Saturday, July 28, 2012

நோன்பு காலத்தை பயன்படுத்திகொள்ளுங்கள் இறை அருளைப் பெற்றிடுங்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்; அவன் பால் திரும்புங்கள்; என்னைப் பாருங்கள்! நான் ஒரு நாளைக்கு நூறு தடவை பாவ மன்னிப்பு கோரி இறைஞ்சுகிறேன். அறிவிப்பவர்: அகர் பின் யஸார்(ரலி) நூல்: முஸ்லிம்

என் அடியாளர்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்து கொண்டபோதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் நம்பிக்கை இழந்து விடவேண்டாம். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுடைவன் என்று நபியே நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 39:53)
   
முச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவமன்னிப்பு கோரலை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: திர்மிதி
   
நிச்சயமாக அல்லாஹ் தன் அடியாளர்களிடமிருந்து தவ்பாவை - மன்னிப்பு கோருதலை ஒப்புக் கொள்கிறான் என்பதையும், தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள் புரிபவன். (அல்குர்ஆன் 9:104)

எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும் அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக! (அல்குர்ஆன் 2:286)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. அல் ஹதீஸ் ஆதார நூல் இப்னு குஜைமா பாகம் 3 எண் 191


இரண்டாவது பத்தில் முறையாக அல்லாஹ்விடம் மனமுருகி அதிகம் அதிகம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப் பற்றி மனம் வருந்தி, மீண்டும் அவற்றில் ஈடுபடாமல் இருக்க உறுதியெடுத்துக் கொண்டு அனைத்துத் தொழுகைகளிலும் குறிப்பாக இரவுத் தொழுகைகளிலும் பாவமன்னிப்பையும் இவற்றில் இருந்து பாதுகாவல் பெற அல்லாஹ்வின் உதவியும் கேட்க வேண்டும் என்று உணரலாம்.

நபி (ஸல்) அவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம்காட்டாத அளவு ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் அதிக அளவில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்.

Thursday, July 26, 2012

ஸாதிகா சமையல்கள்

 ஸாதிகா சமையல்கள்:




http://www.arusuvai.com/tamil/node/9788 - ஃபுரூட்ஸ்&நட் ஸாலட்

http://www.arusuvai.com/tamil/node/9326 - கேரமல் ஸ்பாஞ் கேக்

http://www.arusuvai.com/tamil/node/9050 - கைமா கொத்துப்பரோட்டா

http://www.arusuvai.com/tamil/node/8969 - ஈஸி மட்டன் பிரை

http://www.arusuvai.com/tamil/node/9241 - லேயர் முர்தபா

http://www.arusuvai.com/tamil/node/12764 -கிரில்ட் சிக்கன்

http://www.arusuvai.com/tamil/node/12701 -- ஸ்பிரிங் ரோல்

http://www.arusuvai.com/tamil/node/12605 - கருவாட்டுக்குழம்பு

http://www.arusuvai.com/tamil/node/9734 - செஸ்வான் பிரைட் ரைஸ்

http://www.arusuvai.com/tamil/node/9161 - பட்டர் பிஸ்கட்

http://www.arusuvai.com/tamil/node/12271 - காலிபிளவர் மஞ்சூரியன்

http://www.arusuvai.com/tamil/node/9333 - பாதாம் அல்வா

http://www.arusuvai.com/tamil/node/8994 - சைனீஷ் ஸ்ப்ரிங்க் ரோல்

அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்

அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்:
 رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم
"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
"எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்." (2:128)
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
"எங்கள் இறைவனே எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!". (2:201)
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
"எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!" (2:250)
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامً
எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! 25:74
رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
"எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (2:286)
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
"எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்! (3:8)
رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لاَّ رَيْبَ فِيهِ إِنَّ اللّهَ لاَ يُخْلِفُ الْمِيعَادَ
"எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்". (3:9)
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
"எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன்மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!"(3:16)
رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلَتْ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
"எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" (3:53)
ربَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
"எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக". (3:147)
رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ
"எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!" . (3:191)
رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ
"எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்;. மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை!" . (3:192)
رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلإِيمَانِ أَنْ آمِنُواْ بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأبْرَارِ
"எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் ஈமான் கொண்டோம்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!". (3:193)
رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَى رُسُلِكَ وَلاَ تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لاَ تُخْلِفُ الْمِيعَادَ
"எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல. (3:194)
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
"எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" . (7:23)
رَبَّنَا لاَ تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ
"எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே சேர்த்து விடாதே" . (7:47)
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
"எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), மரணிக்கச் செய்வாயாக!. (7:126)
رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ
எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!" . (10:85)
رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ وَمَا يَخْفَى عَلَى اللّهِ مِن شَيْءٍ فَي الأَرْضِ وَلاَ فِي السَّمَاء
"எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய் ! இன்னும் பூமியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை." (14:38)
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக" . (14:41)
رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
"எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!" . (18:10)
رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ
"எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்" . (23:109)
رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ
"எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! (40:7)
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَؤُوفٌ رَّحِيمٌ
"எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்" . (59:10)
رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
"எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்ககிறோம் மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது," (60:4)
رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
"எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்" . (66:8)
رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ
எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன் 7:89
رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ
எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம் 44:12
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلاَةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاء
("என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!" (14:40)

 Source : http://dharussalam.blogspot.in/2009/02/blog-post_8783.html

Saturday, July 21, 2012

வந்துவிட்டேன் இறைவா வந்துவிட்டேன் May Allah accept our good deeds. Ameen.

வந்துவிட்டேன் இறைவா வந்துவிட்டேன்
உனக்கு இணை எவருமில்லை
வந்துவிட்டேன்
நிச்சயமாக அனைத்துக் புகழும்
அருட்கொடையும் உன்னுடையதே
உனக்கு இணை எவருமில்லை

மக்காவில் ரமலான் : தராவீ ஹ் தொழுகை அட்டவணை - மக்கா நேரலை الحرم المكي Watch Makkah Live

மக்கா நேரலை الحرم المكي Watch Makkah Live

ஹிஜ்ரி 1433 : இவ்வாண்டு, புனித மக்காவில் ரமலான் மாதத்தின் முதல் 5 நாட்களுக்கு "இப்ராஹீமுஷ்ஷுரைம்" அவர்கள், தராவீஹ் தொழுகையை தொழ வைப்பார்கள்.

6 ம் இரவு முதல் 10 ம் இரவு வரை "மாஹிருல் முஹீக்ஹி" அவர்களும்
10 முதல் 13 ம் இரவு வரை "அப்துர்ரஹ்மான் ஸுதைஸ்" அவர்களும், அதை தொடர்ந்து
20 ம் இரவு வரை, "அப்துல்லாஹ் பின் அவாத்" மற்றும் "மாஹிருல் முஹீக்ஹி" ஆகிய இருவரும் தொழ வைப்பர்.
20 ம் இரவு முதல் 25 ம் இரவு வரை "அப்துல்லாஹ் பின் அவாத்" அவர்களும்
25 ம் இரவு முதல் ரமளானின் இறுதி வரை "அப்துர்ரஹ்மான் ஸுதைஸ்" அவர்களும் தொழ வைப்பார்கள்.
தஹஜ்ஜுத் தொழுகையின் பொறுப்பு "சவூதுஷ்ஷுரைம்" அவர்களிடம் இருக்கும்.

மேலும், ரமளானின் ஜும்ஆ குத்பா உரைகளை பொறுத்த மட்டில்,
முதல் ஜும்ஆவில் "சாலிஹுத்தாலிப்" அவர்களும்
இரண்டாம் ஜும்ஆவில் "தவக்குல் உசாமா" அவர்களும்
மூன்றாம் ஜும்ஆ "ஷுரைம்" அவர்களும்,
நான்காம் ஜும்ஆ மற்றும் பெருநாள் தொழுகை "ஸாலிஹ் பின் ஹமீத்" அவர்களும் தொழ வைப்பார்கள்.
மேற்கண்ட முடிவுகள் புனித மக்கா பள்ளிவாசலின் "நிர்வாக பொதுக்குழு"வில் எடுக்கப்பட்டதாக, "அல் அரபிய்யா டாட் நெட்"டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ibrahime Hassane Marecan

Friday, July 20, 2012

நோன்பாளிகளே - 1


அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

வல்ல அல்லாஹ்வின் அருளால் நோன்பு மாதத்தை அடைந்து நோன்பு வைத்தவர்களாக நாம் இருக்கிறோம். எல்லாப்புகழும் இறைவனுக்கே! (அல்ஹம்துலில்லாஹ்!) நாம் நோன்பிலும், பொதுவாகவும் கடைபிடிக்கும் காரியங்களைப் பற்றி பார்ப்போம்.

குர்ஆன்:
ரமலானின் தனிச்சிறப்பே இந்த மாதத்தில் குர்ஆன் அருளப்பட்டதுதான். அதனால் தினமும் குர்ஆனை நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் ஓதி வாருங்கள். ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் அவசியம் ஓதுங்கள்.

Monday, July 16, 2012

ஹஜ்ஜுப் பயணிகளுக்கு உதவும் நிரலி - ஜெர்மன் அறிஞர் கண்டுபிடிப்பு

முஸ்லிம்களின் புனித கடமைகளுள் ஒன்றான ஹஜ்ஜின் போது, அந்த புனிதக் கடமைகளை வரிசைக்கிரமமாக நினைவூட்டவும்,  மக்கா நகரிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் வழி தொலைந்து போகும் புனிதப் பயணிகளுக்கு உதவும் வகையிலும் புதிய திறன்பேசி பயன்பாட்டு நிரலி (Smart Phone Application) ஒன்றை ஜெர்மானிய கணினி அறிஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.


ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் பல்கலைகழகத்தில் கணிப்பொறி அறிவியலில் பட்டம் பெற்ற ஹபீபுர்ரஹ்மான் தஸ்தகீரி என்னும் அந்த  இளம் அறிஞர் இரு நாள்களுக்கு முன்
"The Global Post" நாளிதழுக்கு அளித்த செய்தியில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். "ஹஜ்ஜுக் காலத்தில் யாத்ரிகர்களுக்கு வழியறிய உதவுவதாகவும், மார்க்கக் கடமைகளை நினைவூட்டக் கூடியதாகவும் கருவியொன்று வடிவமைக்க விரும்பினேன்" என்றார் அவர். [ஆங்கிலத்தில் இச்செய்தியை வாசிக்க: http://www.satyamargam.com/1950]

 


"கடந்த 2006 ஆம் ஆண்டில் குடும்பத்துடன் உம்ரா செய்ய வாய்ப்பு கிடைத்த போதிலிருந்து இது பற்றி சிந்தித்து வந்துள்ளேன்".

தனது பயன்பாட்டு நிரலிக்கு "அமீர்" என்று பெயர் சூட்டியுள்ளார் ஹபீபுர் ரஹ்மான். பொதுவாக, ஒரு பயணத்தில், இயக்கத்தில் தலைமைத் தாங்கிச் செல்பவருக்கு அரபுமொழியில் 'அமீர்' என்று கூறுவார்கள். (இந்த நிரலிக்கான சுட்டி: http://itunes.apple.com/tw/app/amir-personal-hajj-assistant/id473935680?mt=8)


உம்ரா, ஹஜ் ஆகிய புனிதக் கிரியைகளின் போது, தங்கியிருக்கும் இடம் திரும்புவதில் புனிதப் பயணிகள் படும் சிரமத்தைக் கண்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஹபீபுர் ரஹ்மான், "நாங்கள் எங்களை நன்கு தயார்படுத்திக்கொண்டிருந்தோம்; அப்படியிருந்தும் தங்கியிருந்த  இடத்தை அடைவதில் சிரமம் கண்டோம்" என்று நினைவு கூர்ந்தார்.

ஆஃப்கானிஸ்தானத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஹபீபுர் ரஹ்மான், பெற்றோர் தம் ஜெர்மானிய குடியமர்வுக்குப் பின்னர் மெய்ன்ஸ் நகரில் பிறந்தவர்.

அமீர் என்கிற இப்புதிய நிரலியின் மூலம், கலந்துரையாடலாக ஹஜ்ஜு, மற்றும் உம்ரா கிரியைகளின் சரிபார்ப்புப் பட்டியலையும்  காணமுடியும்.

Sunday, July 15, 2012

வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?

வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
எம். அப்துல் ரஹ்மான் எம்.பி

பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!

எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!

ஆக்கப்பூர்வமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி, நாட்களையும் நேரங்களையும் பயன்படுத்துவதிலிருந்து சிறிதளவும் மாறிவிடக்கூடாது என்கிற எண்ண ஓட்டம் சில நேரங்களில் பாதிப்புக்கும் உள்ளாகிறது. என்னதான் நம்மை நம் வழியிலேயே வைத்துக் கொண்டு, சமூகத்திற்கு முற்றிலும் பயனுள்ள வகையில் பணிகள், எழுத்துக்கள், பேச்சுக்கள் என்று அனைத்தையும் ஒரே நேர்கோட்டுப் பாதையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினாலும் நம்மை நோக்கி வருகிற சிற்சில இடையூறுகளைச் சந்திக்காமல் இருக்கவும் முடிவதில்லை. இதனால் நம்முடைய சிந்தனை ஓட்டம் பாதிப்படைவதையும் மறுப்பதற்கில்லை. ஆனாலும் உலகில் வாழ்கிற குறுகிய இக்காலக்கட்டத்தில் செலவு செய்கிற செல்வத்திற்கு மாத்திரமல்ல; செலவு செய்கிற நேரம், உழைப்பு, உதவிகள் என்று எல்லாவற்றிற்கும் வல்ல இறைவனிடத்தில் பதில் சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறதே என்கிற கவலை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருந்தே ஆக வேண்டுமல்லவா!

அதனால்தான் ஒழுக்கம், கல்வி என்பதோடு இறையச்சம், தொழுகை, நற்பண்புகள், நற்செயல்கள் என ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல முஸ்லிமாக வாழவேண்டும் என்பதை நாம் கடமையாக எண்ணுகிறோம். இதே சிந்தனையில்தான் சமூகப் பணி, அரசியல் என்று வருகிறபோது கண்ணியமிக்க காயிதெ மில்லத் அவர்கள் காட்டித் தந்த வழிநின்று தாய்ச்சபை முஸ்லிம் லீக் பேரியக்கத்தில் நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்வதை அந்தக் கடமையின் அங்கமாகக் கருதி பணியாற்றுகிறோம்.

நடைமுறை அரசியல்பாணி என்பது சில நேரங்களில் நமக்கு கசப்புணர்வாகத் தென்படுவதையும் இல்லை எனச் சொல்ல முடியாது. அப்படி என்ன கசப்பு? நமது சமுதாயத்தில் நாங்களும் பணியாற்றுகிறோம் எனச் சொல்லி புதுப்புது அர்த்தங்களை உருவாக்கிக் கொண்டு தனித்தனி அமைப்புகளாகச் செயல்படுபவர்களே நம்மைச் சீண்டுவதும், கீழான விமர்சனங்கள் செய்வதும், தவறான தகவல்களைத் தந்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுமான காரியங்களில் ஈடுபடுவதைத்தான் இங்கே குறிப்பிட்டுக் காட்ட விழைகிறேன். நம்மைச் சீண்டுவதையோ, கீழான விமர்சனங்கள் செய்வதையோ நாம் பொருட் படுத்துவதுமில்லை; அதற்காக பதில் சொல்ல வேண்டுமே என்று நேரம் ஒதுக்கி தரம் தாழ்ந்து விடுவதுமில்லை. ஆனால், சமுதாயத்திற்குத் தவறான தகவல்கள் தந்து குழப்பங்களை உருவாக்குகிறபோது நாம் அமைதியாக இருந்துவிடவும் கூடாது. காரணம், மக்களுக்குத் தெளிவான பாதையைக் காட்டித் தந்து, அரசியல் தளத்தில் சமுதாயத்தின் கண்ணியத்தை நிலைநாட்டுவது நமது கடமை என நினைக்கிறோம். அந்தப் பார்வையில் அண்மையில் நடந்த ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டு நம்முடைய இதழில் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என எண்ணுகிறோம்.

Friday, July 13, 2012

மார்க்கத்தை பிரித்தாலும் சூழ்ச்சி! (வீடியோ இணைப்புடன்)





(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.(குர்ஆன்-1:5)  It is You we worship and You we ask for help.


அல்லாஹ் அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் உயிரோடிருப்பவன். என்றென்றும் நிலைத்திருப்பவன். அவனை சிறுதுயிலோஇ உறக்கமோ பீடிக்கா. வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியது. (அல்குர்ஆன் 2:255)


  அன்பானவர்களே! தங்களை “சுன்னத் வல் ஜமாத்” என்று அறிவிப்பு செய்யும் சிலர் இஸ்லாத்தில் இல்லாத, இஸ்லாத்துக்கு விரோதமான அனாச்சரங்களை, கபுரு வணக்கத்தை, யூதர்கள் இஸ்லாத்தில் புகுத்திய மீலாது விழாக்களை, மவ்லீதுகளை இன்று இஸ்லாத்தின் பெயரால் நபி வழி என்றும், நபியை புகழ்கிறோம் என்றும் தாயத்து, தட்டு, நூல் முடிதல் என்று அனைத்து ஷிர்க்கான செயல்களையும் செய்து கொண்டு தங்களை “சுன்னத்வல்ஜமாத்” என்று கூறும் இவர்கள் இன்று தமிழகத்திலும் கால் பதித்து வருகிறார்கள்.

இவர்களை நாம் இன்று தலைவர்களாகவும் ஏற்க முயல்கின்றோம் . தனக்காக எழுந்து நிற்பதை கூட அல்லாஹ்வின் தூதர் அனுமதிக்க வில்லை. ஆனால் இவருக்காக இஸ்லாத்தில் இல்லாத மரியாதைகள் அளிக்கப்படுகிறது. வீண் ஆடம்பரம், அவர்களை  தொட்டு முத்தமிடுதல் கார், பவணி என்று அனேக அனாச்சாரங்கள் அவர்களின்  உண்மை நிலையை அடையாளம் காட்டுகிறது.

இவர்களுக்கும் நபி(ஸ்ல்)அவர்களின் சுன்னத்துக்கும் என்ன சம்மந்தம்? நபியுடையை மார்கத்திற்கு   மாற்றமாக செய்யும் இவர்களின் அனைத்து செயலும் நபியுடைய சுன்னததை சார்ந்ததாக இல்லை, இவைகள் காதியானிகள், ஷியாக்கள் இஸ்லாத்தின் பெயரால் புகுத்திய பித்அத்கள் ஆகும். இஸ்லாம் எதை ஒழிக்க வந்ததோ அதை  மார்க்கம் என்று இன்று போதித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் இவர்களை சரியாக  அடையாளம காட்டுகிறது இந்த மௌலானா ஷம்சுதீன் காசிமி ஜும்மா குத்பா உரை.(தலைப்பு :முஸ்ளி யார்? ) இதை திறந்த மனதுடன் கேட்டு நாம் நன்கு விளங்கி உண்மையான மூஃமின்களாக வாழ அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.
 Source : http://niduri.com/?p=776#comment-101

ரமளானும் அதன் சிறப்புகளும் - S. ALAUDEEN

அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

   அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)  ஒவ்வொரு வருடமும் நம்மை வந்து அடையும் புனித மாதத்தை வரவேற்பதில் மிக அதிக அளவில் நாம்  மகிழ்ச்சி  அடைகிறோம். இன்னும் சில தினங்களில் நம்மை வந்து அடைய இருக்கும் ரமளானைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் : 2:183)

நோன்பு சென்று போன சமூகத்தாருக்கும் கடமையாகி ஆரம்ப காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக நோன்பை கடமையாக்கி இருக்கிறேன் என்று வல்ல அல்லாஹ் கூறுகிறான்.

ரமளான் பிறை:


'ரமளான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள். (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்.' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) (புகாரி : 1906)

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்:

'ரமளான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி)நூல்: புகாரி: 1898).

'ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல் புகாரி :1899).

நோன்பும் உள்ளமும்:

நோன்பு பசியை உணரச்செய்கிறது. நல்ல பழக்கங்களை கற்றுத் தருகிறது. பிறருக்கு உதவும் எண்ணத்தை தாராளமாக வழங்குகிறது. மற்ற நேரங்களில் உதவும் எண்ணம் இல்லாதவர்கள் கூட நோன்பு காலங்களில் பிறருக்கு உதவி செய்யும் நிலைகளை காணமுடிகிறது.

எந்த ஒரு காரியத்தையும் தொடர்ந்து செய்தால் பழக்கமாகிவிடும். மற்ற நேரங்களில் மனிதர்கள் பல தவறுகளில் இருந்தாலும் நோன்புக் காலங்களில் எல்லாவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்கள். இப்படியே தொடர்ந்து கொண்டு இருப்பதால் (வருடா வருடம் நோன்பு வைப்பதால்) இறையச்சத்துடன் நோன்பு வைத்தவர்களின் கஞ்சத்தனம், தீய செயல்கள் இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை விட்டு அகன்று உள்ளத்தை தூய்மைபடுத்தி நல்லபழக்கத்தை கற்றுத்ததருகிறது புனித ரமளான் நோன்பு.

Thursday, July 12, 2012

நிவாரணம் செய்வதின் வழியே ஒரு மாற்றத்தை உண்டாக்குங்கள்


உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்வில் நிவாரணம்  செய்வதின் வழியே  ஒரு மாற்றத்தை உண்டாக்குங்கள்.
நமக்கு தேவையானவைகளை நாம் உழைத்து சம்பாதித்து அதனால் கிடைக்கும் பணத்தினைக் கொண்டு நாம் உண்டு வாழ்கின்றோம். உண்பதற்காக வாழ்வதில்லை. வாழ்வதற்காக உண்கின்றோம். நாம் உணவு சமைக்கும் போது  நமக்கு தேவையான அளவிற்கு மட்டும் சமைக்கின்றோம். அதிகமாக சமைத்து விரயம் செய்ய யாரும் விரும்புவதில்லை. திருமணம் விழாவில் சமைக்கும் உணவு பணக்காரர்களுக்கும்,உறவினர்களுக்கும் கொடுக்கப்படுகின்றது. அங்கு பசியால் வாடும் ஒருவர் வந்தால் மீதம் இருந்தால் இறுதியில் கொடுக்கின்றோம். ஆனால் அது மீதம் வந்ததால் கொடுக்கப் படுகின்றது. அவர்களையும் ஒரு விருந்தாளியாக யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. தர்மம் நம் வீட்டிலிருந்து ஆரம்பமாக வேண்டும் என்பது உண்மைதான். அதிகமாக இருப்பதனை விரயம் செய்யாமல் மற்றவருக்கும் மன மகிழ்வோடு கொடுப்பதில் ஒரு பெரிய நன்மையும் ஆத்ம  திருப்தியும் உண்டாவதனை அனுபவிக்கும்போதுதான் அதன் அருமை தெரிய வரும், நோன்பு காலம் வந்து விட்டது அந்த காலத்தில் முஸ்லிம்கள் பிச்சைப் போடுவதுபோல் செய்து விட்டு அதனையும் தர்ம கணக்கில் சேர்த்துக் கொள்ள விரும்புவார்கள். உண்மையான தர்மம் உள்ளத்திலிருந்து வர வேண்டும். அதற்கு  விரயம் செய்வதை தவிர்ப்பது முக்கியமாக உள்ளது. பள்ளிவாசலில் தேவைக்கு அதிகமாக நோன்புக் கஞ்சிக் காட்சி அதனை தேவையற்றோர் வாங்கிச் சென்று விரயம் செய்வதனை எங்கும் பார்க்கலாம்.

நபிகள் நாயகம் (ஸல்..) அவர்கள் கூறினார்கள்: 'மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்'.
நூல்: ஸஹீஹ் புஹாரி - 7376

Thursday, July 5, 2012

மூன்று செய்திகள்

மூன்று செய்திகள்:
-முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி.

அல்லாஹ்வின் தூதர் மனித சமூகத்திற்கு வழங்கிய நற்போதனைகள் ஏராளம் ஏராளம். அவைகளில் மூன்று விடயங்களாக இடம்பெற்ற செய்திகளுல் சில செய்திகளை மாத்திரம் இங்கு தொகுத்துள்ளேன். இதிலுள்ள செய்திகளை அனைவரும் படித்து பயன்பெற வேண்டுமென்பதையே நான் வல்ல நாயனிடம் பிரார்த்திக்கின்றேன்.
ஈமானின் உண்மையான சுவையை கண்டுகொண்டவர்:
“எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை)
  1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது,
  2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது,
  3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ஆதாரம்: புஹாரி).

LinkWithin

Related Posts with Thumbnails