Thursday, January 28, 2016

ஜுமுஆ தினத்தில்... சில சந்தேகங்கள்!


ஜுமுஆ தினத்தில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் சொல்லப்படும் அதானுக்கு பதில் கூறி துஆ செய்யாமல் 2 ரகாஅத் தொழக்கூடாதா?

ஜுமுஆ தினத்தில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் சொல்லப்படும் அதானுக்கு பதில் கூறி துஆ செய்யாமல் 2 ரக்அத் தொழுவதற்கு தடை ஏதும் இல்லை.

அதேபோல அதானுக்கு பதில் கூறி விட்டு துஆவும் செய்து விட்டு 2 ரக்அத் தொழுவதற்கும் தடை ஏதும் இல்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த இரண்டிற்குமே தடை விதிக்காததால், தொழக் கூடாது என்று தடை விதிக்க எவருக்கும் அதிகாரம் கிடையாது. தடை ஏதும் இல்லை என்றாலும் மேற்கண்ட இரண்டில் சிறந்தது எது என்பதை கவனிப்போம்.

பள்ளியில் நுழைந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்?

நோய் விசாரணை

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர்-


இஸ்லாத்தைப் பொருத்தவரை அதிகமான நல்ல விடயங்களை மக்களுக்கு வழிக்காட்டி உள்ளன. அவைகள் அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உற்ச்சாகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் ஒரு மனிதன் நோயாளியாக மாறிவிட்டால் அவனை நோய் விசாரணை செய்ய வேண்டும். அதன் மூலம் நோயாளிக்கு மன ஆறுதலாகவும், நோய் விசாரித்தவருக்கு நன்மையாகவும் அமைந்து விடுகிறது.

நோயும் மனிதனும்
இறைவன் ஒரு மனிதனுக்கு நோயை கொடுக்கிறான் என்றால் ஒன்று அவனது பாவங்கள் மன்னிக்கப் படுவற்காக இருக்கும். இல்லாவிட்டால், அவனை தண்டிப்பதற்காக இருக்கும். நோய் என்பது ஒரு சோதனையாகும். இந்த உலகில் படைக்கப்பட்ட எந்த மனிதரும் சோதிக்கப்படாமல் மரணிப்பது கிடையாது. அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளை கொடுக்கிறான்.

Wednesday, January 27, 2016

அறிவோம் இஸ்லாம்

பாத்திமா மைந்தன

இறைவனின் திருப்பெயர்கள்

அல்லாஹ் என்பது 'அல் இலாஹ்' என்பதாகும். 'இலாஹ்' என்ற பொதுப்பெயருடன் 'அல்' என்ற குறிப்புப் பெயரும் சேர்ந்ததே 'அல்லாஹ்' என்பதாகும்.
அதாவது, 'வணக்கத்திற்குரிய தகுதியான ஒரே இறைவன்' என்பது அதன் பொருள்.
'அல்லாஹ்' என்ற சொல் ஆண், பெண் போன்ற எந்த பாலினத்தையும் குறிக்காது.
பாரசீக மொழியில் 'குதா', இந்தியில் 'தேவ்தா', ஆங்கிலத்தில் 'காட்', தமிழில் 'இறைவன்', 'கடவுள்' என்னும் சொற்களின் பொருளும் பெருமளவு இதற்குப் பொருத்தமாக இருப்பதைப் பார்க்கலாம்.


'அல்லாஹ்' என்ற சொல்லின் மாபெரும் சிறப்பு, அச்சொல்லில் இருந்து இடது பக்கமாக ஒவ்வொரு எழுத்தாக நீக்கினால் எஞ்சி இருக்கும் சொல், அல்லாஹ் என்ற அர்த்தத்தையே தரும்.

Thursday, January 21, 2016

'இஸ்லாம் சில வரிகளில்'

என் அலுவலகம் அமைந்துள்ள பாண்டிச்சேரி, லாஸ்பேட்டை பகுதியின் மிகப் பெரிய பள்ளிவாசல் என்றால் அது இந்த 'நூரே ஹிதாயத்துல் இஸ்லாமியா' பள்ளிவாசல் தான். மிக ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு பெயர் பெற்றது இந்த பள்ளி. 'இஸ்லாம் சில வரிகளில்' என்ற தலைப்பிலான சிறு நூல் பிறசமய மக்களுக்கு இலவசமாக இங்கிருந்து விநியோகிக்கப்படுகின்றது. இதுவரை குறைந்தபட்சம் 50,000 பிரதிகளாவது இப்புத்தகம் அச்சிடப்பட்டிருக்கும்.
அப்படியான நூலில், எதிர்க்குரல் தளத்தின் முகவரியை, பிரதான பக்கத்தில் அச்சிட போவதாக சம்பந்தப்பட்டவர்கள் கூறிய போது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக. அவர்கள் கூறியப்படியே அச்சிடப்பட்டு வெளிவந்தது. இந்த சம்பவம் நடந்து நான்கு-ஐந்து வருடங்கள் இருக்கும்.

Monday, January 18, 2016

எல்லாமே உண்டு....!

எல்லாமே உண்டு....!
அறியாமையை வென்றுவிட
பகுத்தறிவு உண்டு
வறுமையை வென்றுவிட
திறமை உண்டு
பகைமையை வென்றுவிட
வீரம் உண்டு

Saturday, January 16, 2016

சமூக சேவை இறை நம்பிக்கையின் ஓர் அம்சம்

சமூக சேவை இறை நம்பிக்கையின் ஓர் அம்சம்

    ஹாபிழ் அ. செய்யது அலி மஸ்லஹி, பாஜில்  

இறைவனை வணங்கி வாழ்வதுதான் இறை நம்பிக்கையின் அடையாளம் என்று மட்டும் நினைத்திட வேண்டாம். மக்களுக்கு சேவை செய்வதும் இறை நம்பிக்கையின் ஒரு அடையாளமாக அங்கீகரிக்கப்படுகிறது.

மக்களுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்யும் சேவையாக கருதப்படுகிறது. இறைவனுக்காக செய்யப்படும் தொண்டு மக்கள் தொண்டாக கருதமுடியாது.

இறைப்பணி, மக்கள் பணி ஆகிய இரண்டு பணிகளிலும் ஒருவர் ஈடுபடுவது ஈமானின் பணியாக உள்ளது.

“இறை நம்பிக்கைக்கு எழுபதுக்கும் அதிகமான கிளைகள் உண்டு. அவற்றில் சர்வசாதாரணமானது “நோவினை தரும் பொருட்களை நடைபாதையிலிருந்து அகற்றுவது;’ அவற்றில் உயர்வானது ‘லாயிலாஹா இல்லல்லாஹ்’ என்று கூறுவது’’ (அறிவிப்பாளர்: அபூஹ§ரைரா ரளியல்லாஹு அன்ஹு, திர்மிதி : 2614)

Wednesday, January 13, 2016

ஈர்ப்பை விதைப்போம்!

ஈர்ப்பை விதைப்போம்!

நான் தஞ்சை ஆற்றங்கரைப் பள்ளிவாசலில் இமாமாகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஒரு முறை இந்து நண்பர் ஒருவர் தன் வீட்டு விசேஷ நிகழ்ச்சி ஒன்றுக்கு என்னை அழைப்பதற்காக பள்ளிவாசலுக்கு வந்தார்.
கம்பீரமான காவல்துறை அதிகாரியான அவர் பள்ளியின் நுழைவாயிலுக்கு சில அடிகள் முன்பாகவே தயங்கி நின்ற விட்டார். நான் அவரை அன்போடு அழைத்து அவரின் தயக்கம் நீக்கி, கால்களைக் கழுவச் செய்து, பள்ளியினுள்ளே அழைத்துப் போனேன். தொழுகை முறையை சுருக்கமாக அவருக்குச் சொன்னேன்.
அதையெல்லாம் கவனத்தோடு காது தாழ்த்திக் கேட்டு முடித்து, பள்ளிவாசலைச் சுற்றித் தன் பார்வையை சுழலவிட்ட அந்த நண்பர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.
'ஏன் சார், நீங்கள் தொழுவதற்கு இங்கே எந்த அடையாளமும் (Symbol) இல்லையா?' அவரின் இந்தக் கேள்வி என்னை நொறுக்கிப் போட்டது என்ன கேட்ககிறீர்கள்?' என்றேன்.
'இல்லை. இந்துக்களாகிய நாங்கள் சிலைகளை வைத்து வணங்குகிறோம் கிறிஸ்தவர்கள் சிலுவை வைத்திருக்கிறார்கள். அப்படி மையமாக வைத்து வணங்க உங்களுக்கென்று எந்தக் குறியீட்டுப் பொருள் எதுவும் இங்கே காணவில்லையே? அதைத் தான் கேட்டேன்'.அவரது கேள்விக்கு நான் தந்த விளக்கத்தைப் பொறுமையோடு கேட்டுக் கொண்ட அவர்
'குறியீட்டுப் பொருள் எதுவுமின்றி இப்படி வெறுமையில் இறைவனை வழிபடுகிற உங்கள் வணக்கமுறை 'ரியலி கிரேட் சார்' என்ற அகமகிழ்ந்து பாராட்டினார்.இந்தப் பாராட்டு மொழிகளால் நான் ஒன்றும் குளிர்ந்து போகவில்லை. மாறாக 'எந்தக் குறியீட்டுப் பொருளும் இல்லையா?' என்ற அவரது கேள்வி தேள் கொடுக்காய் என்னைத் தீண்டிக் கொண்டிருந்தது.
அந்த நண்பருக்கு சுமார் நாற்பது வயதிருக்கலாம். முஸ்லிம்கள் தங்களின் வணக்கத்திற்கு எந்தக் குறியீட்டுச் சின்னங்களையும் வைத்துக் கொள்வதில்லை என்கிற மிகச் சாதாரண விஷயத்தை நாம் அவருக்குத் தெரிவிக்க நாற்பது ஆண்டுகள் ஆகியிருக்கிறதே என்கிற கசப்பான உண்மை என்னைக் கலங்கடித்தது.

வாருங்கள் கூடிப் பேசுவோமே !விவாதங்களில்
வெற்றி தோல்வி
நோக்கம் ஆக கூடாது
எனக்கும், உங்களுக்கும்
அருள் மறையை
மறந்தது தீமை
பிறர் குறையை
மறைப்பது நன்மை
ஈமான் பலமா இல்லையா
ஏடு கிடைக்கும் மறுமையில்

Sunday, January 10, 2016

அடுத்தோரின் நலன் மீது அக்கறை கொள்!

 ஹாபிழ் அ. செய்யது அலி மஸ்லஹி, பாஜில்  


இன்றைய நவநாகரீக உலகில் மனிதவள மேம்பாடு நலிந்து கொண்டே வருகிறது. பரந்துவிரிந்த மனித மனது குறுகிய வட்டத்துக்குள் கூன் விழுந்து ஊனமாகி கிடக்கிறது. பரந்த மனப்பான்மை சிறந்த மனிதனை உலகிற்கு அடையாளம் காட்டியது.

ஒரு காலத்தில் பரந்த மனப்பான்மை குடியிருந்த உள்ளத்திலிருந்து அது குடிபெயர்ந்து மாயமாக பறந்து மறைந்துவிட்டது. எங்கும் எதிலும் மனித மனம் தன்னலம், சுயநலம் எனும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

பிறர் நலம், பொது நலம் எனும் பார்வை மனித மனதிலிருந்து விரைவாக   கரைந்து கொண்டே இருக்கிறது.

Saturday, January 9, 2016

சற்றே மாறுதலான செய்திகளுடன்......

சற்றே மாறுதலான செய்திகளுடன்......
 
ஹாப்பி பெர்த் டே டு யூ என்று கோரஸாக பாடி பெர்த் டே கேக்கும் வெட்டி பச்சை தலைப்பா கட்டுன அஞ்சாறு அஸரத்மார்களும் சேர்ந்திருந்திருந்து வாட்ஸப்பில் காட்சிகளோடு, இதில் ஹாப்பி பர்த் டே டு யூ யா ரசூலுல்லாஹ் என்று பாடியதுதான் ஹைலைட், நடைபெற்ற இடம் இலங்கை.

சட்னியும் சாம்பாரும் கட்டியாக இல்லாமல் கூடுதல் தண்ணீர் போல் இருந்தால் அதுதான் டேஸ்ட்.

முறுவல் தோசை ருசியாக இருந்தாலும், காலையில் பணிக்கு புறப்படும் போது, சின்னதாய் போடும் வட்ட தோசைதான் சூப்பர்.

அவ்லியாமார்கள் அல்லாஹ்வின் அருள் பெற்றவர்கள்தான், அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதனால் அங்கே ஏற்றப்படும் கொடிக்கம்பத்தில் சந்தணம் தேய்த்தலும் கொத்து கொத்தாய் பூ கட்டுவதும் எதனாலோ?

Friday, January 8, 2016

ஒன்றுமில்லை .... ஏகனவன் உண்டு ....!

ஒன்றுமில்லை ....
ஏகனவன் உண்டு ....!

ஒன்றும் இல்லாததற்கு எல்லாம்
ஒருபாடு பாடுபட்டு ஓடாய் தேய் கிறோம்
முடிவில் மிஞ்சுவது ஒன்றுமே இல்லை

ஒன்றும் இல்லாததற்கு எல்லாம்
விறுதாய் கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டுகிறோம்
முடிவில் கூட்டு நிற்க யாருமே இல்லை

ஒன்றும் இல்லாததற்கு எல்லாம்
பயந்து படபடத்து ஓடி ஒழிக்கிறோம்
முடிவில் நிமிர்ந்து நின்று
ஒரு நோக்கு நோக்கியால்
அதனையும் வெறும் பீதி என்று உணர்கிறோம்

Thursday, January 7, 2016

மனிதனே மனிதனின் எதிரி

ஸூபித் துறவி ஷிப்லி, ஒரு காட்டுப் பகுதி வழியாக தன் சீடர்களுடன் நடைப் பயணம் மேற்கொண்டார். அப்போது ஒரு பாழடைந்த கிணற்றின் மதில் மேல் நின்று, ஒரு நாய் கிணற்றின் உள்ளே பார்த்து, பலமாக குறைத்துக் கொண்டிருந்தது.
நாயின் நடவடிக்கையை சற்று நேரம் உற்று கவனிக்கும்படி, தன் மாணவர்களுக்கு கட்டளை இட்டார் ஷிப்லி. இதில் ஏதோ ஒரு நல்ல படிப்பினை இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட மாணவர்களும், அந்த நாயின் செய்கைகளை உன்னிப்பாக கவனிக்க துவங்கினர்.
சற்று நேரம் சென்ற பின் தன் மாணவர்களிடம், அவர்கள் - நாயிடம் கண்ட செயல்களை விவரிக்கும்படி வேண்டினார்.

Wednesday, January 6, 2016

நெய்யாக உருகாதோ நெஞ்சம்.....(7)அல்லாஹ்வின் பேரன்பை
அடைந்திடவே விரும்புமவர்
எல்லார்க்கும்- குழந்தைகட்கும்
இதயத்தால் அன்புசெய்வார்!
வெற்றிவரும் வேளையிலும்
விருப்பமுடன் கஃபாவை
சுற்றிவரும் அவர்திருவாய்
சொல்வது”குர் ஆன்”வசனம்!

நெய்யாக உருகாதோ நெஞ்சம்.....(6)
அச்சமென ஒன்றறியார்
அல்லாஹ்வுக்(கு) எதிரென்றால்
துச்சமென ஊதிடுவார்
தூயதிரு துணிவுடையார்!
கல்சுமப்பார், மண்சுப்பார்
கடுந்துயரும் பொறுத்திடுவார்
அல்லாஹ்வின் புகழிசைப்பார்...
அனைவருக்கும் நலமுரைப்பார்!

Sunday, January 3, 2016

THIS TOO WILL PASS - இதுவும் கடந்து போகும்

THIS TOO WILL PASS
எந்த இன்பங்களும், எந்த துன்பங்களும் நீடித்து நிலைப்பதில்லை.
பெருகி வரும் காட்டாற்று வெள்ளமும்
கால மாறுதலில் வறண்டு விடும்.
மாற்றம் ஒன்று தான் நிலையானது,
என்றும் அழியாதது.
சோதனைகள்
என்ற
ஆற்றிலும்
வேதனைகள்
என்ற
சேற்றிலும்
மூழ்கி
திளைத்த
பின்னரே
சாதனை
என்ற
சுவாசக்
காற்றை
நுகர
முடிகிறது.

பரிபூரண அழகிய முன்மாதிரி

 மனிதர்களுக்கு வழிகாட்டியாக, முன்னுதாரணமாக எத்தனையோ பெரிய மனிதர்கள், மகான்கள் இருந்திருக்கிறார்கள். எப்படி வாழவேண்டும்  என்று தம் சொல்லாலும் செயலாலும் கற்றுக்கொடுத்துள்ளார்கள். அவர்கள் அத்தனை பேருமே போற்றுதலுக்குரியவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

சாக்ரடீஸை எடுத்துக்கொள்வோம். கிறிஸ்து பிறப்பதற்கு ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானி. அவரைப் பொய்யாகக் குற்றம் சாட்டி, சிறையிலடைத்து, விஷம் குடித்து உயிர் துறக்க வேண்டும் என்று தண்டனையும் அளித்தது அக்காலத்து அரசு. சாக்ரடீஸ் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் சிறைக்காவலர்களுக்கு அவருடைய சீடர்கள் லஞ்சம் கொடுத்து வைத்திருந்தனர். சிறையிலிருந்து அவர் தப்பிக்கவும் அவர் வழிசெய்தனர்.

Friday, January 1, 2016

மனம் - உடல் - ஆத்மா

மனம்
தன் சுய தேவைகளை
பூர்த்தி செய்யும்
நல்ல அடிமையாகவே,
உடலை
பயன் படுத்திக் கொள்கிறது.
வாழ்நாள் எல்லாம்
மனதின் அடிமையாக வாழ்ந்து
மனதின் ஆசைகளை சுமந்து திரிவதால்
உடல், தன் சுய கட்டுப் பாட்டை இழந்து
பாழ்பட்டு விடுகிறது.
நாளெல்லாம் ஓடி, ஓடி உழைத்த உடல்
தளர்ந்து விடுகிறது. மனதின் பிடியில் இருந்து விடுபட இயலாமல் மாய்ந்து மறைந்து விடுகிறது.

மனதின் சதியை உணர்ந்து கொள்ள இயலாத உடலை காப்பாற்ற முடியாமல் ......
ஆன்மா, குற்ற உணர்வால் கண்ணீர் விட்டு அழுகிறது. காலம் கடந்த ஆத்மாவின் அழுகையால்... சிதைந்து போன உடலுக்கு, என்ன லாபம்.

LinkWithin

Related Posts with Thumbnails