Saturday, August 19, 2017

ஹஜ் பயணிகளுக்கு அனுமதி: கத்தர் வரவேற்பு!

கத்தர் ஹஜ் பயணிகளுக்கு விமானம் மற்றும் தரை வழிகளை சவூதி அரேபியா திறந்து கொடுத்துள்ளதைக் கத்தர் வரவேற்றுள்ளது.
கத்தரிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்கு விமானம் மற்றும் தரை வழிபோக்குவரத்து திறந்து கொடுக்கப்படும் என சவூதி அரேபியா அறிவித்தது.

இந்த அறிவிப்பினை வரவேற்றுள்ள கத்தர், கத்தரிலிருந்து பயணம் மேற்கொள்ளும் ஹஜ் பயணிகளுக்கு எவ்வகையிலான பாதுகாப்பு நடவடிக்கைகளை சவூதி மேற்கொண்டுள்ளது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், கத்தர் மீதான  தடையினை நீக்குவதற்கான ஆரம்ப நிலையாக இது அமையும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Iskandar Barak

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails