Wednesday, December 27, 2017

நல்லடியானாக வாழ்வது எப்படி

நல்லடியானாக வாழ்வது எப்படி
மனிதர்கள் இறைவனுக்கு அடிபணியவே படைக்கப்படடிருப்பதால், அவனை வணங்கி வழிபடுவது எப்படி என்பதை அவர்கள் அறிந்திருப்பது கடமையாகும். இதுவும் குர்ஆனில் அறிவிக்கப்பட்டுள்ளது. ( 22:67)

ஒவ்வொரு வகுப்பாருக்கும் அவர்கள் வணங்குவதற்கு உரிய வழியை நாம் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். எனவே அந்த விவகாரத்தைப் பற்றி அவர்கள் உம்மிடம் தர்க்கிக்க வேண்டியதில்லை. (22:67)

Wednesday, December 13, 2017

நல்லவற்றையும் கெட்டவற்றையும் பிரித்தறிவது எப்படி?

குர்ஆனின் கோட்பாடுகள் நிராகரிக்கப்படும் சூழ்நிலையில், நல்லவற்றையும் கெட்டவற்றையும் பிரித்தறிய பல்வேறு அளவுகோல்கள் கையாளப்படுகின்றன. இத்தகைய பலதரப்பட்ட அளவுகோல்களை நம்புவதால் தவறான வழியில் நடக்கவும் தீய விளைவுகளைச் சந்திக்கவும் நேரிடுகிறது.

எடுத்துக்காட்டாக ஒரே ஒரு முறை குற்றம் இழைக்க முயன்ற ஒருவர் பல குற்றங்களைச் செய்தவரை விடத் தூய்மையானவராகக் கருதப்படுகிறார். கொள்ளையடிப்பவன் தன்னைக் கொலையாளியை விடத் தீமையற்றவனாக எண்ணிக் கொள்கிறான்; கொலையாளி தான் ஒரு தடவை தான் கொலை செய்திருப்பதால் தன்னை அவ்வளவு கெட்டவனாகக் கருதுவதில்லை.

Sunday, December 3, 2017

பயணம் செல்பவர்கள் மட்டுமே, அடைந்தவர்கள் இல்லை

உங்கள் வயது என்ன? நீங்கள் உங்கள் வயதை....  சொல்வீர்கள். நீங்கள் சொன்னது உங்கள் வயது கிடையாது. நீங்கள் ஒன்றும் அற்ற நிலையே நோக்கி பயணிக்கிறீர்கள் அந்த பயணத்தில் கடந்து வந்த காலத்தைச் சொல்கிறீர்கள். கடந்து வந்த காலம் வயது 15,25,50,70 இருக்கலாம் தெரியும் ஆனால் நீங்கள் இன்னும் போகும் தூரம் தெரியாது.

இறைவனை தேடி அல்ல.ஞானத் தேடுதலில் உங்களுக்குள் ஆன்மாவை நோக்கி பயணமாவீர்கள் அப்போது உங்கள் பயணம் தொடருமே தவிர முடிவு இருக்காது. ஆன்மீகத்தை ஆன்மாவில் தேடல் ஒரு கரை மட்டுமே தவிர மறு கரை இல்லை.

Thursday, November 30, 2017

தியான முயற்சி

இனிய காலை வாழ்த்துக்கள்.

 ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனவாம்.

 எனவே தலைவர் குரங்கிடம் போய் மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன், தலைவர் குரங்காரும் ''சரி அவ்வாறே செய்து விடுவோம். அதற்கு முன்னால் உண்ணா விரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்து விடுங்கள். ஏனெனில் விரதம் முடியும் பொழுது பசியாக இருக்கும். எனவே அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது'' என்று அறிவுரை சொன்னார்.

தியானித்துக் காணவேண்டும்


",உடம்பில் உயிர்
அடங்கி நிற்பது
உடம்பின் உள்ளேயா
உடம்பின் வெளியிலா
என்பதை என்னிடம்
மெள்ள வந்து
அருகில் வந்து
சொல்லவேண்டும்
என்று கேட்கின்றீர்கள்,

Tuesday, November 28, 2017

மிகவும் சுருக்கமான மற்றும் அதி சக்தியுள்ள துஆ-அதைப்பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?



மிகவும் சுருக்கமான மற்றும் அதி சக்தியுள்ள துஆ-அதைப்பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

நபி (ஸல்) அவர்களிடம் அவருடைய சிறிய தந்தையான அல் அப்பாஸ் அவர்கள் கூறினார்கள்:

யா ரஸுலுல்லாஹ் எனக்கு ஒரு துஆவை கற்பியுங்கள் என்றார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் என்னுடைய சிறிய தந்தையே, கூறுங்கள்

اللهم اني اسالك العافية

"அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக அல் ஆஃபியா"

(யா அல்லாஹ்! நான் உன்னிடம் ஆஃபியாவைக் கேட்கிறேன்)

Tuesday, November 21, 2017

நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)


நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) யாராவது அழைத்தால் திரும்பும்போது முகத்தை மட்டும் திரும்பாமல் முழுமையாகத் திரும்புவார்கள். அவர்களின் பார்வை கீழ்நோக்கியே (பூமியை பார்த்தே) இருக்கும். வானத்தைப் பார்ப்பதை விட பூமியைப் பார்ப்பதில் அவர்களது பார்வை அதிகமாக இருந்தது.
தன் தோழர்களை முன்னால் செல்லவிட்டு பின்னால் வருவார்கள். சந்திப்பவர்களை ஸலாம் கூறி பேச ஆரம்பிப்பார்கள்.
வுளூச்செய்யும் போதும் தலைவாரும் போதும் செருப்பணியும் போதும் வலப்புறத்திலிருந்து ஆரம்பிப்பதை விரும்புவார்கள்.

Saturday, November 18, 2017

அல்லாஹ் அல்லாஹ்

கதிர் வீசிடும் காலை
உன் ஆணை அல்லாஹ்
இருள் மேவிடும் மாலையும்
உன்னாலே அல்லாஹ்
நல்வாழ்வினில் பேரருள்
நீயே அல்லாஹ்
நிறைவான அன்பாளனும்
நீயே அல்லாஹ்
திருவேதம் நபிநாதர்
தந்தாய் அல்லாஹ்
புவியாவுக்கும் நீதிக்கும்
நீயே அல்லாஹ்

Monday, November 13, 2017

மனக்குழப்பத்திலிருந்து விடுதலை !

மாநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மனமென்பது (செடிகொடிகள் இல்லாத) கட்டாந்தரையில் விழுந்த இறகு போல, காற்றின் அலைகள் அதை உள்ளும் புறமுமாக புரட்டிப்போடுகிறது.(அறிவிப்பாளர் : அபூமூஸா (ரளி)
நூல் : அஹ்மது)

எத்தனை அழுத்தமும் சத்தியமும் நிரம்பிய உதாரணம் இது. நம் வழக்கில் உள்ளபடி மனமென்பது ஒரு குரங்கு என்று கூறிக்கொள்வதுண்டு. குரங்கையாவது கயிற்றால் கட்டிப் போடவும் குச்சியால் கட்டுப்படுத்தவும் இயலும். ஆனால் உதிர்ந்த - அதுவும் கட்டாந்தரையில் விழுந்த இறகை! வீட்டின் திண்ணைகளில், பள்ளிவாசலின் வராண்டாக்களில், தர்காக்களின் வளாகங்களில் மனப்பிறழ்வும், சிதைவும் ஏற்பட்ட மனிதர்களை சந்தித்ததுண்டா? அவர்களின் உள்ளங்களை புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் குழப்பங்களை சற்றே மனக்கண்முன் கொணர்ந்தால் மாநபி (ஸல்) அவர்களின் உதாரணத்தின் உண்மை நிலையை உணர முடியும்.

ஆனால் அவர்களின் வாழ்வையே புரட்டிப் போட்டிருக்கும் இந்நிலைக்கான காரணங்கள் குறித்து நாம் யோசித்துப் பார்த்ததுண்டா?

Sunday, November 12, 2017

உயிரி (பாக்டீரியா) மேகங்கள் பொழியும் உயிர் மழை

அல்குர்ஆன்குர்ஆன் வழியில் அறிவியல்……….

அல்லாஹ் படைத்த இம்மாபெரும் பிரபஞ்சத்தில், சூரிய குடும்பத்திலுள்ள நமது பூமிக்கு உள்ள தனிச் சிறப்பே பல்லுயிர்கள் வாழும் உயிர்க் கோளாமாக இருப்பதுதான். இவ்வுயிரினங்களுக்கு ஆதாரமாய் நீர் நிறைந்து நீலப்பந்தாக பூமி காட்சிதருகிறது. ஒவ்வொரு உயிர்களும் நீரிலிருந்தே படைக்கப்பட்டதாக அல்குர்ஆன் கூறுவதை நவீன அறிவியலும் உறுதிப்படுத்துகிறது. உயிர்களுக்கு ஆதாரமான நீர் பூமிக்கு மட்டும் சொந்தமல்ல. ஏனெனில் வானம் பூமி படைப்பதற்கு முன்பே அல்லாஹ் நீரைப் படைத்து விட்டான். எனவேதான் நீரானது பிரபஞ்சம் முழுவதும் வியாபித்துள்ளதை நவீன அறிவியல் கண்டுபிடித்துள்ளது.

“ ஆதியில் அல்லாஹ் (மட்டுமே) இருந்தான்.அவனைத்தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை.(பிறகு படைக்கப்பட்ட) அவனது அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்பூல் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விசயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப்படைத்தான்.” என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி). நூல்: புஹாரி.3191.

Saturday, November 11, 2017

ஆன்மா

பனிக்கட்டி இன்னொரு பனிகட்டியுடன் இனைத்தால் இனையாது.  இரண்டு உருகிய பனிக்கட்டி தண்ணீர் இதனையும். சில மணி நேரத்தில் உருகிய இரண்டு பனிக்கட்டி தண்ணீர் ஆவியாக போகும்.

உடல் இன்னொரு உடலைத் தேடும். ஆண் பெண் உடலைத் தேடும், பெண் ஆண் உடலைத் தேடும். ஆனால் சில நிமிடங்கள்தான். இரண்டு பனிக்கட்டி போல.

அமைதி


நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.

ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான் மன்னன்.

இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.

Wednesday, November 8, 2017

இதயத்தை நோக்கித் திரும்புதல் | நாகூர் ரூமி

வாழ்க்கையின் அர்த்தம் புரிந்துகொள்ளுங்கள்!

 வாழ்க்கையின் அர்த்தம் புரிந்துகொள்ளுங்கள்! 

✅ உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்.
"உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள், இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்."

✅ மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள்*.
"இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது."

✅ ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம்.
"இங்கே புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான்."

✅ அரசியல்வாதியின் கல்லறையில்*,
"தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள், இவன் எழுந்து விடக்கூடாது."

Friday, November 3, 2017

“என்ன நடந்தது அவர் வாழ்க்கையில்?” / டாக்டர் லாரன்ஸ் B பிரவுன்

இஸ்லாத்தை ஏற்றதால் மனைவி, மகள்கள், தாய், தந்தை, பெரிய பண்ணை வீடு, இரண்டு கார்கள், நண்பர்கள், 20 வருடங்களாகப் பார்த்து வந்த அமெரிக்க விமானப்படை கண் டாக்டர் வேலை, அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நின்றார்

டாக்டர் லாரன்ஸ் B பிரவுன் ( பிறப்பு: 1959).

ஏக இறைவன் அல்லாஹ் அவரைக் கைவிட்டு விட்டானா?

“என்ன நடந்தது அவர் வாழ்க்கையில்?” என்பதை அவரே கூறக் கேட்போம் இன் ஷா அல்லாஹ்.
___________________________________________

“ 1990 ம் ஆண்டு எனது இரண்டாவது மகள் ஹன்னா பிறந்தாள். மற்ற குழந்தைகளைப் போன்று அவளின் நிலைமை இல்லை. பிறந்தவுடனேயே அவள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். இருதயத்தில் இருந்து இரத்தம் வெளியேறும் குழாயில் அவளுக்கு பிரச்சினை ஏற்பட்டிருந்தது. இது மருத்துவ உலகில் மிகவும் அரிதான ஓன்று.

இதனைக் கேள்விப்பட்ட நான் அதிர்ந்தே போனேன். எவ்வளவு செலவானாலும் மகளைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று முடிவெடுத்தேன். வாஷிங்டனில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இருந்து இருதய அறுவை சிகிச்சை நிபுணர் வரவழைக்கப்பட்டார். குழந்தையை பரிசோதித்த அந்நிபுணர் சொன்ன வார்த்தை எனக்கு பேரிடியாக விழுந்தது. “அறுவை சிகிச்சை செய்தாலும் குழந்தை பிழைப்பது கடினம். அவ்வாறு பிழைத்தாலும் நீண்ட நாட்கள் வாழ்வதற்கு சாத்தியமில்லை! ” என்றார்.

அதிர்ச்சியில் உறைந்து போனேன். எனது நிலைமையைப் பார்த்த அவர் கடைசியில் சொன்னார், “ இறைவனிடம் வேண்டுங்கள். சிகிச்சை பலனளிக்கலாம்.” வாழ்க்கையில் முதன் முதலாக அப்போது தான் இறைவனைப் பற்றி கேள்விப்பட்டதாக உணர்ந்தேன். என்னைப் பொருத்தவரை அமெரிக்க விமானப்படையில் கண் மருத்துவராக வேலை பார்த்து வந்தேன். நிறைவான சம்பளம். அழகிய மனைவி, குழந்தை, பெரிய பண்ணை வீடு, இது கடையா? வீடா? என்று கேட்குமளவுக்கு ஏராளமான வீட்டு உபயோகப் பொருள்கள், விளையாட்டுச் சாமான்கள் என நிறைவான வசதிகளுடன் வாழ்ந்தேன்.

தெளிவாக கூறுவதெனில் பொருளாதார மோகத்தில், உலக சுகபோகத்தில் மூழ்கிக் கிடந்தேன் எனலாம். ஆதலால், வாழ்க்கையில் எனக்கு இறைவனின் தேவை ஏற்பட்டதில்லை. வேலை பார்ப்பதால் பணம் வருகிறது. பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்றே கற்பனை செய்திருந்தேன். மொத்தத்தில் இறைவனை நம்பாத நாத்திகனாக வாழ்ந்திருந்தேன்.

இப்போது எனது மகளின் விஷயத்தில் பணம் தோற்றுப் போய்விட்டது.மருத்துவ உலகமும் கைவிரித்து விட்டது. மருத்துவரே, “இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்” என்கிறார்.வேறு வழியின்றி மருத்துவமனையில் இருந்த பிரார்த்தனை அறையினுள் நுழைந்தேன்.

எனது வேண்டுதலும் இறைவனின் உதவியும்
********************************************
வாழ்க்கையில் முதன் முதலாக இறைவனின் முன்பு முழங்காலிட்டு அமர்ந்தேன். கைகளை உயர்த்தி, மனதில் இறைவனை வேண்டினேன். “இறைவன் என்று ஒருவன் உண்மையில் இருந்தால், உண்மையான அந்த இறைவனே! எனது மகளைக் காப்பாற்றுவீராக!” உள்ளத்தை ஒருமைப்படுத்தி வேண்டிய அத்தருணத்தில் என்னையும் அறியாமல் அழுகை பீறிட்டது. கதறி அழுதேன்.கடைசியில் என் மனதில் சொன்னேன். என் மகளைக் காப்பாற்றினால், இறைவனே! உமக்காக என்னை அர்ப்பணிப்பேன்.

இப்படியே பதினைந்து நிமிடங்கள் கழிந்திருந்தன. மீண்டும் நினைவுக்கு வந்தேன். பிரார்த்தனை அறையை விட்டு வெளியேறி எனது மகளின் சிகிச்சை அறைக்கு வந்தேன். அங்கு எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என்னை எதிர்பார்த்திருந்த சிறப்பு மருத்துவ நிபுணர் என்னிடம் கேட்டார். எங்கே சென்றிருந்தீர்கள் லாரன்ஸ் ? உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தோம். உங்கள் மகளின் இருதய அடைப்பு சரியாகி விட்டது.

மருத்துவர், மருத்துவ அடிப்படையில் அதற்கு சில விளக்கங்கள் தந்தார். எனினும் என்னைப் பொருத்தவரை எனது வேண்டுதலுக்கு இறைவன் பதிலளித்துள்ளார் என்றே நம்பினேன். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின்பு, இரண்டு வருடத்திற்குள் அறுவை சிகிச்சையோ, மருந்து மாத்திரைகளோ இன்றி முழுமையாக குணமடைந்தாள் எனது மகள். மற்ற குழந்தைகளைப் போன்று நன்கு வளரவும் செய்தாள்.

உண்மையான இறைவனைத் தேடி எனது ஆராய்ச்சி .
*****************************************
சரியாக நான்கு வருடங்கள் கழிந்திருந்தன. இறைவனுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற தயாராகவே இருந்தேன். எனினும் அதில் நான் தோற்றுத்தான் போனேன். ஏனெனில், உண்மையான இறைவனைத் தேடி யூத மத நூலான தோரா ( பழைய ஏற்பாடு ) மற்றும் யூத மத நூல்களை படிக்கவே செய்தேன். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

சத்தியத்தைத் தேடி பல சர்ச்சுகளுக்கு சென்று போதனைகளைக் கேட்டேன்.அமெரிக்காவில் உள்ள ரோமன் கத்தோலிக்க ஆலயங்களில் பலமணி நேரங்களை செலவிட்டுள்ளேன்.எனினும் கிறிஸ்தவத்தை என்னால் தழுவ இயலவில்லை. ஏனெனில், கிறிஸ்தவத்தின் பல்வேறு பிரிவுகளின் போதனைகள் பைபிளில் நான் படித்தவற்றுடன் ஒத்துப்போகவில்லை.

மோசஸின் வழியில் மூன்று இறைத்தூதர்கள்
******************************************
யூத நூல்களில் நான் படித்திருக்கிறேன். இறைத்தூதர் மோசஸை ( அரபியில் மூஸா நபி ) மூன்று இறைத்தூதர்கள் பின்பற்றுவார்கள் என்று. இயேசு கிறிஸ்து ( ஈஸா நபி ) திருமுழுக்கு யோவான் ( John the Baptist - அரபியில் யஹ்யா நபி ) ஆகியோரே இரண்டு நபர்கள். மூன்றாவது நபர் யாரென்று தெரியாமல் இருந்தது. பைபிளைப் படித்த பொழுது தெரிந்து கொண்டேன். இயேசு கிறிஸ்துவே பைபிளில் இறுதி இறைத்தூதரை பின்பற்றுவது தொடர்பாக கூறியுள்ளார். இயேசுவுக்கு பின்பு இறைத்தூதர் ஒருவர் உள்ளார் என்பது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தது. அதற்கு மேல் எதுவும் தெரியவில்லை.

சத்தியத்தை அறிந்தேன் இஸ்லாத்தை ஏற்றேன் .
******************************************************************
பிரபல இங்கிலாந்து அறிஞர் மார்டின் லிங்க்ஸ் (1909 – 2005). 1940 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்ற இவர், 1983 ஆம் ஆண்டு முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் நூலாக எழுதினார்.

‘ MUHAMMAD HIS LIFE BASED ON THE EARLIEST SOURCES ‘ ( இந்நூல் தமிழில் வெளிவந்துள்ளது) என்ற பெயரில் வெளிவந்த அந்நூலே ஆங்கிலத்தில் முஹம்மத் (ஸல்) அவர்களின் முழுமையான வாழ்க்கை வரலாறு குறித்து வெளிவந்த முதல் நூலாகும்.

தற்செயலாக இந்நூல் எனது கைகளில் கிடைத்தது. படித்தேன். பைபிளில் வாக்களிக்கப்பட்ட இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களே என்பதைப் புரிந்து கொண்டேன். அந்நூலைப் படித்த பிறகு திருக்குர்ஆனைப் படித்தேன். இறைவன் தொடர்ந்து தனது தூதர்களை அனுப்பி இருப்பதை அறிந்தேன். மோசஸையும், இயேசுவையும் அனுப்பிய இறைவன்தான் முஹம்மத் நபி (ஸல்) அவர்களையும் இறைத்தூதராக அனுப்பியுள்ளான் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

மேலும், ‘ இறைவன் ஒருவன் ‘ என்பதில் இஸ்லாம் முந்தைய யூத – கிறிஸ்தவ மதங்களைக் காட்டிலும் தனித்துவத்துடன் திகழ்வதை அறிந்தேன். இறைவனின் ஏகத்துவம், முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதுத்துவம், இஸ்லாத்தின் கொள்கைகள் ஆகியவற்றினால் கவரப்பட்டேன். இஸ்லாம்தான் இறைவனின் உண்மையான மார்க்கம் என்பதை நம்பத் தொடங்கினேன். இஸ்லாத்தை ஏற்றேன்.

எனக்கு ஏற்பட்ட சோதனைகள்.
*******************************************
இஸ்லாத்தை ஏற்ற பிறகு என் சொந்த வாழ்க்கையில் புயல் வீசியது. நான் இஸ்லாத்தை ஏற்றதை என் மனைவியால் தாங்க இயலவில்லை. என்னிடமிருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாள். கோர்ட்டில் நான் அடித்து துன்புறுத்தினேன் என்று கூறி விவாகரத்து கேட்டாள். ஆனால், நான் உண்மையில் மனைவியை அடிப்பவன் அல்ல. நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

எனது இரண்டு குழந்தைகளையும் தன்னுடன் அவள் எடுத்துக் கொண்டு போனாள். மேலும் நீதிமன்றத்தில் 100 வருடங்களுக்கு ஜீவனாம்சம் வேண்டுமென்று வாதிட்டாள். நீதிமன்றமும் இசைந்தது. ஜீவனாம்சமாக எனது வீடு மற்றும் இரண்டு கார்களை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொண்டாள்

. இதற்கெல்லாம் மேலாக இன்னொரு அநியாயமும் எனக்கு நடந்தது. அது, வாரத்தில் ஒரு நாள் எனது மகள்களை பார்க்கும் சமயத்தில் அவர்களை நான் அடித்து துன்புறுத்தி விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு அதிகாரி ஒருவரை நியமிக்கும்படி நீதிமன்றம் எனக்கு கூறியிருந்ததாகும். என்னமோ மனிதர்களை அடித்து துன்புறுத்தும் கொடுமைக்காரன் போன்று சித்தரிக்கப்பட்டேன்.

எந்த பிள்ளையைக் காப்பாற்ற இறைவனிடம் மன்றாடி உதவியைப் பெற்றதால், உண்மையான இறைவனை ஏற்றேனோ அந்தப் பிள்ளை இப்போது என்னுடன் இல்லை. எனது நெஞ்சம் கவலைகளால் கசங்கிப் போனது.

அத்துடன் எனக்கு இன்னொரு சோதனையும் வந்தது. அது என்னை ஈன்றெடுத்த தாய் – தந்தையர் என்னை வெறுத்ததாகும். இஸ்லாத்தை ஏற்றதால் அவர்கள் என்னை விலக்கி வைத்தனர். ஒரு முறை அவர்களிடமிருந்து எனக்கு கடிதம் வந்தது. இனி அவர்களை நான் பார்க்கக் கூடாது என்று. முழுமையாக குடும்ப உறவற்று அநாதையாகிப் போனேன்.

இஸ்லாத்தை ஏற்ற சமயத்தில் அமெரிக்க விமானப்படை மருத்துவராக 20 வருடங்களை பூர்த்தி செய்திருந்தேன்.

இஸ்லாத்தை ஏற்ற பிறகு அமெரிக்க ராணுவத்தில் ஒரு முஸ்லிமாக என்னால் பணியாற்ற இயலவில்லை. என் மனசாட்சி என்னைக் கொன்று போட்டது. பதவியை ராஜினாமா செய்தேன்.

மனைவி- பிள்ளைகளை இழந்தேன். வீடு வாசல்களை இழந்தேன். நண்பர்களை இழந்தேன்.கடைசியில் வேலையையும் இழந்து நின்றேன். பெரிய பண்ணை வீட்டில் வசித்த நான் குறுகலான ஏணிப்படி கொண்ட அறைகள் ஏதுமற்ற சின்ன வீட்டில் வசித்தேன். எல்லாவற்றையும் உண்மையான அந்த இறைவனுக்காகப் பொறுத்தேன்.

“ இஸ்லாத்தை ஏற்ற பிறகு அதுவரை என்னுடன் பழகி வந்த எனது நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தனர்.அதற்கு அவர்கள் சொன்ன காரணம், நான் நடன விடுதிகளுக்கு செல்வதில்லையாம். மது அருந்துவதில்லையாம் தோழிகளுடன் கைகுலுக்குவதில்லையாம். இதுதான் அவர்கள் என் மீது வைக்கும் குற்றச்சாட்டு.

நான் கேட்கிறேன், இயேசு எங்காவது நெருங்கிய குடும்ப உறுப்பினர் அல்லாத அந்நியப் பெண்களுடன் கைகுலுக்கியுள்ளாரா ? பைபிளில் எங்காவது அப்படி ஓன்று நடந்திருப்பதாக காட்ட முடியுமா ? நான் சவாலாக கேட்கிறேன்.

இன்றும் ஆர்த்தொடெக்ஸ் யூதர்கள் அன்னியப் பெண்களுடன் கைகுலுக்குவதில்லை. இயேசுவும் ஆர்த்தொடெக்ஸ் மதகுருவைப் போன்றே வாழ்ந்துள்ளார். இதுவே உண்மை, கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு இவர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள்?

இறைவனின் உதவி.
****************************
இஸ்லாத்தை ஏற்றதால் மனைவி பிள்ளைகளை இழந்தாலும் அல்லாஹ் என்னைக் கைவிடவில்லை. மிக நல்லதொரு குணவதியை அல்லாஹ் எனக்கு இரண்டாவது மனைவியாகத் தந்தான். அவள் மூலமாக அழகிய பெண் குழந்தையும் எனக்குப் பிறந்தாள். வீடு – வாசலை இழந்தேன்.எனினும் அல்லாஹ் என்னைக் கைவிடவில்லை.

உலக முஸ்லிம்களால் மிகவும் விரும்பப்படும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நகரமான மதீனா மாநகரில் எனக்கு அல்லாஹ் வீட்டைத் தந்தான். உலகின் மிக அழகிய நகரங்களான வியன்னா, சூரிச், வான்கூவர், ஜெனிவா, சிட்னி போன்ற நகரங்களை விட மிகச்சிறந்த நகரம் அது. ஏனெனில், அந்நகரில் தஜ்ஜால் ( அந்திக் கிறிஸ்து ) நுழைய இயலாது என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

என்னுடைய பழைய நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தாலும் அவர்களை விட எல்லா வகையிலும் சிறந்த நண்பர்களை அல்லாஹ் எனக்குத் தந்துள்ளான். உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் எனக்குத் தோழர்களாகவும் சகோதரர்களாகவும் ஆகிவிட்டனர். அல்லாஹ் போதுமானவன். “
___________________________________________________________

தற்பொழுது இஸ்லாமிய பிரச்சாரப் பணி செய்து வரும் இவர் மூன்று நூல்களை எழுதியுள்ளார். அவை,

1) The First and Final Commandment – By Laurance B Brown.

2) MisGod’ed: A Roadmap of Guidance and Misguidance in the Abrahmic Religions – By Laurance B Brown.

3) The Eighth Scroll – By Laurance B
------------------------------------------------
இறைவனுடைய தரிசனத்தை இம்மையிலும், மறுமையிலும் அடைய நாடுவீர்களாயின் முதலில் தன்னடக்கமும், மௌனமும், பொறுமையும் வேண்டும். அல்லாஹ்வின் தோழர்கள் (அவ்லியா) அவன் முன்பாக அடிபணிந்து ஒழுக்கத்துடன் இருப்பவர்களாவார்கள். உள்ளத்தில் தெளிவான உத்தரவு பிறக்காதவரை அசையவும் மாட்டார்கள். அவன் புறத்திலிருந்து ஏற்படக்கூடிய உதிப்பு வழியாக உத்தரவை எதிர்நோக்கி நிற்பார்கள்.

கௌஸுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு

slamic Animation | உலக முஸ்லீம்கள் நபி (ஸல் ) அவர்களை உயிரினும் மேலாக நேசிப்பது ஏன் ? என அறிவோம்.

நீங்கள் எத்தனையோ பேர்களை சந்தித்து இருப்பீர்கள். ஆனால் '

நீங்கள் எத்தனையோ பேர்களை சந்தித்து இருப்பீர்கள். ஆனால் அவர்களிடத்தில் உர்க்காரும்போதோ பேசும்போதோ அல்லது அவர்களிடத்தில் உங்களுக்கு ஏதோவொரு தேவை நிறைவேற வேண்டும் என்று நினைத்து​, ஆனால் அந்த காரியம் முடியாமல், மேலும் நீங்கள் ஏதோவொரு களைப்பு உங்களிடம் ஏற்பட்டு இருப்பதை உணர்வீர்கள். இப்படியொரு அனுபவம் உங்களுக்கு உண்டா?. அது ஏனென்று தெரியுமா உங்களுக்கு?.

Friday, October 27, 2017

முகஸ்துதியின் விபரீதம்!


அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

அல்லாஹ் கூறுகின்றான்:

‘வணக்கத்தை அல்லாஹ்வுக்கே உரித்தானவர்களாக அவனையே வணங்க வேண்டும் என்றே அவர்கள் ஏவப்பட்டுள்ளார்கள்’ (அல்-குர்ஆன் 98:5)

அன்பு சகோதர, சகோதரிகளே! இந்த வசனத்தை நாம் நன்கு சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம். தொழுகை, ஜக்காத், ஹஜ் முதற்கொண்டு நாம் செய்யக்கூடிய அனைத்து அமல்ககளும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முக்கிய இரண்டு நிபந்தனைகள் இருக்கின்றன. அவைகள்:

நாம் செய்யும் அமல்கள் அல்லாஹ்வுக்காகவே என்ற இஃக்லாஸ்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் செய்தல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

Saturday, October 14, 2017

ஆங்கில மருத்துவத்தை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

அலோபதி எனும் ஆங்கில மருத்துவத்தால் கேடுகள் ஏற்படுவதால் அந்த மருத்துவம் செய்வது இஸ்லாத்துக்கு எதிரானது என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். கேடு தரும் அனைத்தும் மார்க்கத்தில் ஹராம் என்ற நபிமொழியை எடுத்துக் காட்டுகிறார்கள்.
சில நோய்கள் வாராமல் இருக்க தடுப்பூசி போடுவதும், போலியோ சொட்டு மருந்து போடுவதும், காய்ச்சல், சர்க்கரை நோய்க்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதும் கூடாது எனவும் பிரச்சாரம் செய்கிறார்கள்.

Friday, October 13, 2017

நான்.... நான் ஆனேன்...!*

நான்.... நான் ஆனேன்...!*
நிதர்சனத்தில் நீந்துகின்ற
நிழல் ஆனேன்
நிம்மதியை தேடுகின்ற
நிஜம் ஆனேன்
மனிதத்தை மரணிக்கவிட்ட
பதர் ஆனேன்
மாற்றத்தை மாற்றிவிட்ட
புதிர் ஆனேன்
ஆணவமே ஆளுமையென்று
திமிர் ஆனேன்
ஆசையை துரத்துகின்ற
ஆன்மா ஆனேன்
சூழ்சிகளே சூத்திரமென
துதிக்கல் ஆனேன்

மானிட சேவையே இறைவனுக்கான சேவை

Nagore Rumi
மானிட சேவையே இறைவனுக்கான சேவை (இறைவன் தேவைகளற்றவனாதலால் அவனுக்கு யாரும் சேவை செய்ய முடியாது) என்பதை உணர்த்தும் ஒரு அழகான நபிமொழி. நான் சமீபத்தில் முழுமையாகப் படித்து முடித்த ஆதாரப்பூர்வமான நபிமொழித்தொகுப்பான ஸஹீஹ் முஸ்லிம் என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது (ரஹ்மத் அறக்கட்டளை வெளியீடு, மின் நூல்).
நபிமொழி எண் 5021
அறிவிப்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர் அபூ ஹுரைரா அவர்கள் (இறைவன் அவரைப் பொருந்திக்கொள்வானாக)
மறுமை நாளில் அல்லாஹ் ஒரு மனிதனிடம் இப்படிக் கேட்பான்:
நான் நோயுற்றிருந்தேன், நீ ஏன் என்னைப் பார்க்க வரவில்லை?
அகிலத்தின் அதிபதியாகிய நீ எப்படி நோயுற்றிருப்பாய்? உன்னை நான் வந்து எப்படிப் பார்ப்பேன்?

Wednesday, October 11, 2017

”நான் பெண்மக்களின் தந்தை!”

Yembal Thajammul Mohammad
*******************************************************************************
“நான் பெண்மக்களின் தந்தை என்பதில் பெருமைகொள்கிறேன்” என்பது அண்ணல் நபி(ஸல்)அவர்களின் பெருமிதப் பிரகடனம்.
*******************************************************************************
அன்னையவர் காலடியில்
அடையஅரும் சொர்க்கத்தை
முன்னிறுத்திக் காட்டியஎம்
முஹம்மதுவே, நாயகமே! ................1
உற்றாரில் உறவினரில்
ஊருலகில் தாய்தானே
முற்றமுதற் சுற்றமென
முன்மொழிந்த நாயகமே! ……….…..2

Thursday, October 5, 2017

இறைவனை நேசிப்பது எப்படி? – How to Love God?


நம்மில் பெரும்பாலானோரின் இதயத்தில் இவ்வினா உதித்திருக்கும். சிலர் ஆன்மீக வழிகாட்டிகளான ஷெய்குமார்களிடம் இக்கேள்விக்கான விடையை தேடியிருப்பார்கள். சிலர் ஞான நுால்களை புரட்டியிருப்பார்கள். இன்னும் சிலர் இறைநேசர்களின் வாசல்களில் தஞ்சம்கொண்டு தவமேற்றிருப்பார்கள், சிலர் ஆண்டவனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து தொழுது அவனது ஏவல் விலக்கல்களை ஏற்று நடத்துவதே அவனது நேசத்திற்கான வழியென்று முடிவுசெய்திருப்பார்கள்.

ஆனால் இறைநேசம் தேடும் ஞானம் தனித்தன்மை வாய்ந்தது அதிலும் தஸவுஃப் என்னும் ஏகத்துவ ஞானம் சற்று வித்தியாசமானது, நான் கூறப்போகும் செய்திகள் உங்களை ஞானக்கோட்டைக்கு அழைத்துச் செல்லாவிடினும் அதன் வாசல்படிகளிளாவது உங்கள் காலடிகளை எடுத்து வைக்க உதவும்.

Wednesday, October 4, 2017

Paesum Thalaimai - Poet of captivating spell ‘Kaviko’ Abdul Rahman | 05-04-2015

கண்ணியமிக்க எனது சகோதரர்களே

கண்ணியமிக்க எனது சகோதரர்களே! நானும் சிந்திக்கிறேன், நம்மில் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். நாம் ஏன் இறைவனின் அன்பிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறோம்? எல்லாப் புறங்களிலும் துன்பங்கள் ஏன் சூழ்ந்துக் கொண்டிருக்கின்றன? காபிர்கள் இறைவனை வழிபடாதவர்கள் என்று யாரை நாம் சொல்கிறோமோ அவர்கள் நம்மை விட எல்லா விதத்திலும் ஏன் மோலோங்கி நிற்கிறார்கள்? இறைவனுடை சட்டத்துக்கு பணிந்து நடப்பதாய்ச் சொல்லிக் கொண்டிருக்கும் நாம் ஏன் ஒவ்வொரு இடத்திலும் தாழ்வுற்றுக் கிடக்கிறோம்?

Wednesday, September 27, 2017

எத்தனை மாற்றங்கள் இந்த மண்ணில்..!!!

சில மணி நேரங்கள் விழுந்த மழைத்துளிகளால் எத்தனை மாற்றங்கள் இந்த மண்ணில்..!!!
செம்மறியை ஒத்த சாரீரத்தில் குரல் எழுப்பி துணை தேடும் தவளைகள்! எங்கள் ராகதேவன் இளையாராஜாவுக்கு இசை சொல்லி இவைகள் தந்ததோ என எண்ணும் வகையில் வகை வகையாய் ரீங்காரமிடும் கிரிட்டிப்பூச்சிகள்! ஏழு சுவரங்களை தாண்டிய வகையில் எத்தனை அழகான இசைக்கச்சேரி! ஜதி சேர்ந்ததா அல்லது சுதி கூடியதா தெரியவில்லை! அந்த சாரீரம் இந்த சரீரத்தையும் அசைத்துப்பார்க்கிறது!

அசைவில்லா சுழற்சி ....!


தொடர் சுழற்சியின்
அசைவுகள் உணரப்படாமலே
ஆணி வேர் ஆளம்தொட்டு
நிலைத்து நிற்பதாக
எண்ணத்தில் மமதைகொண்டு
மனக்கோட்டை பலவும்
அந்தரத்தில் கட்டிக்கொண்டு
அடுத்தவரை குறைசொல்லி
தூரவிலக்கி தூக்கியெறிந்து
அவகாசம் கொடுக்காமல்
தான்மட்டும் சரியென
சுடுசொல் உமிழ்ந்து
அமைதிப்பட்டு விட்டதாக
இறுமாப்பு கொள்கிறான்

Friday, September 22, 2017

என்னத்தில் இருப்பதைத் தான் கவிதையாக வடித்தேன்...பாடினேன் ..

என்னத்தில் இருப்பதைத் தான் கவிதையாக  வடித்தேன்...
இறைவனைப் புகழ்ந்து இசை படித்தேன்..!
அமைதியை விரும்பும் அனைவரும் கேட்டு கருத்துப் பிழை இருந்தால்
comment please.!


Haja Maideen

https://www.facebook.com/

Thursday, September 21, 2017

இஸ்லாமிய புத்தாண்டு ஹிஜ்ரி 1439 ....

அப்துல் கபூர்

இதயத் தளங்களில்
கனிய வைத்து
மணம் பரப்புகிற
இனிய வாழ்த்துக்களை
உரித்தாக்கி மகிழ்கிறேன் ....
புதிய வருடமதில்
வல்லோன் அல்லாஹ்
பணிக்கிற கட்டளைக்கு
பயணிக்கிற நாட்கள்
நலமாய் அமையட்டும் ....

Sunday, September 17, 2017

ரப்பே!இந்த காலை வேளையில் ...

அல்லாஹ்வே உனக்கே எல்லாபுகழும்,நன்றியும்
யா அல்லாஹ்! இன்றைய நாளை எங்களின் நெருக்கடியிலிருந்து விடுபடும் நாளாக ஆக்குவாயாக!
எங்களின் தேவைகள் நிறைவேறும் நாளாக ஆக்குவாயாக!
எங்களின் துஆக் கள்
ஏற்றுக் கொள்ளப் படும்
நாளாக ஆக்குவாயாக

Saturday, September 16, 2017

ஏகாந்த_மனிதன்

அன்றாடம் விடிந்தாலும்
அதிகாலை விடியலொன்றில்
கண்டெழுந்த கனவில்
உடுத்தியிருந்த
பட்டும் பீதாம்பரமும்
அணிந்திருந்த
பொன்னில் பதித்த
வைடூர்ய அணிகலனும்

தியானம் செய்யும்போது தடைகள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

மனதை ஒருமுகப்படுத்தி பல சாதனைகளை புரிய உதவுகிறது தியானம். உதாரணமாக ஜெனிடிக் இன்ஜினியரிங்கில் ஜீன்களில் உள்ள விவரங்களை, நோய்க்குறிப்பை மாற்றியமைத்து நோயை நீக்கிக்கொள்ளலாம் . ஆயுள் விவரத்தை மாற்றியமைத்து ஆயுளை அதிகரித்துக்கொள்ளலாம். ஆனால் இத்தகைய மாற்றங்கள் நிகழ வேண்டுமென்றால் சில காலங்கள் எடுக்கும். அதுபோல செலவே இல்லாமல் மன எண்ணத்தாலேயே , ஆர்.என்.ஏ, டி.என்.ஏ பதிவுகளை மாற்றியமைத்து நமது சுபாவங்களையும் , ஆயுளையும் , ஆரோக்கியத்தையும் , அற்புத ஆற்றல்களையும் பெறுவதற்கு பெரிதும் உதவுகிறது தியான பயிற்சி .

Friday, September 15, 2017

புறம்.......பேசாதீர்கள்

அன்புடன் அமானுல்லா மரைக்கார்

முஸ்லிம்களைப் புறம் பேசுவதும் அவர்களின் கண்ணியத்திற்கும் மான மரியாதைக்கும் இழுக்காகப் பேசுவதும் பெரும்பாலான சபைகளுக்கு சர்க்கரைப் பொங்கலாக ஆகிவிட்டது. புறம் பேசுவதை அல்லாஹ் தடை செய்துள்ளான். அதை விட்டும் தன் அடியார்களை விலகியிருக்கச் செய்திருக்கிறான். மனித உள்ளங்கள் அருவருப்பாகக் கருதுகின்ற விதத்தில் அதற்கு ஓர் உவமானம் கூறியுள்ளான்: “உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்து விட்ட தன் சகோதரரின் இறைச்சியை உண்ண விரும்புவாரா? அதை நீங்கள் வெறுகின்றீர்கள்” (49:12)

Thursday, September 14, 2017

ஹைதர் அலி செய்த உதவி

வேலுநாச்சியாருக்கு ஹைதர் அலி செய்த உதவிகளில்.. ஆங்கிலேயரை எதிர்க்க வேலுநாச்சியாருக்கு உதவிட.. ஹைதர் அலி.. தன் மகன் திப்புவையே படைத்தளபதியாக்கி அனுப்பி வைத்தார்.

வேலுநாச்சியாரின் கணவரின் படுகொலைக்குப் பின் அவருக்கு அடைக்கலம் அளித்தது.. மைசூர் அரசு.

Wednesday, September 13, 2017

வாரும் நபியே நீர் வாரும் நபியே


(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
(அல்-குர்ஆன் 21: 107)

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
(அல்-குர்ஆன் 33:21)

(நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
(அல்-குர்ஆன் 68:4)
---------------------------------------


வாரும் நபியே நீர் வாரும் நபியே – எம்
வள்ளல் இரசூல் நபியே நூருன் நபியே
ஆளும் நபியே எமை ஆளும் நபியே – அகம்
ஆனந்தமே அள்ளித் தரவாரும் நபியே
வழிமீது விழிவைத்து வரும் வேளை நோக்குகிறோம்
வாரும் நபியே முகம்பாரும் நபியே – எங்கள்
வாஞ்சை மன ஏக்கமதை தீரும் நபியே

அவ்வலும் நீரே ஆகிரும் நீரே
ஆதியில் நூராய் வந்த ஜோதி நபியே
அகமதும் நீரே முகமதும் நீரே
அல்லாஹ்வின் தூதாய் வந்த நீதி நபியே – எங்கள்
இன்பதுன்பம் அனைத்திலும் எங்கள் துணையே – உங்கள்
அன்பு நெஞ்சம் பாவி தஞ்சம் புகும் மனையே – நீர்
இல்லாமல் வாழ்வில்லை உண்மையே - இதை
சொல்லாமல் வாழ்ந்தென்ன நன்மையே
உடலோடு உடலாக உயிரோடு உயிராக
வாழும் நபியே எம்மில் வாழும் நபியே – உம்
வாஞ்சை முகம் காண வேண்டும் வாரும் நபியே
வாரும் நபியே நீர்வாரும் நபியே – வந்த
வாசல் ஸ்தலம் வாசம் வீசும் வேந்தர் நபியே

கோடான கோடி கல்புகள் நாடி
கோவென்று போற்றிக் கொண்டாடும் நபியே
பாமாலை சூடி பொழுதெல்லாம் கூடி
பாசத்தை கொட்ட மனம் நாடும் நபியே – உயர்
மஞ்சத்திலே வீற்றிருக்கும் மன்னர் நபியே – எம்
நெஞ்சத்திலும் வீற்றிருக்க வாரும் நபியே – உமை
காணாமல் ஒளி இல்லை கண்ணிலே – மொழி
கேளாமல் சுகமில்லை நெஞ்சிலே
பேரின்ப காதல் மனம் பாவி எங்கள் நெஞ்சுக்குள்ளே
வீச நபியே நீர் வாரும் நபியே – வரும்
பாதைமலர் தூவுகின்றோம் வாரும் நபியே
வாரும் நபியே நீர் வாரும் நபியே – வந்த
வாச ஸ்தலம் வாசம் வீசும் வேந்தர் நபியே

கஸ்தூரி வாசம் வீசும் மெய் தேகம்
கருமேகம் குடை இடும் காமில் நபியே
மெய்யவன் நேசம் வாரியே வீசும்
மிஃராஜு ராஜர் எங்கள் மேன்மை நபியே – வழி
தோரணங்கள் கட்டிவைப்போம் வாரும் நபியே – சுப
சோபனங்கள் பாடிநிற்போம் வாரும் நபியே – உமை
கொண்டாடும் உள்ளங்கள் தவிக்குது – தினம்
மன்றாடி கண்ணீரில் மிதக்குது
மதீனாவின் திசைநோக்கி ஸலவாத்தை இசையாக்கி
பாடிநிற்கின்றோம் முகம் தேடி நிற்கின்றோம் - எங்கள்
மன்னர் உங்கள் வரவையே நாடி நிற்கின்றோம்
வாரும் நபியே நீர் வாரும் நபியே – வந்த
வாச ஸ்தலம் வாசம் வீசும் வேந்தர் நபியே

லட்சிய கீதம் லட்சத்தில் ஓதும்
முத்திரையிடப்பட்ட சொர்க்க நபியே
உச்சத்தின் உச்சம் உம்மத்தின் நேசம்
உள்ளத்தில் கொண்ட உயர்வர்க்க நபியே
உடல் நாளம் போடும் தாளம் உங்கள் காதல் இசையே
எங்கள் காலம் ஓடும் காதல் நபி காலடியிலே
இந்த இகவாழ்வில் எமை காக்கும் நாயகம்
நீர் மறுவாழ்வில் கரைசேர்க்கும் தாயகம்
கலிமாவின் பொருள் சொல்ல வலிமார்கள் வழிவந்து
வாழும் நபியே எமை காரும் நபியே
உங்கள் காதல் மொழி காதில் விழ வாரும் நபியே
வாரும் நபியே நீர் வாரும் நபியே – வந்த
வாச ஸ்தலம் வாசம் வீசும் வேந்தர் நபியே

மக்கத்தில் நீரும் துயர் கண்ட நேரம்
பக்கத்தில் இல்லை நாங்கள் பண்பு நபியே
மதீனத்து வீதி மகிழ்ந்தாடும் நேரம்
மகிழ்ந்தாட இல்லை நாங்கள் மாண்பு நபியே – தாங்கள்
தாயிஃபிலே பட்ட துயர் கொஞ்ச நஞ்சமா – உயர்
தாயின் மனம் கொண்ட உம்மில் அருள் பஞ்சமா – நீர்
தரவேண்டும் திருக்காட்சி கண்ணிலே – உடன்
வரவேண்டும் அடிமைகள் முன்னிலே
குருநாதர் உருவாக திருஞானம் தருவோரே
வாரும் நபியே துயர் தீரும் நபியே – கவி
பாடும் எமின் ஏக்கம் தீர வாரும் நபியே
வாரும் நபியே நீர் வாரும் நபியே – வந்த
வாச ஸ்தலம் வாசம் வீசும் வேந்தர் நபியே

இறைவா ....

இறைவா ....
நீ
ஆதத்தை சந்தோஷப்படுத்த
ஹவ்வாவைப் படைத்து
சொர்க்கத்தைக் கொடுத்தாய்
அவரோ
ஹவ்வாவை
சந்தோஷப்படுத்த
கனியைப் புசித்து
பூமிக்கு வந்தார்
நீ
வேதங்களைத் தந்து
வழியைத் தந்தாய்
நாங்கள்
பேதங்களை வகுத்து
விழிகளை இழந்தோம்

Saturday, September 9, 2017

நிழல்கள் நிறம் மாறுவதில்லை ....!

நிஜமென கொக்கரித்து
நிஜத்தை விழுங்கிவிட
எத்தனித்த நிழல்
நிதர்சனம் தன்னிலையில்
பிறழாமல் ஒரேநிலையில் நிற்க
ஒளிவிழும் தன்மைக்கேற்பவும்
நிற்கும் மேடு பள்ளத்தின்

Thursday, August 31, 2017

நபி இப்ராஹீம் ( அலை) அவர்கள்............

- தக்கலை கவுஸ் முஹம்மத்
நபி இப்ராஹீம் ( அலை) அவர்கள்............
@ இஸ்லாம் எனும் வார்த்தைக்கு நிதர்சன வாழ்வில் பொருள்தந்தவர்
@ இறையாணை என்றவுடன் சிலைத்தொழில் விற்பன்னருக்கு மகனாக பிறந்தும் தயங்காமல் தவ்ஹீதை தரணியிலே எடுத்துரைத்தவர்
@ இறையாணை என்றவுடன் தன் மனைவியையும் அருமை புதல்வனையும் பாலைவனத்தில் குடியமர்த்தியவர்
@ இறையாணை என்றவுடன் ஆதிஆலயமான கஃபாவை தன் புதல்வனுடன் சேர்ந்து புனர்நிமானம் செய்தவர்
@ தள்ளாடும் பருவத்திலும் தனக்கொரு பிள்ளைவேண்டுமெனும் ஆசை இறை அருளில் நிராசை கொள்ள செய்யவில்லை தொடர் பிராத்தனை பருவம் கடந்தாலும் பலன் செய்யும் என்பதை உரக்க உணர்த்தியவர்
@ ஆசை ஆசையாய் இறைஞ்சி பெற்ற அருமைப் புதல்வனை " தாரும்எனக்கு" என்று கேட்ட உடையவன் அல்லாஹ்விற்கு தயங்காது தரத்துணிந்தவர்
@ வாருங்கள் ஹஜ்ஜுக்கு எனும் அவரது அழைப்பை ஏற்று பாரெங்கும் உள்ள மக்கள் அலை கடலென அணிதிரள்வதை பார்க்க பல கோடி கண்கள் வேண்டும்

தியாகங்கள் செய்வோமே ....!

பார்வை தெளிந்து
பாதை திறந்து
நேர்வழி தெரியட்டுமே
தன்னலம் அகன்று
வறுமை ஒழிந்து
சுபிட்சம் பிறக்கட்டுமே
மனதில் நிறைந்து
செயலில் வடித்து
காரியங்கள் ஆகட்டுமே
உழைப்பில் மிளிர்ந்து
உன்னதம் அடைந்து
செல்வம் சேரட்டுமே

Wednesday, August 30, 2017

இஸ்லாம் என்பது அரேபிய கலாசாரமா?

சில இந்துத்வாவாதிகள் இஸ்லாமிய மார்க்கம் என்பது அரேபிய கலாசாரத்துக்காக உருவாக்கப்பட்டது என்ற வாதத்தை வைக்கின்றனர். ஆனால் இங்கு கொரிய முஸ்லிம்கள் ஹஜ் பயணம் முடிப்பதற்காக ஆயத்தமாவதை பார்க்கிறீர்கள். அரேபியர்களுக்கும் கொரியர்களுக்கும் எந்த வகையிலாவது ஒற்றுமை உண்டா? நிறம், குணம், சாப்பிடும் வழக்கம், உடை உடுத்தும் முறை என்று எதை எடுத்தாலும் மாற்றத்தைக் காணலாம்.

Monday, August 28, 2017

கல்லால் சில பேர் அடித்தார்கள்..

Saif Saif
கல்லால் சில
பேர் அடித்தார்கள்..
கடும் சொல்லால் பல
பேர் வதைத்தார்கள்.
எல்லா துயரத்தையும்
சகித்தார்..
நபி அல்லாஹ் ஒருவன்
என்றே உரைத்தார்.."
என்று நாகூர் அனிபா பாட கேட்டிருப்போம்..
அந்த நிகழ்வுகளின்
உண்மையை அறியும் போது நெஞ்சம் நம்மையறியாமல்
பதைபதைப்பதை ஏனோ
தடுக்க முடியவில்லை..
நபியின் சித்தப்பா அபூலஹப் நபிக்கு செய்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
நபியின் வீடு அபூலஹபின் வீட்டோடு இணைந்திருந்தது..
அவனும்,அவனது அண்டை வீட்டுக்காரர்களும்
நபிக்கு எப்போதும்
நோவினைக் கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள்..
அதில் முக்கியமானவர்கள்..

Saturday, August 26, 2017

ஏற்படுத்தப்பட்ட இழப்புகள்

ஏற்படுத்தப்பட்ட இழப்புகள் 
எண்ணிலடங்காதது தான்
அதற்கான கூலியை 
ரப்புல் ஆலமீன் தரட்டுமாக !!
யா அல்லாஹ் ..
நீ ரஹ்மான் 
நீ ரஹீம்
உன் கருணை 
உன் கோபத்தை வென்றுவிடுவதாக
நீயே சொல்லியிருக்கிறாய்.

Friday, August 25, 2017

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாறு - ஒரு வரலாற்றுப் பார்வை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாறு - ஒரு வரலாற்றுப் பார்வை

1142 ஆண்டுகள் இந்தியத் திருநாட்டை முஸ்லிம்கள் ஆட்சி செய்துள்ளனர். முகலாய சக்கரவர்த்திகளின் காலத்தில் இந்திய துணை கண்டமே அவர்களின் ஆட்சியில் இருந்துள்ளது.


ஆயினும் 592 ஆண்டுகள் முஸ்லிம் மன்னர்களுக்கு தலைநகராக இருந்த டெல்லி உட்பட இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருப்பது மட்டுமின்றி கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் அனைத்திலும் பின்தங்கியுள்ளனர்.

ஆக முஸ்லிம் மன்னர்கள் முஸ்லிம்களுக்காக ஆளவும் இல்லை; இஸ்லாத்தை பரப்புவது அவர்கள் நோக்கமும் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.


முஸ்லிம் லீக் உருவாக்கப்பட்டது ஏன்?
1600 டிசம்பர் 31


பேரரசர் அக்பர் ஆட்சி செய்து கொண்டிருந்த போதுதான் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலடி எடுத்து வைக்கிறது.
1799 மே 4 மைசூர் போரில் மாவீரன் திப்பு சுல்தானின் வீரமரணத்தை அடுத்து 1806 ஜுலை 10ல் வேலூரில் நடைபெற்ற சிப்பாய் புரட்சிதான் ஆங்கில ஏகாதி பத்தியத்தை விரட்டும் இந்திய சுதந்திர வேட்கைக்கு அடித்தளம் அமைத்தது.


1857 - இந்திய வரலாற்றில் திருப்புமுனை ஆண்டு! முகலாயப் பேரரசர் பஹதூர்ஷா தலைமையில் முதல் சுதந்திரப் போர் வெடித்தது.
அக்கிளர்ச்சி அடக்கப்பட்டு பஹதூர்ஷா கைது செய்யப்பட்டதும் இது இந்தியர்களின் உள்ளத்தில் தேசிய உணர்வை கொளுந்து விடச் செய்தது.
கிளர்ச்சி அடக்கப்பட்டதும் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கம் விக்டோரியா மகாராணியிடம் ஒப்படைக்கப்பட்டது.


1858 நவம்பர் 1 - அலகாபாத்தில், விக்டோரியா மகாராணியின் அறிக்கையை கவர்னர் ஜெனரல் கானிங் பிரபு சமர்ப்பித்தார்.

நல்லடியானாக வாழ்வது எப்படி

மனிதர்கள் இறைவனுக்கு அடிபணியவே படைக்கப்படடிருப்பதால், அவனை வணங்கி வழிபடுவது எப்படி என்பதை அவர்கள் அறிந்திருப்பது கடமையாகும். இதுவும் குர்ஆனில் அறிவிக்கப்பட்டுள்ளது. ( 22:67)

ஒவ்வொரு வகுப்பாருக்கும் அவர்கள் வணங்குவதற்கு உரிய வழியை நாம் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். எனவே அந்த விவகாரத்தைப் பற்றி அவர்கள் உம்மிடம் தர்க்கிக்க வேண்டியதில்லை. (22:67)

Wednesday, August 23, 2017

உணவு தர்மம்...........உன் உயிர் காக்கும் தர்மம்.

இஸ்கந்தர் பராக் Iskandar Barak
தங்களால் இயன்றதை செய்யும் தர்மங்களில் இந்த உணவு தர்மமே கடவுளுக்கு பிடித்ததும் அவனுக்கு நெருக்கமானதுமென்கிறார் நபிகள் நாயகம்.
உங்கள் மனசில் சஞ்சலமா
உங்களுக்கு பொருளாதார நெருக்கடியா
உங்கள் உடமைகள் தவறிவிட்டதா

ஆதியந்த முமில்லாது ஆளும் இறையோனே!

ஆதியந்த முமில்லாது
ஆளும் இறையோனே!
நாளை மறுமையிலே
நாதியிலாது நான் தவிக்கும் வேளையிலே!
மேதினியில் உதவுதற்க்கு யாருமிலையே!
நின் கருணை என்மேலும் உலகுவாழ் உயினங்கள் அனைத்தின் மீதும்
பொழிய வைப்பாய் கருணாகரனே!!
செய்த பழி பாவங்கள் அனைத்திற்கும் கணக்கு கேட்டால் கைசேதமே!
கருணையின் திருவுருவே!
சத்தியமாய் நிரந்தரமாய் வாழும் சர்வேஸ்வரா!!
சாந்தமான பார்வையினை எம்மீதும் உலகோர் மீதும் செலுத்திடுவாய்
ரஹ்மானே! ரப்புல் ஆலமீனே!!

Sunday, August 20, 2017

ஏறத்தாழ ஐந்து லட்சம் முஸ்லிம்கள் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார்கள்

இஸ்லாத்தை கேவலப்படுத்துவதாக நினைத்து தன்னை கேவலப்படுத்தி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்..!!!

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இன்று நான் அதிரடியாகச் செய்யப்போகும் செயலால் அவை முழுதும் தன்னைப் பாராட்டும்” என்று நினைத்துக் கொண்டார் பவ்லின் ஹான்சன் எனும் பெண் உறுப்பினர்.

இவர் தீவிர வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஆவார்.
பவ்லின் ஹான்சன் என்ன செய்தார் தெரியுமா?
முஸ்லிம் பெண்கள் அணிவது போன்ற புர்காவை அணிந்துகொண்டு நாடாளுமன்றம் வந்தார்.
தாம் பேச எழுந்தபோது புர்காவைக் கழற்றி வீசியபடி, “ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற மத உடைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது, தடை விதிக்க வேண்டும்” என்று வேகமாக வலியுறுத்தினார்.

Saturday, August 19, 2017

"என்னால்" "நான் தான்" என்ற பாரம் ஏற்ற ஏற்ற கணம் தாங்கமுடியாமல்

"என்னால்" "நான் தான்" என்ற
பாரம் ஏற்ற ஏற்ற கணம் தாங்கமுடியாமல்
தலை புஜம்
கால்கள் கரங்கள் சிரம்
அழுத்தமடைந்து
அச்சு முறிகிறது.
வெறுப்பும் பகையும்
அச்சமும் கவலையும் தோன்றி
எம்மை
மிக தீவிரமாக அச்சுருத்துகிறது.

ஹஜ் பயணிகளுக்கு அனுமதி: கத்தர் வரவேற்பு!

கத்தர் ஹஜ் பயணிகளுக்கு விமானம் மற்றும் தரை வழிகளை சவூதி அரேபியா திறந்து கொடுத்துள்ளதைக் கத்தர் வரவேற்றுள்ளது.
கத்தரிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்கு விமானம் மற்றும் தரை வழிபோக்குவரத்து திறந்து கொடுக்கப்படும் என சவூதி அரேபியா அறிவித்தது.

Thursday, August 17, 2017

வெள்ளிக்கிழமை வணக்கத்துக்குரிய நாள்!

بسم الله الرحمن الرحيم  
الجمعة يوم عبادة
ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அவனது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

மனிதர்கள் தங்களின் திருநாட்கள் மீண்டும் மீண்டும் வருவதிலும், அதை கொண்டாடுவதிலும், அந்த நாட்களை நினைவு கூர்வதிலும் சந்தோஷமடைகின்றனர். அதே போன்று தான் இஸ்லாமிய சமூகத்துக்கு அல்லாஹ்வை வணங்கக்கூடிய திருநாளாக வெள்ளிக்கிழமைதினம் இருக்கின்றது.

காலங்களுக்கு பொய்......../ தமிழ் பிரியன் நசீர்

காலங்களுக்கு
பொய்........
வர்ணங்களை
காணிக்கையாகத்
தந்து.........்
எங்கள் கனவெனும்
ஓவியங்களை
வரைந்து ..........

Wednesday, August 16, 2017

இன்னா செய்தாரை..


Noor Mohamed

அண்ணல் நபிகளாரின் ஆருயிர்நண்பர்,நபிகளாரின் மறைவுக்குப்பிறகு சமுதாயத்திற்குத் தலைமையேற்ற முதல் கலீபா அமீருல் முஃமினீன் அபூபக்கர் ஸுத்தீக்(ரலி) அவர்கள் இயல்பிலேயே இரக்கசிந்தையும் ஈகைக் குணமும் அமையப்பெற்ற அருமையான மனிதர்.நபித்தோழர்களில் ஒருவர் மிகவும் ஏழ்மையில் இருந்த நிலையில் அவருக்கு வழமையாக உதவிசெய்து வந்தார்கள் ஸித்தீகுல் அக்பர் அவர்கள்!

Saturday, August 12, 2017

.இந்திய பிரிவினைக்கு யார் காரணம்? முஸ்லிம்களா? ஹிந்து தீவிரவாதிகளா? பகுதி 1

--கணியூர் இஸ்மாயீல் நாஜி
இந்து – முஸ்லிம் உறவு கடந்த காலங்களில்.
.
கி.பி. 8ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 18 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியை தலைச்சிறந்த ஆட்சியென போற்ற இயலாவிட்டாலும் இந்த 10-ஆம் நூற்றாண்டு காலக் கட்டத்தில் இந்து – முஸ்லிம் கலவரங்கள் நடந்ததாக இந்திய சரித்திரத்தின் ஒரு பகுதியிலும் கூட காண இயலாது. ஆனால் ஏகாதிபத்திய வெள்ளையர்கள் தங்கள் ஆட்சியை இங்கே நிலை நிறுத்த முயன்ற 19ஆம் நூற்றாண்டில் தான் நாம் முதன் முறையாக இந்து – முஸ்லிம் கலவரங்களைப் பற்றி அறிகிறோம்.
பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்களும் முஸ்லிம்களும்
இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்தாளுதல் மூலமே தங்களின் ஆட்சியை நிலைபெற வைக்க முடியுமெனத் திட்டமிட்டனர் வெள்ளையர். அதற்கு இரு வழியினைக் கடைப்பிடித்தனர்.

மனித உரிமை மதிக்கப் படும் நாடு (லண்டன்)

மனித உரிமை மதிக்க படும் நாடு (லண்டன்) 
மனித வருமை ஒழிக்கப் பட்ட நாடு. ..
உயிரின் மதிப்பை உணரப்பட்ட நாடு,
மத சுதந்திரத்தை காக்கப்படும் நாடு,
அனைவரும் சமம் என்ற சமத்துவ நாடு, மக்களின் நலம் பேணும் மருத்துவ நாடு

Thursday, August 10, 2017

விமான ஓட்டியாக இஸ்லாமியப் பெண்கள்

ஷரீஃபா, ஷரியானா, நதியா என்ற மூன்று இஸ்லாமிய பெண்மணிகள்.
புருனை ஏர்லைன்ஸ் 787 ஜெத்தாவில் பாதுகாப்பாக இறங்கியது. இதில் என்ன விசேஷம்? இந்த விமானத்தை இயக்கியது ஷரீஃபா, ஷரியானா, நதியா என்ற மூன்று இஸ்லாமிய பெண்மணிகள்.

இஸ்லாம் பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைத்துள்ளது என்று கூறுபவர்களுக்காக இந்த பதிவு!
http://suvanappiriyan.blogspot.com/2017/08/blog-post_34.html

Wednesday, August 9, 2017

முஸ்லீம்களின் ஊரில் தான் மாடுகள்...

முஸ்லீம்களின் ஊரில் தான் மாடுகள்...
பாதுகாப்புடன் வாழ்கிறது என்பதின் காட்சியை இன்று காலையில் கண்டேன்.!
இது இறச்சிக்காக வளர்கப்படும் மாடுகள் அல்ல.!
பாலுக்காக வளர்கப்படும் பசுக்கள்..!
இதன் உரிமையாளர் இந்துவாக கூட இருக்கலாம்.
மதம் மாடுகளுக்கு இல்லை.!
எந்த மாடாக இருந்தாலும் முஸ்லீம்களை
பொருத்தவரை .... மாடு மாடு தான்.!
மாடு மாதாவாக எங்களின் அறிவு ஏற்றுக் கொள்ளாது.!
உங்களுக்கு உங்கள் மார்க்கம்.!
எங்களுக்கு எங்கள் மார்க்கம்.!

Haja Maideen

முஸ்லிம் கல்வி மேம்பாட்டு குழுமம் -தமிழ்நாடு

Muslim Educational Promo council scholarship 2017-


From: Noorul Ameen <noorulameen72@gmail.com>
from: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>

Tuesday, August 1, 2017

மக்களுக்கு தாக்குப் பிடிக்காது.

சுன்னத் ஜமாத்காரனுக்கு
வகாபியை பிடிக்காது
ஜமாத்தே முஸ்லிமீன் வகாபிக்கு
ஜாக் வகாபியை புடிக்காது.
ஜாக் வகாபிக்கு
ததஜ வகாபியை பிடிக்காது.
ததஜ வகாபிக்கு
இ.த.ஜ. வகாபியை பிடிக்காது.

"நான்" என எனைக்கருத

"நான்" என எனைக்கருத 
உட்புகும் ஆழிப்பேரலை
என் நிலைகளை தாக்கி
பேரழுத்தத்தை தருகிறது
"நான்" யென்பதன் 
நிஜத்தைப்புரிந்து
அதன் 

Thursday, July 27, 2017

*நபிகளார் சொன்ன* *கண்ணாடிப் பாடம்*

அந்தப் பெரியவரின் கையில் ஒரு கண்ணாடி. அடிக்கடி அதைப் பார்ப்பார். பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார்.
பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறுகுறுப்பு…!
‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான் இருக்கிறது? பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே!. ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?’ அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
பெரியவரை நெருங்கினான்.
“ஐயா…!”
“என்ன தம்பி?”
“உங்கள் கையில் இருப்பது கண்ணாடிதானே?”
“ஆமாம்!”
“அதில் என்ன தெரிகிறது?”

Tuesday, July 25, 2017

இவருடைய கொள்கை நுழையாத நாடே உலகில் இல்லை.

உலகின் எந்த பகுதியிலும் ஒரு தலைவர் இறந்து விட்டால் அவர் கொள்கையை காப்பாற்ற இன்னொரு தலைவரை தேர்வு செய்வார்கள்.
தலைவரை தேர்வு செய்வதற்குள் பலவிதமான போட்டிகள் நிலவும், இதை தான் உலகம் பார்த்து வருகிறது.
1400 ஆண்டுகளுக்கு முன்பு மக்காவிலும், மதீனாவிலும் ஓர் தலைவர் வாழ்ந்தார். அவர் மரணித்து 1400 ஆண்டுகள் ஆகி விட்டது.
ஆனால் அவர் விட்டு சென்ற கொள்கை அழிந்து விடவில்லை, மாறாக பிரம்மாண்டமாக வளர்ந்து உலகம் முழுவதும் பரவி உலகின் 200 கோடி மக்களை வென்றெடுத்துள்ளது.

Monday, July 24, 2017

கந்திரமே உந்தன் விலை என்னவோ?

இறைவனது படைப்பில் அனைவரும் சமமே! உயர்வு தாழ்வு சொல்லுதல் பாவம். இதுபோன்றவை எல்லாம் நன்மக்கட்கு மட்டும் சொன்னதோ? இல்லை, அனைவர்க்கும் சொல்லப்பட்டது. ஆனாலும் தன்னை சுற்றி இருப்பவர்கள் முட்டாள்களாக இருக்க விரும்புபவர்கள் அடிமுட்டாளாகவே இருப்பார் எனபது எனது எண்ணம்.

Sunday, July 16, 2017

பாதை ….!

ஆசையின் பாதை அலைக்கழிக்கும் 
குற்றத்தின் பாதை குறுகுறுக்கும்
பொறாமையின் பாதை அழிவாகும் 
வெறுப்பின் பாதை பகையாகும்
அன்பின் பாதை அறமாகும்
பண்பின் பாதை குணமாகும்
முயற்சியின் பாதை வெற்றியாகும் 

Saturday, July 15, 2017

யார் மணப்பெண்?

யார் மணப்பெண்?

       அப்துல் கரீம்    

மனிதன் ஒரு கூட்டுப் பிராணி. சமூகத்துடன் கூட்டாக வாழ்வதையே விரும்புபவன். மற்ற மனிதர்களின் தொடர்பில்லாமல் தனிமையில் வாழ வேண்டும் என எந்த ஒரு மனிதனும் எண்ணுவதில்லை. தனது தனிமையை தவிர்ப்பதற்காக திருமணம் செய்து, குழந்தைகள் பெற்று சமூகத்துடன் தன்னை ஐக்கியமாக்கிக் கொள்கிறான்.

அனைத்து மனிதர்களும் திருமணத்தை விரும்பவே செய்கிறார்கள் என்றிருந்தாலும் துறவறம் என்ற பெயரில் யாரும் திருமணம் செய்யாமல் இருக்கக் கூடாது என இஸ்லாம் போதிக்கின்றது.

ஒவ்வொரு மனிதரும் கண்டிப்பாக திருமணம் செய்ய வேண்டும் என இஸ்லாம் கூறுவதோடு, திருமணத்தைப் புறக்கணித்து துறவி வேடமிடுபவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றது.

Thursday, July 13, 2017

நிலையானவனே, நிலைமைகளை மேம்படுத்திச் சமுதாயத்திற்கு நிம்மதியை அருள் செய்வாய்...

இறைவா,
இன்னமைதி (இஸ்லாம்)மார்க்கத்தை எல்லாருக்கும் பொதுமைப்படுத்திப் பூரித்தாய்....
பகைவருக்கும் அருளாய்த் திகழும் பண்பாளரை -அண்ணல்நபி(ஸல்) அவர்களை-அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடையாய் அளித்து உவந்தாய்...
நாநிலத்தாருக்கொரு நல்லுபதேசமாய் இறுதித் திருமறையாகப் புனிதக் குர்ஆனைக் கொடுத்துப் புகழுற்றாய்...
மனிதனுக்குப் பகுத்தறிவும் சுதந்திரமும் கொடுத்து அவனை மாண்புமிகு மனிதனாக்கினாய்....

இனிய திசைகள்

பேரன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.வப.)
இறையருள் நம் அனைவர்மீதும் பொலிவதாக...​
இனிய திசைகள் ​
​ஜூன்​'2017 இதழைப் படிக்க அட்டைப் படதின்மீது  “CLICK"செய்க....
 தங்கள் வசதிக்காக PDF இணைப்பும் உள்ளது.

Wednesday, July 5, 2017

படைப்பின் விசித்திரம்...!

இரண்டாம் வகுப்பு பயின்ற வேளையில் தமிழ் புத்தகத்தில் படித்த பாட்டு இது! அதற்கு கதை வடிவம் கொடுக்கிறேன்! அதோடு இந்த பாட்டை அழகாக படித்து காண்பித்து இன்றளவும் இந்த பாட்டின், கதையின் சாரம் என்னுள் நின்று நிலைத்திருக்க காரணமான ஆசிரியை பெருந்தகை மணிமேகலை அவர்களை நன்றியுடன் பெருமிதம் கொண்டு நினைவு கூறுகிறேன்..!
வணிகர் ஒருவர் தனது வணிக பொருள்களை எல்லாம் வியாபாரம் செய்துவிட்டு மதிய வேளையில் தான் கொண்டு வந்த உணவை ஒரு அரச மரத்தடியின் கீழ் அமர்ந்து உண்கிறார். அப்போது அவர் அமர்ந்திருந்த இடத்தின் அருகே ஒரு காய்கறி தோட்டம்! அதில் நன்கு பெருத்த பூசணிக்காய் ஒன்று விளைந்து அதன் கொடியின் அடியில் இருந்தது!

Monday, July 3, 2017

ஒலியின் சப்தத்தை குறைத்துக் கொள்வது நம் அனைவருக்கும் நல்லது.

அனைவரிடத்திலும் செல் போன்கள் உள்ளது. அலாரங்களும் வீடுகளில் உள்ளது. எனவே  ஒலி அளவுகளை குறைத்துக் கொண்டு மற்ற மதத்தவர்களின் அசௌகரியங்களுக்கு மதிப்பு கொடுக்கலாம். பரீட்சை நேரங்களில் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். வயதானவர்களுக்கும் இதனால் சிரமங்கள் ஏற்படுகிறது. இதனை அனைத்து மதத்தவர்களும் கடைபிடித்தால் நல்லது.

சில முஸ்லிம் கிராமங்களில் மவுலூது என்ற பேரிலும் ராத்தீப் என்ற பேரிலும் பயான் என்ற பேரிலும் கூம்பு வடிவ ஸ்பீக்கர்களில் விடிய விடிய அதிக சப்தத்தோடு ஒலிபரப்புகிறார்கள். ஒலியின் சப்தத்தை குறைத்துக் கொள்வது நம் அனைவருக்கும் நல்லது.

Wednesday, June 28, 2017

காஃபிர் என்பது இழிசொல்லல்ல

முஸ்லிம் அல்லாதோரை இஸ்லாம் காஃபிர் என்று இழிவுபடுத்துகிறது எனச் சிலர் குற்றஞ்சாட்டுவதுண்டு.
காஃபிர் என்பதன் பொருள் இறை நிராகரிப்பு என்றுதான் நான் இதுவரை நினைத்திருந்தேன். அதன் வேர்ச்சொல் எப்படியெல்லாம் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது என விளக்கி காஃபிர் என்பது இழிசொல்லல்ல என்கிறார் Abdurrahman Umari. அவரின் பதிவு இங்கே...
மறைப்பதும் மூடிவைப்பதும் மனித வாழ்க்கையில் அன்றாடம் தொடர்கின்ற நிகழ்வுகள்.
.
மனிதன் தன்னோடு தொடர்புடைய அனைத்தையும் மூடி வைக்கவே ஆசைப்படுகிறான். தனது வருமானத்தை மூடிவைக்கிறான், தன்னைப் பற்றிய உண்மைகளை மூடி வைக்கிறான். தனக்காக சமைக்கப்பட்ட உணவுகளையும் மூடி வைக்கிறான். தனது அழகையும் மூடி வைக்கிறான்.
.
ஏன், உங்கள் அழகையும் அலங்காரத்தையும் ஊர்உலகிற்குக் காட்டாமல் மறைத்தே வைக்கின்றீர்கள் என தொடர்ந்து முஸ்லிம் பெண்களைப் பார்த்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

Tuesday, June 27, 2017

பெருநாள் குத்பா செய்தி - இறை அச்சம் !

மனிதர்கள் அறிவியலில் படிப்படியாக முன்னேறினாலும் நல்லொழுக்க விஷயங்களில் முன்னைவிட இன்னும் இன்னும் மோசமாகவே இருக்கிறான்.. கருணை கொலை, சாதீய கொலை , பணத்திற்காக கொலை , நூதன கொள்ளைகள் ,திருட்டுகள்,பாலியல் அராஜகங்கள், பணம் பதவிக்காக, மதவெறிக்காக அரசியல் சதிகள் , ஓரின திருமணங்கள் , வக்கிரமான உடை நாகரீகங்கள் என ஒழுக்க செயல்கள் படு மோசமாகவே உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது ... இதனை வெறும் சட்டங்கள் போட்டு சரி செய்ய முடியவில்லை ... இங்குதான் இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களுக்கு வழி காட்டுகிறது ..

ரமளான் பிரிந்தது ....

ரமளான் பிரிந்தது ....
கடின இலக்குகளின் 
சவாலை வென்ற 
அகில முஸ்லீம்களுக்கு
ஷவ்வாலை பரிசளித்து 
ரமளான் பிரிந்தது ....
ஆசைகள் மிதக்கும் 
மனசெனும் நதிகளில் 
நீந்துகிற சலனங்கள் 
சிந்தனையோடு கலந்து 
பாவங்களை தூண்டுகிற 
விடயங்களை தடுத்து 
ஷைத்தான் வரைந்த 
தடயங்களை அழித்தது ...

மரணத்திற்கு பின்னால்!

மரணம் நிகழ்வதாலேயே பிறப்பும் கூட
உயிர் பெறுகிறது.பெருமை கொள்கிறது.
மரணம் இல்லை என்றால் பிறந்து என்ன பயனும் இல்லை.
சாவுக்குப் பின் ஒரு மனிதனை தொடர்வது எது?
முகமது நபி அவர்களிடம் இந்த கேள்வி எழுப்பப் பட்டது.
நபிகளார் பதில் உரைத்தார்கள்
1.கொடை (charity)
பிறருக்காக வாரி வழங்கிய தான தர்மம்
2.அறிவு (knowledge)
பிறரை நல்வழி படுத்த உதவிய
நல்லறிவு
3.வணக்க வழிபாடு (prayer)
இறந்தவனுக்காக அவன் குழந்தைகள் நிகழ்த்தும் நல் பிரார்த்தனை.


Vavar F Habibullah
ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்

டென்சன் ....!

'நான் டென்சன்ல இருக்கேன்' இப்படி சொல்லாதவர்களே இப்போதெல்லாம் இல்லை எனலாம்.
பள்ளிக்கு செல்லும் பாலகரில் தொடங்கி மகளிரும் பணிஓய்வு
பெற்றவர் வரையும் சொல்கிறார்கள் 'நான் டென்சன்ல இருக்கேன்' .
நமது பாட்டா பாட்டியோ தாய் தந்தையோ கூட இப்படி சொல்லிக் கேட்டதில்லை.
ஏன் இப்படி இப்போது?

ஒரு தெருவில் இருவர்... எனில் உலகம் முழுதும்???

நான் வசிக்கும் ஏரியாவில் ஒரே தெருவில் கடை வைத்திருக்கும் இருவர்... தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்...
ஏதேச்சையாய் பேசும் பொழுது ரமதானுக்கு ஊருக்கு எப்ப போறீங்கன்னு கேட்டேன்... ஒரே நேரத்தில் இருவரிடமும் கேட்க வில்லை.. வேறு வேறு நாட்களில் கேட்டேன்...
இந்த வருஷம் போகல பாய் என்றார்கள்.. ஏன் என்னாச்சு என்றேன்... ஊருக்கு போனா 5000,6000 ரூபாய் செலவு ஆகும், அதை அனுப்பி வச்சா வீட்ல பெருநாளுக்கு பயன்படும் அதான் போகவில்லை என்றார்கள்... நான் அப்டியே ஸ்டன் ஆகிட்டேன்...
அதன்பின் நான் யாரிடமும் ஊருக்கு போறீங்களான்னு கேட்கவே இல்லை.. இந்த கனமே போதும்.. இனி தாங்க முடியாதுன்னு கேட்கிறதை விட்டுட்டேன்...
உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இதே போன்ற ஏராளமான சகோதரர்களைக் கொண்ட சமூகம் தான் இஸ்லாமிய சமூகம்... காலம் முழுதும் சம்பாதித்தாலும் ஒரு நல்ல நாட்கள், விஷேங்களுக்கு அவர்களால் போக முடியவில்லை... தங்களை வருத்திக் கொண்டு, தங்கள் ஆசைகளை அடக்கிக் கொண்டு தங்கள் குடும்பத்தினர் சந்தோஷத்திற்காக தங்கள் வாழ்வை அர்பணிக்கிறார்கள்...

ஈகை போய்விடுமா இன்றோடு..!

நோன்பை நோற்று பெருநாளையும் கொண்டாடிவிட்டோம்!
இதோடு நின்று போய்விடுமா நாம் கொண்ட ஈகை..?
இல்லை...! இனி அடுத்த வருடம் வரை நாம் உயிர் பெற்றிருந்து இப்பெருநாள் வரும்போது மட்டுமே மீண்டும் துளிர் விடுமா..?
அப்படி இன்றோடு அடங்கி அடுத்த முறை மட்டும் உயிர்த்தெழுவது மட்டுமே ஈகையல்ல!
இந்த உலகில் மனிதனும் அவன்தன் மனிதமும் உள்ள நாளெல்லாம் நின்று நெடுந்தூரம் பயணிப்பதுவே ஈகை!
பணமும் பொருளும் மட்டும் என்பதே ஈகையின் வரையறையோ அடையாளமோ அல்ல!

Monday, June 26, 2017

மல்லிகைப்பூச் சூடிய ஹூருலீன்களும் சதுப்பு நிலத்தில் புதைந்த பாதச்சுவடுகளும் #நிஷாமன்சூர்

ஈத்பெருநாள் சிறப்பு கவிதை....
மல்லிகைப்பூச் சூடிய ஹூருலீன்களும் சதுப்பு நிலத்தில் புதைந்த பாதச்சுவடுகளும்
#நிஷாமன்சூர்
சீத்தலைச் சாத்தனாரின் ஆணி நுனியில் கற்றுக்கொண்டோம்
எம் தாய்மொழியின் கூர் வன்மையை.
அரபுமொழியில் இறைமறையை ஓதும்போதும்
அதன் ஆழ அகலங்கள் குறித்து
எம் தமிழின் ஒளியில்தான் சிந்தித்துத் தெளிந்தோம்
உமர்கய்யாமின் கோப்பையில் ததும்பிக்கொண்டிருக்கும் ஞானத்தை மிடறுமிடறாய் அருந்தி
ஆசான் ரூமியின் நெற்றிக்காய்ப்பு பதிந்த தொழுகைப்பாயில் தந்திரம் விற்றுப் பேரின்பம் யாசித்துக் கொண்டிருக்கிருந்தபோதும்
எமது வேர்கள் யாதனின் யாதனின் நீங்கியான் நோதலில் ஆழப்புதைந்து புரிதலில் ஒளிர்ந்தன.

Sunday, June 25, 2017

எட்டயபுரத்தில் உமறுப்புலவர் மணிமண்டபம்

திருச்செந்தூர் செல்வதற்காக தூத்துக்குடி வழியாக சென்றோம்.  எட்டயபுரத்தில் பாரதியார் மணிமண்டபமும், பாரதியார் பிறந்த வீட்டையும் பார்த்தோம்.  அதை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

எட்டயபுரத்தில் ‘உமறுப்புலவர் மணிமண்டபம்” அருமையாக அரசினரால் கட்டப்பட்டு பராமரிக்கப் பட்டு வருகிறது.  பாரதியார் வீடு இருக்கும் தெருவின் அருகில் அமைந்திருக்கிறது.  வழி காட்டும் பலகை சாலையில் இருக்கிறது.அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தொகுத்திருக்கிறேன்.

Friday, June 23, 2017

ஒரு மார்க்கம் என்பது யாதெனில்

ஒரு மார்க்கம் என்பது
யாதெனில்
வாழ்வைச் சீர் செய்யும்
அறநெறிச் சட்டங்கள்
அமல் படுத்தும் திட்டங்கள்

நியாயங்களுக்குப் பாதுகாப்பு
தர்மங்களுக்கு அரண்

Thursday, June 22, 2017

வந்ததே ரமழான் !

நிலாக் கீற்றின் உதய தரிசனத்தில்
வான விழிகள் கிறங்கிக் கிடக்க.-எம்.
"கல்பின்" கறை கழுவிடத்தான்
மாண்போடு வந்ததே புனித 'ரமழான்!

"திக்ர்" செய்தே  இறையோ னிறைஞ்சி...
"இறையில்லம் தனை நோக்கி சிரந்தாழ்த்தி..........
திருமறையின் நேசிப்பிலெம்
வாழ்வைப் பொருத்தி - நிதம்
இறையோ னன்பில் வீழ்ந்து கிடக்க...........
வந்ததே ரமழான்..................
தந்ததே மாண்பு பல!

Wednesday, June 21, 2017

நோன்பு கஞ்சியும் சஹர் உணவும் ....

Abdul Gafoor
இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

தணியாத வெயிலின் பணியாத தாக்குதலோடு நிறைவேறிய இருபத்தைந்தாம் நோன்பு திறக்கும் நிகழ்வு இறையருளால் நேற்று (20.06.2017) அல் மஸ்ஜிதுல் அஸ்ரப் பள்ளிவாசலில் குதூகலமாய் நிகழ்ந்தேறியது ...
நோன்பு திறந்ததும் இஞ்சி கலந்த மசாலா தானியங்களோடு காய்ச்சிய கஞ்சி நிரப்பிய கொட்ராவை கரங்களால் தூக்கி உதடுகளால் சர்ரென்று உறுஞ்சி அருந்துகையில் உற்சாகம் மிஞ்சி மணமும் சுவையும் நம்மோடு கொஞ்சி நமது வயிற்றுப் பகுதியின் சுவாச பாதைகளை ஆசுவாசப்படுத்துகிறது என்பது மறுக்க இயலாத உண்மை ....

லைலத்துல்கத்ர் ! / !Abu Haashima

லைலத்துல்கத்ர் !
 ரமளானைப் பற்றிய மினி தொடரின் இன்றைய அத்தியாயம் ...
#லைலத்துல்கத்ர் !
ரமளானின் மாபெரும் கொடையாக இறைவன் வழங்கி இருக்கும்
வியத்தகு பரிசு லைலத்துல் கத்ர் என்னும் இரவு !
இந்த இரவு எத்தனை சிறப்பு வாய்ந்தது என்பதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை .
ஏனென்றால் ...
" கடலை மையாகவும் உலகத்திலுள்ள மரங்களை எல்லாம் எழுதுகோலாகவும் ஆக்கி
அருள்மறை குர் ஆனுக்கு விளக்கம் எழுத முற்பட்டாலும் அதனை
எழுதி முடிக்க முடியாது ".
என்று இறைவன் கூறுகிறான்.
அப்படிப்பட்ட இறைவேதம் குர் ஆன் இந்த இரவில்தான் நபிகள் பெருமானார் ( ஸல் ) அவர்களுக்கு அருளப்பட்டது.

மதநல்லிணக்கம் & போற்றுதலுக்குரிய இந்த அன்பும்

Mohamed Ashik
:படங்களும் செய்தியும்  Rehannisha Ammaponnu


டாக்டர் சந்திரசேகரன் அவர்களின் எலும்பு முறிவு மருத்துவமனை. இடம் : கும்பகோணம்.

இங்கே, மருத்துவரை காணச்சென்றால்... பெயர் பதிந்த உடனேயே, "நீங்க நோன்பா?" என்று செவிலியர்களால் வினவப்பட்டு "ஆம்"எனில் டோக்கன் வரிசை காத்திருப்பு ஏதும் இல்லாமல் உடனடியாக (நெக்ஸ்ட் பேஷண்ட்டாக) மருத்துவரை சந்திக்க முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

நீண்ட நேரம் முன்னரே வந்து பெயர் பதிந்து டோக்கன் வரிசை எண் பெற்று காத்திருக்கும் பிற சமய சகோதரர்களின் கேள்விப்பார்வைக்கு விடையாக, கட்டி தொங்கவிட்டிருக்கும் இந்த அறிவிப்பை காட்டுகிறார்கள்.

Tuesday, June 20, 2017

ரமளானின் சிறப்புகளைப் பற்றிய மினி தொடரில் இதுவரை ...


ரமளானின் சிறப்புகளைப் பற்றிய மினி தொடரில் இதுவரை ...
நோன்பு முதல் பிறை பார்த்தல்
தராஹ்வீஹ் தொழுகை
ஹிஸ்பு ஓதுவது
ஸகர் உண்ணுவது
நோன்பு பிடிப்பது
நோன்பு திறப்பு இப்தார்
இஹ்திகாப்
ஆகியவற்றை எழுதி இருந்தேன் .
இன்று ...
இடம்பெறுவது
தவ்பா !
விடிந்தது முதல்
பொழுது அடைவது வரை
மனிதர்களைச் சூழ்ந்து நிற்பது
பாவங்களே !

Sunday, June 18, 2017

அப்ரஹா / Abu Haashima

அப்ரஹா
*********
#அபிசீனிய_சக்கரவர்த்தியின்
யெமன் நாட்டு ஆளுநராக இருந்தவன் #அப்ரஹா.
மக்காவிலிருந்த கஃபாவை தரிசிக்க மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வருவதை பொறுக்க முடியாத இவன்
தன் தலைநகர் சன்ஆவில்
#காலிஸ் எனும் பிரம்மாண்ட ஆலயம் ஒன்றை கட்டி எழுப்பினான்.
கஃபாவுக்குச் செல்லும் மக்களை
காலிசுக்கு திரும்ப வைப்பதே
தனது லட்சியம் என்றும் அறிவித்தான்.
ஒருநாள் நுபைல் என்பவன் காலிஸ் ஆலயத்தில் ஓரிரவைத் தான் கழிக்க விரும்புவதாகக்கூறி அனுமதிபெற்று
அங்கே மலஜலம் கழித்து விட்டு ஓடிவிட்டான்.

ஒரு மார்க்கம் என்பது யாதெனில்

ஒரு மார்க்கம் என்பது
யாதெனில்
வாழ்வைச் சீர் செய்யும்
அறநெறிச் சட்டங்கள்
அமல் படுத்தும் திட்டங்கள்

நியாயங்களுக்குப் பாதுகாப்பு
தர்மங்களுக்கு அரண்

“தமிழ்நாடு கலாச்சார பேரவை” நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

அமீரகவாழ் தமிழ் மக்களிடையே பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டுவரும் “தமிழ்நாடு கலாச்சார பேரவை” சார்பாக வருடந்தோறும் இஃப்தார் – நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இவ்வருட இஃப்தார் நிகழ்ச்சி ரமழான் பிறை 21, வெள்ளிக்கிழமை அன்று, துபை கிராண்ட் சென்ட்ரல் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.

Saturday, June 17, 2017

ஒழுங்கும் கட்டுப்பாடும் இணையும் புள்ளியில்தான் கட்டுக்கோப்பானதொரு சமூகம் மலரும்

ஒழுங்கும் கட்டுப்பாடும் இணையும் புள்ளியில்தான் கட்டுக்கோப்பானதொரு சமூகம் மலரும்

[ இஸ்லாமிய தஃவா அமைப்புக்கள், முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் தமக்கிடையில் ஒரு புரிந்துணர்வுக்கு வர வேண்டும். இவ்விடயத்தில் கை கோர்த்து செயற்பட வேண்டும். கருத்து வேறுபாடுகள் நிலவுவதில் தவறில்லை. ஆனால், முரண்பாடுகளும் பிளவுகளும் வரக் கூடாது.

தத்தமது தளங்களில் இருந்து கட்டுக்கோப்பானதொரு சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். யாருடைய இயக்கம் பிரபல்யம் அடைய வேண்டும், சமூகத்தில் கூடுதல் அங்கீகாரம் யாருக்கு கிடைக்கிறது... போன்ற போட்டா போட்டிகள் இருக்கக் கூடாது.

Wednesday, June 14, 2017

விழிப்புணர்வு நேரமிது!

பொருளாதாரச் சீர்திருத்தம், தாராளமயம் என்கிற பெயரில் யாரும் எதை வேண்டுமானாலும் செய்து மக்கள் நலனையும், நாட்டு நலனையும் காற்றில் பறக்கவிட்டுக் கொள்ளையடித்துக் கொள்ளலாம் என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. அரசியல்வாதிகளுக்கும், அதிகார வர்க்கத்தினருக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதுடன், விலைபோகாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்கிற மனோநிலையும் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் அதைவிடப் பெரிய ஆபத்தாகத் தெரிகிறது.

Tuesday, June 13, 2017

இறைவைனிடம் கை ஏந்துவோம்!


புனிதமிகு ரமலான் மாதத்தின் முதல் பத்து நாட்களை நிறைவு செய்துவிட்டு அடுத்த பத்தில் இருக்கின்றோம்.  இறைவனின் அருட்கொடையின் பத்து என்று இறைத்தூதரால் வர்ணிக்கப்பட்ட முதல் பத்து நோன்புகளில் நாம் பசித்து, தாகித்திருந்ததற்கு இறைவன் அவனது அருட்கொடைகளை முழுமையாக நமக்குத் தந்தருள்வானாக என்ற பிரார்த்தனையுடன்...
ரமலான் மாதமே பாவங்களுக்கான பரிகாரமாகவே அமைகின்றது. ஆனாலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலானின் இரண்டாவது பத்தினை பாவ மன்னிப்பிற்கான பத்தாக அறிவித்து இந்தப் பத்து நாட்களில் அதிகம் இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டு மீள வலியுறுத்தியுள்ளார்கள்.

Monday, June 12, 2017

கேரளத்தில் இஸ்லாமிய மக்கள் நெருக்கமாக வசிக்கும் மாவட்டங்களில் மலப்புரமும் ஒன்று

கேரளத்தில் இஸ்லாமிய மக்கள் நெருக்கமாக வசிக்கும் மாவட்டங்களில் மலப்புரமும் ஒன்று
அங்கே உள்ள சின்னஞ்சிறு கிராமம் புன்னதாலா . பல மசூதிகளுக்கு மத்தியில் அங்கே சிறிய இந்து கோயில் ஒன்றும் இருக்கும்.. புன்னதலாவில் வசிக்கும் இந்து மக்களுக்கு, இதுதான் ஒரே வழிபாட்டுத்தலம். 100 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலில், நரசிம்ம அவதாரத்தில் அருள்பாலிக்கிறார் விஷ்ணு
ஆனால் ஒரு கட்டத்தில் கோவில் கூரை இடிந்து சுவர்கள் விழுந்து தகர்ந்து போனது அந்தக்.கோவிலைசீரமைத்துக் கட்டவேண்டும் என்பது இந்து மக்களின் நீண்டநாள் ஆசையாகஇருந்தது
பல்வேறுவகையில் முயற்சித்தும் முடியாமல் போனதால், சீரமைப்புப் பணியை கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டனர்

Thursday, June 8, 2017

நெஞ்சுநிறை மாண்புக் கஞ்சி

பிச்சைக்காரரின்
நெளிந்த பாத்திரத்தில் ஊற்றப்படுவதே
பணக்காரரின்
வெள்ளிப் பாத்திரத்தை நிறைக்கும்
அமுதமாகிறது

அது எது?

உடல்நலமில்லா முதியவரின்
நடுங்கும் கரங்களின்முன்
வைக்கப்படுவதே
ஆரோக்கியமான இளைஞனின்
துடிப்பான விரல்கள்
தாவியெடுக்கும்
அருசுவையாகிறது

அது எது?

Thursday, June 1, 2017

இறைச்சிக்காக மாடு விற்பது தொடர்பான வழக்கில் தடையாணை: ஒரே நாளில் பிரபலமான செல்வகோமதி

இறைச்சிக்காக மாடு விற்பது தொடர்பான வழக்கில் தடையாணை: ஒரே நாளில் பிரபலமான செல்வகோமதி: ஒருவர் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதை முடிவு செய்வது அவரின் தனிப்பட்ட உரிமை. அதை கட்டாயப் படுத்தக்கூடாது

மத்திய அரசின் மாடுகள் விற்பனை தொடர்பான உத்தரவுக்கு தடை யாணை பெற்றதன் மூலம் ஒரே நாளில் நாடும் முழுவதும் பேசப் படும் நபராகியுள்ளார் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.செல்வ கோமதி.

Sunday, May 28, 2017

கடமைகள் ஐந்தில் ஒன்று

‘கரையேறாத அகதிகள்’-அபூஷேக் முஹம்மத்

இந்நூல் குறித்து.....

வரலாறு என்பது உண்மை நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. அது நமக்கும் ஒரு படிப்பினை. நமது அடுத்து தலைமுறைக்கும் ஒர் அரிய பாடம். அதில் கற்பனை கலப்பு கூடாது. உண்மை திரிபும் கூடாது. நடந்தவை நடந்தவையாக இருக்க வேண்டும். நடுநிலை பிரளா மணம் வேண்டும். இத்தகைய சீரிய வரையறையோடு தமிழ்கூறும் நல்லுலகிற்கு என் அன்புச் சகோதரர் அபூஷேக் முஹம்மத் எழுதிய ‘கரையேறாத அகதிகள்’ நூல் வெளிவந்திருப்பதாக நான் கருதுகிறேன்.

பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் தன்னார்வ தொண்டர்கள்

துபாய் ஈமான் அமைப்பு வழங்கி வரும் நோன்பு கஞ்சி விநியோகப் பணிகளுக்கு தன்னார்வ தொண்டர்கள் தேவை

துபாய் ஈமான் கல்சுரல் செண்டர் தமிழகத்து சுவை மிக்க நோன்புக் கஞ்சியை துபாய் தமிழ் பஜாரில் உள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் என்றழைக்கப்படும் குவைத் பள்ளி, பிரிஜ் முராரில் உள்ள லத்திபா பள்ளி மற்றும் ஈடிஏ அஸ்கான் பின்புறம் உள்ள பள்ளிவாசல் ஆகியவற்றில் நோன்புக் கஞ்சி விநியோகிக்கும் பணியினை தன்னார்வ தொண்டர்கள் மூலம் ஒருங்கிணைத்து வருகிறது.
இந்த பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் தன்னார்வ தொண்டர்கள் ஈமான் அமைப்பினை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு : 050 51 96 433 / 050 658 9305

rom: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>

Thursday, May 18, 2017

மறுமணம்:

இது பொதுவாக தமிழகத்தில் பரவலாக பேச்சு வழகத்தில்தான் இருக்கிறது. நடைமுறையில் பழகத்தில் வந்தால் நாட்டில் பல பிரச்சினைளுக்கு தீர்வுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நடைமுறை என்பது இளம் தம்பதியினர்களில் எதாவது குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்படும் பிரிவினையில் மணமகன் உடனே மறுமணம் செய்து கொள்கிறான். ஆனால் நம் தமிழக பெண்கள் மறுமணம் செய்ய அவர்கள் மனது உகந்ததாக இல்லை. காரணம் குடும்ப நிலைகளை கருத்தில் கொண்டு வேண்டாம் யென கூறி பிறகு மனதால் துயரம் அடைந்து கொண்டு இருக்கிறார்கள்.

Sunday, May 14, 2017

பெயரும் பிறந்த நாளும்...

1958ஆம் ஆண்டின் மே மாத்த்தின் கடைசி் பகுதில் ஒருநாள்.கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதற்குச் சில நாட்களே இருந்தன.வாப்பா தனது குட்டியாப்பாவிடம்(எனக்கு சின்னவலியாப்பா) சொன்னார்.
குட்டியாப்பா! பள்ளிகொடம் தொறக்க நாளாயாச்சு.நான் கச்சவட காரியமா புனலூர் போவணும்.மோனெ பள்ளிகொடத்துல் ஒண்ணு சேத்து உட்டுரணும்.
ம்ம்...செரி.நாளைக்கி திங்களாச்சா தானே இன்ஷா அல்லா சேத்துரலாம்.நீ பரகத்தா பொய்ட்டு வா.

அஸ்ஸலாமு அலைக்கும் என்றால்


Padmanabhamn Sivathanupillai
>>>அஸ்ஸலாமு அலைக்கும் பற்றித் தெரிய வில்லை, வணக்கமென்பது பணிவோடுகூடிய, பாசத்துடன்கூடிய, உடன்பாடு. இது மற்றெதுவோடும்
பொருந்துவதாகத் தெரியவில்லை<<<

அஸ்ஸலாமு அலைக்கும் என்றால்
சாந்தியும் சமாதானமும் உண்டாகுக
என்று பொருள்

அதாவது
அன்பும் அமைதியும்
மன உடன்பாடும் நிறைக
என்று பொருள்

நான் சவுதி அரேபியாவில்
வாழ்ந்திருந்த நாளில்
ஒரு வாடிக்கையாளர்
கடுங்கோபத்தில் வந்து
காட்டுக் கத்தாகக்
கத்தத் தொடங்கினார்

Tuesday, May 9, 2017

அறிவுக்குத்தான் எத்தனை அழகு ! / அபு ஹ்ஷீமா வாவர்

காஜா முஹைதீன் பாகவி
ஒருமுறை கலீபா உமர் ( ரலி ) அவர்கள் நண்பர்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கே ஹுதைபத்துல் யமான் என்ற நபித் தோழர் வந்தார். அவர் அண்ணல் நபி ( ஸல் ) அவர்களின் அந்தரங்க காரியதரிசியாக இருந்தவர். கலீபாவின் மரியாதைக்கு உரியவர்.
அவரைக் கண்டதும் " வாருங்கள் ஹுதைபத்துல் யமான் அவர்களே ! எப்படி இருக்கிறீர்கள் ?" என்று உமர் ( ரலி ) அவர்கள் நலம் விசாரித்தார்கள்.
" நலமாக இருக்கிறேன் " என்ற ஒரே வார்த்தையில் பதிலை முடிக்காமல்......
" கலீபா அவர்களே...நான் பித்னாவை நேசிக்கிறேன்
ஹக்கை வெறுக்கிறேன்
ஒளுவில்லாமல் இபாதத் செய்கிறேன்
அல்லாஹ்விடம் இல்லாததை பெற்றிருக்கிறேன் "
என்று ஹுதைபத்துல் யமான் சொன்னார்.

Monday, May 8, 2017

கீறிக் கிழிக்கும் அறுவை சிகிச்சைக்கு வித்திட்ட இஸ்லாம்


      முஹம்மத் பகீஹுத்தீன்    

மருத்துவ துறையில் முஸ்லிம்கள்

மருத்துவத் துறைக்குப் பங்காற்றிய அறிஞர்கள்

மருத்துவ துறையை ஊக்குவித்த இஸ்லாம்

மருத்துவத் துறையில் பெண்கள்

பெண்கள் ஆண்களுக்கு சிகிச்சையளித்தல்

சத்திர சிகிச்கைக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு

மருத்துவம் வெறும் உடம்புக்கு மாத்திரம் அல்ல

படைப்பினங்களில் மாற்றம் செய்தல்

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை

கீறிக் கிழிக்கும்  அறுவை சிகிச்சைக்கு  வித்திட்ட இஸ்லாம்

      முஹம்மத் பகீஹுத்தீன்    

Thursday, May 4, 2017

யாருக்கு யார்மேல் பயம் ?

ஒரே குழுவாக செயல்பட்டு ஒன்றுக்குள் ஒன்றாக இருந்துகொண்டு அராஜகங்கள் அநியாயங்கள் அனைத்திலும் பங்குபெற்றுவிட்டு பலனையும் பெற்று அனுபவித்து ருசிகண்ட பூனையாய் அத்தனையும் தனக்கேவேண்டுமென எழும் பேராசையால் வரும் பிரிவுகள் காலம் காலமாக மனிதர்களிடையே அழிவுகளை ஏற்படுத்தியிருப்பது சரித்திரங்கள் சொல்லும் உண்மை. அதை நாம் வாழும் காலத்தில் பன்னாட்டு அரசியலில் பார்வையாளனாக பார்த்ததுபோல் இப்போது அதே அரசியலில் பாதிக்கப்பட்டவனாக தமிழன் இன்று இருக்கிறான்.

அமீரகத்து வெயிலும், உடலுழைப்புத் தொழிலாளர்களின் வாழ்க்கையும்

இந்தியாவில் கோடை காலத்தில் வெயில் கொடுமை தாளாமல் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மொத்தமாக மக்களைக் கொல்லும் விபத்துகளைத் தடுப்பது குறித்தே நமது அரசுகள் கவலையற்று இருக்கின்றன. இதில், உதிரிச் சாவுகளைப் பற்றி மட்டும் எப்படி கவலைப்பட போகின்றன?

அமீரகத்தில் இந்தியாவை விட வெயில் அதிகம். கோடை காலத்தில் உச்சபட்சமாக 51 டிகிரி செல்சியஸ் (123 டிகிரி பாரன்ஹீட்) வரை எல்லாம் வெப்பநிலை பதிவாகும். ஆனால், வெயில் கொடுமை காரணமாக யாரும் இறப்பதில்லை. காரணம், வெயிலில் வேலை பார்ப்பவர்கள் குறித்து அமீரக அரசாங்கம் செலுத்தும் அக்கறை. கோடை காலத்தில் (ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை) மதியம் 12.30 மணி முதல் 3 மணி வரை வெயிலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும். அந்த நேரத்தில் தொழிலாளர்கள் ஓய்வு எடுப்பதற்கு ஏதுவாக நிழற்கூடங்கள் அமைக்க வேண்டும். இவற்றைக் கண்காணிக்க ரோந்துப் படை சுற்றிக் கொண்டிருக்கும்.


ஏதாவது ஒரு நிறுவனம் விதியை மீறி, வெயிலில் வேலை செய்ய வைக்கிறது என்றால், அவ்வாறு வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பொருத்து அந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும். ஆறு தொழிலாளர்கள் என்றால், ஒரு தொழிலாளருக்கு 5000 திராம்ஸ் வீதம் மொத்தம் 30,000 திராம்ஸ் ( ரூ.5,40,000 அபராதம்) விதிக்கப்படும்.

இத்தனைக்கும் அமீரகத்தில் வெயிலில் பார்ப்பவர்கள் யாரும் அந்நாட்டு குடிமக்கள் கிடையாது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் போன்ற நாடுகளிலிருந்து வந்த ஏழைத் தொழிலாளர்கள்தான். அவர்களை மதிய வெயிலில் வேலை பார்க்க வைக்காமல் அந்நாட்டு அரசாங்கம் பாதுகாக்கிறது.

Monday, May 1, 2017

உழைப்பைக் கற்றுக் கொடுத்த உத்தம நபி :

நபிகளாரின் சமூகத்தில் அன்ஸாரி ஸஹாபி ஒருவர் தன் தேவையைக் கூறி உதவி தேடினார். தங்களிடம் ஒன்றுமே இல்லையா? என நபியவர்கள் வினவ, முரட்டுக் கம்பளி போர்வையும், ஒரு கோப்பையும் எனது வீட்டில் இருக்கிறது எனக் கூறினார். பாதியை விரித்தும், பாதியைப் போர்த்தியும் கொள்வேன். பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பேன் என்றார். அதைக் கொண்டு வருமாறு நபியவர்கள் கூற, அதை அவர் கொண்டு வந்தார்.
அவ்விரு பொருட்களையும் நபியவர்கள் ஏலம்விட, ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கிக்கொள்ள ஒரு ஸஹாபி முன்வந்தார். அதைவிட அதிகமாக வாங்குபவர் உண்டா? என நபியவர்கள் மூன்று முறை கூற, இரண்டு திர்ஹங்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி மற்றொரு ஸஹாபி அதை வாங்கிக் கொண்டார்.
பின்பு அந்த அன்ஸாரி தோழரை அழைத்து இதில் ஒரு திர்ஹத்திற்கு வீட்டிற்கு தேவைப்படும் உணவுப் பொருளையும், மற்றொரு திர்ஹத்திற்கு ஒரு கோடாரியும் வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறி, அவ்விரு திர்ஹங்களையும் அந்த ஸஹாபியிடம் நபியவர்கள் ஒப்படைத்தார்கள். அவர் அவ்வாறே செய்தார். நபியவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் அந்தக் கோடாரிக்கு கணை போட்டு அவரிடம் அதைக் கொடுத்து, இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பாதியுங்கள்; பதினைந்து நாட்களுக்குப்பின் இங்கு வாருங்கள். அதற்கு முன்பு வர வேண்டாம் எனக் கூறியனுப்பினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.

Sunday, April 30, 2017

அவங்க சொல்றதும் சரிதான்.இவங்க சொல்றதும் சரிதான்..எது தான் உண்மை..

Saif Saif

பாமரன் நம்மை ரெம்ப தான் கன்புயூஸ் பண்றாங்க இவங்க...
தாயின் காலடியில் சொர்க்கம்..நபிகள் சொன்னது..
இதற்கு தாயின் காலடியில் ஒரு சொர்க்கம் இருப்பதாக அர்த்தமாகுமா.!?.அதற்காக நாம் தாயின் கால்களை முத்தம் கொடுப்பது தவறாகுமா..!?
அப்படிச் செய்யலாமா..?
இது ஷிர்க் அல்லவா.?
ஆனால் இப்படி நம் மக்கள் யாரும் செய்ததாக தெரியவில்லையே இப்படி எல்லாம் சிந்திக்க வேண்டுமா..?
இதற்கு அர்த்தம் தாயை மதிக்க வேண்டும்,பேண வேண்டும் அவர்களுக்கு உரிய பணிவிடைகளை செவ்வனே நிறைவேற்ற வேண்டும் இவ்வாறு செய்பவர்கள் மரணத்திற்கு பிறகு சொர்க்கம் செல்வார்கள் என்ற அர்த்தத்தில் தானே நாம் அர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டும்...
அடுத்து,

Tuesday, April 25, 2017

இஸ்லாமிய தீவிர வாதம் என்றால் என்ன?

Vavar F Habibullah 
இஸ்லாமிய தீவிர வாதம் என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே தீவிர வாதிகளாய் மாற காரணம் என்ன? என்னோடு நேசத்தோடு, பாசத்தோடு, அன்போடு, அபரிதமான வாஞ்சையோடு பழகிக் கொண்டிருக்கும் ஆயிரக் கணக்கான ஹிந்து, கிருத்துவ நண்பர்களின கேள்வித்தான் இது.
வைதீக ஹிந்து குடும்பங்களின் பூஜை அறைகளில் கூட என்னை அநுமதித்த ஹிந்து குடும்பங்கள் உண்டு, அதை பெருமையாக கருதியதும் உண்டு.எம்.ஜி.ஆர். அவர்களின் நண்பரும், அவர் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராகவும் இருந்த என் அருமை நண்பர் மறைந்த திருச்சி. சவுநதரராஜன் அவரகளுடன் பலமுறை காஞ்சி சங்கராச்சாரி சுவாமிகளையும் சந்தித்து இருக்கிறேன். முழுமையாக இஸ்லாத்தைப் பற்றி தெரிந்தவர் சுவாமிகள். ஒரு முஸ்லிம் என்பதாலேயே என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும்.ஒரு முறை என் அன்பு நண்பர் மறைந்த DR.ஜெயசீலன் மத்தியாஸ் அவர்களுடன், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி நிறுவனர், திரு.இராமசாமி உடையார் அவர்களை அவரது அலுவலக அறையில் சந்தித்த போது, ஒரு பெரிய பிரேம் போட்ட படம் என் கண்ணில் பட்டது. சமீபத்தில் மறைந்த திரு. பி.எஸ்.எ.றஹ்மானின் படம் தான் அது. "என் முதலாளி அவர், என்று கண்களில் நீர் மல்க உடையார் சொன்ன வார்த்தைகள் இன்னும் என் நெஞ்சை விட்டு அகலவில்லை.

LinkWithin

Related Posts with Thumbnails