Showing posts with label நபிகள் நாயகத்தின் வாழ்வு. Show all posts
Showing posts with label நபிகள் நாயகத்தின் வாழ்வு. Show all posts
Monday, January 14, 2013
நபிகள் நாயகத்தின் வாழ்வு ஒரு பார்வை -Reflection on The Prophet's Life
நபிகள் நாயகத்தின் வாழ்வு ஒரு பார்வை -Reflection on The Prophet's Lifeபெருமானாரின்அடிச்சுவடுகள்
தாரிக் ரமழான் அவர்களின் நூலிலிருந்து)
(மனிதர்களே!) உங்களிலிருந்தே ஒரு ரஸ{ல்உங்களிடம்திட்டமாக வந்து விட்டார்: நீங்கள்வருத்தப்படுவது அவருக்கு கஷ்டமாயிருக்கும். (நீங்கள்நேர்வழி பெற்று நன்மையடைய வேண்டுமென்று) உங்களின்மீது பேராசை கொண்டவர். (அன்றியும்) முஃமின்களின்மீது அன்பும், கிருபையும்உள்ளவர். (சூரா தவ்பா: 128)
கண்மணி நாயகம்முஹம்மது ஸல்லல்லாஹ{ அலைஹிவஸல்லம்) அவர்களின் உயரிய வாழ்வு, எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் வாழ்ந்த, வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு ஒளிமயமான வழிகாட்டியாகவும், சக்தி வாய்ந்த படிப்பினைகள்நிறைந்ததாகவும்உள்ளது. அருமை நாயகம்ஸல்லல்லாஹ{ அலைஹிவஸல்லம் அவர்கள், ஒவ்வொரு மனிதனும்தன்னைப் படைத்த இறைவனுடனும், தன்சக மனிதர்களுடனும், தன்னைச்சுற்றியுள்ள பிரபஞ்சத்துடனும் கொள்ள வேண்டிய உண்மையான, உறுதியான உறவுகளைப்பற்றி தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். நம்உயிரினும்இனிய உத்தம நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹிவஸல்லம் ) அவர்களின் சிறப்பான பிறந்த நாளை, இந்த மங்களகரமான ரபீவுல்அவ்வல்மாதம்12-ம் தினம,; மகிழ்வுடன்கொண்டாடும் நாம், அவர்களின் ஒளிமயமான வாழ்வையும், மரியாதைக்குரிய நடைமுறைகளையும் நம்வாழ்விலும் பிரதிபலிக்கவும், அவர்களின் அழகிய அடிச்சுவட்டை பின்பற்றி, மார்க்கப்பற்றும், சமுதாய நல்லிணக்கமும்கொண்ட, எல்லோருக்கும்பிரயோஜனமான நல்ல முஸ்லிம்களாக திகழ முயற்சிப்போமாக!
Subscribe to:
Posts (Atom)

