மனம்
தன் சுய தேவைகளை
பூர்த்தி செய்யும்
நல்ல அடிமையாகவே,
உடலை
பயன் படுத்திக் கொள்கிறது.
வாழ்நாள் எல்லாம்
மனதின் அடிமையாக வாழ்ந்து
மனதின் ஆசைகளை சுமந்து திரிவதால்
உடல், தன் சுய கட்டுப் பாட்டை இழந்து
பாழ்பட்டு விடுகிறது.
நாளெல்லாம் ஓடி, ஓடி உழைத்த உடல்
தளர்ந்து விடுகிறது. மனதின் பிடியில் இருந்து விடுபட இயலாமல் மாய்ந்து மறைந்து விடுகிறது.
மனதின் சதியை உணர்ந்து கொள்ள இயலாத உடலை காப்பாற்ற முடியாமல் ......
ஆன்மா, குற்ற உணர்வால் கண்ணீர் விட்டு அழுகிறது. காலம் கடந்த ஆத்மாவின் அழுகையால்... சிதைந்து போன உடலுக்கு, என்ன லாபம்.
மனிதன்
மனதால் வாழ்கிறான்
உடலால் வாழ்கிறான்.
இனியாகிலும்
வரும் காலங்களில், தன்
ஆத்மாவுக்காக,
அதன் தூய்மைக்காக,
சற்று வாழ்ந்து பழகட்டும்.
மனம், உடல் தவிர்த்து...
ஆத்மா மகிழ்ச்சியுற
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
LET THE SOUL CONTROL
THE BODY AND MIND.
WHEN THE SOUL CONTROL
EVERYTHING, THERE IS NO
HAPPINESS OR UNHAPPINESS
IN THIS WORLD.
Vavar F Habibullah
No comments:
Post a Comment