-------------------------------------
--------------------------------------------------------------
எளிமையான வாழ்க்கைக்கு குழந்தைகளைத் தயார்படுத்துங்கள்: வெ.இறையன்பு
வளர்ந்து வரும் நுகர்வோர் கலாசாரத்திலிருந்து எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்ற எளிமையான வாழ்க்கைக்கு குழந்தைகளைத் தயார்படுத்தும் பணியில் பெற்றோர்கள் ஈடுபட வேண்டும் என பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.
திருவொற்றியூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு சிறப்புக் கூட்டம் திருவொற்றியூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவொற்றியூர் பொதுவர்த்தக சங்க கெüரவத் தலைவர் ஜி.வரதராஜன் தலைமை வகித்தார். மையத்தின் செயலாளர் என்.துரைராஜ் வரவேற்புரையும், பொருளாளர் கு.சுப்பிரமணி நன்றியுரையும் ஆற்றினர். கூட்டத்தில் இறையன்பு பேசியதாவது:
உலகம் முழுவதும் நுகர்வோர் கலாசாரம் அதிகரித்து வருகிறது. தேவைக்கு அதிகமாக வாங்கும் எண்ணம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு சைக்கிள்கள் வைத்திருந்தால் அவர் பணக்காரர். ஒரு கிராமத்தில் ஒருவர் மோட்டார் சைக்கிள் வைத்திருப்பார். நான்கு வேட்டி, சட்டைகள் வைத்திருந்தால் அவர் வசதியானவர் என அர்த்தம். விவசாயத்தைத் தவிர வேறு வேலைவாய்ப்புகள் அப்போது இல்லை. ஆனால், இன்றைய நிலை என்ன? ஓட்டுநர் வேலைக்கு மட்டும் 2 லட்சம் பேர் தேவைப்படுகிறார்கள். இதற்குக் காரணம் தொழில் புரட்சிதான்....
இங்கு க்ளிக் செய்து மேலும் படியுங்கள் http://dinamani.com/
No comments:
Post a Comment