Thursday, January 7, 2016

மனிதனே மனிதனின் எதிரி

ஸூபித் துறவி ஷிப்லி, ஒரு காட்டுப் பகுதி வழியாக தன் சீடர்களுடன் நடைப் பயணம் மேற்கொண்டார். அப்போது ஒரு பாழடைந்த கிணற்றின் மதில் மேல் நின்று, ஒரு நாய் கிணற்றின் உள்ளே பார்த்து, பலமாக குறைத்துக் கொண்டிருந்தது.
நாயின் நடவடிக்கையை சற்று நேரம் உற்று கவனிக்கும்படி, தன் மாணவர்களுக்கு கட்டளை இட்டார் ஷிப்லி. இதில் ஏதோ ஒரு நல்ல படிப்பினை இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட மாணவர்களும், அந்த நாயின் செய்கைகளை உன்னிப்பாக கவனிக்க துவங்கினர்.
சற்று நேரம் சென்ற பின் தன் மாணவர்களிடம், அவர்கள் - நாயிடம் கண்ட செயல்களை விவரிக்கும்படி வேண்டினார்.

நாயின் செயல் பாட்டை, வெகு அருகில் நின்று கூர்ந்து கவனித்த மாணவன் விளக்க மாக எடுத்துரைக்க துவங்கினான்.
பாழ் கிணராக இருந்தாலும்... கிணற்றினுள், நீர் கண்ணாடி போல் தெளிவாக இருக்கிறது. தன் பிம்பத்தை நீரில் பார்க்கும் நாய், அதை தன் உருவம் தான் என்பதை அறியாமல், தன் எதிரி என்று நினைத்து குரைக்கிறது. நீரில் தெரியும் உருவமும் குரைக்க, இது மேலும் உரக்க குரைக்கிறது. இது ஒரு தொடர் கதையாய் தொடர, முடிவில் தன் எதிரியை தாக்க, நாய் பாழும் கிணற்றில் குதித்து விடுகிறது. அங்கு தன் எதிரியை காணாமல் தண்ணீரில் மூழ்கி, வெளியேற முடியாமல் தத்தளிக்கிறது. நான் நாயை காப்பாற்றி கரை சேர்த்து விட்டேன்.
நிகழ்ந்த உரையாடலை கேட்ட இமாம் ஷிப்லி, தன் சிஷ்யர்களை பார்த்து பேசத் துவங்கினார். இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நீங்கள் உணரும் உண்மை என்ன?
"மனிதன் எப்போதும் தன்னையே, தன் எதிரியாக கருதிக்கொள்கிறான். தான் செய்யும் தவறுகளையே, பிற மனிதனும் செய்வான் என திடமாக நம்புகிறான். தான் - பிறர் கண்ணில் படாதவாறு மறைத்து வைத்திருக்கும் தவறுகளை, குற்ங்களைப் போன்றே, பிற மனிதனும் செயவான் என எதிர்பார்க்கிறான். அதனாலேயே, தன் குற்றங்களை மறைக்க, பிறர் மீது வீண் பழி சுமத்துகி றான். பிறர், தன் மீது சுமத்த இருக்கும் குற்றங்களையே மனிதன், பிற் மனிதன் மீது தயவு தாட்சன்யமின்றி சுமத்தி விட்டு, தப்பித்து விடுகிறான். அப்பாவிகள் சில நேரங்களில் பலிகடா ஆகி விடுகின்றனர்.
தன்னை பார்த்து எதிரி என்று நினைக்கும் நாயை விட மனிதன் கீழானவன்."
அதுஎப்படி....?
ஒரு மாணவன் விளக்கம் கேட்டான்.
ஷிப்லி தொடர்ந்தார்...
"தான் செய்த அல்லது செய்ய இருக்கின்ற மகா குற்றங்களை, தன்மீது சுமத்தாமல், பிறர் மீது சுமத்த எண்ணும் மனிதனை, எப்படி மேலானவன் என்று கருத முடியும்."
"பிற மனிதனே - மனிதனின் முகம் பார்க்கும் கண்ணாடி".
ஷிப்லி பேசப் பேச, மாணவர்கள் மெய் மறந்து போயினர். மெஞ்ஞான ரசத்தில் மூழ்கி திளைத்தனர். அந்த ஞானம் தந்த மயக்கத்தில் இருந்து விடுபட சிஷ்யர்களுக்கு வெகு நேரமாயிற்று.

Vavar F Habibullah

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails