Tuesday, December 31, 2013

வாழ்வின் அடையாளம்

இரவு முழுக்க விழித்திருந்தும்
செல்போன் சத்தம் சிணுங்கவில்லை
பகலெல்லாம் காத்திருந்தும்
வாழ்த்துரைக்க யாரும் வரவுமில்லை !

இந்தியத் தொலைக் காட்சிகளில்
முதன் முறையாக
புதுப்படங்கள் எதுவும் தெரியவில்லை !

Wednesday, December 25, 2013

Vizhigal-Kavikko -தஃப்சீர் இப்னு கஸீர் வெளியீட்டு விழா

சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் சார்பாக, தஃப்சீர் இப்னு கஸீர் 6ஆம் பாகம் வெளியீட்டு விழா மற்றும் கவிக்கோ மன்றம் திறப்பு விழா 07.12.2013 அன்று மாலை 6.30 மணி அளவில் கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கும் கவிக்கோ உரை வீச்சின் விழிகளின் பதிவு இது.

Tuesday, December 24, 2013

தமிழ் நாட்டில் முஸ்லிம்களுக்காக ஒரு மருத்துவக் கல்லூரி- கவிகோ அப்துல் ரஹ்மான்


Kaviko Abdul Rahman Talking about a proposal to start a Medical College for Muslims in Tamil Nadu, during his visit to Sydney in September 2013 Please contact iifsydney@gmail.com for more info

Sunday, December 22, 2013

இஸ்லாமும் நுகர்வோர் கலாச்சாரமும்


சம்ஷாத் அப்துல் ஹமீத்

நுகர்வோர் கலாச்சாரம் அதன் உச்சத்தில் இருக்கிறது. ஒரு பக்கத்தில் கடுமையான ஏழ்மை –அடிப்படை தேவைகள் கூட கிடைப்பதில்லை. மறுபக்கத்தில் எல்லாமே அபரிமிதமாக இருக்கிறது. மக்கள் ஒரே வகை உணவு உண்பது அலுத்துப்போய் பல்வேறு விதமான உணவகங்களுக்குச் சென்று உண்ணுகிறார்கள். இன்னும் பலர் சலிக்கும் வரை பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள். அத்தனை பொருட்களை வைத்து மக்கள் என்ன தான் செய்வார்கள்?

ஆடை வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள் –பொதுவாக நாம் கேட்கக் கூடியது, “நான் மீண்டும் மீண்டும் உடுத்தியதையேவா உடுத்திக்கொள்ள முடியும்? ஒரு விருந்தில் அணிந்த ஆடையை என் தோழிகள் எல்லோரும் பார்த்து விட்டார்கள். அதையே அடுத்த விருந்துக்கும் அணிய முடியாது.”

Tuesday, December 17, 2013

கல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமுறைகளும்


 கல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமுறைகளும்- முதல்பரிசு பெற்ற கட்டுரை (ஆபிதீன்)
கல்விக்கான தேடலில் முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா?  என்ற தலைப்பில் இஸ்லாமியப் பெண்மணியும் -டீக்கடை பேஸ்புக் குழுமமும் நடத்திய கட்டுரைப்போட்டியில் முதல் இடம் பெற்ற சகோதரர் ஆபிதீன் அவர்களின் கட்டுரை இது.

    (நபியே ! யாவற்றையும்)  படைத்த உமது இறைவனின் திருநாமத்தால் நீர் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து  படைத்தான். ஓதுவீராக! உமது  இறைவன் மாபெரும் கொடையாளன் அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக்கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாததையெல்லாம் கற்றுக்கொடுத்தான்.(அல்குர்ஆன்96:1:5 )   

Monday, December 16, 2013

.அன்பைத்தவிர வேறு எதுவுமேயில்லாத அன்பு மட்டுமே !

பத்து வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன். ஆனா.. நேத்து மாதிரி இருக்கு.


நான் " பெட்டகம் " , " அண்ணலே யா ரசூலல்லாஹ் " நூல்களை எழுதி முடித்த கால கட்டம் அது. பத்திரிகைகளில் வெளிவந்த நூல் விமர்சனங்களைப் படித்துவிட்டு ஏராளமானவர்கள் கடிதம் எழுதினார்கள். அவர்களில் முக்கியமானவர்கள்... கம்பம் முஹம்மதலி அண்ணன் அவர்கள் நாகூர் கவிஞர் ஜாபர் முஹைதீன் அண்ணன் அவர்கள் . அவர்களுக்கும் நூல்கள் அனுப்பிக் கொடுத்தேன். அதன் பிறகு இருவருமே எனக்கு நல்ல நண்பர்களாக ஆகிவிட்டார்கள். அடிக்கடி கடிதங்கள் எழுதுவோம் போனில் நீண்ட நேரம் பேசுவோம்.

பேசுவதெல்லாம் ...அன்பு..அன்பு..அன்பைத்தவிர வேறு எதுவுமேயில்லாத அன்பு மட்டுமே ! எனக்கு அவர்களின் முகமே தெரியாது.. முகம் தெரியாத அந்த மேதைகளின் அகம் மட்டுமே பார்த்தேன். அது ...அழகு..அத்தனை அழகாயிருந்தது. அந்த சூழ்நிலையில்தான் மயிலாடுதுரைக்குச் சென்றேன். அங்கே... என் மனதில் வாழ்ந்துகொண்டிருந்த என் அன்பு நண்பர்களைக் கண்டேன்.. ஆரத்தழுவினேன்.. ஆனந்தம் கொண்டேன். அவர்களும் அப்படியே... அவர்களோடு மேலும் பல நண்பர்கள் அங்கே எனக்கு அறிமுகமானார்கள். அவர்களில் ... டாக்டர் ஹிமானா செய்யத் அவர்களும் ( நர்கிஸ் பத்திரிகையின் ஆசிரியர் ) அதிரை அருட் கவிஞர் தாஹா அவர்களும்  
அருமை அண்ணன் வழக்கறிஞர் நீடூர் செய்யது அவர்களும் ( நீடூர் முகமதலி அவர்களின் அண்ணார் ) பேராசிரியர் சாயிபு மரைக்காயர் அவர்களும் முக்கியமானவர்கள் ! மாநாடு முடிந்து பிரிய மனமில்லாமல் அந்த நண்பர்களைப் பிரிந்து வந்தேன். அதன்பிறகு ... " உத்தம நபிகளின் உண்மைத் தோழர்கள் " நூலை எழுதினேன் .

Monday, December 9, 2013

இளம்பிறை எழுச்சி


பேரணி முழக்கம் இளையவர் ஒலிக்கப்

.....பெரும்புகழ்ப் பெருநகர் ஆங்குத்

தோரணம் போல கூட்டமாய் வீதி

..தோறுமே பச்சையின் வண்ணம்

வீரமும் தொண்டும் நிறைந்துளப் படையின்.

....வெற்றியைக் குறித்திடும் காட்சி

நேரமும் நெருங்கி வந்தது; வாவா

....நேர்மையின் நிகழ்வினை நோக்கி!

Friday, December 6, 2013

அதர்மம்! (பாப்ரி மஸ்ஜித் இடிப்பு)


எப்போதும் போலத்தான்
அப்பொழுதும் புலர்ந்தது

விண்ணிறைந்த வெள்ளொளியில்
காவிக்கறை படியும் என
கணித்திருந்தால்
விடியாமலேயே
முடிந்திருக்கும் அந்நாள்


தொழுகைக்கான இடம் அழித்து
வேதனையால்
அழுகைக்கான வழி வகுத்தநாள்

Wednesday, December 4, 2013

இவ்வளவுதான் உலகம்!

இன்றைய அவசர உலகில் மனிதன் மிக வேகமாக பயணித்து கொண்டிருக்கின்றான். எவ்வாறு இந்த உலகம் நம்மை அவசரமாக இழுத்துச் செல்கின்றதோ அதே போன்று இந்த உலக வாழ்க்கையிலிருந்து நாம் பிரியும் தருணமும் நம்மை நோக்கி மிக வேகமாக வந்து கொண்டிருக்கின்றது.

நாம் வரலாறுகளை புரட்டும்போது நபி நூஹ் (அலை) இதே பூமியில் 950 வருடங்கள் வாழ்ந்ததாக இறைவேதம் திருக்குர்ஆன் பேசுகின்றது. நம் முன்னோர்கள் 100 வயது, 110 வயது, அதையும் தாண்டி திடகாத்திரமாக, உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்ததாக நாம் இன்றும் பெருமையாக பேசிக் கொள்கிறோம்.

அமானித பொருளாய் காத்து இருப்பேன்

15 நாளில் புறப்படும் உனக்கு திருமணம் எதற்கு
இருந்தும் உடன்பட்டேன் திருமணத்திற்கு

எப்படியோ என் கரம் பிடித்து விட்டாய்
மருதாணி காயுமுன்னே மறு தேசம் சென்று விட்டாய்

விழித்து பார்கிறேன் நீ போன திக்கு
பலியாகி போனது உன் வீட்டார் அவசரத்திற்கு

விரல்களை விலங்கிட்டு
நிற்கிறேன் இறைவனிடம் துவா கேட்டு

விரைவில் வந்திடுவாய் என்று நம்புகிறேன்
வரும் வரை அமானித பொருளாய் காத்து இருப்பேன்


பஷீர்


Tuesday, December 3, 2013

'ஹிந்து' குறித்து இஸ்லாம்!

ஹிந்து - ஹிந்துஸ்தான் - ஹிந்துத்துவா என்ற பெயர்கள் இப்பொழுது இந்தியா முழுவதும் பிரச்சினைக்குரிய பெயர்களாக சில அரசியல்வாதிகளாலும்,

சில மதவாதப் பேர்வழிகளாலும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு விட்டன.

ஹிந்து என்ற வார்த்தை ஹிந்து மத வேதங்களான எந்த வேதங்களிலும் கிடையாது. அது பகவத்கீதை,  மஹாபாரதம், இராமாயணம், பவிஷ்ய புராணம் அல்லது ரிக், யஜூர், சாமம், அதர்வணம் போன்ற நான்கு வேதங்களிலும் ஹிந்து என்ற மூன்று எழுத்தே இல்லை என்று வாதிடுகிறார்கள். வாதிடுபவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. வரலாற்று ஆய்வாளர்களும், சரித்திர வித்தகர்களும் தான்.

LinkWithin

Related Posts with Thumbnails