Tuesday, July 19, 2016

எங்கெல்லாம் பெண்கள் அநியாயத்திற்கு ஆட்படுகின்றார்களோ .....

 by  Abu Haashima

ஒருமுறை ஒரு போருக்காக அண்ணல் நபி ( ஸல் ) அவர்கள் வீரர்களை தேர்வு செய்து கொண்டிருந்தார்கள்.
அங்கே ஒரு பெண்மணி வந்து நபிகளாரிடம் சில கேள்விகளைக் கேட்டார் .
" யா ரஸூலுல்லாஹ்... போரில் கலந்து கொண்டு வீர மரணம் அடைந்தால் அவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் ?"
" ஷஹீத் என்ற அந்தஸ்தோடு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற சொர்க்கம் கிடைக்கும் " என்றார்கள் நபிகள் .
" அந்தப் போர்களில் கலந்து கொள்ள பெண்களுக்கு அனுமதி உண்டா ?"
" இல்லை "
" அப்படியானால் அந்த அழகிய சொர்க்கத்தை பெறும் பாக்கியம் பெண்களுக்கு இல்லையா ?"
" இல்லையென்று யார் சொன்னது ?"

" போரில் இறக்காவிட்டால் ஷஹீத் என்ற சிறப்பையும் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற சொர்க்கத்தையும் பெண்கள் எப்படிப் பெறுவார்கள் யா ரஸூலுல்லாஹ் ?"
" தாய்மைப் பேறு பெற்ற நிலையில் குழந்தை பெறும் போது இறந்து விடும் பெண்களுக்கும்
கடுமையான நோய்களுக்கு ஆட்பட்டு இறந்து விடும் பெண்களுக்கும்
" ஷஹீத் " உடைய அந்தஸ்து கிடைத்து அவர்களும் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் சொர்க்கத்தை பெற்றுக் கொள்வார்கள் " என்றார்கள்
நபிகள் ( ஸல் ) அவர்கள்.

இதுதான் இஸ்லாமிய வரலாறு.
போரைக்கண்டோ
இறப்பைக்கண்டோ
அஞ்சி ஒளியக்கூடிய கூட்டமல்ல முஸ்லிம்களின் கூட்டம்.
போரில் இறக்கும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கவில்லையே என்று ஏங்கிய தாய்மார்களை கொண்ட கூட்டம் இது .

இரண்டு ஆண்பிள்ளைகளை இஸ்ரேலிய யூதர்களின் கொலைவெறிக்கு பறி கொடுத்துவிட்டு அழுது கொண்டிருந்த அந்த தாயிடம் உறவினர் ஆறுதலாகச் சொன்னார்...
" உன் பிள்ளைகளுக்கு அல்லாஹ் சொர்க்கத்தை தந்துவிட்டான் .
அழாதே ... " என்று.
" பிள்ளைகளை பறிகொடுத்ததற்காக நான் அழவில்லை . மேலும் போரில் கலந்துகொண்டு போராட எனக்கு பிள்ளைகள் இல்லையே என்ற வருத்தத்தில் அழுகிறேன் " என்று
பதில் சொன்னாள் பாலஸ்தீனத்தின் அந்த வீரத்தாய்.

இதுதான் பாலஸ்தீன முஸ்லிம்களின் வீர வரலாறு...
அல்லாஹ் ...
அவர்களின் தியாகத்தை நன்கு அறியக்கூடியவன்.
இந்த தியாகத்திற்கு தகுந்த கூலியை முஸ்லிம்களுக்கு கொடுப்பான் .
தண்டனையை யூதர்களுக்குக் கொடுப்பான்....முடிவே இல்லாத வேதனையின் நெடுந்தீயைக் கொண்டு !

இது பாலஸ்தீனர்களுக்கு மட்டுமல்ல...
எங்கெல்லாம் பெண்கள் அநியாயத்திற்கு
ஆட்படுகின்றார்களோ
அவர்கள் எல்லோருக்கும்
பொருந்தும். !
 Abu Haashima

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails