Wednesday, January 16, 2013
ஏன் மறைபொருளாக்கி வைக்க வேண்டும் !
மீலாதுன் நபி ,மௌலூது - பிரச்சனை எதில்?
நாயகத்தின் பெருமையை பற்றி விளக்கும் மீலாது நபி சொற்பொழிவினை நடத்துவதில் தவறு ஒரு காலமும் இருக்க முடியாது.
சிலர் இதனை விரும்புகிறார்கள். சிலர் இது கூடாது என்று சொல்கின்றார்கள் .
இரு கருத்துகளும் முஸ்லிம்களிடமிருந்துதான் வருகின்றன.
இவர்கள் அனைவரும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை பின்பற்றுபவர்கள்தான்
இவர்களும் ஆதாரங்களை வைக்கின்றனர் .அவர்களும் ஆதாரங்களை தருகின்றனர் .
அனைத்து ஆதாரங்களும் ஹதீஸ் குர்ஆன் இவைகளிலிருந்து தருவதாக சொல்கின்றனர்
பிரச்சனை எதில்?
நாயகம் அவர்களைப் பற்றி சொற்பொழிவுகள் நிகழ்துவதிலா!
இல்லை.
நாயகம் அவர்களைப் பற்றி கவிதை எழுதுவதிலா?
இருக்கவே முடியாது
நாயகம் பற்றி பாடுவதிலா?
இருக்க முடியாது .
பின் எதற்காக வீணான பிரச்சனை?
மௌலூது ஓதுவதில் முக்கிய பிரச்சனை ஏன்?
மௌலூது புத்தகத்தில் என்னதான் எழுதப்பட்டுள்ளது?
அதில் அடங்கிய வாசககங்களின் மற்றும் கவிதைகளின் பொருள் அதன் விளக்கம்தான் என்ன?
மௌலூது புத்தகம் (கிதாப் )தனிப்பட்ட நபரால் எழுதப்பட்டது. அது நபிகள் நாயகம் புகழ் பாடும் புத்தகம்(கிதாப் ) என்று சொல்கிறார்கள்.நாயகத்தின் புகழ் பாடுவதை யார் தவறு சொல்வார்கள்!
அது மார்க்கத்தில் ஓத வேண்டிய கட்டாயமில்லை. ஓதினாலும் தவறாக முடியாது அதில் மார்கத்திற்கு புறம்பாக இல்லாதவரை.
அது தெளிவாவது எப்பொழுது!
அதனை அறிந்த மொழியில் ஓதினால் அல்லது பாடினால் ஒரு தெளிவும் முடிவும் மக்களுக்கு கிடைத்து விடும்.
மௌலூது புத்தகத்தில்(கிதாப் ) உள்ளதை தழிலேயே ஓதுவதில் பாவமுமில்லை தவறுமில்லை அதில் குறை இல்லாதவரை. அதனை ஏன் மறைபொருளாக்கி வைக்க வேண்டும் !
Labels:
சொற்பொழிவுகள்,
மீலாதுன் நபி,
மௌலூது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment