Wednesday, January 16, 2013

ஜாமிஆ மனாருல் ஹுதா அரபுக் கல்லூரி

                     ஜாமிஆ மனாருல் ஹுதா அரபுக் கல்லூரி

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்
ஜாமிஆ மனாருல் ஹுதா அரபுக் கல்லூரி
அதிபர்     தேசமனிய லங்காபுத்ர சாமஸ்ரீ, தாஜுல் உலமா அஷ்ஷேக்
      அல்ஹாஜ் கே.எம்.எம். ஹலாலுத்தீன் (மிஸ்பாஹி).

 -----------------------------------------------------------------


தேசமானிய லங்காபுத்ர சாமஸ்ரீ, தாஜுல் உலமா
அஷ்ஷேக் அல்ஹாஜ் கே.எம்.எம். ஹலாலுத்தீன் (மிஸ்பாஹி)

அவர்களின் இதயத்திலிருந்து

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

மனாருல் ஹுதா மத்ரஸாவை உருவாக்க எண்ணத்தை தந்து அதை வழி நடாத்த ஆற்றலைத்தந்து உலமாக்களையும், ஹபிழ்களையும் உருவாக்க அருள் புரிந்து கொண்டிருக்கும் அல்லஹ்வுக்கே எல்லப் புகழும் அல்ஹம்துலில்லாஹ்.

சன்மார்க்கத்தின் சகல அறிவுகளையும் வழிமுறைகளையும் காட்டித்தந்த அருமை நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர் வழி நடந்த ஸஹாபாக்கள், இமாம்கள், உலமாக்கள், நல்லோர்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

       30 வருடங்களுக்கு முன் திவுரும்பொலையிலும் அயல் கிராமங்களிலும் மக்களுக்கு வழிகாட்ட உலமாக்கள் இல்லாத சூழலில் உருவாகிய மனாருல் ஹுதா மத்ரஸாவின் மூலம் இவ்வூர் மக்கள் மட்டுமல்ல பக்கத்து ஊர் மக்களும் இலங்கை வாழ் முஸ்லீம் மக்களும் அடைந்து வரும் பிரயோசனங்களை காண்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். குறைந்த வளங்களுடன் உருவாகிய இந்த மத்ரஸா இன்று பல்வேறு வசதி வாய்ப்புக்களுடன் காட்ச்சியளிப்பதற்கு நிர்வாகமும், ஆசிரியர் குழாமும், மாணவர் சமுதாயமும் ஊர் மற்றும் பிரதேச மக்களும் அரசியல் பிரமுகர்களும் நன்பர்களும் நலன் விரும்பிகளும் வழங்கிவரும் நிதி, பொருளுதவி ஒத்துழைப்புக்களுடனும் உலமாக்கள், பெரியார்கள் வழங்கும் ஆசிகளும் ஆலோசனைகளும் காரணமாக அமைந்துள்ளதை மறுக்க முடியாது.

      எமது அரபுக்கல்லூரியில் ஆரம்பிக்கப்படும் இனணயத்தள வசதி மூலம் எமது அரபுக் கல்லூரியின் சிறப்பை உலகிலுள்ள அனைவரும் அறிந்துகொள்ள வசதி கிடைக்கிறது இந்த வசதியை ஏற்படுத்தித் தந்த அல்லஹுத்தஆலாவுக்கே எல்லப் புகழும் அல்ஹம்துலில்லாஹ்.

நான் இந்த மத்ரசாவை குறுகிய காலத்துக்காக ஆரம்பிக்வில்லை. கியாமம் வரைக்கும் இதன் சேவை சமுதாயத்துக்கு கிடைக்க வேண்டும் என்பதே எனது அவா. எனவே சமுதாயத்தின் சகல தரப்பினரும் இதன் வளர்ச்சிக்கும் நிலைப்பாட்டுக்கும் என்றென்றும் ஒத்துழைக்க வேண்டுமென வினயமாக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் இதுவரை இங்கு பட்டம் பெற்ற ஹாபிழ்களும், உலமாக்களுக்கும் எனது நல்லாசிகள் உரித்தாகட்டும்.

இன்று இம்மத்ரஸாவை சிறப்பாக நடாத்த என்னுடன் ஒத்துழைக்கும் அனைவருக்கும் எனது இதய பூர்வ நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

(அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் ஈருலகிலும் நல்லருள் புரிவானாக , ஆமீன்)

 ---------------------------------------------------------------------------------
ஜாமிஆ மனாருல் ஹுதா அரபுக் கல்லூரி,
திவுரும்பொல,
எதுங்கஹகொட்டுவ.
தொலைபேசி : 032 2241474 / 032 2241162


புகைப்படங்கள்
Source  http://www.jmhacollege.com/
மேலும் படிக்க இங்கு செய்யுங்கள்

-------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் ,

இன்ஷா அல்லாஹ் 2013 ஜனவரி 20 திகதி அன்று 14 வது மௌல்வி ஹாபிழ்  மற்றும் இருமாடிக் கட்டட திறப்பு விழா காணப்போகும்
ஜாமிஆ மனாருல் ஹுதா அரபுக் கல்லூரிக்கு நமது வாழ்த்துகள்.

ஜாமிஆ மனாருல் ஹுதா அரபுக் கல்லூரி தொடர்ந்து வளர்ச்சியை தந்தருள அல்லாஹ் அருள் செய்வானாக.ஆமின். நன்றி Jazakallah Khayran

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
"Allah will reward you [with] goodness."
தங்கள் அன்புள்ள
S.E. A. முகம்மது அலி ஜின்னா,
ஜின்னா தெரு,
நீடூர். 
தயவு செய்து தொடர்ந்து பார்க்க இதனை கிளிக் செய்யுங்கள்   மனாருல் ஹுதா மத்ரஸா

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails