பார்வை தெளிந்து
பாதை திறந்து
நேர்வழி தெரியட்டுமே
தன்னலம் அகன்று
வறுமை ஒழிந்து
சுபிட்சம் பிறக்கட்டுமே
மனதில் நிறைந்து
செயலில் வடித்து
காரியங்கள் ஆகட்டுமே
உழைப்பில் மிளிர்ந்து
உன்னதம் அடைந்து
செல்வம் சேரட்டுமே
உறவில் கலந்து
உணர்வை மதித்து
ஒற்றுமை ஒங்கட்டுமே
நட்பை மதித்து
நன்மைகள் பெருக்கி
நானிலம் சிறக்கட்டுமே
அன்பை விதைத்து
அமைதியை வளர்த்து
உலகில் வாழட்டுமே
இயற்கையை சார்ந்து
இல்லாமை இல்லாதாக்கி
இன்பங்கள் துய்க்கட்டுமே
பகைமை ஒழிந்து
பக்குவம் பெருகி
மனிதநேயம் நிலைக்கட்டுமே
இறையை வணங்கி
ஈகையை வழங்கி
தியாகங்கள் செய்வோமே
*******
# அருமை நட்புகள் அனைவர்க்கும் தியாகத்திருநாள் வாழ்த்துக்கள் !
ராஜா வாவுபிள்ளை
No comments:
Post a Comment