Monday, September 7, 2015

Coccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...


"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான ‪Coccyx ‬... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..?"


...என்று கேள்வி கேட்டு, Tail bone என்று இதற்கு மாற்றுப்பெயரிட்டு... இது மனித உடம்பில் ஒரு தேவையற்ற உறுப்பு.. (vestigial organ) என்று பெரும்பாலான அறிவியலாளர் கருதுகிறார்கள்.

இது முற்றிலும் தவறு..!

இறைவனின் படைப்பான நமது உடலில்..."நான் ஒரு -தேவையற்ற உறுப்பு- vestigial organ" என்று எந்த உறுப்பிலும் எழுதி ஒட்டி இல்லை. நாமாக சிந்தித்து எந்த உறுப்பின் பயனாவது 'தெரியவில்லை' என்றால், அது பற்றிய விளக்கம் இல்லை என்றால், அந்த அறியாமையாகிய தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் 'அது தேவை அற்றது' என்று அவசரப்பட்டு அறிவித்து விடுகிறோம்.

பின்னாளில் உண்மை புரியும்போது அதன் அவசியம் உணரும்போது கருத்தை வாபஸ் வாங்கிக்கொள்கிறோம். நம் உடலில் எதுவும் வேஸ்டாக இருக்காது என்பது என் அனுபத்தில் எடுத்த அசைக்க முடியாத முடிவு. அதை எந்த விஞ்ஞானி வந்து மறுத்து சொன்னாலும் நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

-----------------------------------
ஓர் உண்மைச்சம்பவம் ஒன்றை ஊருக்கும் உலகுக்கும் உரைக்கிறேன்.
-----------------------------------

என் வாழ்வில் எனக்கு அது நடந்தது... அதை நான் விபத்து என சொல்ல மாட்டேன். இறுதியில் வலி முடிந்து, எனது அறிவை பெருக்கிய அதனை 'இறைவனின் அருட்கொடை' என்றே வகைப்படுத்துவேன்.

அன்று ஆஸ்திரேலியா இந்தியா போட்டியிட்ட கிரிக்கெட் உலகக்கோப்பை நடந்து கொண்டு இருந்தது. நண்பர்களுடன் ஒரு பில்டிங்கின் முதல்மாடியில் உள்ள ஒரு பெரிய அறையில் கூட்டமாக டிவியில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டு இருந்தோம். இன்றஸ்டிங்கான கட்டத்தில் திடீர்ன்னு பவர் கட். புழுக்கம் தாங்க முடியாமல் எல்லாரும் மொட்டை மாடியில் கொஞ்சம் காற்று வாங்க போனோம்.

அந்த பில்டிங்கில் மொட்டை மாடிக்கு தரையிலிருந்து டேரக்டாய் வலப்பக்கம் படியும், முதல் மாடிக்கு கீழிருந்து இடப்பக்கம் படியும் வைத்து கட்டி இருந்தார்கள். முதல் மாடியில் இருந்து தரைக்கு இறங்கி மொட்டை மாடிக்கு ஏறனும்.

அப்பத்தான்... கரண்டு வந்துருச்சு... அப்போலாம் கிர்ரிக்கெட் கிர்க்கு... அதிகம்... எனவே, எதையும் மிஸ் பண்ணிட கூடாதென்ற ஆர்வ மிகுதியில்... மொட்டைமாடியில் இருந்து ரொம்ப வேகமாய் துள்ளிக்குதித்து இறங்கும்போது, முதல் படி வழுக்கிவிட... 'தடால்' என முதல் படியின் விளிம்பில் எனது பின் பகுதி பட நான் விழுந்து, உடனே அது சருக்கிவிட அடுத்த முப்பது படிகளின் முகனைகளிலும் அதே பின் பகுதியில் (பட்டக்சின் மேல்பகுதி-முதுகெலும்பின் அடிப்பகுதி) அதே இடத்தில் தட் தட் தட் என தொடர்ந்து அடிபட, எல்லா படிகளிலும் இடிவாங்கியபின்னர் கடைசி படியில் நிலைகுலைந்து விழுந்தவுடன்.. உடனே மயக்கமானேன்.

அதற்குப்பிறகு நண்பர்கள் என்னை மருத்தவமனை க்கு ஆட்டோவில் போட்டு தூக்கி சென்று, மயக்கம் தெளிந்து வலியை நான் சொன்னவுடன், பின் இடுப்பில் எக்ஸ் ரே எடுத்ததில்... 'நோ பிராக்ச்சர்'.

"காக்சிஸ் உங்களை காப்பாற்றியது" என்றார் டாக்டர்.
அல்ஹம்துளில்லாஹ்.



தொடர்ந்து... டாக்டர் சொன்னது இன்னும் என் காதில் ஒலிக்கிறது. "அந்த காக்சிஸ் ஒரு ஷாக் அப்சற்பர் போல முப்பது முறை அமுங்கி அமுங்கி எழுந்திருத்து இருக்கிறது. ஆனால், செமை ஓவர் லோடு எடுத்ததால்... இந்த எலும்பில் வலி சரியாக நிறைய மாதம் ஆகும்" என்றார்.

அப்புறம் ஒருவாரம் படுத்த படுக்கை... குப்புற மட்டும்..! உடலை மடிக்காமல் அப்படியே தூக்கி சென்று என்னை காலைக்கடன் முடிக்க வேண்டி டாய்லட்டில் முன்பக்கம் குப்புற படுக்க வைத்து 'முடிந்தது' என்றவுடன், உள்ளே வந்து பிரட்டி பின்பக்கம் (எலும்பை அழுத்தாமல் சரியாக பேசினில் பொருந்த) படுக்க வைத்துவிட்டு கதவைமூடி விட 'முடிந்தவுடன்' கைகள் வேலை செய்ததால் டியுப் மூலம் கழுவிக்கொள்வதில் எனக்கு எந்த உதவியும் தேவைப்படவில்லை. அப்புறம் தூக்கி வந்து விடுவர்... என் பெற்றோர். அப்போது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்தேன்.

ஒருவாரம் கழித்து நடக்க முடிந்தது. நானாகவே படுக்க முடிந்தது. எழ வேண்டினால் கம்பம் போல தூக்கி நேராக நிமித்தி விட மட்டும் பெற்றோர் உதவி வேண்டி இருந்தது.

அடுத்த வாரம் கொஞ்சம் வளைந்தேன். பேருந்தில் அமர்ந்து செல்ல ஆறுமாதம் ஆனது. அதுவரை சீட் காலி என்றாலும் நிற்க மட்டும்தான் செய்வேன். வகுப்பிலும் பெரும்பாலும் நிற்பேன்.

படிப்படியாக உட்கார்ந்து...மீண்டும் சைக்கிள் ஓட்ட ஆரம்பிக்க ஒருவருடம் ஆனது. சுத்தமாக வலி மறக்க ஒன்றரை வருடம் ஆனது.

இந்நாட்களில் என்னக்காப்பாற்றியதாக சொல்லப்பட்ட அந்த 'காக்ஸிஸ்' பற்றி படித்தேன். (எனது தந்தை Zoology பேராசிரியர் என்பதால்... ஏகப்பட்ட புத்தகங்கள் அலமாரி நிறையை இருக்கும்) அதில் மிக உயர்ந்த பைண்டின் மற்றும் பளபளப்பாக உள்ள ஒரு தலையணை சைஸ் புத்தகத்தில் அந்த ரஷ்யன் ஆதர், 'அது ஒரு தேவை இல்லாத எலும்பு' என்று எழுதி இருந்தார். இன்னொரு அமெரிக்கன் ஆதரும் வேறொரு புத்தகத்தில்... அதை வால் எலும்பு என்றும் அதனால் ஏற்படும் பிரச்சினை பற்றியும் பக்கம் பக்கமாக எழுதி இருந்தார். வேறு சில புத்தகங்கள் பார்க்க இந்தியன் ஆதர்களும் அப்படியே எழுதி இருந்தனர்.

அதில் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஒரு முறை செக்கிங் போகும்போது டாக்டரை சந்தித்தேன். கேட்டேன். "எழுதியவருக்கு அங்கே அடிபட விழுந்து அனுபமில்லை போல"என்றார். "அது இல்லையேல் நீங்கள் கோமவில்தான் என்றென்றும் இருந்திருப்பீர்கள்" என்றார்...!

ஏனென்றால் முழுகெலும்பு துண்டங்கள் முழுதும் கனெக்ட் ஆன ஸ்பைனல் கார்ட், காக்சிசில் மட்டும் கனெக்ட் ஆகலியாம். அதற்கு மேல் உள்ள முதுகு எலும்புத்துண்டுகளுடன் தான் கனெக்ட் ஆகி உள்ளதால், ஒருவேளை காக்சிஸ் இல்லை என்றால் விழுந்த போது நேரே....முதுகெலும்பில் அடிபட்டு மொத்த நெர்வும் போனும் டிஸ்-அர்ர்ரே ஆகி நெர்வஸ் கட்டாகி காலம் முழுதும் கோமாவில்தான் பிறந்த குழந்தை போலக்கூட அல்லாமல்.. அழாமல், பசி, தொடு உணர்ச்சி இல்லாமல் கிடந்திருப்பேனாம்..!




காக்சிஸ் க்கும் அதற்கு மேலுள்ள எலும்புக்கும் இடையே நல்ல குஷநிங் மற்றும் இடைவெளி உள்ளதாம். அதனால் அடிபடும்போது ஷாக் அப்சார்பர் போல செயல்பட்டு உயிரை உடலை காப்பாற்றுகிறதாம். அல்லாஹ்வின் படைப்புன்னா சும்மா இல்லே... சுபஹால்லாஹ்.

ஆக, காக்ஸிசும் மனிதனுக்கு ஒரு இன்றியமையாத எலும்புதான்.

அதன் தனிச்சிறப்பு மற்றும் இன்னொரு முக்கியத்துவம் பற்றி இஸ்லாம் கூறும் ஆச்சரியமான விஷயமும் உண்டு..!

மனிதன் இறந்த பின் எத்தனை காலமானாலும் அவனது உடம்பிலிருக்கும் இந்த எலும்பு ['உள்வால் எலும்பு' (‪‎coccyx bone‬) முதுகுத்தண்டின் வேர்ப்பகுதி] அழியாது. இதை அழிக்கவும் முடியாது.

ஜெர்மனி நாட்டை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி “ஹான்ஸ் ஸ்பீமேன்”  {Hans Spemann (b. 1869 d. 1941} இதை தன்னுடைய ஆய்வுக்கூடத்தில் நெருப்பால் கரிக்கவும் மற்றும் பல அமிலங்களைக் கொண்டு கரைக்கவும் முயற்சி செய்தார். முடிவில் அவர்க்கு கிடைத்தது தோல்வியே.

அதுமட்டுமல்ல...

The German scientist Hans Spemann started his experiments on the amphibians by implanting the primary organiser in a second foetus, which led to the growth of a secondary embryo. The implantation of the cut primary organiser was in another foetus of the same age under the Epiblast layer and lead to the apparition of a secondary embryonic anlage.
In 1931, when Spemann crushed the primary organiser and implanted it again, the crushing did not affect the experiment as again, a secondary embryonic anlage grew.

In 1933, Spemann and other scientists conducted the same experiment but the primary organiser was boiled this time.  A secondary embryonic anlage grew in spite of the boiling showing that the cells were not affected.

In 1935, Spemann was awarded the Nobel Prize for his discovery of the Primary Organiser

The conclusion:
  the coccyx contains the primitive streak and primitive node and those are able to grow giving the three layers that form the foetus: ectoderm, mesoderm and endoderm and so can give all the organs as the surgeon when opening the tumour previously mentioned found fully formed organs inside it like teeth, hair…So,Humans can be then recreated from their coccyx that contains the primitive streak and node of the overall potential.

...என, அந்த எலும்பில் இருந்தே மற்ற திசுக்களை உருவாக்கிவிடலாம் என்பது போன்ற ஆச்சர்ய விஷயங்களும் ஆய்வில் தெரியவந்தன. மேலும் இது பற்றி விரிவான தகவல்களை பெற... இங்கே சுட்டுங்கள்.

இதைத்தான் 1400 வருடங்களுக்கு முன்பே அல்லாஹுவின் தூதர்(ஸல்) அவர்கள் மறுமையில் மனிதனுக்கு அல்லாஹ் எவ்வாறு உயிர்க்கொடுப்பான் என்பதை பின்வரும் நபிமொழி கூறுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதமின் மகனின் (மனிதனின் உடலிலுள்ள) அனைத்துப் பகுதிகளையும் மண் தின்றுவிடும்; மனிதனின் (முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் நுனியைத் தவிர! அதை வைத்தே அவன் (தன் தாயின் கருவறையில் முதன் முதலாக) படைக்கப்பட்டான். அதிலிருந்தே அவன் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5661

"...பிறகு அல்லாஹ், வானத்திலிருந்து ஒரு நீரை இறக்குவான். உடனே இ(றந்துபோன)வர்கள் பச்சைப் புற்பூண்டுகள் முளைப்பதைப் போன்று எழுவார்கள். மனிதனின் எல்லா உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப்போய் விடும்; ஒரே ஒரு எலும்பைத் தவிர! அது (அவனது முதுகுத்தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படும்" என்று இறைத்தூதர் சொன்னார்கள்.
(மேலுள்ளது நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5660

சுபஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாயிலாஹா இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்..!
ஆக்கம்..... :- ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ ..

நன்றி 
Source: http://pinnoottavaathi.blogspot.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails