Monday, January 14, 2013

நபிகள் நாயகத்தின் வாழ்வு ஒரு பார்வை -Reflection on The Prophet's Life


நபிகள் நாயகத்தின் வாழ்வு ஒரு பார்வை -Reflection on The Prophet's Lifeபெருமானாரின்அடிச்சுவடுகள்
தாரிக் ரமழான் அவர்களின் நூலிலிருந்து)
 

(மனிதர்களே!) உங்களிலிருந்தே ஒரு ரஸ{ல்உங்களிடம்திட்டமாக வந்து விட்டார்: நீங்கள்வருத்தப்படுவது அவருக்கு கஷ்டமாயிருக்கும். (நீங்கள்நேர்வழி பெற்று நன்மையடைய வேண்டுமென்று) உங்களின்மீது பேராசை கொண்டவர். (அன்றியும்) முஃமின்களின்மீது அன்பும், கிருபையும்உள்ளவர். (சூரா தவ்பா: 128)

கண்மணி நாயகம்முஹம்மது ஸல்லல்லாஹ{ அலைஹிவஸல்லம்) அவர்களின் உயரிய வாழ்வு, எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் வாழ்ந்த, வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு ஒளிமயமான வழிகாட்டியாகவும், சக்தி வாய்ந்த படிப்பினைகள்நிறைந்ததாகவும்உள்ளது. அருமை நாயகம்ஸல்லல்லாஹ{ அலைஹிவஸல்லம் அவர்கள், ஒவ்வொரு மனிதனும்தன்னைப்  படைத்த இறைவனுடனும், தன்சக மனிதர்களுடனும், தன்னைச்சுற்றியுள்ள பிரபஞ்சத்துடனும் கொள்ள வேண்டிய உண்மையான, உறுதியான உறவுகளைப்பற்றி தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். நம்உயிரினும்இனிய உத்தம நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹிவஸல்லம் )  அவர்களின் சிறப்பான பிறந்த நாளை, இந்த மங்களகரமான ரபீவுல்அவ்வல்மாதம்12-ம் தினம,;  மகிழ்வுடன்கொண்டாடும் நாம், அவர்களின் ஒளிமயமான வாழ்வையும், மரியாதைக்குரிய நடைமுறைகளையும் நம்வாழ்விலும் பிரதிபலிக்கவும், அவர்களின் அழகிய அடிச்சுவட்டை பின்பற்றி, மார்க்கப்பற்றும், சமுதாய நல்லிணக்கமும்கொண்ட, எல்லோருக்கும்பிரயோஜனமான நல்ல முஸ்லிம்களாக திகழ முயற்சிப்போமாக!


பெருமானார் ஸல்லல்லாஹ{ அலைஹிவஸல்லம் அவர்களின்அடிச்சுவடுகள் அவர்களின் அழகிய நூலிலிருந்து நம்  சிங்கப்பூர் முஸ்லிம்கள்அடையாளம்(ளுiபெயிழசநயn ஆரளடiஅ ஐனநவெவைலஇ (ளுஆஐ)அமைந்துள்ள அடித்தளத்தின்அற்புதமான கோட்பாடுகள், அருமை நபிகளாரின்வாழ்வியல்ஆதாரங்களின்  அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளன என்பதை உறுதியாக உணர்கிறோம். இந்த கோட்பாடுகள், நம்மை மார்க்கத்தில்மென்மை, அனைவருடனும்நட்புறவு, நலிந்தோருக்கு நேசக்கரம்நீட்டல், அமைதியான சூழல்மற்றும்புரிந்துணர்வுடன்சமுதாய முன்னேற்றம்
ஆகியநற்செயல்பாடுகள்பால்அழைக்கிறது. நிச்சயமாக, இச்சிறப்பிற்குரிய கோட்பாடுகள், நாம்நபிகள்  பெருமானாரின்உண்மை உம்மத்துகளாக திகழ்ந்து, உலகிற்கே அமைதியை போதிக்கும் மாதிரி சமூகமாக திகழ வழிகாட்டும்.


3

சமயத்தொடர்பான மீட்சித்தன்மை
தனது 23 ஆண்டுகால நுபுவ்வத்தின்வாழ்வில், நமது நாயகம்தேடியதும், போதித்ததும், உலக மாயைகளிலிருந்து விடுதலையும், சுதந்திரமான, தூய்மையான மார்க்கத்தையும்தான். மக்கள்எல்லோரும்துயிலும்பொழுது, தான்விழித்து தூயவனை துதித்தார்கள். தன்  அன்பர்கள்வாடிய சமயத்திலெல்லாம், அவர்களுக்காக வல்லவனிடம்இறைஞ்சினார்கள். தான்  கஷ்டப்படுத்தப்பட்ட பொழுதும், அவமானத்திற்குள்ளாக்கப்பட்ட பொழுதும், உறுதியுடனும், பொறுமையுடனும்இருந்தார்கள்.அன்பு நபி ஸல்லல்லாஹ{ அலைஹிவஸல்லம் அவர்கள்எல்லோருடனும்நேசம் பாராட்டியதுடன், அந்நேசத்தை தன்னைச்சுற்றியிருந்தோhரிடமும்பரப்பினார்கள். தன்பரிவு, பாசம் மூலம்தன்அருமை மனைவியர்களை பூரிப்படையச்செய்த நபிளார் மீ து
;
கலப்பற்ற,உண்மையான அன்பை அருமந்த ஸஹாபாத் தோழர்கள்கொண்டிருந்தார்கள். தான் அவர்களோடு கலந்திருப்பதன் மூலமும், அன்பு புன்னகைகள் மூலமும் அவர்களை சந்தோஷப்படுத்திய நாயகம்  ஸல்லல்லாஹ{ அலைஹிவஸல்லம்அவர்கள், அவர்களில் ஒரு அடிமை நகரின் மறு கோடிக்கு அழைத்தாலும், உடன்சென்று, அவர்களின்கூற்றை பொறுமையுடன்கேட்டு, அவர்களையும்  தனது ஒப்பற்ற அன்பின் மூலம்திருப்தி படுத்தினார்கள். கண்மணி நாயகம்ஸல்லல்லாஹ{ அலைஹி வ ஸல்லம்அவர்கள் எல்லோரையும்  நேசித்தார்கள். மன்னித்தார்கள். குற்றம்குறைகளை விட்டும்பாதுகாக்கப்பட்ட மஃஸ{ம்நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வ ஸல்லம் அவர்கள் அனுதினமும் இறைவனிடத்தில்தவ்பா செய்தார்கள். கடும்குற்றங்களை புரிந்து விட்டு வந்தோரையும்கூட அன்பால்அணைத்து, அரவணைத்து, இறைவனிடம்மன்னிப்பு கோரச்செய்து, பாதுகாத்தார்கள். (பக்கம்211-212) இறைவனால்நேசிக்கப்பட்ட மஹ்பூப்நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வ ஸல்லம்அவர்கள்  மானுடத்திற்கே ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தார்கள். இறைவனை வணங்கிய பெருமானானர், நெஞ்சுருக இறையை தியானிக்கவும் செய்தார்கள். எளியோருக்கு வாரி வழங்கிய நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வ ஸல்லம் )அவர்கள்எல்லோரையும்அன்பால்அரவணைத்து, அவர்களுக்காக தொண்டாற்றி, அவர்களை மனிதருள்புனிதர்களாக பரிணாமம்அடையச்  செய்தார்கள். நூர் முஹம்மது ஸல்லல்லாஹ{ அலைஹி வ ஸல்லம்) அவர்கள், பேரொளியான இறைவனின்பால் நம்மை சேர்க்கும்ஒளியாவார்கள். அவர்களின்ஒளிர் மிகு உன்னத வாழ்க்கையினை படித்த நல்லடியார்கள், அதனைக்கொண்டே பேரொளியான அல்லாஹ்வின்  அன்பையும், அரவணைப்பையும், அடையப்பெற்றார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹ{ அலைஹி வ ஸல்லம்அவர்கள், வெளிரங்கமான மனித வாழ்வை விட்டுப்பிரிந்தாலும்;நம் மேலான அடைக்கலமான அல்லாஹ்நமக்கு மிக அருகிலேயே இருந்து கண்காணிக்கக் கூடியவன்என்ற அடிப்படை உண்மையை உணர்த்தியே சென்றுள்ளார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன்  கிடையாது என்றும், முஹம்மது ஸல்லல்லாஹ{ அலைஹி வ ஸல்லம்அவர்கள்அவனது திருத்தூதர் என்றும்உணர்ந்து, அவர்களை எந்நிலையிலும்அன்பு கொள்ளவும், சக மனிதர்கள்  மீ தும், எல்லா படைப்பினங்கள்மீ தும்அன்பு செலுத்தவும்நாம்கற்றுக்கொள்ளவேண்டும். (பக்கம்- 216)

4

சமயத்தொடர்பான மீட்சித்தன்மை:படைத்த நாயனுடன்ஆழமான தொடர்பு மூலம்
தன்அருமைத்தோழர்கள்தங்களின்இதயங்களில்காரணமற்ற குற்ற உணர்வை வைத்துக்கொள்வதை திருத்தூதர் ஸல்லல்லாஹ{ அலைஹி வ ஸல்லம் அவர்கள்  வெறுத்தார்கள். மேலும், தம்தோழர்களுக்கு, நீ ங்கள்அன்பும்அருளும்நிறைந்த ஒருவனாகிய ஏக வல்ல நாயனுடன்தொடர்ந்து உரையாடுவதை விட்டுவிடவேண்டாம். அவனே, தன் பாவத்தை உணர்ந்து வருந்தி தன்னிடம்வருவோரை தன்கருணையால்அரவணைப்பவன்என்று உணர்த்தி வந்தார்கள். இது தான்பாவத்தில்தவறாக விழுந்து, பின்திருந்தி, இறைவன்பால்திரும்பி, பாவமன்னிப்பு கோரும்தவ்பாவின்உண்மை தத்துவம். உண்மையிலேயே இறைவன்இந்த மன மாற்றத்தை ஏற்றுக்கொண்டு மன்னித்து பரிசுத்தப்படுத்துகிறான். பெருமானாரும்இதனை பல சந்தர்ப்பங்களில்விளக்கியுள்ளார்கள். (பக்கம் 113) ஒரு முறை பெருமானார் ஸல்லல்லாஹ{ அலைஹிவஸல்லம்அவர்கள்தாயிஃப்எனும்  நகருக்கு சென்று அங்குள்ள

தகீஃப்

கோத்திர தலைவர்களை இஸ்லாத்தின்பால்  அழைத்தார்கள். அவர்கள்இஸ்லாத்தை ஏற்று, எதிரிகளிடமிருந்து முஸ்லிம்களை பாதுகாக்க உதவி புரிவார்கள்என்ற நம்பிக்கை பெருமானாருக்கு இருந்தது. ஆனால்தாயிஃப்வாசிகளோ, பெருமானாரின்நபித்துவத்தை பரிகாசம்செய்து, பல்வேறு இன்னல்களை அன்னவர்களுக்கு கொடுத்தார்கள். தனி நபராக, சக அரபு மக்களிடமிருந்தே பாதுகாப்பு கிடைக்காத பெருமானார்;  இறைவனை நோக்கி:

இறiவா! உன்னிடமே என்இயலாமையையும், வசதிகளற்ற நிலையையும், மனிதர்கள்முன்னிலையில் என் பலகீனத்தையும்முறையிடுகிறேன். கருணையாளர்களுக்கெல்லாம்  கருணையாளனே! நீயே பலகீ னர்களின்நாயன். நீ யே எனது இறைவன். இறைவனே! என்னை யார் கரத்தில்ஒப்படைக்கப்போகிறாய்? என்னை வேதனைப்படுத்தவும்  தயங்காத புதியவர்கள்கரத்திலா? அல்லது உன்எதிரிகளிடத்திலா? இறைவா! என்மீ து நீ  கோபம்கொள்ளாதிருக்கும்காலமெல்லாம்எனக்கு எந்த கவலையும்இல்லை. உன்னுடைய உதவி பிரகாசமான வழியை இன்னும்திறக்காத இச்சூழலில், ஈருலகத்தின்இருளையும்  விலக்குகின்ற உன்ஒளிமயமான அருள்முகத்தில்தஞ்சம்அடைகிறேன். உன்சோதனை என்மீ து சூழாதிருப்பதற்காக. இருந்த போதிலும், திருப்திப்படாத நிலையில்என்னை கண்டிப்பது உனது உரிமை. உன்னையன்றி சக்திபடைத்தவன்வேறு எவரும்இல்லை நாயனே!

(பக்கம்68-69)பெருமானார் ஸல்லல்லாஹ{ அலைஹிவஸல்லம்) அவர்கள்சதாவும்;தன்னைச்  சார்ந்தவர்கள், சூழ இருந்தவர்கள்விஷயத்தில்கவனம்உடையவர்களாகவே இருந்து வந்தார்கள். அவர்களது அருமைத்தோழர்களும்,  அருமை மனைவியரும் பெருமானாரை

Prepared By the office Of the Mufti
Islamic Religious Council of Singapore (MUIS)
Tamil translation by:
Imam Nahvi MahlariMasjid Abdul Gafoor
 Typesetting by:
Imam Umer Riluvanullah Jamali &Ms. Nilofur NisaMasjid Abdul Gafoor






by rosgaz

1 comment:

Indian Sri Lanka Tamil Newspaper said...

மிகவும் உபயோகமான பதிவு.
தகவலுக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails