இஸ்லாத்தை கேவலப்படுத்துவதாக நினைத்து தன்னை கேவலப்படுத்தி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்..!!!
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இன்று நான் அதிரடியாகச் செய்யப்போகும் செயலால் அவை முழுதும் தன்னைப் பாராட்டும்” என்று நினைத்துக் கொண்டார் பவ்லின் ஹான்சன் எனும் பெண் உறுப்பினர்.
இவர் தீவிர வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஆவார்.
பவ்லின் ஹான்சன் என்ன செய்தார் தெரியுமா?
முஸ்லிம் பெண்கள் அணிவது போன்ற புர்காவை அணிந்துகொண்டு நாடாளுமன்றம் வந்தார்.
தாம் பேச எழுந்தபோது புர்காவைக் கழற்றி வீசியபடி, “ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற மத உடைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது, தடை விதிக்க வேண்டும்” என்று வேகமாக வலியுறுத்தினார்.
தம்முடைய இந்தப் பேச்சுக்கும் செயலுக்கும் பாராட்டு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் “இதுபோன்ற நாடகங்கள் இங்கு விலைபோகாது” என்கிற ரீதியில் கண்டனமும் எதிர்ப்பும்தான் அவையில் எழுந்தன.
“ புர்காவுக்குத் தடை விதிக்கும் எண்ணம் ஏதும் அரசுக்கு இல்லை” என்று நாடாளுமன்றத்தின் தலைவர் (செனட் லீடர்) ஜார்ஜ் பிராண்டிஸ் தெளிவுபடுத்தியதுடன், “ஆஸ்திரேலியாவில் வசிக்கும் முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்தக் கூடாது” என்று ஹான்சனை எச்சரிக்கவும் செய்தார்.
அட்டர்னி ஜெனரல் எழுந்து,
“ஏறத்தாழ ஐந்து லட்சம் முஸ்லிம்கள் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார்கள்.
அவர்கள் அனைவருமே சட்டத்தை மதித்து நடக்கும் நல்ல ஆஸ்திரேலிய குடிமக்கள்.
நீங்களும் நல்ல குடிமகளாக இருக்க முயலுங்கள்” என்று கூறியதுடன்,
“ஒட்டுமொத்தமாய் ஒரு சமுதாயத்தை முள்முனையில் கொண்டுவந்து நிறுத்தி, அவர்களின் உடை கலாச்சாரத்தைக் கேலி செய்ததன் மூலம் நீங்கள் யார் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்” என்றும் அட்டர்னி ஜெனரல் ஹான்சனின் செயலைக் கடுமையாக ஆட்சேபித்தார்.
ஹான்சன் வாயடைத்துப் போய்விட்டார்.
ஹிஜாபைப் பாதுகாக்க வேண்டும் என்று இறைவன் நாடிவிட்டால்-
ஆஸ்திரேலிய ஆண்களும் அதற்குத் தயாராகிவிடுவார்கள்- அவர்கள் பின்பற்றுவது மேற்கத்திய கலாச்சாரமாக இருந்தாலும் சரி.
No comments:
Post a Comment