Thursday, May 28, 2015

நாயகம் அவர்களின் போதனை

  நாயகம் அவர்களின் போதனை

கி.ஆ.பெ. விசுவநாதன்

வாழ்க்கைக்கு

  சிக்கனமாய் இரு. ஆனால் கருமியாய் இராதே. இரக்கங்காட்டு; ஆனால் ஏமாந்து போகாதே. அன்பாய் இரு; ஆனால் அடிமையாய் இராதே. வீரனாய் இரு; ஆனால் போக்கிரியாய் இராதே. சுறுசுறுப்பாய் இரு; ஆனால் படபடப்பாய் இராதே என்பவை அவர்களுடைய போதனைகள். இவற்றின் வேற்றுமைகளை உள்ளத்தே எண்ணி, வாழ்க்கை நடத்துவது நல்லது.

பொதுத் தொண்டு

  பொதுத்தொண்டு செய்கின்ற ஒவ்வொருவனும் முதலில் தன் வீட்டிலிருந்தே பொதுத் தொண்டைத் தொடங்கவேண்டும் என்பதே நாயகம் அவர்களின் கொள்கை. இதைப் பின்வரும் அவரது போதனை நமக்கு நன்கறிவிக்கிறது. அது பள்ளிவாசலில் விளக்கேற்றி வைக்கப் புறப்படுமுன் உங்கள் வீட்டில் விளக்கேற்றி வைத்துப் புறப்படுங்கள் என்பது. வீட்டை இருளடைந்து போகும்படி செய்கிறவன் பள்ளி வாசலில் விளக்கேற்றி வைக்கத் தகுதியுடையவன் அல்லன் என்பது நாயகம் அவர்களின் கருத்து. இது பொதுத் தொண்டு செய்கிறவர்களைச் சிந்திக்கச் செய்யுமென நம்புகிறேன்.

அழகிய ஐம்பெருங் குணங்கள் !

அழகிய ஐம்பெருங் குணங்கள் !
மவ்லவீ ஹாஃபிழ் அ. சைய்யது அலீ மஸ்லஹி பாஜில் தேவ்பந்தீ

  “இவர்கள் பொறுமையாளர்களாகவும், வாய்மையாளர்களாகவும், அடிபணிந்தவர்களாகவும், (நல்வழியில்) செலவழிப்பவர்களாகவும், பின்னிரவு நேரங்களில் (தொழுது) பாவமன்னிப்புக் கோருபவர்களாகவும் இருக்கின்றனர்”                        -அல்குர்ஆன் (3:17)

  இறைவனை அஞ்சி நடந்து கொள்ளும் நல்லடியார்களுக்குரிய அளப்பெரும் ஐம்பெருங்குணங்களை மேற்கூறப்பட்ட வசனத்தில் இறைவன் குறிப்பிடுகின்றான். அவை

1.பொறுமை

2. வாய்மை

3. பயபக்தி

4. தர்மம்

5. பின்னிரவில் இறைவனை இறைஞ்சுதல்

  இவை ஒவ்வொன்றும் மகத்தானவை; ஒவ்வொரு முஸ்லிமிடமும் கட்டாயம் இடம்பெற வேண்டியவை.

Saturday, May 23, 2015

இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி தேவையா? (மறுப்பு பதிவு) / ஆமினா


இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி தேவையா? (மறுப்பு பதிவு)
12ம் வகுப்பு ரிசல்ட் போடப்பட்டதில் இருந்தே இஸ்லாமிய சமுதாயத்தில் சில குரல்கள் பெண் கல்விக்கு எதிராக குரல் எழுப்பிக் கொண்டிருந்தது. ஆனாலும், அந்த கருத்து சரியில்லை என்று  சுட்டிக் காண்பித்த, சிந்திக்கும் திறன் கொண்ட சகோதரர்களுக்கு நன்றி கூறியவளாய் இக் கட்டுரையை தொடங்குகிறேன்.


ஏற்கனவே சொல்லிச் சொல்லி அலுத்துப் போன விஷயம் தான். ஆனாலும் உணர்ச்சி வசப்படுதலில் வெளிப்படும் ஃபத்வாக்கள்..எத்தகு பாரதூரமான விளைவுகளை உருவாக்கி, இஸ்லாமிய சமூகத்தை அதல பாதாளத்தில் தள்ளி அதன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது என்பதற்கு, இந்த பத்வா ஓர் உதாரணம் என்பதால்..மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியுள்ளது. சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்க்க ஆங்கிலம் கற்பதை ஹராம் என உலமாக்கள் தீர்ப்பு கூறி கல்வி கற்பதை விட்டும் நம் மக்களைத் தடுத்தனர். அதன் காரணமாக இன்று வரை அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். உணர்ச்சி வசப்படுதலினால் வந்த விளைவு இது.

Tuesday, May 19, 2015

ஒற்றுமையே இஸ்லாமியச் சமுதாயத்தின் பாதுகாப்பு !

 
பேராசிரியர் ஹாஜி T.A.M. ஹபீப் முஹம்மத

  திருக்குர்ஆனில் அருளப்பட்ட நேரான வழியைக் கடைப்பிடித்து நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்படி நடந்து மனோயிச்சையெனும் ஷைத்தானுக்குக் கட்டுப்படாமல் தன்னை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிடுவதாகும். படைத்த ஏக இறைவனை வணங்குவது இறைவனுக்குச் செய்கின்ற வழிபாடாகும். இதுதான் தவ்ஹீத் என்னும் ஏகத்துவம். ஆக இஸ்லாம் ஒரு தூய்மையான மார்க்கமாகும். ஏகத்துவக் கொள்கையை ஏற்று அல்லாஹ்வை மட்டும் வணங்குவோர் அனைவரும் முஸ்லிம்கள். இதில் வேறுபாடு இல்லை. அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம். (3:19)

  அல் இக்லாஸ் அத்தியாயத்தில் முதல் வசனத்தில் அல்லாஹ் ஒருவனே என்று சொல்லப்பட்டு, பல கடவுள்களை வழிபடுவதை நிராகரிப்பதைப்போல, ஏகம் ஏவம் அத்வித்யம் என்று இந்து கிரந்தங்கள் கூறும் பிரம்ம சூத்திரம். இதன் பொருள் அவன் ஒருவனே அவனுக்கு யாதோர் இணையுமில்லை. திருவள்ளுவரும் இறைவனுக்கு யாதொன்றும் ஒப்புமை இல்லை என்று திருக்குறளில் சொல்லி விட்டார். அடுத்து, ஏகம் பிரஹம்தவித்ய நாஸ்னோஹ் நா நாஸ்தே இன்ஜன் என்பதும் ஒரு பிரம்மசூத்திரம். இதன் பொருள் இறைவன் ஒருவனே. வேறு எவரும் இல்லை. இல்லவே இல்லை என்பதாகும். அதாவது லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதாகும்.

Saturday, May 16, 2015

மிஹ்ராஜ் சிந்தனைகள்


மிஹ்ராஜ் என்றால் உயருதல் என்று பொருள்.
இஸ்லாத்திற்காக ஏராளமான இன்னல்களை அனுபவித்து வந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
மன வருத்தமுற்று இருந்தார்கள்.
அதுவரை அன்பு காட்டி ஆதரித்து வந்த பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் இறந்து விட்டார்கள்.
அவர்கள் இறந்த சில நாட்களிலேயே கண்ணின் மணியாய் தங்கள் காதல் மணாளராய் திகழ்ந்த கண்மணி நாயகத்தை கண்ணின் இமைபோல் காத்துவந்த நம் அன்னை கதீஜா நாயகியார் அவர்களும் இறைவனளவில் சேர்ந்து விட்டார்கள்.

பெருமானாருக்கு
ஒருபுறம் தங்கள் பாசத்துக்கு உரிய உறவுகளைப் பிரிந்து பரிதவிக்கும் பரிதாப நிலை ஒருபுறம் .
தங்களை கொலை செய்வதற்கே நாள் பார்த்துக் கொண்டிருக்கும் குறைஷியரின் கொடூர நிலை மறுபுறம் .
அல்லாஹ்விடமே தங்கள் மன வேதனைகளை கொட்டி வழி காட்ட வேண்டிக் கொண்டிருந்தார்கள் நபிகள் .
அருளாளன் அல்லாஹ் நபிகளாரின் வேண்டுதலை ஏற்றுக் கொண்டான். அவன் தன அருட் கொடைகளால் தன் ஹபீபை ஆற்றுப் படுத்தினான்.

அகத்தில் ஆண்டவனை
வழுத்தி வாழ்ந்த வள்ளலுக்கு
அர்ஷின் நாயகன்
அழகான அழைப்பொன்றை
அனுப்பி வைத்தான் !

பிழை பொறுப்பாய் யாஅல்லாஹ்!

காயல்பட்டணம் ஏ.ஆர்.தாஹா
     
       மண்ணும் விண்ணும் ஆளும் வல்ல இறைவா    
           
      மாந்தரெம்மின் பிழைகள் பொறுத்தருள்வாய்    
           
           
           
      இறைவா உன்னருள் வேண்டும்    
           
      இனிதாய் நலம் வேண்டும்    
           
      வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே...    
           
           
           
      பாவமென்னும் கடலில் வீழ்ந்து    
           
      பல தீங்குகள் எம்மை சூழ்ந்து    
           
      கலங்கும் நிலை ஆய்ந்து    
           
      கனிவாய் உன்னருள் ஈந்து    
           
      வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே...    
           
           

Wednesday, May 13, 2015

நூலாக்கப்பணி : கைத்தொழில் கற்போம் !

 மெளலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்ஃபில்.,

  ஒவ்வொரு நபியும் ஏதேனும் கைத்தொழில் செய்துள்ளதாக அறிகிறோம். தாவூத் (அலை) அவர்கள் இரும்பை உருக்கி அதன்மூலம் போர்க்கவசங்கள் செய்தார்கள். நபி(ஸல்) அவர்கள் கைத்தொழில் குறித்துக் கூறியுள்ளதைக் காணும்போது உழைப்பின் உயர்வையும் மேன்மையையும் உணர முடிகிறது. அதில் ஒன்று: கையால் உழைத்துண்பதே உணவுகளில் மிகச்சிறந்தது. நபி தாவூத் (அலை) அவர்கள் தம் கையால் உழைத்துண்பவர்களாக இருந்தார்கள்.

  ஒவ்வொரு நபியும் ஆடு மேய்த்துள்ளார்கள். தச்சராக, வணிகராக, தொழில்முனைவோராக, கப்பல் கட்டுநராக, ஆடை நெய்பவராக இப்படிப் பல்வேறு தொழில்களைச் செய்வோராக நபிமார்கள் இருந்துள்ளனர்.

Saturday, May 9, 2015

உழைப்பின் சிறப்பு

இஸ்லாம் உழைக்காமல் சோம்பேரிகளாக வாழ்வதனை விரும்புவதில்லை. இதனால் அனைவரும் உழைத்து வாழ வேண்டும் என தூண்டுகின்றது. இதனை பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் விளக்குகின்றன.

“அவன் எத்தகையவனென்றால் உங்களுக்கு பூமியை வாழ்வதற்கு எளிதானதாக அவன் ஆக்கிவைத்தான். ஆகவே அதன் பல பாகங்களில் சென்று, அவன் உங்களுக்கு அளித்திருக்கும் உணவிலிருந்து உண்ணுங்கள். உங்களுடைய மண்ணறைகளிலிருந்து உயிர்பெற்றெழுதல் அவன்பாலே இருக்கிறது” (76:15)

Friday, May 8, 2015

உப்பைத் தின்றவன்!


ஃபாத்திமா, காரக் கொழம்பு அம்மாவுக்காவாது.. வேணாமே?” குழம்பு ஊற்றப் போன என் மனைவியைத் தடுத்தேன்.
சாப்பாடு கொண்டு வந்த சரவணபவன் கேரிபேக்கைத் தூக்கி எறிய, டஸ்ட் பின்னை தேடிப்பார்த்து கிடைக்காததால் அறையின் ஓரமாய் போட்டான் மகன் அபூ என்ற அப்துல்லாஹ்.

‘எத்தன நாளு லீவுத்தா..?’ என்ற அம்மாவின் கேள்வியில் ‘இன்னும் கொஞ்சநாளு எங்ககூட இருக்க மாட்டியா..’ என்ற ஏக்கமும் தொக்கி நின்றதை உணர்ந்தேன்.

“லீவு அதிகம் கெடைக்கலேம்மா..இன்னும் நாலு நாள்ல கெளம்பியாவணும்..” என் சுவர்க்கத்தைத் தன் காலடியில் வைத்திருக்கும் என் தாயைக் கண்களில் நீர் மறைக்க ஏறிட்டுப் பார்த்தேன்.

Sunday, May 3, 2015

இரகசியம்

காதர் பாய் தொழுகையில்
தான் இருந்தார் ..

மனம் ஏனோ ஒரே சிந்தனை மயமாய் இருந்தது ..

இமாம் ஓதிய சூராவில் மனம் லயிக்கவில்லை..

"இன்னைக்கு என்னாச்சு இந்த இமாமுக்கு பெரிய சூராவா ஓதுறாரு.."

"யாரெல்லாம் கொடுத்தாங்
களோ,யாரெல்
லாம் வந்தாங்களோ என்ன சொன்னாங்களோ ஒன்னும் தெரியல்லியே .."

மனம் ஒரு நிலையில் இல்லை காதர் பாய்க்கு ...

ஒரே டென்ஷனாக இருந்தது ...

Friday, May 1, 2015

கடன் என்பது ….

கடன் என்பது பாரதூரமான விஷயம்

தமது உள்ளத்தில் எழும் சகல இச்சைளையும் பின்பற்றும் இன்றைய உலகில், நமது வாழ்க்கையின் அடிப்படை நோக்கத்தை மறந்து, இஸ்லாம் தடுக்கும் சில விஷயங்களில் நாமும் செயல் பட்டுக் கொண்டிருக்கிறோம். கடன் வாங்குவது இப்படிப்பட்ட ஒரு பாரதூரமான விஷயமாகும். இங்கு குறிப்பிடப்படுவது, வட்டிக்கு எடுக்கும் கடனைப் பற்றி அல்ல. அது ஹராம் என்று எல்லோருக்கும் தெரியும். ஆகையால் இங்கு குறிப்பிடப்படுவது வட்டியில்லாது கைமாற்றலுக்கு எடுக்கும் கடனை பற்றியே. இந்தக் கடனில் வட்டி சம்பந்தப்படவில்லை. இப்படிப் பட்ட கொடுக்கல் வாங்கலுக்கு மார்க்கத்தில் அனுமதியுண்டு, ஆனால் விரும்பத் தக்கதல்ல. அநேக மக்கள், கடன் வாங்குவதையும், கடன் பணத்தில் வாழ்வதையும் பற்றி மிகவும் இலேசாக எடுத்துக் கொள்கின்றனர். இக்கடன்கள் மிகவும் அவசர தேவைக்காக எடுக்கப் பட்டவைகள் அல்ல. மாறாக இப்போதிருக்கும் வியாபாரத்தை விருத்தி செய்வதற்காக, சமூகத்தில் மற்றவர்களுடன் போட்டியிட, இவ்வுலகின் தற்காலிக சுக போகங்களை அனுபவிப்பதற்காக கடனில் இவர்கள் சிக்குகிறார்கள். கடன் வாங்குவதும், கடன்பட்ட வாழ்க்கை வாழ்வதும் மிகவும் பாரதூரமான விஷயமாகும். இது மிகவும் பாரதூரமான விஷயமென எச்சரிக்கை செய்யும் இஸ்லாம், கடனை விட்டும் முடிந்த அளவு விலகும்படி, அல்லது தடுத்துக் கொள்ளும்படி உபதேசிக்கிறது.

புத்தகம் - புதியதோர் உலகைச் செய்யும்

புத்தகைத்தைப் புரட்டிப்பார்
புலப்படும் அதில்
புதியதோர் உலகம்

எத்திவைக்கும் புத்தகச் செய்தி
எதுவாயினும் - அது
எத்தனையோ
புதுமையைச் சொல்லும்

இன்றைய கண்டுபிடிப்புக்கள்
நேற்றைய வாசிப்புக்களே
நாளைய உலகை
நகர்த்திச் செல்வதும்
நாம் படிக்கும் பக்கங்களே

அரசுச் செலவில் ஜப்பானுக்குச் செல்லும் மதுரைப் பள்ளி மாணவர்

பழைய ஆட்டோ டியூப்பில் உருப்படியான அறிவியல் சாதனத்தைக் கண்டுபிடித்த மாணவர், அரசு செலவில் ஜப்பானுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னோடியாகத் திகழும் ஜப்பான், மற்ற ஆசிய நாடுகளின் வளர்ச்சியில் பங்கெடுக்க வைக்கும் விதமாக ஜப்பான் - ஆசிய இளையோர் அறிவியல் பரிமாற்றத் திட்டத்தை (சுகுரா) செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் இந்தியா, சீனா, கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 15 நாடுகள் இணைக்கப்பட்டுள்ளன.

LinkWithin

Related Posts with Thumbnails