Sunday, July 31, 2016

திருமண (நிக்காஹ்)வாழ்த்துரை ....

Abdul Gafoor
 
 இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

இன்முக உறவுகளின்
பன்முக சங்கமத்திலும்
திரண்டு பொழிந்த
பேரிறைவனின் பேரருளாலும்
இரண்டு மனங்கள்
சுகமாய் இணைகிற
பாக்கியத்தினை பெற்று
இல்லற வாழ்க்கையில்
ஐக்கியத்தினை நாடினர் ....

இறை மறையாம்
குர்ஆன் எடுத்தியம்பும்
பாடங்களை முறையாக்கி
முகம்மது நபிகள் (ஸல்)
போதித்த அறிவுரைகளை
வாழ்க்கையதில் நிறையாக்கி
சாதித்த மணமக்களாய் ....

Thursday, July 28, 2016

அருள் மழை பொழிவாய் ரஹ்மானே !

Raheemullah Mohamed Vavar

வாழ்வில் எத்தனைதான் கடந்தாலும்
இன்னமும்தான்.....
பயணத்தின் படிப்பினையாய்
பதிந்த காட்சிகளின் போதனையாய்
பட்டென சொல்வதென்றால்
மரணம் மாத்திரமே பிரிவு
துரோகம் மாத்திரமே தீது
தர்மம் மாத்திரமே புண்ணியம்
வணக்கம் மாத்திரமே நிம்மதி !

நறுக்கென்று நான்கை சொன்னாலும்
இன்னமும்தான்.....
வாழ்வினருள் நிறைகளென்று
வாழ்பவரும் மனமுணற
வீட்டின் அறைக்கதவு திறந்து
அசையும் காட்சிகளை
அவர்தம் கண்ணசைவில் காண வைத்தால்
அங்கே இல்லாளே இறைகொடை
நோயில்லாமையே பெருநிறை
எளிமையே நிறைவரம்
இருப்பதில் நிறைதலே இன்பசுகம் !

Thursday, July 21, 2016

இன்னும் இரண்டே நாட்கள்.. விரைந்திடுவீர்....


வீடு வளம் பெற -  நாடு நலம் பெற - சமுதாயம் மேம்பட
      ​                                     ​  விழி!  எழு!  வெற்றி கொள்!

​                            ​UPSC :  IAS / IPS / IFS / IRS / IES
​                            ​TNPSC:  Group:  I, II, IV​   ​​​தேர்வுகளுக்கு ​
  ​                                  ​​​    10 மாத கா​ல​ இலவசப் பயிற்சி!

தகுதியும் திறமையும் வாய்ந்த வசதியற்ற முஸ்லிம் ஆண்-பெண்
பட்டதாரிகளுக்கு ஸ்பான்சர்ஷிப் மூலம் தங்கும் வசதி, உணவு மற்றும் பயிற்சிக் கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
அதற்கான தகுதித் தேர்வு நடைபெறும் நாள்:
​                                    ​23-07-2016 சனிக்கிழமை​ ​காலை  10 மணி

தேர்வு நடைபெறும் இடங்கள்:-

Tuesday, July 19, 2016

எங்கெல்லாம் பெண்கள் அநியாயத்திற்கு ஆட்படுகின்றார்களோ .....

 by  Abu Haashima

ஒருமுறை ஒரு போருக்காக அண்ணல் நபி ( ஸல் ) அவர்கள் வீரர்களை தேர்வு செய்து கொண்டிருந்தார்கள்.
அங்கே ஒரு பெண்மணி வந்து நபிகளாரிடம் சில கேள்விகளைக் கேட்டார் .
" யா ரஸூலுல்லாஹ்... போரில் கலந்து கொண்டு வீர மரணம் அடைந்தால் அவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் ?"
" ஷஹீத் என்ற அந்தஸ்தோடு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற சொர்க்கம் கிடைக்கும் " என்றார்கள் நபிகள் .
" அந்தப் போர்களில் கலந்து கொள்ள பெண்களுக்கு அனுமதி உண்டா ?"
" இல்லை "
" அப்படியானால் அந்த அழகிய சொர்க்கத்தை பெறும் பாக்கியம் பெண்களுக்கு இல்லையா ?"
" இல்லையென்று யார் சொன்னது ?"

Monday, July 18, 2016

சூது சூழ் உலகு

உலகில் நடைபெறும் குற்ற நிகழ்வுகளுக்கு இரண்டு வகையான செய்திக் கோணங்களை ஊடகங்கள் உருவாக்கி வைத்துள்ளன. குற்றவாளி முஸ்லிம் எனில் அதற்கான சிறப்பு வாசகங்களை உள்ளடக்கிய அனல் கக்கும் யூகங்கள்; இல்லையெனில் கேழ்வரகில் நெய் வடியும் தகவல்கள். அண்மைக் காலமாக இந்தக் கோணங்களில் மூன்றாவதாக மேலும் ஒன்று இணைந்துள்ளது.
குற்றமிழைத்தவன் யார் என்று தெரியாவிட்டால், அவன் முஸ்லிம்தான் என்று வலிந்து திணிக்கும் நஞ்சு! உலகெங்கும் ஊடகங்களுக்கு இது பொது விதியாகி, அவரவர் நாட்டிற்கும் அரசியலுக்கும் ஏற்ப, ‘சக்கரை கொஞ்சம் தூக்கலா’ , ‘கொஞ்சம் லைட்டா’ என்பதுபோல் அதன் வீரியம் கூடி, குறைந்து தென்படுகிறது.

Tuesday, July 12, 2016

சந்தோக்ஷமாக சுவிக்க இதுவே சிறந்த வழி...

மரணத்தை சந்தோஷமாக எதிர் கொள்வது எப்படி..?  
Saif Saif
-------------------------------

இந்த உலகத்தில் படைத்த ஜீவராசிகளில் மனித இனத்தை இறைவன் மிக மேன்மையாக படைத்திருக்கிறான்...

ஆறறிவு படைத்த மனிதன் தன்னுடைய அறிவை வைத்து இவ்வுலகில்
ஆக்கப் பூர்வமான வேலைகள்,அழிவு வேலைகள் அனைத்தையும் செய்கிறான்..

இறைவன் தந்த அறிவை பயன்படுத்தி நல்ல முறையில் பயன்படு்த்தி சிலர் நல்ல விதமாக வாழ்கிறார்கள்..

சிலர் அதை தவறாக பயன் படுத்தி தன் வாழ்வை வீணடிக்கிறார்கள்..

இறைவன் தந்த இந்த அழகிய உடம்பை தவறான வழிகளில் பயன்படுத்தி வருத்திக் கொள்கிறார்கள்..

Sunday, July 3, 2016

பிள்ளைகளின் பெருநாட்கள் .... J Banu Haroon

சிறுவயதினரின் பெருநாட்கள் பூரிப்பு மிக்கவை ....
வளர்ந்தபின்னரே வருவது வேலைபளு மிக்கவை ....
அவர்களுக்கானதை கொடுத்துவிட்டு பாருங்கள் ...
ஒருகோடி புன்னகைகள் மின்னிக்கொண்டிருக்கும் ...
அலங்கரித்து ஆர்வமாக ஓடியாடி திரிதலெல்லாம் ...
சொற்ப காலங்கள்தான் ...சோதித்துவிடாதீர்கள் ...
பொடிசுகளை அழைத்து விருந்து கொடுங்கள் ...
பொடிசுகளை அழைத்து அன்பளிப்பு கொடுங்கள் ...

LinkWithin

Related Posts with Thumbnails