Tuesday, August 1, 2017

மக்களுக்கு தாக்குப் பிடிக்காது.

சுன்னத் ஜமாத்காரனுக்கு
வகாபியை பிடிக்காது
ஜமாத்தே முஸ்லிமீன் வகாபிக்கு
ஜாக் வகாபியை புடிக்காது.
ஜாக் வகாபிக்கு
ததஜ வகாபியை பிடிக்காது.
ததஜ வகாபிக்கு
இ.த.ஜ. வகாபியை பிடிக்காது.

எந்த வகாபிக்கும்
சுன்னத் ஜமாத்காரனை பிடிக்காது.
சு.ஜ.காரனுக்கு
தமுமுகவை பிடிக்காது
தமுமுக்காரனுக்கு
எஸ்டிபிஐயை பிடிக்காது
எஸ்டிபிஐகாரனுக்கு
முஸ்லிம் லீகை பிடிக்காது
மதஜகாரனுக்கு
தேசிய லீக்கை பிடிக்காது
தே.லீக்காரனுக்கு
மறுமலர்ச்சி மு.லீ.பிடிக்காது.
ம.மு.லீக்கு
காசிமியை பிடிக்காது
காசிமிக்கு
ஜமாலியை பிடிக்காது
ஜமாலிக்கு
பிஜெயைப் பிடிக்காது
பிஜெக்கு
கலாமை பிடிக்காது
கலாமுக்கு
தப்லீக்கை பிடிக்காது
தப்லீக்காரனுக்கு
வீட்டில் இருக்கப் பிடிக்காது
திமுக முஸ்லிமுக்கு
அதிமுக முஸ்லிமைப் பிடிக்காது
அதிமுக மு.க்கு
காங். முஸ்லிமைப் பிடிக்காது.
காங்.முஸ்லிமுக்கு
காவி முஸ்லிமைப் பிடிக்காது.
காவிக்கு
யாரையுமே பிடிக்காது.
இதுக்குமேலே சொன்னால் ...
மக்களுக்கு
தாக்குப் பிடிக்காது.

Abu Haashima

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails