இது நடக்காது என்றாலும் என் கருத்தைப் பதிகிறேன்.
இஸ்லாமியர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால்
இஸ்லாமியர்கள் இடையே அமைப்புகள் தோன்றக் கூடாது என்றால்
முதலில் செய்ய வேண்டியது எல்லா அரசியல் அமைப்புகளையும் கலைத்து விட்டு
எல்லோரும் பாக ஆகி விட வேண்டும்
உதாரணத்திற்கு
தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு என்ற எந்தக் அரசியல் கட்சியோ அரசியல் அமைப்போ கிடையாது
அவர்களுக்கு உள்ளது டாம்ப்ராஸ் எனப்படும் தமிழ்நாடு பிராமின்ஸ் அசோசியேஷன் என்பது மட்டுமே (கவனிக்க அசோசியேஷன் என்பது தான்)
இந்த ஒரே சமூக அமைப்பு பல காலமாக உள்ளது இந்த ஒரே அமைப்பிற்கு தலைவராக ஒருவரே பல ஆண்டுகள் எந்த விதமான பதவிப் போட்டியின்றி இருப்பதையும் நான் கண்டுள்ளேன்.
உதாரணத்திற்கு முன்பு பாலசுப்ரமண்யம் என்பவர் பல ஆண்டுகளாக தலைவராக இருந்து வந்தார்
தற்போது நடிகர் எஸ் வி சேகர் உள்ளார் என்று அறிந்த ஞாபகம்
அவர்கள் இடையே பல அரசியல் அமைப்புகளோ கட்சிகளோ முரண்பாடுகளோ கிடையாது ஒரே சமூக அமைப்பு தான் கால காலமாய்.
அவர்கள் அவர்களின் சமுதாய முன்னேற்றம் பற்றியே கவலைப்படுவதால அதற்காக உழைப்பதால் தான் இன்று
அவர்கள் கல்வியில் சிறநது விளங்குகிறார்கள
பதவிகளில் சிறந்து விளங்குகிறார்கள்
பல துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள்
ஆங்கிலம் பேசத் தெரியாத பிராமணரைக் காண முடியாது
ஆபிஸ் பாயாக கிளீனராக ஏதாவது சாதாரண வேலையில் உள்ள பிராமணரைக் காண முடியாது
பெரும்பாலானோர் அமெரிக்கா ஐரோப்பிய மற்றும வளைகுடாவில் தங்கள் உயரிய படிப்புகள் காரணமாக பெரும் பதவிகளின் உள்ளனர்
அது மட்டுமல்லாது ஒழுக்கம் கடவுள் பக்தி கலை என்று பல துறைகளில் சிறந்து விளங்குவார்கள்
நம்முடைய உதாரணம் சொல்ல வேண்டுமானால் காயல்பட்டணம் இந்த ஊரின் நகராட்சி தலைவராக ஒரு சுயேட்சை இஸ்லாமியர் தான் வெற்றி பெற்றுள்ளார் எந்த ஒரு இஸ்லாமிய அரசியல் கட்சி அமைப்பை சார்ந்தவர்கள் வெற்றி பெற முடியவில்லை இந்த ஊரார்கள் கட்டுக்கோப்பான ஒரு சமூக அமைப்பாக செயல்படுவதால் தான் கல்வியிலும் வேலையிலும் மார்க்க அறிவிலும் சிறந்து விளங்குவதைக் காண முடிகிறது
ஆகவே இஸ்லாமியர்கள் முன்னேற வேண்டுமானால் ஒரே ஒரு சமூக அமைப்பு மட்டுமே தேவை!
நான் கேட்டது ஒருவரிடமிருந்து ஜமாத்தே இஸ்லாமி தலைவர் மௌலான அபுல் அஃலா மௌதூதி அவர்கள் சொன்னார்களாம் (யாரேனும் உறுதிப்படுத்தலாம்) இந்திய இஸ்லாமியர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது அது தான் அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது என்று
- தென்றல் கமால்
தகவல் தந்தவர்
தகவல் தந்தவர் -Noofa Ismail (நூஃபா இஸ்மாயீல்)
No comments:
Post a Comment