Tuesday, September 29, 2015

ஜமாஅத் நிர்வாகம் ஒரு அமானத் !.....



  எல்லா ஜமாஅத் நிர்வாகிகளுக்கும் அதன் மக்களாகிய நம் அனைவருக்குமான ஒரு நினைவூட்டலே இந்த பதிவு...

  மக்களினால் வழங்கப்பட்ட அமானிதத்தை ஜமாஅத் நிர்வாகம் நிச்சயம் பாதுகாக்க வேண்டும்!.. குறிப்பாக நிர்வாகத்தின் தலைவராக செயல்படுகிறவர் இதனை நன்றாக உணர்ந்து செயல்படவேண்டும் !...

“விசுவாசிகளே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் ஒப்படைத்து விடுமாறும், மனிதர்களுக்கிடையில நீங்கள் தீர்வு கூறினால், (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான். நிச்சயமாக அல்லாஹ் செவியேற்கிறவனாக, பார்க்கிறவனாக இருக்கின்றான்.” ( சூரத்துல் நிஸா: 58)

Monday, September 28, 2015

என்னென்று நான் சொல்லலாகுமா ?


என்னென்று நான் சொல்லலாகுமா ?
முன் குறிப்பு- Continue reading...ஆ...அதற்கு வேறு ஆளை பாரப்பா என்று விலகிப் போவோரையும் இம்முறை நான் விரும்பியே அழைக்கின்றேன். காரணம் இறைவனின் இருப்பை உறுதி செய்யும் பதிவு இது, எல்லோருக்கும் புரிகிற எளிய சம்பவங்களை கையாண்டு அவைகளைக் கொண்டு விளக்கிட நான் பிரயாசை பட்டிருக்கிறேன், தயவு செய்து படியுங்கள், மனம் தெளிவடையுங்கள், அல்லாஹ் நம் அனைவரின் நம்பிக்கையையும் பொருந்திக் கொள்வானாக, ஆமீன்.- Raheemullah Mohamed Vavar

இறைவன் என்பவன் யார்? அவன் என்னதான் செய்து கொண்டு இருக்கிறான்? சொல்லப்படும் ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரம் நபிமார்களையும் படைத்து, நான்கு வேதங்களையும் இம்மண்ணில் இறக்கி வைத்து, சொர்க்கத்தையும் நரகத்தையும் ஏற்படுத்தி, நேர்வழி பெற்றோர்க்கு சொர்க்கமென்றும், வழி பிறழ்ந்தோர்க்கு நரகமென்றும் சொல்லி வைத்து, இவ்வுலகை அன்றிலிருந்து இனி முடியும் நாள் வரை பரிபாலித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்பவனின் உண்மை நிலைதான் என்ன, அவனின் தன்மைகளும்தான் என்ன ?

வேற்று கிரகவாசிகள்!



  ரஹ்மத் ராஜகுமாரன் 

'(மனிதர்களே! இவ்வாறு நாம் உங்களை மட்டுமா சிருஷ்டித்திருக்கின்றோம்?) நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள ஏழு வானங்களையும் நாமே சிருஷ்டித்தோம் (அவை ஒவ்வொன்றிலும் உங்களைப் போன்ற எத்தனையோ சிருஷ்டிகள் இருக்கின்றன. இவைகளைச் சிருஷ்டித்திருப்பதுடன்) இச்சிருஷ்டிக(ளுக்கு வேண்டியவைக)ளைப் பற்றி நாம் பராமுகமாகவும் இருக்கவில்லை (அவைகளுக்கு வேண்டியவை அனைத்தும் முழுமையாக நாம் படைத்தும் இருக்கிறோம்' (அல் குர்ஆன் 23:17)

"அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்" (1:1)

உலகங்களை உருவாக்கிப் பரிபாலித்துவரும் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (1:1)

திருக்குர்ஆனின் 6666 வசனங்களில் முதன்மையான இவ்வசனமே வியப்புக்குரிய வசனம். இவ்வசனத்தில் 'ஆலமீன்' என்கிற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான். 'ஆலம்' என்றால் உலகம். ஆலமீன் என்றால் உலகங்கள் என்று பொருள்.அன்று, 'நம் பூமி என்கிற இந்த உலகம் தவிர இன்னும் நிறைய உலகங்கள் உண்டா? என்று அப்போதே உலகம் கேள்வி கேட்டு, மானிட உலகம், ஜின்களின் உலகம், மலக்குகளின் உலகம், பிராணிகளின் உலகம், தாவரங்களின் உலகம் என்று பதில் சொல்லி சமாதானமாகிக் கொண்டது.

Sunday, September 27, 2015

இஸ்லாமிய விரோத வலைத் தளங்களை எவ்வாறு கையாள்வது?

ஏ.பி.எம். ஆஸிம், BBA
தற்காலத்தில் இஸ்லாமிய விரோத வலைத் (Anti- Islamic sites) தளங்கள் தாராளமாக மலிந்துவிட்டன. இஸ்லாமிய விரோத பிரசாரம் என்பது இன்று நேற்று துவங்கியதொன்றன்று, இஸ்லாம் தோன்றிய காலம் முதல் இந்த செயற்பாடுகளும் துவங்கிவிட்டன.

ஆனால் தொழில் நுட்ப வளர்ச்சியுடன் இந்த இஸ்லாமிய விரோத சக்திகளின் செயற்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. சாதாரண ஈமானிய உணர்வு உள்ளவனே கொதித்தெழுகின்ற அளவுக்கு இவர்களது செயற்பாடுகள் வியாபித்து விட்டன.

அந்த வகையில் தற்காலத்தில் சமூக வலைத் தளங்களில் ( குறிப்பாக Facebook) இத்தகைய இஸ்லாமிய விரோத பக்கங்களைத் (Anti- Islamic Pages)தாராளமாக பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

ஒரு இஸ்லாமிய உணர்வுள்ளவனாக இத்தகைய இஸ்லாமிய விரோத வலைத் தளங்களை எவ்வாறு கையாள முடியும்? என்பது பற்றி சில ஆலோசனைகளை இங்கு முன்வைக்க முனைகிறேன்.

இனிய திசைகள் மாத இதழ்

  1. இனிய திசைகள், செப்டம்பர் 2015
  2. இனிய திசைகள், மே 2015 இதழ்
  3. இனிய திசைகள், ஏப்ரல் 2015 இதழ்
  4. இனிய திசைகள், மார்ச்.2015 இதழ்
  5. இனிய திசைகள், பிப்ரவரி.2015 இதழ்
  6. இனிய திசைகள், ஜன.2015 இதழ்
  7. இனிய திசைகள்,டிசம்பர்’2014 இதழ்
  8. இனிய திசைகள் நவம்பர்’ 2014 இதழ்
  9. இனிய திசைகள்,அக்,2014 இதழ்
  10. இனிய திசைகள், செப். 2014 இதழ்
  11. இனிய திசைகள் -ஆகஸ்ட் 2014 இதழ்
  12. இனிய திசைகள் – ஜூலை 2014 இதழ் 
  13. இனிய திசைகள் – ஜூன் 2014 இதழ் 
  14. இனிய திசைகள் – மே 2014 இதழ்
  15. இனிய திசைகள் – ஏப்ரல் 2014 இதழ்
  16. இனிய திசைகள் – மார்ச் 2014 இதழ்
  17. இனிய திசைகள் – பிப்ரவரி 2014 இதழ்
  18. இனிய திசைகள் – ஜனவரி 2014 இதழ்
  19. இனிய திசைகள் – டிசம்பர் 2013‏ இதழ்
  20. இனிய திசைகள் – நவம்பர் 2013‏ இதழ்
  21. இனிய திசைகள் – அக்டோபர் 2013‏ இதழ்
  22. இனிய திசைகள் – செப்டம்பர் 2013‏ இதழ்
  23. இனிய திசைகள் – ஆகஸ்ட் 2013‏ இதழ்
  24. இனிய திசைகள் – ஜூலை 2013‏ இதழ்
  25. இனிய திசைகள் – ஜூன் 2013‏ இதழ்
  26. இனிய திசைகள் – மே 2013‏ இதழ்
  27. இனிய திசைகள் – ஏப்ரல் 2013‏ இதழ்
  28. இனிய திசைகள் – மார்ச் 2013‏ இதழ்
  29. இனிய திசைகள் – பிப்ரவரி 2013‏ இதழ்
  30. இனிய திசைகள் – ஜனவரி2013‏ இதழ்
  31. இனிய திசைகள் – டிசம்பர் 2012 இதழ்
  32. இனிய திசைகள் – நவம்பர்,2012 இதழ்
  33. இனிய திசைகள் – அக்டோபர்,2012 இதழ்
  34. இனிய திசைகள் – செப்டம்பர்,2012 இதழ்
  35. இனிய திசைகள் – ஆகஸ்ட்,2012 இதழ்
  36. இனிய திசைகள் – ஜூலை,2012 இதழ்
  37. இனிய திசைகள் – ஜூன்,2012 இதழ்
  38. இனிய திசைகள் – மே,2012 இதழ்
  39. இனிய திசைகள் – ஏப்ரல்,2012 இதழ்‏
  40. இனிய திசைகள் – மார்ச் 2012 இதழ்‏
  41. இனிய திசைகள் – பிப்ரவரி,2012 இதழ்‏
  42. இனிய திசைகள் – ஜனவரி,2012 இதழ்
  43. இனிய திசைகள் – பிப்ரவரி’2015 இதழ்
  44. இனிய திசைகள் – ஜூன்’2015 இதழ்

புஜேராவில் 210 மில்லியன் செலவில் கட்டப்பட்ட ஷேக் ஜாயித் பள்ளிவாசல் பக்ரீத் பெருநாளன்று திறக்கப்பட்டது




புஜேராவில் 210 மில்லியன் செலவில் கட்டப்பட்ட ஷேக் ஜாயித் பள்ளிவாசல் பக்ரீத் பெருநாளன்று திறக்கப்பட்டது. இதன் மூலம் அமீரகத்தின் இரண்டாவது பெரிய பள்ளிவாசல் என்ற பெருமையினை இந்த பள்ளிவாசல் பெற்றுள்ளது.

பக்ரீத் பெருநாளன்று நடந்த சிறப்புத் தொழுகைக்கு புஜேரா ஆட்சியாளர் மேதகு ஷேக் ஹமத் பின் முகம்மது அல் சர்கி தலைமை வகித்தார்.

39,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த பள்ளிவாசலில் 28,000 பேர் தொழுகை செய்யலாம்.  புஜேராவின் மத்தார் பின் முகம்மது சாலையில் இந்த பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்த பள்ளிவாசலில் 63 டோம்கள் (domes) எனப்படும் கூம்பு வடிவ அமைப்பு கொண்டுள்ளது. மேலும் 6 உயரமான மினாராக்கள் உள்ளன. இந்த மினாராக்கள் ஒவ்வொன்றும் 80 முதல் 100 மீட்டர் உயரம் கொண்டது.

Saturday, September 26, 2015

எது சந்தோஷம்..


பாலூட்டினாய் ...
பசி தீர்ந்தது..சந்தோஷம்
வர வில்லையம்மா...

எனக்கு சோறூட்டினாய்
வயிறு நிறைந்தது.சந்தோஷம்
இல்லையம்மா..

ஆடையால் எனை மறைத்தாய்.
அழகு வந்தது.சந்தோஷம்
வர வில்லையம்மா..

Thursday, September 24, 2015

தியாகச்சோதனையதில் வென்றுத் தந்த வெகுமதி

 தியாகச்சோதனையதில்
வென்றுத் தந்த வெகுமதி
திரும்பவும் வந்ததடைந்தது
தீனோர்க்கு ஓர் ஒளியாய்

மார்கத்தில் மூத்தோராம்
மதி நிறை நல்லோர்தம்
தூக்கத்தில் கண்ட "கனா"
தூயவனின் கட்டளையென

ஆக்கத்திற்கிசைவு தர
அருமை மகனார் "இஸ்மாயீலை"
அறுத்துப் பலியிட தாமும்
அனுமதி கேட்கச் சென்றாரே.!!

Wednesday, September 23, 2015

இன்பத் திருநாள் இருமை வாழ்விற்கே!

-முஹம்மது பெளமி-

 பெருநாட்கள் அல்லது பண்டிகைகள் அரபி மொழியில் “ஈத்” என அழைக்கப்படுவது உண்டு. ஈத் என்றால் மீண்டும் மீண்டும் வருதல் என்ற கருத்தை கொடுக்கின்றது.  ஆண்டு தோறும் வருவதால் பெருநாட்களுக்கு இவ்வாறு பெயர்கள் உண்டு!
இஸ்லாத்தை பொறுத்தமட்டில் ஆண்டு தோறும் இரண்டு பெருநாட்கள் மட்டுமே! அவை தவிர ஒவ்வோர் வார இறுதியிலும் வெள்ளிக் கிழமை நாள் முஸ்லிம்களுக்கு பெருநாளாக கருதப்படுகிறது.  இது தவிர வேறு எவ்விதமான கொண்டாட்டங்களும் இஸ்லாத்தில் கிடையாது!
பெருநாட்களின் நோக்கம்!
யாவற்றையும் அறிந்த வல்ல இறைவன் மிக உன்னதமான நோக்கத்தின் அடிப்படையில் இரு பெருநாட்களையும் அவனது நல்லடியார்களுக்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றான். ஒன்று ஈதுல் பித்ர் எனும் ஈகைத் திருநாள். மற்றொன்று ஈதுல் அள்ஹா எனும் தியாகத் திருநாள்.

Monday, September 21, 2015

இந்தப் பெருநாளிற்கு { EID AL ADHA ( FESTIVAL OF SACRIFICE ) } “தியாகத் திருநாள்” என்று பெயர் சூட்டி அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.

இனி இப்படி வாழ்த்துவோம்!
--------------------------------------------
இந்தப் பதிவிற்கான படத்தினை தயாரித்துக்கொண்டிருந்தேன்.

பார்த்துக் கொண்டிருந்த நண்பர், “என்ன ஸார் ‘பக்ரீத்’க்கு பிரியாணி recipe எழுதுகிறீர்களா?” என்று கேட்டார்.

இல்லை.. இல்லை நீங்கள் சொன்ன ‘பக்ரீத்’க்கு விளக்கம் எழுதுகிறேன் என்றேன்.

”என்னது விளக்கமா?, அதற்கு எதற்கு Tomato, உருளைக்கிழங்கு??, விளங்கவில்லையே!!” என்று விழித்தார்.

என்னவென்று விளங்காததாதல் வந்த பெயர்கள்தானே Tomato மற்றும் உருளைக்கிழங்கு என்றேன்.

”என்ன சொல்றீங்க?”

எண்ணமே முகவரி


  டாக்டர் அ. ஜாஹிர் ஹுஸைன் பாகவி 

கட்டுரையாசிரியர் சென்னை பல்கலைக் கழகத்தில் "டாக்டர்" பட்டம் பெற்ற முதல் பாகவி ஆவார்.

எதார்த்தத்தில் நல்லவன் தன்னை நல்லவன் என்று விளம்பரப்படுத்த மாட்டான்.

அவ்வாறு விளம்பரப்படுத்துபவன் நல்லவன் அல்லன்.

நல்லவன் பிறரைக் கெட்டவனாகக் கருதமாட்டான். அவ்வாறு கருதினால் அவன் நல்லவன் அல்லன்.

நல்லவன் கெட்டவனைக்கூட கெட்டவனாக பார்க்க மாட்டான்.

நல்லவன் தனக்கும் பிறருக்கும் அறிவுரை கூறுவான். பிறருக்கு மட்டும் அறிவுரை கூறுபவன் நல்லவன் அல்லன்.

பிறருக்கு அறிவுரை கூறுபவனெல்லாம் நல்லவனும் அல்லன்.

ஒருவன் வழிபாடுகளிலும், அறப்பணிகளிலும் ஈடுபடுவதால் மட்டும் நல்லவன் ஆகிவிட மாட்டான். அவன் அவனது மனத்திலும் அல்லாஹ்வின் பார்வையிலும் நல்லவனாக ஆக வேண்டும்.

வருமுன்

பழைய டைரிக் குறிப்பொன்றைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த வாக்கியம் கவனத்தைக் கவர்ந்தது. உறவினர் ஒருவர் ஹஜ்ஜுக்குச் சென்றிருக்கிறார். அரஃபாவிலிருந்து மினா செல்லும் வழியில் இறந்துவிட்டார்.

அங்கேயே நல்லடக்கம் செய்துவிட்டனர். அது, “வண்ணார் வாகனத்தின் மீதேறி பயணம் சென்றபோது அங்கேயே விழுந்து இறந்தார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது நடந்தது இருபதாம் நூற்றாண்டின் வெகு ஆரம்பக் காலங்களில். அப்பொழுதெல்லாம் பயண வாகனம் கால்நடைகள்! அவரவர் வசதிக்கேற்ப ஒட்டகம், குதிரை, சற்று சல்லிசாக என்றால் கழுதையாக இருந்திருக்கும் போலும்.

இறைச்சியும் இரத்தமும் அல்லாஹ்விடம் போய்ச் சேருவதில்லை


لَن يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَٰكِن يَنَالُهُ التَّقْوَىٰ مِنكُمْ كَذَٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِينَ
அவற்றின் இறைச்சியும் இரத்தமும் அல்லாஹ்விடம் போய்ச் சேருவதில்லை. ஆயினும், உங்களின் இறையச்சமே அவனிடம் போய்ச் சேருகின்றது. இவ்வாறு அவனே அவற்றை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்; அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டியமைக்காக நீங்கள் அவனைப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக! (நபியே!) நற்பணி புரிவோருக்கு நற்செய்தி சொல்வீராக!

(அல்குர்ஆன் : 22:37)

It is neither their meat nor their blood that reaches Allah, but it is piety from you that reaches Him. Thus have We made them subject to you that you may magnify Allah for His Guidance to you. And give glad tidings (O Muhammad SAW) to the Muhsinun (doers of good).

(Surah Al-Hajj 22: Ayah 37)

Sunday, September 20, 2015

ஹஜ் மாதத்தின் படிப்பினை

ஹஜ் மாதத்தின் படிப்பினை
அரஃபா பெருவெளி" (...ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைச் சேமித்துக் கொள்ளுங்கள். சேமிப்பில் சாலச்சிறந்தது இறையச்சமாகும். எனவே, நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள்" (அல்குர்ஆன் 2:197).

அல்லாஹ்வின் பேரருளால் இஸ்லாமிய சிறப்புமிகு மாதங்களில் ஒன்றாகிய 'துல்ஹஜ்' எனும் இந்த ஆண்டுக்கான இறுதி மாதத்தைப் பெற்றுள்ளோம், அல்ஹம்து லில்லாஹ்!

இம்மாதத்தில் ரமலானுக்குப் பிறகு இரண்டாவது பெருநாளாகிய 'ஹஜ்ஜுப் பெருநாள்(ஈதுல் அழ்ஹா)' எனும் தியாகத் திருநாளை, அல்லாஹ்வின் தூதர் இப்ராஹீம்(அலை) அவர்களுடைய ஈடற்ற தியாகத்தை நினைவுகூரும் விதமாக உலக முஸ்லிம்கள் அனைவரும் மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர்.

Thursday, September 17, 2015

இதற்குத் தலைப்பு நீங்களே எழுதுங்கள் - Rafeeq

இந்தப் பதிவினைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இந்தப் படத்தை நன்றாகப் பாருங்கள்.

ஒன்பதாம் வகுப்பு பயிலும் 14 வயது மாணவன். எலக்ட்ரானிக்ஸ் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். புதுப்புது 'ப்ராஜெக்ட்' செய்து பார்ப்பதில் ஆர்வம் மிகுந்தவன். ஆமாம் படத்திலிருக்கிறது.

அடுத்ததாக அமெரிக்க அதிபர் ஒபாமாவின் 'ட்வீட்', உன் போன்ற குழந்தைகளினால் தான் அறிவியலில் சாதிக்கும் அமெரிக்காவிற்குப் பெருமை!

அடுத்தது அதே மாணவன் தன் குடும்பத்தினருடன் மகிழ்ச்சிப் பெருக்கில் பயணிக்கிறான். இருக்காத பின்னே.... அதிபரிடமிருந்தே வாழ்த்துப்பெற்றால் மகிழ்ச்சி இருக்காதா? என்று நீங்கள் கேட்டால், இன்னும் அந்தப் படத்தை நீங்கள் சரிவரப் பார்க்கவில்லை என்று பொருள். !!! மீண்டும் ஒருமுறை பாருங்க...

அந்த மாணவனை போலீஸ் கையில் விலங்கிட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து வருவதை... அட ஆமாம் என்றால், ஒபாமாவின் 'ட்வீட்'ல் ஒரு கடிகாரத்தை எடுத்துக் கொண்டு வெள்ளை மாளிகை வரச் சொல்கிறாரே??

குழப்பமாக இருக்கிறதுல்ல... சிம்பிள் பையனைத் தீவிரவாதி என்று கைது செய்துள்ளது போலீஸ்!
அப்ப ... ஒபாமாவின் வாழ்த்து?

படிங்க ...நடந்தது இதுதான்....

Wednesday, September 16, 2015

வரலாறு காணாத இழப்பீட்டுத் தொகை வழங்க மன்னர் உத்தரவு!

சென்ற செப்டம்பர் 11 அன்று நடந்த மெக்கா கிரேன் விபத்தில் இறந்தவர்களுக்கு வரலாறு காணாத இழப்பீட்டுத் தொகையை வழங்க மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். போன உயிர் திரும்பி வரப் போவதில்லை. ஆனால் சொந்தங்களை இழந்தவர்களுக்கு இந்த பொருளுதவியானது மிக உதவிகரமாக இருக்கும்.

பின் லாடன் குரூப்பின் பாக்கர் பின் லாடன் முதல் முக்கிய அதிகாரிகள் வரை எவரும் நஷ்ட ஈட்டுத் தொகையை அளிக்காமல் சவுதியை விட்டு வெளியேற முடியாது என்ற கண்டிஷனும் போடப்பட்டுள்ளது.

Tuesday, September 15, 2015

ஹஜ் பெருநாள் சிறப்புக் கட்டுரை - ஒற்றுமைக்கு ஒரு சம்பவம்



ஒற்றுமைக்கு ஒரு சம்பவம்

                 ( முதுவைக் கவிஞர் மர்ஹும் ஹாஜி உமர் ஜஹ்பர் )


  அகில உலகம் முழுதும் – ஒவ்வொரு நாட்டில் இருந்தும் புறப்பட்டுச் சென்ற புனித ஹாஜிகள் அனைவரும் இன்று புனித கஃபாவை வலம் வந்து புண்ணியங்களைச் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர் !

  சவூதி அரேபிய நாட்டின் ஹிஜாஸ் மாநிலத்தில் புனித மக்கா நகரில் தான் கஃபா புனித ஆலயம் கம்பீரமாக வீற்றிருக்கிறது. கஃபாவின் நீண்ட நெடிய வரலாற்றில் எத்தனையெத்தனையோ சரித்திரச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன !
நிலை கொண்ட மாண்பாளர்களும் தனக்கே அந்தப் பணியைச் செய்யும் தகுதியும் உரிமையும் உண்டு என
  நபி பெருமானுக்கு நபிப்பட்டம் வழங்கப்படுவதற்கு முன்னொரு நாள் ஒரு சம்பவம் ! ஒரு பேரிடரினால் கஃபா ஆலயத்தை மறு சீரமைப்புச் செய்யும் நிர்பந்தம் ஏற்பட்டது. கஃபா ஆலயத்தின் வடகோடி மூலையில் பதிக்கப்பட்டிருந்த “ஹஜ்ருல் அஸ்வத்” என்னும் மாணிக்கக் கல்லை மீண்டும் ஏற்றி வைக்கும் பணி ஏற்பட்டது.

Monday, September 14, 2015

குர்பானி - இதன் பின்னணி, நோக்கம், யார்மீது கடமை , சட்டங்கள் , சந்தேகங்கள் , தெளிவுகள் ?....


குர்பானியின் பின்னணி
=====================
நாம் ஏன் குர்பானி கொடுக்க வேண்டும்? எதற்காக அது கொடுக்கப் படுகிறது? என்பதை பின்வரும் சம்பவத்தின் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடியும். இச்சம்பவத்தில் அல்லாஹ்வும், இப்றாஹீம் நபியும், இஸ்மாயீல் நபியும் சம்பந்தப்படுகிறார்கள்.
“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).
எனவே, நாம் அவருக்கு பொறுமை சாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.

பின் (அம்மகன்) அவருடன் நட மாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் – என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்று முள்ளவனாகவே காண்பீர்கள்.”
ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.

குர்பானிய சட்ட திட்டங்கள்


-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்-

ஹஜ் மாதம் வருவதற்கு முன்பே குர்பானியின் சிந்தனை தான் அதிக மானவர்களின் எண்ணங்களின் வெளிப்பாடாகும்.

குர்பானின் முக்கியத்துவத்தைப் பற்றி அல்லாஹ் குர்ஆனிலும், நபிய வர்கள் ஹதீஸிலும், நமக்கு மிகவும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள்.
குர்பான் என்பது முக்கியமான ஓர் அமலாகும். இந்த குர்பானைப் பற்றி பல முக்கிமான தகவல்களை உங்க ளுக்கு தொகுத்து வழங்குகிறேன்.

குர்பானியின் பின்னணி

நாம் ஏன் குர்பானி கொடுக்க வேண்டும்? எதற்காக அது கொடுக்கப் படுகிறது? என்பதை பின்வரும் சம்ப வத்தின் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடியும். இச்சம்பவத்தில் அல்லாஹ்வும், இப்றாஹீம் நபியும், இஸ்மாயீல் நபியும் சம்பந்தப்படுகிறார்கள்.

“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).

எனவே, நாம் அவருக்கு பொறுமை சாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.

Saturday, September 12, 2015

தியாகத் திருநாள் கற்பிக்கும் பாடங்கள்

இவ்வுலக வாழ்க்கை என்பது இறைவனால் நடத்தப்படும் பரீட்சை என்பதை அனைவரும் அறிவோம். இப்பரீட்சையில் பலரும் பல்வேறு விதமாக சோதிக்கப்படுகிறார்கள். சுமார் 5000 வருடங்களுக்கு முன்னாள் வாழ்ந்த இப்ராஹீம் என்ற ஒரு இறைத்தூதருக்கு வாய்த்த பரீட்சை மிகவும் அலாதியானது. அவர் முழுக்க முழுக்க இறைவனுக்குக் கட்டுப் பட்டவராகவும் இறைக்கட்டளைகள் எதுவானாலும்  சிறிதும் தயக்கம் காட்டாமல் நிறைவேற்றுபவராகவும் இருந்தார். இறைவன் மீது அவர் கொண்டிருந்த அளப்பரிய நம்பிக்கையும் ஈடிணையில்லாதது. சிலைவணங்கிகளாயிருந்த தன் நாட்டு மக்களுக்கிடையே தனிநபராக நின்று சத்தியப்பிரச்சாரம் செய்து அதன் விளைவாக அந்நாட்டு அரசனால் நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்டார். இறைவன் கட்டளையிட்டான் என்பதற்காக தனது ஆருயிர் மனைவியையும் பச்சிளம் பாலகனையும் ஒரு பாலைவனத்தின் நடுவெளியில் விட்டுவிட்டு வந்தார். இவ்வாறு தொடர்ந்து அவருக்குக் கொடுக்கப்பட்ட அனைத்துப் பரீட்சைகளையும் ஒரு சிறிதும் தயக்கம் காட்டாமல் நிறைவேற்றி வந்தார். இறைவன் அனைத்து சோதனைகளிலும் அவரையும் அவரது குடும்பத்தாரையும் காப்பாற்றவும் செய்தான். அவருக்கு உச்சகட்டமாக வைக்கப் பட்ட ஒரு பரீட்சையை மனிதகுலம் நினைவுகூரவும் அதன் படிப்பினையை வாழ்வில் கடைப் பிடிக்கவுமே முஸ்லிம்களால் பக்ரீத் அல்லது தியாகத் திருநாள் என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Thursday, September 10, 2015

ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரின் முப்பெரும் விழா..!!

ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரின் முப்பெரும் விழா..!!

இறைவைனின் சாந்தியும் சமாதானமும் உங்கள்மீது உண்டாகட்டுமாக,

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரக் கிளை சார்பாக “ஓர் ஆண் கல்வி கற்பதால் தனி ஒருவருக்கு மட்டுமே பயன், ஆனால் பெண் கல்வி கற்கும்போது அது சமூகத்திற்கே பயன்படும்” என்ற உயரிய நோக்கத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளாக சமூகத்தில் சிறந்த ஆலிமாக்களை உருவாக்கும் வகையில் "ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி"யினை சிறப்பாக நடத்தி வருகிறது. இந்தக் கல்லூரி வெற்றிகரமாக மூன்று ஆண்டுகளை கடந்து நான்காம் ஆண்டில் காலடி பதித்துள்ளது.
இந்தக் கல்லூரியில் மாணவிகள் தங்களது மூன்று வருட ஆலிமா பட்டப்படிப்பை பூர்த்திசெய்துள்ள நிலையில், கடந்த செப்டம்பர் 6, 2015 (ஞாயிறு) அன்று இந்த மூன்று வருட பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ள 20 மாணவிகளுக்கு "ஹாதியா" என்ற பட்டம் வழங்கும் நிகழ்வு சமூகத்தின் தலைசிறந்த உலமாக்கள், அறிஞர்கள், இயக்கத் தலைவர்கள், மற்றும் சமூகப் பிரமுகர்கள் முன்நிலையில் நடைபெற்றது.

பெண்களும், கல்வியும்

பெண்களும், கல்வியும்
-by நாகூர் ரூமி

  அறிவைத் தேடுகின்ற தகுதி ஆண்களுக்கு மட்டும்தான் உள்ளது என்று திருமறையின் எந்த வசனமும் சொல்லவில்லை. மாறாக, கிட்டத்தட்ட 750 வசனங்களில் இறைவனின் படைப்பினங்களைப் பற்றிச் சிந்திக்கும்படித் திருமறை ஆண்களையும், பெண்களையும் கேட்கிறது. பெருமானார் மிகவும் தெளிவாகக் கூறிய ஹதீதுகளையும் கல்வியின் முக்கியத்துவத்தை உறுதி செய்வதாக உள்ளன. சில உதாரணங்கள்.

  “நபியே எந்தக் காரியம் சிறந்தது?” என்று ஒரு முறை பெருமானாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு “அறிவே சிறந்தது” என்று பதில் சொன்னார்கள்.

  “நபியே திருமறையை ஓதுவதைவிட கல்வி கற்றுக் கொள்வது சிறந்ததா?” என்று ஒருமுறை பெருமானாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு “அறிவின் மூலமாக அன்றி, வேறு எப்படித் திருமறையால் உங்களுக்கு நன்மை செய்ய முடியும்?” என்று கேட்டார்கள்.

Tuesday, September 8, 2015

ஏட்டில்......

ஏட்டில்......

நான்தான் மூஸா என்றார்கள். இஸ்ரவேலர்களுக்கு நபியாக அனுப்பப்பட்ட மூஸாவா? என கிள்று அவர்கள் கேட்டார்கள். அதற்கு ஆம்’ என்று கூறினார்கள். உமக்கு இறைவனால் கற்றுத் தரப்பட்டதிலிருந்து எனக்குக் கற்றுத் தருவதற்காக உம்மை நான் பின்பற்றி வரட்டுமா?’ என்று கேட்டார்கள். அதற்கு ஹிள்ரு (அலை) அவர்கள், நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர்! மூஸாவே! இறைவன் தன்னுடைய ஞானத்திலிருந்து எனக்குக் கற்றுத் தந்தது எனக்கிருக்கிறது. அதனை நீர் அறிய மாட்டீர். அவன் உமக்குக் கற்றுத் தந்திருக்கிற வேறொரு ஞானம் உமக்கிருக்கிறது. அதனை நான் அறிய மாட்டேன் என்று கூறினார்.

அதற்கு மூஸா (அலை) அவர்கள், உம்முடைய உத்தரவை மீறாத முறையில் அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்! என்றார்கள். முடிவில் இருவரும் கப்பல் எதுவும் கிடைக்காத நிலையில் கடற்கரை ஓரமாகவே நடந்து சென்றார்கள். அவ்விருவரையும் ஒரு கப்பல் கடந்து சென்றது. தங்களையும் அக்கப்பலில் ஏற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் கிள்று அவர்களை அறிந்திருந்ததால் அவ்விருவரையும் கட்டணம் ஏதுமின்றி கப்பலில் ஏற்றினார்கள்.

Monday, September 7, 2015

Coccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...


"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான ‪Coccyx ‬... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..?"


...என்று கேள்வி கேட்டு, Tail bone என்று இதற்கு மாற்றுப்பெயரிட்டு... இது மனித உடம்பில் ஒரு தேவையற்ற உறுப்பு.. (vestigial organ) என்று பெரும்பாலான அறிவியலாளர் கருதுகிறார்கள்.

இது முற்றிலும் தவறு..!

இறைவனின் படைப்பான நமது உடலில்..."நான் ஒரு -தேவையற்ற உறுப்பு- vestigial organ" என்று எந்த உறுப்பிலும் எழுதி ஒட்டி இல்லை. நாமாக சிந்தித்து எந்த உறுப்பின் பயனாவது 'தெரியவில்லை' என்றால், அது பற்றிய விளக்கம் இல்லை என்றால், அந்த அறியாமையாகிய தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் 'அது தேவை அற்றது' என்று அவசரப்பட்டு அறிவித்து விடுகிறோம்.

பின்னாளில் உண்மை புரியும்போது அதன் அவசியம் உணரும்போது கருத்தை வாபஸ் வாங்கிக்கொள்கிறோம். நம் உடலில் எதுவும் வேஸ்டாக இருக்காது என்பது என் அனுபத்தில் எடுத்த அசைக்க முடியாத முடிவு. அதை எந்த விஞ்ஞானி வந்து மறுத்து சொன்னாலும் நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

Sunday, September 6, 2015

உடல் நலக்குறைவான போது சாப்பிட வேண்டியவை

 உடல் நலக்குறைவான போது சாப்பிட வேண்டியவை
உடல்
நலக்குறைபாடுகள் ஏற்படும்போது, எப்போதும் சாப்பிடும் உணவு வகைகளை தவிர்த்து நம் உடலுக்கு மிக
அவசியமான  உணவுகளை சாப்பிடுவது  நல்லது.

காய்ச்சல்

காய்ச்சல் நேரத்தில் இட்லி, இடியாப்பம் போன்ற மென்மையான திட உணவுகள் சாப்பிடலாம். திட உணவுகள் சாப்பிட முடியாத போது திரவ உணவுகள் எடுத்துக்கொள்ளலாம்.
நொய்க்கஞ்சி, ஓட்ஸ் கஞ்சி, பார்லி கஞ்சி, சூப், ஜூஸ், மோர், இளநீர் போன்ற நீராகாரங்கள் நல்லது.

நீராகாரங்கள் உடலின் சூட்டைக் குறைத்து காய்ச்சல் குறைய உதவும். காய்ச்சல் நேரத்தில் நீர்ச்சத்து குறைந்தால் உடலில் பொட்டாசியம் சத்து குறைந்து கால் நரம்புகள் இழுத்துக்கொள்ளும்.

ஆகவே காய்ச்சலின் போது கட்டாயம் நீராகாரங்களாவது சாப்பிட வேண்டும். காரம் குறைவாக சாப்பிட வேண்டும்.

Friday, September 4, 2015

வெள்ளைப் பூக்களின் … பயணம் !

‘பொற்கிழி’ கவிஞர் தமிழ்மாமணி மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி

அலைபேசி : 99763 72229
-----------------
          

ஹஜ்ஜுக்குச் செல்வோரும்

உம்ராவுக்குச் செல்வோரும்

அல்லாஹ்வின் விருந்தினர்கள் என்று

அபூஹுரைரா (ரலி) அவர்கள்

அறிவித்துள்ளார்கள் !



அதன்படி,

புனித ஹஜ்ஜுக்குப் புறப்படும்

வெள்ளைப் பூக்களே !

எதுவும் எனதில்லை

எல்லாமே உனது என்றே

எல்லாம் துறந்து

ஏகனே கதியென்று செல்லும்

இறைக் காதலர்களே …!


சிரிய மக்களுக்கு அடைக்கலம் தந்துள்ள நாடுகள் எவை எவை?

அஸ்ஸலாமு அலைக்கும்,

கடந்த நான்காண்டுகளாக தொடரும் உள்ளாட்டு போர், சுமார் 90 இலட்சம் சிரிய மக்களை இடம் பெயர செய்துள்ளது. இதில் சுமார் 65% மக்கள் சிரியாவிற்குள்ளாகவே பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

துருக்கி, லெபனான், ஜோர்டான் ஆகிய நாடுகள், சுமார் 30 லட்சம் அகதிகளை அரவணைத்துக் கொண்டுள்ளன. அதிகப்படியான முகாம்கள் அமைக்கப்பட்டு, தன்னார்வலர்கள், குடிமக்களின் உதவியோடு அகதிகளுக்கான அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. பல பள்ளிவாசல்கள் இம்மக்களுக்கான வசிப்பிடங்களாக திகழ்கின்றன.  இதுவரை ஒரு லட்சம் வரைக்குமான அகதிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்துள்ளது ஜோர்டான்.
எகிப்து, இராக் போன்ற நாடுகள் சுமார் 1-5 லட்சம் அகதிகளை ஏற்றுக்கொண்டுள்ளன. 130 சதுர கிலோ மீட்டர்கள் மட்டுமே அளவுள்ள காசா, சில ஆயிரம் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது.

LinkWithin

Related Posts with Thumbnails