Sunday, May 3, 2015

இரகசியம்

காதர் பாய் தொழுகையில்
தான் இருந்தார் ..

மனம் ஏனோ ஒரே சிந்தனை மயமாய் இருந்தது ..

இமாம் ஓதிய சூராவில் மனம் லயிக்கவில்லை..

"இன்னைக்கு என்னாச்சு இந்த இமாமுக்கு பெரிய சூராவா ஓதுறாரு.."

"யாரெல்லாம் கொடுத்தாங்
களோ,யாரெல்
லாம் வந்தாங்களோ என்ன சொன்னாங்களோ ஒன்னும் தெரியல்லியே .."

மனம் ஒரு நிலையில் இல்லை காதர் பாய்க்கு ...

ஒரே டென்ஷனாக இருந்தது ...
சூரா ஓதி முடிச்சாச்சு ..

ருக்கூஃ போயி ஸமி அல்லாஹு லிமன் ஹமி தஹ் சொல்லியாச்சு ...

இப்போது சுஜூது வந்தாச்சு ..

"எவ்வளவு நேரம் தான் சுஜூதுல இருப்பாரு இந்த மனுஷன் .."

சலாம் சொன்னதும் ஓடி விட வேண்டியது தான் ..

மனதுக்குள் சொல்லிக் கொண்டார் காதர் பாய் ...

எப்போதும் சீக்கிரமாக தொழுகையை முடித்து விடும் இமாம் கூட இன்று என்னவோ தெரியவில்லை ரெம்ப மெதுவாக தான் தொழுகை நடத்தினார் ..

முதல் தடவையாக இமாம் மீது மனசுக்குள் எரிச்சல் பட்டார் காதர் பாய் ..

அத்தஹிய்யாத்துக்கு வந்து விட்டார் இமாம்.

இப்போது இமாம் சலாம் கொடுத்து விடுவார்..

மனசுக்குள் சந்தோஷப்பட்டார் காதர் பாய் ..

தொழுகை முடிந்து விட்டது ..

இமாம் முதல் சலாம் கொடுத்து விட்டார் .

இரண்டாம் சலாம் கொடுக்கும் முன் எழுந்து விட்டார்
காதர் பாய் ..

விறு விறுவென்று வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார் ..

"என்னாச்சோ யாரெல்லாம் கொடுத்தார் களோ,யார் என்ன சொன்னார்களோ."

என்ற எண்ணம் மட்டும் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது..

வீட்டிற்கு வந்ததும் மனைவி கேட்டாள் .

"என்னங்க சீக்கிரம் வந்திட்டீங்க...

துஆ கேட்காமல் வந்திட்டீங்க போல"

காதர் பாய் எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் வேக வேகமாக மேசையை நோக்கி சென்றார் ..

சென்றவர் அதன் மேலிருந்த லேப்டாப் பை மிகுந்த ஆர்வத்தோடு திறந்தார் ..

அவர் போட்ட பதிவில் எத்தனை பேர் லைக் கொடுத்தார்கள்,
கமென்ட் டில் யார் என்ன சொன்னார்கள் என்று பார்பதற்கு ...

அவர் போட்ட பதிவு மிக அழகாக கண்ணுக்குள் விழுந்தது ...

"எவனொருவன் தொழுகையில் இருக்கிறானோ அவன் வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் இறைவனோடு ஒன்றி உறவாட வேண்டும் .."

ஆக்கம் :Saif Saif

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails