Monday, September 14, 2015
குர்பானி - இதன் பின்னணி, நோக்கம், யார்மீது கடமை , சட்டங்கள் , சந்தேகங்கள் , தெளிவுகள் ?....
குர்பானியின் பின்னணி
=====================
நாம் ஏன் குர்பானி கொடுக்க வேண்டும்? எதற்காக அது கொடுக்கப் படுகிறது? என்பதை பின்வரும் சம்பவத்தின் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடியும். இச்சம்பவத்தில் அல்லாஹ்வும், இப்றாஹீம் நபியும், இஸ்மாயீல் நபியும் சம்பந்தப்படுகிறார்கள்.
“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).
எனவே, நாம் அவருக்கு பொறுமை சாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.
பின் (அம்மகன்) அவருடன் நட மாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் – என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்று முள்ளவனாகவே காண்பீர்கள்.”
ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.
“திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.
“நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”
ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகர மாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்த வருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம். ஸலாமுன் அலா இப்ராஹீம் (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)! இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம். “நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர். (37:100 – 111)
குர்பானியின் நோக்கம்
======================
“(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைவ தில்லை. ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு – இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக! (22: 37)
நான் குர்பானி கொடுப்பதன் மூலம் என்னை நாலு பேர் புகழ்ந்து பேச வேண்டும், பாராட்ட வேண்டும், என்ற எண்ணத்தில் கொடுக்க கூடாது. அல்லது எங்கள் பள்ளியில்தான் அதிகமான குர்பானி பிராணிகள் அறுக்கப்பட்டன என்ற பெருமை வந்து விடக்கூடாது. மாறாக முழு நோக்கமும் இறை திருப்திக்காக இருக்க வேண்டும் என்பதை தான் அந்த குர்ஆன் வசனம் நமக்கு பாடம் சொல்லித் தருகிறது.
யார்மீது கடமை?
================
குர்பானி கொடுப்பது வலியுறுத்திச் சொல்லப்பட்ட சுன்னத்தாகும். வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்கு பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போன்று கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர். என்று குறிப்பிட்டார்கள்.
குர்பானியின் சட்டங்கள் ஐயமும் ...இந்த லிங்கில் படித்து அறிந்து கொள்ளலாம் தெளிவும்..http://amanaym.org/islam/qurban-law/
https://islamthalam.wordpress.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE…/
Soureces : இணையதளம்
தகவல் தந்தவர் தக்கலை கவுஸ் முஹம்மத் அவர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment