நான்தான் மூஸா என்றார்கள். இஸ்ரவேலர்களுக்கு நபியாக அனுப்பப்பட்ட மூஸாவா? என கிள்று அவர்கள் கேட்டார்கள். அதற்கு ஆம்’ என்று கூறினார்கள். உமக்கு இறைவனால் கற்றுத் தரப்பட்டதிலிருந்து எனக்குக் கற்றுத் தருவதற்காக உம்மை நான் பின்பற்றி வரட்டுமா?’ என்று கேட்டார்கள். அதற்கு ஹிள்ரு (அலை) அவர்கள், நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர்! மூஸாவே! இறைவன் தன்னுடைய ஞானத்திலிருந்து எனக்குக் கற்றுத் தந்தது எனக்கிருக்கிறது. அதனை நீர் அறிய மாட்டீர். அவன் உமக்குக் கற்றுத் தந்திருக்கிற வேறொரு ஞானம் உமக்கிருக்கிறது. அதனை நான் அறிய மாட்டேன் என்று கூறினார்.
அதற்கு மூஸா (அலை) அவர்கள், உம்முடைய உத்தரவை மீறாத முறையில் அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்! என்றார்கள். முடிவில் இருவரும் கப்பல் எதுவும் கிடைக்காத நிலையில் கடற்கரை ஓரமாகவே நடந்து சென்றார்கள். அவ்விருவரையும் ஒரு கப்பல் கடந்து சென்றது. தங்களையும் அக்கப்பலில் ஏற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் கிள்று அவர்களை அறிந்திருந்ததால் அவ்விருவரையும் கட்டணம் ஏதுமின்றி கப்பலில் ஏற்றினார்கள்.
ஒரு சிட்டுக்குருவி வந்து கப்பலின் ஓரத்தில் அமர்ந்து கடலில் ஒன்றிரண்டு முறை கொத்தியது. அப்போது கிள்று அவர்கள், மூஸா அவர்களே இச்சிட்டுக் குருவி கொத்தியதால் கடலில் எவ்வளவு குறையுமோ அது போன்ற அளவுதான் என்னுடைய ஞானமும் அளவுதான் என்னுடைய ஞானமும் உம்முடைய ஞானமும் அல்லாஹ்வின் ஞானத்திலிருந்து குறைத்து விடும் என்று கூறினார்கள்.
சற்று நேரம் கழித்ததும் கப்பலின் பலகைகளில் ஒன்றை கிள்று (அலை) கழற்றினார்கள். இதைக் கண்ட மூஸா (அலை) அவர்கள் நம்மைக் கட்டணம் ஏதுமின்றி ஏற்றிய இந்த மக்கள் மூழ்கட்டும் என்பதற்காக, வேண்டுமென்று கப்பலை உடைத்து விட்டீரே? என்று கேட்டார்கள். மூஸாவே நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர் என்று நான் முன்பே உமக்குச் சொல்லவில்லையா? என்று கிள்று அவர்கள் கேட்டார்கள்.
அதற்கவர்கள், நான் மறந்துவிட்டதற்காக என்னை நீர் குற்றம் பிடித்து விடாதீர் என்று கேட்டுக் கொண்டார்கள். எனவே முதற் பிரச்சினை மூஸாவிடமிருந்து மறதியாக ஏற்பட்டுவிட்டது. கடல் வழிப் பயணம் முடிந்து மீண்டும் இருவரும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் ஏனைய சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். கிள்று அவர்கள் அவன் தலையை மேலிருந்து பிடித்து இழுத்து தம் கையால் திருகி தலையை முறித்துவிட்டர்கள். உடனே மூஸா (அலை) அவர்கள் யாரையும் கொலை செய்யாத ஒரு பாவமும் அறியாத தூய்மையான ஆத்மாவைக் கொன்று விட்டீரே? என்று கேட்டார்கள். அதற்கு கிள்று அவர்கள் மூஸாவே! நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாயிருக்க முடியாது என்று உம்மிடம் நான் முன்பே சொல்லவில்லையா?’ என்று கேட்டார்கள்.
மீண்டும் இருவரும் சமாதானமாக் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். முடிவாக ஒரு கிராமத்தவரிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டார்கள். அவ்வூரார் அவர்களுக்கு உணவளிக்க மறுத்துவிட்டார்கள். அப்போது அக்கிராமத்தில் ஒரு சுவர், கீழே விழுந்து விடும் நிலையிருக்கக் கண்டார்கள். உடனே கிள்று அவர்கள் தங்களின் கையால் அச்சுவரை நிலை நிறுத்தினார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மூஸா(அலை) அவர்கள் நீர் விரும்பியிருந்தால் இதற்காக ஏதாவது கூலி பெற்றிருக்கலாமே! என்று அவர்களிடம் கேட்டார்கள். உடனே கிள்று அவர்கள், இதுதான் எனக்கும் உமக்கிடையே பிரிவினையாகும் என்று கூறிவிட்டார்கள்.
இச்சம்பவத்தை நபி(ஸல்) அவர்கள் சொல்லிவிட்டு மூஸா மாத்திரம் சற்றுப் பொறுமையாக இருந்திருந்தால் அவ்விருவரின் விஷயங்களிலிருந்தும் நமக்கு இன்னும் நிறைய வரலாறு கூறப்பட்டிருக்கும். அல்லாஹ் மூஸாவிற்கு அருள் புரிவானாக!’ என்று கூறினார்கள் என ஸயீது இப்னு ஜுபைர்(ரலி) அறிவித்தார்.
ஆதாரம் : புகாரி.
No comments:
Post a Comment