சற்றே மாறுதலான செய்திகளுடன்......
ஹாப்பி பெர்த் டே டு யூ என்று கோரஸாக பாடி பெர்த் டே கேக்கும் வெட்டி பச்சை தலைப்பா கட்டுன அஞ்சாறு அஸரத்மார்களும் சேர்ந்திருந்திருந்து வாட்ஸப்பில் காட்சிகளோடு, இதில் ஹாப்பி பர்த் டே டு யூ யா ரசூலுல்லாஹ் என்று பாடியதுதான் ஹைலைட், நடைபெற்ற இடம் இலங்கை.
சட்னியும் சாம்பாரும் கட்டியாக இல்லாமல் கூடுதல் தண்ணீர் போல் இருந்தால் அதுதான் டேஸ்ட்.
முறுவல் தோசை ருசியாக இருந்தாலும், காலையில் பணிக்கு புறப்படும் போது, சின்னதாய் போடும் வட்ட தோசைதான் சூப்பர்.
அவ்லியாமார்கள் அல்லாஹ்வின் அருள் பெற்றவர்கள்தான், அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதனால் அங்கே ஏற்றப்படும் கொடிக்கம்பத்தில் சந்தணம் தேய்த்தலும் கொத்து கொத்தாய் பூ கட்டுவதும் எதனாலோ?
அவ்லியாக்கள் அடங்கப்பட்ட கபுறின் தலைமாட்டில் பெரிய ஒரு சட்டியில் முதல் சோறு எடுத்து வைத்து நடு இரவில் அதை புண்ணிய தீர்த்தம் கொடுப்பது போல் எல்லோருக்கும் நுணுக்கி நுணுக்கி கொடுப்பது எதனால்?
சுன்னத் வல் ஜமாஅத்காரர்கள் இதையெல்லாம் கட்டாயம் செய்கிறவன் என்றால் நான் அதில் பட்டவன் இல்லை. இவைகளை எல்லாம் கூட சில நேரங்களில் சொல்லி வைக்கணும் போல் தோணுச்சு, அதனால்தான், வேறு எதுவுமில்லை !
Raheemullah Mohamed Vavar
No comments:
Post a Comment