"என்னால்" "நான் தான்" என்ற
பாரம் ஏற்ற ஏற்ற கணம் தாங்கமுடியாமல்
தலை புஜம்
கால்கள் கரங்கள் சிரம்
அழுத்தமடைந்து
அச்சு முறிகிறது.
வெறுப்பும் பகையும்
அச்சமும் கவலையும் தோன்றி
எம்மை
மிக தீவிரமாக அச்சுருத்துகிறது.
"அல்லாஹ்"
"ரப்புல் ஆலமீன்" என
அறிந்து
அவனிடம் உருகத்தொடங்கி
அவனை அடைந்துக்கொள்ளும்போது
உருவமற்ற காற்றில்
வலுவற்ற இறக்கைகளால் பறக்கும்
பறவைகளாக ஆகிவிடுகிறது
"எல்லாம் எல்லாம்" !!
அல்லாஹ்வுடைய
அருளின் காரணமாகவே
நீங்கள் அவர்கள் மீது
மென்மையானவராக நடந்து கொண்டீர்கள்.
நீங்கள் கடுகடுப்பானவராகவும்,
கடின உள்ளம் கொண்டவராகவும்
இருந்திருப்பீர்களானால்
உங்களிடமிருந்து
அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள்.
ஆகவே,
அவர்களை நீங்கள் மன்னித்து
அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக!
அன்றி,
மற்ற காரியங்களிலும்
அவர்களுடன் கலந்து ஆலோசித்தே வாருங்கள்!
நீங்கள்
முடிவு செய்தால்
அல்லாஹ்விடமே
பொறுப்பை ஒப்படையுங்கள்.
ஏனென்றால்,
நிச்சயமாக
அல்லாஹ்
பொறுப்பு சாட்டுபவர்களை
நேசிக்கின்றான்.
- அல்குர்ஆன்: 3:159
அ.மு.அன்வர் சதாத்
No comments:
Post a Comment