இறைவைனின் சாந்தியும் சமாதானமும் உங்கள்மீது உண்டாகட்டுமாக,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரக் கிளை சார்பாக “ஓர் ஆண் கல்வி கற்பதால் தனி ஒருவருக்கு மட்டுமே பயன், ஆனால் பெண் கல்வி கற்கும்போது அது சமூகத்திற்கே பயன்படும்” என்ற உயரிய நோக்கத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளாக சமூகத்தில் சிறந்த ஆலிமாக்களை உருவாக்கும் வகையில் "ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி"யினை சிறப்பாக நடத்தி வருகிறது. இந்தக் கல்லூரி வெற்றிகரமாக மூன்று ஆண்டுகளை கடந்து நான்காம் ஆண்டில் காலடி பதித்துள்ளது.
இந்தக் கல்லூரியில் மாணவிகள் தங்களது மூன்று வருட ஆலிமா பட்டப்படிப்பை பூர்த்திசெய்துள்ள நிலையில், கடந்த செப்டம்பர் 6, 2015 (ஞாயிறு) அன்று இந்த மூன்று வருட பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ள 20 மாணவிகளுக்கு "ஹாதியா" என்ற பட்டம் வழங்கும் நிகழ்வு சமூகத்தின் தலைசிறந்த உலமாக்கள், அறிஞர்கள், இயக்கத் தலைவர்கள், மற்றும் சமூகப் பிரமுகர்கள் முன்நிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி, இந்தக் கல்லூரியில் பயின்ற ஆலிமாக்களுக்கு முதலாம் பட்டமளிப்பு விழா, கல்லூரி ஆண்டு விழா, மற்றும் கல்லூரியின் மலர் வெளியீட்டு விழா என “முப்பெரும் விழாவாக” நடைபெற்றது.
இந்த நிகழ்வு மாலை 4:45 மணி முதல் இஸ்லாமியாஹ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள NKமுஹம்மது நினைவரங்கத்தில் ஆரம்பமானது.
இந்நிகழ்ச்சி, மௌலவி. அஹ்மது கபீர் மன்பஈ (கும்பகோணம்) அவர்கள் இறைவசனத்தையும் அதன் பொருளையும் நினைவுகூர இனிதே ஆரம்பமானது.
மாநிலத்தின் தலைசிறந்த அறிஞர் பெருமக்களையும், சமூகப் பிரமுகர்கள், மற்றும் இந்நிகழ்விற்க்கு வருகைதந்த அனைவரையும் ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் பொதுச்செயலாளர் ஜனாப். PS. உமர் ஃபாரூக் வரவேற்றார்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழகத் தலைவர், ஜனாப். ஷப்பீர் அஹ்மத் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்.
அதனைத்தொடர்ந்து, ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் துவக்கம், கல்லூரியின் அறிமுகம், அதன் இன்றியமையாத தேவை, மற்றும் இதனால் சமூகத்தில் நிகழவுள்ள மாற்றங்கள் குறித்து அறிமுகவுரை நிகழ்த்தினார் கல்லூரியின் தாளாளர், மௌலவி. M. முஹம்மது இஸ்மயில் இம்தாதி அவர்கள்.
அதனைத்தொடர்ந்து, கல்லூரியின் சிறப்பு மலரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார் தமிழக அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், ஹாஜி. AK. முஹம்மது ஹனீஃபா அவர்கள்.
அதனைத்தொடர்ந்து, பட்டம் பெரும் ஆலிமாக்களுக்கு சிறந்த நல்லுபதேசத்தினையும், இன்றைய இளைய சமுதாயம் கற்க வேண்டிய மற்றும் செயல்படுத்த வேண்டிய ஒழுக்கம் சார்ந்த கல்வி குறித்து சிறப்புரை நிகழ்த்தினார், சென்னை ரஹ்மத் பதிப்பகத்தின் மேலாய்வாளர், மௌலவி. முஹம்மது கான் பாகவி அவர்கள்.
மாலை தொழுகை இடைவேலையைத் தொடர்ந்து, மாணவிகளுக்கு இந்த வருடத்தில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதள்களும் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, மாணவிகள் கல்லூரியில் தங்களது அனுபவங்களைக் குறித்தும் இங்கு எவ்வாறு தங்களுக்கு பாடம் புகட்டப்பட்டது என்பதனைக்குறித்தும் உரைநிகழ்த்தினர்.
அதனைத்தொடர்ந்து, ஆலிமாக்களுக்கு “ஹாதியா” என்ற பட்டமும் கேடயமும் வழங்கப்பட்டது. இதனை கேரளா அல்-ஜாமியா அல்-இஸ்லாமியா கல்லூரியின் துணை முதல்வர், மௌலானா K. இல்யாஸ் ஹள்ரத் அவர்களும்மௌலவி. முஹம்மது கான் பாகவி அவர்களும் வழங்கி வாழ்த்தினர்.
அதனைத்தொடர்ந்து, பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கும் கணினி பயிற்ச்க்கான சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார் பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர், முனைவர். KG. செந்தில்வாசன் அவர்கள்.
அதனைத்தொடர்ந்து, மத்திய அரசின் மனிதவளத்துறை மற்றும் அரசு தொழிற்பயிற்சிக் கல்லூரி இனைந்து வழங்கும் தையல் பயிற்சிக்கான சான்றிதழை கோவை அரசு மகளிர் தொழிற்பயிற்சிக் கல்லூரியின் முதல்வர், திருமதி செல்லத்தாய் அவர்கள் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, மௌலானா K. இல்யாஸ் ஹள்ரத் அவர்கள் அரபு மொழியில் வாழ்த்துரை வழங்க அதனை சிறந்தமுறையில் மொழிபெயர்த்து வழங்கினார் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழ் மாநில பயிற்சித்துறை செயலாளர், மௌலவி சித்தீக் மதனி அவர்கள்.
அதனைத்தொடர்ந்து, இன்றைய சமூக சூழலில் பட்டம் பெறக்கூடிய ஆலிமாக்களிடம் இந்த சமூகம் எதிர்நோக்கியுள்ள கடமைகள் குறித்தும் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதனைக்குறித்தும் ஓர் ஆழிய சிந்தனைப்பதிவை நிகழ்த்தினார் சென்னை இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் மொழிபெயர்ப்பாளர்,மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ளரி அவர்கள்.
இந்நிகழ்வின் குறிக்கோள் மற்றும் ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியில் பயிலும் மாணவியரிடம் எதிர்பார்க்கப்படும் ஆளுமை, மற்றும் கல்லூரியில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து நிறைவுரை நிகழ்த்தினார், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழ் மாநில பொதுச்செயலாளர், மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பஈ அவர்கள்.
இந்நிகழ்வில் பங்குகொண்ட அனைவருக்கும் கல்லூரியின் நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தின் சார்பாக நன்றியுரை நிகழ்த்தினார் கல்லூரியின் பொதுச்செயலாளர் ஜனாப். PS. உமர் ஃபாரூக் அவர்கள்.
இறுதியாக, இறை பிரார்த்தனையுடன் நிகழ்ச்சியினை நிறைவுபடுத்தினார் மௌலவி இஸ்மாயில் உலவி அவர்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் பட்டம் பெற்ற ஆலிமாக்களை வாழ்த்தியதுடன் கல்லூரியின் இந்த முயற்சியையும் பாராட்டினர்.
இந்நிகழ்ச்சியை, ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் இணைச்செயலாளர், ஜனாப். சலீம் சிறப்பாக வழிநடத்தினார்.
இந்நிகழ்ச்சி, www.hidhaaya.org
என்ற இணையதளத்தில் நேரலையாக ஒலிபரப்பும் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் மூலம் பெண்களின் கல்வி மற்றும் சமூகத்தில் அவர்கள் ஆற்றவேண்டிய கடமைகள் குறித்த விழிப்புணர்வும் ஏற்ப்படுத்தப்பட்டது என்றால் அது மிகையாகாது.
from: Muduvai Hidayath
<muduvaihidayath@gmail.com>
No comments:
Post a Comment