கொடுத்த தாய்.
இங்கிலாந்தில் 13 வயது மகனுக்கு ஆபாச படங்கள் பார்க்கக்கூடாது என்பது போன்ற 18 கண்டிஷன்கள் போட்டு, கிறிஸ்துமஸ் பரிசாக ஐபோன் வாங்கிக் கொடுத்துள்ளார் ஒரு தாய். இதுகுறித்து ஒரு சுவையான செய்தி.

இங்கிலாந்து நாட்டில் 13 வயது Greg Hofmann என்ற சிறுவனுக்கு அவனுடைய தாயார், கிறிஸ்துமஸ் பரிசாக ஒரு விலையுயர்ந்த ஐபோன் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பரிசைக் கண்டதும் இன்ப அதிர்ச்சியில் உறைந்த சிறுவன், தன்னுடைய தாயாரின் 18 கண்டிஷன்களை கேட்டு, மிகவும் அதிர்ச்சியடைந்தான்.

Sunday, January 6, 2013

இந்தியாவில் இஸ்லாம்-2

எழுதியவர்/பதிந்தவர்/உரை அபூ உமர்

கவனக்குறைவால் அழிந்துப்போன விலைமதிப்பற்ற ஆவணங்கள்

சங்க காலத்துக்குப் பின்னர் கி.பி. 6, 7, 8 நூற்றாண்டுகள் தமிழகத்தையும், கேரளாவையும் பொறுத்தவரையில் வரலாற்றில் இருண்ட காலமாகும்(?) “சங்க காலத்தைப் பின்தொடருவது வரலாற்று ரீதியாகப் பார்ப்பின் விடியாத இரவு. தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகளுக்கு அதிகமான காலத்தைப் பற்றி நமக்கு எதுவும் அறிய வாய்ப்பில்லை” என்று திரு. கே.ஏ. நீககண்ட சாஸ்திரி தனது தென்னிந்திய வரலாறு (மலையாள மொழிபெயர்ப்பு) நூலில் பக்கம் 159-ல் குறிப்பிடுகிறார்.

இங்கு இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும் இம்மூன்று இருண்ட நூற்றாண்டுகளுக்குள் அடங்குவதால் இன்றைய வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான தடயங்கள் எதுவும் கிடைக்க வாய்ப்பின்றி தவிக்கின்றனர்.

தென்னிந்தியாவிலுள்ள வல்லரசுகளான சாளுக்கியர், பல்லவர், பாண்டியர், இராஷ்ட்டிகூடர் போன்றவர்கள் கேரளா (சேரநாடு) மீது படையெடுத்த குறிப்புகளில் காணப்படும் சில செய்திகள் இந்த இருண்ட காலத்தைப் பற்றி நமக்குச் சில அறிவுகள் புகட்டுகின்றன.

Wednesday, January 2, 2013

பொரிச்சப் புராட்டா

கவனத்தில் கொள்ள வேண்டியவை :
மைதாவைப் பற்றி இணையத்தில் கிடைத்த தகவல் நமக்கு பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.

நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிற‌த்தில் இருக்கும். அதை பென்சாயில் பெராக்சைட் ( Benzoyl peroxide ) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள். அதுவே மைதா.

( ( Benzoyl peroxide ) என்பது நாம் முடியில் டை அடிக்க பயன்படுத்தப்படும் ரசாயனம். இந்த ரசாயனம் மாவில் உள்ள ப்ரொட்டீன்னுடன் சேர்ந்து நீரழிவுக்கு காரணியாக அமைகிறது. மேலும் இது தவிர, Alloxan என்னும் ரசாயன‌ம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives, Sugar, Saccarine, Ajinamotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இது மைதாவை மேலும் அபாயகரமாக்குகிறது.

இதில் Alloxan சோதனைகூடத்தில் எலிகளுக்கு நீரழிவுநோய் வரவைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆக ப்ரோட்டாவில் உள்ள Alloxan மனிதனுக்கும் நீரழிவு வர துணைபுரிகிறது. மேலும் மைதாவில் செய்யப்படும் புரோட்டா ஜீரணத்துக்கும் உகந்தத‌ல்ல. இதனால் சிலருக்கு சாப்பிட்ட ப்ரோட்டா செரிக்காமல் அஜீரண கோளாறு உண்டாகிறது. மைதாவில் நார்ச்சத்து கிடையாது. நார்ச்சத்து இல்லாத உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும்.

இதில் சத்துக்கள் எதுவும் இல்லை. இதை சாப்பிடும் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழ்ந்தைகளுக்கு மைதாவினால் செய்யப்பட்ட பேக்கரி பண்டம் உணவுகளை கொடுக்கக்கூடாது.

சேக்கனா M. நிஜாம்:
 அதிரையை அசத்தும் பொரிச்சப் புரோட்டா [ காணொளி ]
 மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்  http://nijampage.blogspot.in/

LinkWithin

Related Posts with Thumbnails