Monday, September 21, 2015

இறைச்சியும் இரத்தமும் அல்லாஹ்விடம் போய்ச் சேருவதில்லை


لَن يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَٰكِن يَنَالُهُ التَّقْوَىٰ مِنكُمْ كَذَٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِينَ
அவற்றின் இறைச்சியும் இரத்தமும் அல்லாஹ்விடம் போய்ச் சேருவதில்லை. ஆயினும், உங்களின் இறையச்சமே அவனிடம் போய்ச் சேருகின்றது. இவ்வாறு அவனே அவற்றை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்; அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டியமைக்காக நீங்கள் அவனைப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக! (நபியே!) நற்பணி புரிவோருக்கு நற்செய்தி சொல்வீராக!

(அல்குர்ஆன் : 22:37)

It is neither their meat nor their blood that reaches Allah, but it is piety from you that reaches Him. Thus have We made them subject to you that you may magnify Allah for His Guidance to you. And give glad tidings (O Muhammad SAW) to the Muhsinun (doers of good).

(Surah Al-Hajj 22: Ayah 37)


ஒருவர் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை அவர் தனது முடியை, நகத்தை வெட்டவேண்டாம்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                       
                           நூல்: முஸ்லிம் 3655, நஸயீ 4285

நபி(ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியை பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அதனுடைய இறைச்சி, தோல் ஆகியவற்றை எல்லாம் வினியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை அறுத்து, உரித்து பங்கிடக் கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ, தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளையிட் டார்கள்.
                                          நூல்: புஹாரி 1717



(குர்பானி இறைச்சியிலிருந்து) உண்ணுங்கள், சேமித்துக்கொள்ளுங்கள், தர்மம் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                                        நூல்: முஸ்லிம் 3643 



மேலும்), ஒவ்வொரு சமூகத்தாருக்கும் பலியிடும் ஒரு நெறிமுறையை நாம் வகுத்துக் கொடுத்துள்ளோம்- அந்த(ந்தச் சமூக)௦ மக்கள்-அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ள கால்நடைகளின் மீது அல்லாஹுவின் பெயரை உச்சரி(த்து அறு)க்க வேண்டும் என்பதற்காக! (பல்வேறுபட்ட இவ்வழிமுறைகளின் நோக்கம் ஒன்றுதான்:) எனவே, உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்! அவனுக்கே நீங்கள் அடிபணியுங்கள், மேலும் (நபியே!) பணிவான நடத்தையை மேற்க்கொள்வோர்க்கு நீர் நற்செய்தி அறிவிப்பீராக!                                                                                 
 -(திருக்குர்ஆன் 22:34)


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails