Thursday, July 12, 2012

நிவாரணம் செய்வதின் வழியே ஒரு மாற்றத்தை உண்டாக்குங்கள்


உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்வில் நிவாரணம்  செய்வதின் வழியே  ஒரு மாற்றத்தை உண்டாக்குங்கள்.
நமக்கு தேவையானவைகளை நாம் உழைத்து சம்பாதித்து அதனால் கிடைக்கும் பணத்தினைக் கொண்டு நாம் உண்டு வாழ்கின்றோம். உண்பதற்காக வாழ்வதில்லை. வாழ்வதற்காக உண்கின்றோம். நாம் உணவு சமைக்கும் போது  நமக்கு தேவையான அளவிற்கு மட்டும் சமைக்கின்றோம். அதிகமாக சமைத்து விரயம் செய்ய யாரும் விரும்புவதில்லை. திருமணம் விழாவில் சமைக்கும் உணவு பணக்காரர்களுக்கும்,உறவினர்களுக்கும் கொடுக்கப்படுகின்றது. அங்கு பசியால் வாடும் ஒருவர் வந்தால் மீதம் இருந்தால் இறுதியில் கொடுக்கின்றோம். ஆனால் அது மீதம் வந்ததால் கொடுக்கப் படுகின்றது. அவர்களையும் ஒரு விருந்தாளியாக யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. தர்மம் நம் வீட்டிலிருந்து ஆரம்பமாக வேண்டும் என்பது உண்மைதான். அதிகமாக இருப்பதனை விரயம் செய்யாமல் மற்றவருக்கும் மன மகிழ்வோடு கொடுப்பதில் ஒரு பெரிய நன்மையும் ஆத்ம  திருப்தியும் உண்டாவதனை அனுபவிக்கும்போதுதான் அதன் அருமை தெரிய வரும், நோன்பு காலம் வந்து விட்டது அந்த காலத்தில் முஸ்லிம்கள் பிச்சைப் போடுவதுபோல் செய்து விட்டு அதனையும் தர்ம கணக்கில் சேர்த்துக் கொள்ள விரும்புவார்கள். உண்மையான தர்மம் உள்ளத்திலிருந்து வர வேண்டும். அதற்கு  விரயம் செய்வதை தவிர்ப்பது முக்கியமாக உள்ளது. பள்ளிவாசலில் தேவைக்கு அதிகமாக நோன்புக் கஞ்சிக் காட்சி அதனை தேவையற்றோர் வாங்கிச் சென்று விரயம் செய்வதனை எங்கும் பார்க்கலாம்.

நபிகள் நாயகம் (ஸல்..) அவர்கள் கூறினார்கள்: 'மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்'.
நூல்: ஸஹீஹ் புஹாரி - 7376


"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி)
நூல்கள்: புகாரி, முஸ்லிம்

"இறந்த என் தாய்-க்காக நான் செய்ய எது சிறந்த தர்மம்?" என நபி (ஸல்) அவர்களிடம் வினவினேன்.

"தண்ணீர் வழங்குதல்" என்றார்கள்.

அறிவிப்பவர்: சாது பின் உபதா (ரலி)
நூல்: நஸயி 3604

“தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
ஆதாரம் : புகாரி

"ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோராய் ஆகலாம்.

-திருக்குர்ஆன் 2:183

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails