Thursday, February 28, 2013

அந்தப் பழைய காலுறை!


 அவர் அறிஞர். செல்வந்தரும் கூட. தனக்கு மரணம் நெருங்குவதாக உணர்ந்தார்.
தன் மகனை அருகழைத்தார்
மரண சாசனம் போல ஒன்றைச் சொன்னார்: "என் அருமை மகனே, விரைவில் நான்
உங்களையெல்லாம் விட்டுப் பிரிந்துவிடுவேன். என்னுடலைக் குளிப்பாட்டி
சடலத்துணி (கஃபன்) சுற்றுவீர்கள். அப்போது என்னுடைய ஒரேயொரு வேண்டுகோளை
நிறைவேற்றுவாயா?"

மகன் கேட்டான் : "என்ன, சொல்லுங்கள்?"

அறிஞர் கூறினார் : "என் சடலம் அதற்குரிய துணியால் சுற்றப்பட்டதும்,
என்னுடைய காலுறைகளில் ஒன்றை என் கால்களில் அணிவித்துவிடு. இதுதான் என்
எளிய கோரிக்கை"

என்ன இது விசித்திரம் என்று நினைத்தாலும் எளிய கோரிக்கை தானே என்று
மகனும் ஒப்புக்கொண்டான்.

Tuesday, February 26, 2013

நானும் கொஞ்சம்... சொல்ல ஆசைப் படுகிறேன்.

பேராசிரியர் காதர் மைதீன் அவர்களை பற்றிய ஒரு படமும் செய்தியும் சில நாட்களாக முக நூலில் பட்டய கிளப்பிக் கொண்டிருக்கிறது.. சந்தோசத்துக்குரிய செய்தி அது.. நானும் கொஞ்சம்... சொல்ல ஆசைப் படுகிறேன்.

அவரோடு 2004ல் தான் எனக்கு முதல் சந்திப்பு நிகழ்ந்தது. மயிலாடுதுறையில் நடந்த இலக்கிய மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்தார். உணவு இடைவேளையில் சற்று ஓய்வாக இருந்தவரை சுற்றிலும் கட்சி பெரியவர்கள். சற்றே தயங்கித் தயங்கி அவர் அருகில் சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டு நமது முற்றம் இதழுக்காக ஒரு பேட்டி தர முடியுமா என்று கேட்டேன்..சில இதழ்களையும் கொடுத்தேன். பார்த்துவிட்டு, ஒப்புக் கொண்டார். எவ்வளவு பெரிய தலைவர்..உடனே ஒப்புக் கொண்டாரே என்று எனக்கு சந்தோசம் பிடிபடவில்லை . எனக்கு உதவியாக இருந்தவர் அன்புத் தம்பி அப்துல் அஜீஸ் தாயிப் .அவர்தான் போட்டோவெல்லாம் எடுத்தார். அரை மணி நேரம் அவரது ஓய்வைக் கெடுத்த புண்ணியத்தை நான் கட்டிக் கொண்டேன். அதன் பிறகு எங்கள் தொடர்பும் நட்பும் வளர்ந்தது.அடிக்கடி சந்தித்தோம். தலைவரை பலமுறை பேட்டி எடுத்து நமது முற்றத்தில் போட்டிருக்கிறேன். அதன் பிறகு பேராசிரியரை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பேச முடிந்தது. சில சமயங்களில் நாடாளுமன்ற கூட்டத்தில் இருப்பார். அப்போது நான் போன் செய்தால் எடுக்க மாட்டார். ஆனால் வெளியே வந்தவுடன் போன் செய்து விவரம் கேட்பார். அத்தனை பணிவு. 2007ல் சென்னையில் ஒரு மாநாடு. தலைவர் மேடையில் அமராமல் கீழே முன் வரிசையில் உட்கார்ந்து அமைச்சர் மற்றும் பிரமுகர்களோடு பேசிக் கொண்டிருந்தார். நான் நிகழ்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்தேன். என்னைக் கண்டதும் உடனே எழுந்து வந்த தலைவர் என் தோளில் உரிமையோடு கை போட்டு " அபு ஹாஷிமா .. நல்லா இருக்கீங்களா?" என்று கேட்டு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார் ....அவரை பேச அழைக்கும் வரை. "ஒரு சாதாரண மனிதனுக்கு ஒரு தலைவர் இப்படியும் மரியாதை கொடுப்பாரா?"

Sunday, February 24, 2013

தவ்பாவின்(மனவருந்தி மன்னிப்பு தேடுதல்) சிறப்பு.

                                               தவ்பாவின் சிறப்பு.
எழுதியவர்/பதிந்தவர்/உரை ஜாஃபர் அலி
தவ்பா (பாவ மீட்சி)

1746. உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவு கூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 7405 அபூஹுரைரா (ரலி).

1747. ஒரு மனிதன் (பயணத்தினிடையே) ஓய்வெடுக்க ஓரிடத்தில் இறங்கினான். அந்த இடத்தில் அவனுக்கு (உணவோ தண்ணீரோ கிடைக்காது என்பதால்) ஆபத்து (காத்து) இருந்தது. அவனுடைய உணவும் பானமும் வைக்கப்பட்டிருந்த அவனுடைய வாகனப் பிராணியும் அவனுடன் இருந்தது. அப்போது அவன் தலையைக் கீழேவைத்து ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கி எழுந்தான். அப்போது அவனுடைய வாகனப் பிராணி (தப்பி ஒடிப்) போயிருந்தது. (எனவே அவன் அதைத் தேடிப் புறப்பட்டான்.) அப்போது அவனுக்குக் ‘கடுமையான வெப்பமும் தாகமும்’ அல்லது ‘அல்லாஹ் நாடிய (கஷ்டம்) ஒன்று’ ஏற்பட்டது. அவன், ‘நான் முன்பிருந்த அதே இடத்திற்குத் திரும்பிச் செல்கிறேன்” என்று கூறியவாறு (அங்கு) திரும்பிச் சென்றான். பிறகு ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கினான். பிறகு தன் தலையை உயர்த்தினான். அப்போது தப்பிப்போன தன்னுடைய பிராணி தன்னருகில் இருப்பதைக் கண்டான். (இப்போது அவன் எந்த அளவுக்கு மகிழ்வான்!) அந்த மனிதன் மகிழ்ச்சி அடைவதைவிடத் தன் அடியான் தவ்பா – பாவமன்னிப்புக் கோரித் தன்னிடம் திரும்புவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :6308 இப்னு மஸ்ஊத் (ரலி).

1748. உங்களில் ஒருவர் வறண்ட பாலைநிலத்தில் தொலைத்துவிட்ட தன்னுடைய ஒட்டகத்தை (எதிர்பாராதவிதமாக)க் கண்டுபிடிக்கும்போது, அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிடத் தன் அடியான் தவ்பா – பாவமன்னிப்புப் கோரி தன்னிடம் திரும்புவதில் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :6309 அனஸ் (ரலி).
Source : http://www.islamkalvi.com/

Thursday, February 21, 2013

எனக்கு இன்று மின்னஞ்சலில் வந்த தகவல்

இது நடக்காது என்றாலும் என் கருத்தைப் பதிகிறேன்.

இஸ்லாமியர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால்

இஸ்லாமியர்கள் இடையே அமைப்புகள் தோன்றக் கூடாது என்றால்

முதலில் செய்ய வேண்டியது எல்லா அரசியல் அமைப்புகளையும் கலைத்து விட்டு

எல்லோரும் பாக ஆகி விட வேண்டும்

Sunday, February 10, 2013

"இதுதான் என் MOTTO...குறிக்கோள்.."படித்ததில் பிடித்தது

"இது வம்பும்  இல்லை அம்பும் இல்லை நம்பரே... உன்னைப்போன்று இளைஞ்சனுக்கு என்னைப்போன்ற கிழவனின் அன்பு வேண்டுகோள் எல்லோரும் படிக்கவேண்டுமென்று எதையாவது எழுதுபவன் நான் அல்ல! இது ஒன்றும் ரூ.100 கோடி செலவுசெய்து உருவாக்கிய வலைத்தளம் அல்ல! பிளாக்கரின் ஓசி பிளாக்...எழுதித்தான் நான்  பிழைப்பவனும் அல்ல!   இதை யாரும் பிளாக் செய்தாலும்  யாரும் படிக்காமல் போனாலும் என் வீடு ஒன்றும் என்னை விட்டுப்போகாது நானும் தமிழ்நாட்டை விட்டுப் போகமாட்டேன் ...... ...பரிதி.முத்துராசன்...என் உணர்வுகளின் பிரதிபலிப்புகள்!....இதுதான் என் MOTTO...குறிக்கோள்இது சினிமா மாயையில் மயங்கியவரிகளுக்கு என் விழிப்புணர்வு பதிவு ..."
 Senator Joe Manchin: "Never before have we seen our babies slaughtered. It's never happened in America that I can recall, seeing this carnage"

முழு கட்டுரை இங்கே கிளிக்  செய்யுங்கள் 

சில சினிமாக்களும் கலைவிபச்சாரமும்

Tuesday, February 5, 2013

பெண்கல்வி..!


இறைவன் முதலில் படைத்தது எழுதுகோல்..
கல்வியின் பெருமையைக் கூறும் அளவுகோல்..

நமை கற்கத் தூண்டும் தூண்டுகோல்..
கல்வியே ஞானத்தின் திறவுகோல்..

சாதிக்க பிறந்த பெண்ணே!
அந்த சாதனைக்கு தேவை கல்வி தானே!

மூலையில் முடங்கிடாதே பெண்ணே!
மூளையாய் செயல்பட தேவை கல்வி தானே!

அறிவெனும் ஒளியை மிளிரச் செய் பெண்ணே!
அறியாமை இருளை அகற்றிவிடு பெண்ணே!

புறஅழகை மட்டும் மெருகேற்றாதே பெண்ணே!
அகஅழகை கல்வியினால் மெருகேற்றிடு பெண்ணே!

பார்வையை தாழ்த்தி நடந்திடு பெண்ணே!
கல்வியினால் தன்னம்பிக்கையை நிமிரச்செய் பெண்ணே!

Saturday, February 2, 2013

முஸ்லிம் கூட்டமைப்பினர், சினிமாக்காரர்களின் பின்னால் அலைவது தீர்வாகுமா?- ஆளூர் ஷாநவாஸ்

  கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம், முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருப்பதால் உருவான சர்ச்சையும், கொந்தளிப்பும் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் அறிக்கைகள், செய்தியாளர் சந்திப்புகள், கமலுடன் நேரடி உரையாடல்கள் என முடுக்கிவிடப்பட்டிருந்த எதிர்ப்பியக்கம் தீவிரத் தன்மை பெற்றுள்ளது.

'துப்பாக்கி' திரைப்படம் வெளியான உடன் இதுபோன்ற சர்ச்சைகளும், எதிர்க்குரல்களும் ஓங்கி ஒலித்ததன் விளைவாக, அப்படக்குழுவினர் முஸ்லிம் கூட்டமைப்பினரைச் சந்தித்து சமரசப்பேச்சுக்கு முன்வந்ததோடு, மன்னிப்பும் கேட்டனர். ‘இனி இதுபோன்ற தவறான சித்தரிப்புகளுடன் படம் எடுக்க மாட்டோம்’ என உறுதியும் அளித்தனர். அந்த வெற்றிதந்த உற்சாகமே, தற்போது விஸ்வரூபத்துக்கு எதிராக முஸ்லிம் கூட்டமைப்பைத் திருப்பியுள்ளது.

கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் அண்மையில் நடிகர் கமல்ஹாசனை இருமுறை சந்தித்துள்ளனர். விஸ்வரூபம் வெளியிடப்படும் முன் தங்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட வேண்டும் என்று கூட்டமைப்பினர் முன்வைத்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு, படம் வெளியாவதற்கு ஐந்து நாள்களுக்கு முன்பாக திரையிட்டுக் காட்டுகிறேன் என உறுதியளித்தார் கமல். அதன்படி கடந்த 21-01-2013 அன்று மாலை படத்தைப்போட்டுக் காட்டினார். படம் பார்த்த முஸ்லிம் பிரதிநிதிகளுக்குப் பேரதிர்ச்சி ஏற்படும் அளவுக்கு அதன் காட்சி அமைப்பு இருந்தது. உடனே களமிறங்கிய கூட்டமைப்பினர் விஸ்வரூபத்தைத் தடைசெய்ய வேண்டும் என முழங்கினர். சட்டம் ஒழுங்கிற்கும், சமூக அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் விஸ்வரூபம் இருப்பதால் தமிழகத்தில் அப்படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை ஒட்டி பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.

திரைப்படங்களில் முஸ்லிம்களை இழிவாகச் சித்தரிக்கும் போக்குக்கு எதிராக முஸ்லிம்கள் தரப்பிலிருந்து செய்யப்படும் இவ்வாறான எதிர்வினைகள் வரவேற்கத்தக்கதே என்றாலும், பிரச்சனையின் வேரைக் கண்டறிந்து தீர்வைக் காண்பதற்கு யாருமே முயலவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.

தமிழ் சினிமாவில் முஸ்லிம்களைத் தவறாகச் சித்தரிப்பது என்பது நீண்டகாலமாகத் தொடரும் ஒரு நோய் ஆகும். அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒன்று, சர்வதேச அளவில் முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்கா போன்ற நாடுகளால் செய்யப்படும் பரப்புரைகள். இன்னொன்று, முஸ்லிம்கள் குறித்த சரியான புரிதலின்மை. ஊடகங்கள் எதை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றனவோ, அதையே உண்மையென நம்பும் பொதுப்புத்தியும் இத்தகைய நிலைக்கு மற்றுமோர் காரணமாகும்.

ஒருமுறை விஜயகாந்தைச் சந்தித்து விரிவான உரையாடலை நிகழ்த்தும் வாய்ப்பு கிடைத்தபோது, ’உங்கள் படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே காட்டுவது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர் ஒரு நொடி கூட தாமதிக்காமல், ‘பேப்பர்ல அப்படித்தானே வருது’ என்று பதில் கூறினார். எங்களுக்கு விஜயகாந்தின் மீது கோபம் வருவதற்கு பதிலாக சிரிப்புதான் வந்தது.

இதுதான் மணிரத்னம், கமல் போன்றவர்களுக்கும் விஜயகாந்துக்கும் இடையேயான வேறுபாடு.

மணிரத்னம், கமல் போன்றவர்கள் அமெரிக்காவைப் போலவே முஸ்லிம்களுக்கு எதிரான பரப்புரைகளைத் திட்டமிட்டு செய்பவர்கள். விஜயகாந்த் ஊடகங்களில் வரும் செய்திகளை நம்பி அதன் அடிப்படையில் செயல்படுபவர். இதில் விஜயகாந்தைச் சந்தித்துப் பேசுவதன் மூலமும், முஸ்லிம்கள் பற்றிய உண்மை நிலையை அவருக்கு எடுத்துரைப்பதன் மூலமும் நிலைமையை சரிசெய்து விடமுடியும். ஆனால், மணிரத்னத்தையும், கமலையும் அவ்வாறு செய்ய முடியாது. எதிர்ப்புகளுக்கு அஞ்சி நேரடியான காட்சிகளை வைப்பதிலிருந்து அவர்கள் பின்வாங்கினாலும், ஏதோ ஒரு வகையில் முஸ்லிம் வெறுப்பை அவர்கள் ஊடகத்தின் வழியே விதைத்துக் கொண்டேதான் இருப்பர். அவர்கள் போன்ற சிந்தனை உடையவர்கள் பல நூறுபேர் சினிமாவில் உள்ளனர். ஒவ்வொருவருக்கு எதிராகவும் முஸ்லிம்கள் கொடி தூக்கிக் கொண்டே இருக்கவும் முடியாது.

அப்படியெனில் என்னதான் செய்வது? இதற்கு என்னதான் தீர்வு?

ஒரே தீர்வுதான். அது, ஊடகங்களை முஸ்லிம்களும் கையாள்வது. செய்திகளைப் படிக்கும் இடத்திலும், பார்க்கும் இடத்திலும் இருக்கின்றவரை இந்தப் பிரச்சனை தொடரவே செய்யும். செய்திகளை உருவாக்கும் இடத்தை நோக்கி முஸ்லிம்கள் நகரும் போதுதான் உண்மையான தீர்வு கிடைக்கும்.

செய்திகளை உருவாக்கும் இடமெனில் அது வானொலி, பத்திரிகை, தொலைக்காட்சி, இணையம் மட்டுமல்ல, இவை எல்லாவற்றையும்விட வலிமையான செய்தி ஊடகமாக சினிமாவே உள்ளது. பலரும் சினிமாவை ஒரு கலை ஊடகமாகவே பார்க்கின்றனர். ஆனால், கலையின் வழியாக மிகப்பெரும் செய்திகளை பார்வையாளருக்கு சினிமா சென்று சேர்ப்பதை உணர மறுக்கின்றனர். நேரடியான செய்தி சேனலைப் பார்க்க ஆர்வமில்லாத இளைஞர்கள், சினிமாவை தீவிரமாக பார்க்கிறார்கள் என்றால், சினிமா எல்லாவற்றையும் விட பலமிக்கது என்றுதானே பொருள்.

மோர்/ நீர்மோர் (Buttermilk): தயிரை விடச் சிறந்தது மோர்.

மோர்/ நீர்மோர் (Buttermilk):

தயிரை விடச் சிறந்தது மோர். மோர் ஆகக் கடைந்து குடியுங்கள் சளி பிடிக்காது. மோர் சிறந்த பிணிநீக்கி.

எத்தனைதான் கலர்க்கலரான குளிர்பானங்கள் மார்கெட்டில் வந்தாலும், இரசாயனம், செயற்கை சுவை மற்றும் நிறம் (Artificial flavour, Artificial colour) கலக்காத இந்த நீர்மோருக்கு அவையெல்லாம் இணையாகுமா? வெண்ணெய்ச்சத்து சிலுப்பி நீக்கப்பட்ட இந்த நீர்மோர் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், ஜீரண சக்தியை அதிகரிக்கவல்லது. பசியின்றி வயிறு ‘திம்மென்று’ இருக்கும்போது இஞ்சி கலந்த இந்த நீர்மோரை ஒரு டம்ளர் பருக அரைமணி நேரத்தில் நல்ல பசியைத் தூண்டிவிடும். கோடைகாலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு குளுகுளுவென மோர் கொடுத்து உபசரிப்பது நம் தமிழர்களின் பண்பாட்டில் ஒன்றல்லவா? மோரில் பொட்டசியம், வைட்டமின் B12, கால்சியம், ரிபோப்ளேவின் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது. நீர்மோர் நான்கு வித்தியாசமான சுவைகள் (புளிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு) அடங்கியது. மலிவானது. எங்கள் ஊரில் வெயில் காலத்தின்போதும், கோவில் திருவிழா நேரங்களிலும் அமைக்கப்படும் தண்ணீர் பந்தலில் பொதுவாக நீர்மோரும், பானாக்கமும் வழங்குவார்கள். இந்த இரண்டு பானங்களில் அறுசுவையும் அடங்கிவிடும். அறுசுவை உணவு நமது உடலில் சேரும்போது உடல் கொண்ட மொத்த களைப்பும் நீங்கி தனி புத்துணர்ச்சி கிடைத்துவிடும். மோர் தயாரிக்க..

Friday, February 1, 2013

விஸ்வரூபம் படத்தில் சில காட்சிகளை நீக்க காரணம் சொல்லும் காணொளியை பாருங்கள்

ஆதாரமற்ற கருத்துகளின் குவியல். உண்மைக்கு புறம்பான கருத்துகளுக்கு முக்கியம் கொடுக்கப்பட்டு மக்களை வழி கெடுக்கும் திரைக்கதை. குறிப்பாக சிறு பிரார்களின்  மனதில் நச்சுக் கொள்கையை ஊக்குவிக்கும் படம். தீவிரவாதத்தை தூண்டும் சக்தியை உருவாக்கிவிடக் கூடியது.

 தவறு செய்ய  தூண்டக் கூடியது. தவறு செய்தமைக்கு வருத்தம் தெரிவிப்பதனை விட திருந்திக் கொள்வது உயர்வு.

அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாததிற்கு துணையாகி பலிகடாவானவர் பின்லேடன்.
ஆப்கன் நாட்டிலிருந்து  ருஷ்ய படையினை வெளியேற்ற உதவ அமெரிக்கா பின்லேடன் பயன்படுத்திக் கொண்டது.
புனித சயூதி அரேபிய நாட்டில் அமெரிக்க நாட்டின் படைகள் வருவதனை  விரும்பாத பின்லேடன் அமெரிக்காவை எதிர்க்க ஆரம்பித்தார். அதுவே பின்லேடனை அமெரிக்காவுக்கு விரோதியாக்கியது.தேவையற்ற நிலையில்  ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறாமல் இருந்த அமெரிக்காவை வெளியேற்ற பின்லேடன் ஆப்கான் தாலிபானுக்கு ஆதரவு தர அதுமுதல் அமெரிக்காவால் பின்லேடன் தீவிரவாதியாக்கப் பட்டார். அதிலிருந்து தொடர்ந்த தவறு செய்ய வழி வகுத்ததும் அமரிக்காதான்.
குற்றம் செய்ய வழி வகுத்தவன் அமரிக்கன் . குற்றம் செய்பவனை விட அதனை தூண்டுபவன் பெரிய குற்றம் செய்தவனாக கருதப்பட வேண்டும்.அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாததிற்கு துணையாகி பலிகடாவானவர் பின்லேடன்.

இந்த படத்தில் அமெரிக்கா உலகில் செய்து வரும் தவறான செயல்களைப் பற்றி சொல்லப் படவில்லை. ஒரு பக்கம் சார்ந்து காட்டும் காட்சி. Before he came to be known as America's enemy number one, Osama bin Laden helped the American cause against the Soviets in Afghanistan.

LinkWithin

Related Posts with Thumbnails