Tuesday, July 12, 2016

சந்தோக்ஷமாக சுவிக்க இதுவே சிறந்த வழி...

மரணத்தை சந்தோஷமாக எதிர் கொள்வது எப்படி..?  
Saif Saif
-------------------------------

இந்த உலகத்தில் படைத்த ஜீவராசிகளில் மனித இனத்தை இறைவன் மிக மேன்மையாக படைத்திருக்கிறான்...

ஆறறிவு படைத்த மனிதன் தன்னுடைய அறிவை வைத்து இவ்வுலகில்
ஆக்கப் பூர்வமான வேலைகள்,அழிவு வேலைகள் அனைத்தையும் செய்கிறான்..

இறைவன் தந்த அறிவை பயன்படுத்தி நல்ல முறையில் பயன்படு்த்தி சிலர் நல்ல விதமாக வாழ்கிறார்கள்..

சிலர் அதை தவறாக பயன் படுத்தி தன் வாழ்வை வீணடிக்கிறார்கள்..

இறைவன் தந்த இந்த அழகிய உடம்பை தவறான வழிகளில் பயன்படுத்தி வருத்திக் கொள்கிறார்கள்..


தனக்குள்ள ஆறறிவினால் அதிகமாக சிந்திக்கும் மனிதன் சீக்கிரமாகவே அனைத்தையும் அனுபவித்து விட துடிக்கிறான்...

அதனால் இளமையிலேயே முதுமையை அடைகிறான்..ஏராளமான நோய்களுக்கு ஆட் படுகிறான்..

சில நேரங்களில் அவன் நினைக்கின்ற இலக்கு கிடைக்காத போது தளர்ந்து வாழ்வே போய் விட்டதாக கருதுகிறான்..

தவறு செய்யும் ஒரு மனிதன் ஒரு தவறை செய்து அதில் மீண்டு வெளி வந்த பிறகு மீண்டும் மீண்டும் அந்த தவறை செய்யும் போது தன் வாழ்க்கையை விரைந்து முடிவுக்கு கொண்டு வருகிறான்...

இது போன்றவர்கள் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் வாழனும்னு ஆசைபட்டாலும் இயற்கை அதற்கு அனுமதி கொடுப்பதில்லை..

ஒரு முதலாளியிடம் வேலை பார்க்கும் போது அவர் சொல்லும் வேலையைச் செய்ய வேண்டும்..அவர் சொல்லும் டார்கெட் (Target) டை எப்படியாவது அடைய வேண்டும்..அப்போது தான் சம்பளம் கிடைக்கும்..
நல்ல பெயர் கிடைக்கும்..
புரமோஷன்(Promotion) கிடைக்கும்..

என்று வேலைகளில் கருத்தாய் ஓடி, சாடி உழைக்கின்ற நாம் நம்மை படைத்த இறைவன் தந்த டார்கெட்டை ஒழுங்காக செய்கிறோமா...?

அப்படி இறைவனின் டார்கெட் (Target) நிலுவையில்(Pending) இருந்த நிலையில் மரணம் நம்மை அழைக்கும் போது இறைவனிடம் சம்பளமும், நல்ல பெயரும் , புரமோஷனும் எப்படி கிடைக்கும் என்பதையும் நாம் யோசிக்க தவறி தானே விடுகிறோம்..

இது போன்ற சிந்தனைகள் அடிக்கடி நம் சிந்தையில் உதித்து இறை பொருத்தத்தோடு
நாம் வாழ்க்கையை நடத்தும் போது அதற்குரிய கூலி தினம் தினம் நமக்கு கிடைத்துக் கொண்டேயிருக்கும்..

இந்த நேரத்தில் நமக்கு மரணம் வரும் போது இறைவன் தருகின்ற நிரந்தர அருட் கொடைகளுக்காக சந்தோஷமான முறையில் அம்மரணத்தை வரவேற்று சுவர்க்கம் செல்லும் பாக்கியத்தை நம் ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ளலாம் என்பதில் எள்ளளவும் சந்தேமில்லை...

‪#‎மரணத்தை‬ சந்தோக்ஷமாக
சுவிக்க இதுவே
சிறந்த வழி...♥♥

Saif Saif

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails