Friday, August 30, 2013

தேரிழந்தூர் தாஜுதீன் இன்னிசை மலேசியாவில் [ 2 ]

தேரிழந்தூர் தாஜுதீன் இன்னிசை மலேசியாவில்(பகுதி 1). தீனிசைத் தென்றல்,தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார். S.E.A. முஹம்மது அலி ஜின்னா நீடூர். Jazakkallahu Hairan நன்றி

ஐரோப்பாவின் சிறந்த கால்பந்தாட்ட வீரராக பிலால் ப்ரான்க் ரிபரி தேர்வு.

அஸ்ஸலாமு அலைக்கும்,

2012/13 சீசனிற்கான சிறந்த ஐரோப்பிய கால்பந்தாட்ட வீரர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் நட்சத்திர ஆட்டக்காரரான பிலால் ரிபரி, கால்பந்து உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மெஸ்சி மற்றும் கிறிஸ்டினோ ரொனால்டோவை முந்தி இந்த விருதை தட்டி சென்றுள்ளார். இதன் மூலம் வரலாற்றின் தலைச்சிறந்த வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் ரிபரி. சில ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்லாத்தை ஏற்ற இவர், கால்பந்தாட்ட உலகில் சோதனைகளை சந்தித்து வந்த தான், இஸ்லாத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உணர்ந்ததாக கூறியவர்.

கோப்பையுடன் ரிபரி, படம் கீழே


இந்த செய்தி குறித்த ஆதார மூலம்::
http://onislam.net/english/news/europe/464255-muslim-ribery-wins-top-europe-award.html

வஸ்ஸலாம்..

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

இந்திய சட்டத்துறையில் ஷரீஅத் சட்டத்தின் பங்களிப்பு

(வழக்கறிஞர் நீடூர் அல்ஹாஜ் ஏ.எம். சயீத்)

(நபியே) உண்மையான இவ்வேதத்தை நாம் தான் உம்மீது இறக்கினோம். இது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மையாக்கி வைக்கின்றது. அன்றி அவைகளைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே நீர் அல்லாஹ் இறக்கிய இ(வ் வேதத்)தைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளியும். மெளட்டீகக் காலத்து சட்டங்களையா இவர்கள் விரும்பிகின்றனர். மெய்யாகவே நல்லுறுதி பூண்ட மக்களுக்கு அல்லாஹ்வை விட அழகான தீர்ப்பளிப்பவர் யார்? – திருக்குர்ஆன் 5:48-50.

திருக்குர்ஆன் என்பது எழுதப்பட்ட வேதமோ, நூலோ அல்ல. அருளப்பட்டது. எந்த ஒரு சொல்லோ, எழுத்தோ, புள்ளியோ அருளப்பட்ட நாளிலிருந்து இன்று வரை அப்படியே இருக்கிறது. இறையருளால் அது எந்த மாற்றமும் இல்லாமல் நிலைத்து நிற்கும்.

நம்பிக்கையுள்ளவர்களுக்கு பாதுகாவலனாக இருக்கிற இறைவன், உலக மக்களை அறியாமையின் ஆழமான இருளிலிருந்து அறிவு ஞானத்தின் பிரகாச உச்சத்திற்கு அவனே வழிகாட்டியாக இருந்து அழைத்து செல்கிறான் என்பதை திருமறை நமக்கு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. உலகத்தில் எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. ஆனால் அவை பின்பற்றும் வேதங்கள் மூலப்பிரதிகள் இல்லாமல் மாற்றப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டு சிதைந்து நிற்கின்றன.

Friday, August 23, 2013

லுங்கியன்

 ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ பார்த்துவிட்டு மஹிந்திரா க்ரூப்பின் சி.எம்.டி. ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் இயக்குனர் ரோஹித்ஷெட்டியை பாராட்டியிருந்தார். சிறுவயதிலிருந்தே ஆனந்தும் லுங்கி அணிகிறாராம். அதற்காக கிண்டலும் செய்யப்படுகிறாராம். சக லுங்கியன் என்கிற முறையில் ஆசுவாசமாக இருக்கிறது. ஒரு மெயின்ஸ்ட்ரீம் சினிமா, லுங்கி டான்ஸ் மூலமாக லுங்கியை கவுரவித்திருக்கிறது என்பது உலகம் முழுக்க பரவியிருக்கும் லுங்கியார்வலர்களுக்கு ஆதரவான விஷயம்தான்.

 பத்து வயதில் இருந்து லுங்கி அணிகிறேன். அப்போதெல்லாம் மாஸ்டர் லுங்கி என்று உயரத்திலும், சுற்றளவிலும் வாமனன் ஆக்கப்பட்ட லுங்கிகள் ரெடிமேடாக கிடைக்கும். பெரியவர்கள் அணியும் லுங்கியின் ரெட்யூஸ் டூ ஃபிட் மாதிரி கவர்ச்சியாக இருக்கும். இப்போது மாஸ்டர் லுங்கி கிடைக்கிறதா தெரியவில்லை. பாய்கள் கூட பெர்முடாஸுக்கு மாறிவிட்ட கலிகாலம் இது.
அப்பா, பிராண்டட் தயாரிப்பாகதான் வாங்கிக் கொடுப்பார். லுங்கி, ஜட்டி, பனியன் விஷயங்களில் சிக்கனம் பார்க்கக்கூடாது என்பது அவர் தரப்பு நியாயம். பிற்பாடு வளர்ந்து எனக்கு நானே உள்ளாடைகளை வாங்கும்போது, காசுக்கு சுணங்கி லோக்கல் தயாரிப்புகள் வாங்கி அவதிப்பட்டதுண்டு.
காட்டன் லுங்கிதான் பெஸ்ட். க்ரிப்பாக நிற்கும். என்ன பிரச்சினை என்றால் டிசைன்கள் குறைவு. டீக்கடை மாஸ்டர்கள் பாலியஸ்டர் அணிவதுண்டு. புள்ளி, ஸ்டார் போட்ட வகை வகையான டிசைன்களில் கிடைக்கும். ஒரே பிரச்சினை. இடுப்பில் நிற்காது. ஒரு முறை ஆசைப்பட்டு வாங்கி கருடகர்வ பங்கம் ஏற்பட்டு விட்டது.

Wednesday, August 21, 2013

எம்.பி.பி.எஸ். படிப்பில் 3 தங்கப் பதக்கங்கள் பெற்று முஸ்லிம் மாணவி சாதனை

M.B.B.S.-ல் 3 தங்கப் பதக்கங்கள் பெற்று முஸ்லிம் மாணவி சாதனை

எம்.பி.பி.எஸ். படிப்பில் 3 தங்கப் பதக்கங்கள் மற்றும் 2 வெள்ளிப்பதக்கங்களைப் பெற்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தஹ்ஸின் நிலோஃபர் சாதனை படைத்துள்ளார்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர் ஃபயீஸ் முஹம்மது அலீ, எம்.டி. (பொது மருத்துவம்) படிப்பில் 2 தங்கப்பதக்கங்கள் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

நேற்று (20.8.2013), சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பட்டங்களை வழங்கினார்.

  தஹ்ஸின் நிலோஃபர் 

மதுரை மருத்துவக் கல்லூரி மாணவி தஹ்ஸின் நிலோஃபர், கடந்த 2007-ல் சேர்ந்து 2013-ல் மருத்துவப் படிப்பை முடித்தார். முதலாம் ஆண்டு தேர்வில் உடற்கூறியியலிலும், இரண்டாம் ஆண்டில் மருந்தியல் பாடத்திலும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக அளவில் முதலிடத்தைப் பெற்றவராவார்.

முஸ்லிம் தீவிரவாதிகள்

.6 பில்லியன் முஸ்லிம் உலகில் வாழ்கிறார்கள். இவர்களுள் எத்தனை பேர் தீவிரவாதிகள்? விரல்விட்டு எண்ணிவிடலாம். சரி ஒரு கணக்குக்குள் கொண்டுவர முயல்வோம்.

ஒரு (1600) ஆயிரத்து அறுநூறு?

சரி போகட்டும் ஒரு (16,000) பதினாறு ஆயிரம் பேர்?

சரி அதுவும்போகட்டும் மிக மிக அதிகப்படியாக ஒரு (160,000) லட்சத்து அறுபதினாயிரம் பேர்?

1.6 பில்லியனில் 160,000 என்பது எத்தனை விழுக்காடு தெரியுமா?

0.01 % விழுக்காடு.

அதாவது பத்தாயிரம் பேருக்கு ஒருவன்.

இந்த ஒருத்தனையே காரணம்காட்டி மீதம் உள்ள ஒன்பதாயிரத்து தொல்லாயிரத்து தொன்னூற்றி ஒன்பது பேரையும் தீவிரவாதிகள் என்று சொல்வது ஏன் என்று எவரேனும் சிந்தித்துப் பார்த்தீர்களா?

99.99 % விழுக்காடு மக்கள் அஸ்ஸலாமு அலைக்கும் என்று அன்பும் அமைதியும் சாந்தமும் சமாதானமும் கொண்டு வாழ்கிறார்களே?

அளவற்ற அருளாளனின் நிகரற்ற அன்புடையோனின் கருணை கொண்டு அமைதி வழியில் வாழ்கிறார்களே, அவர்களை அப்படியே விட்டுவிட்டு ஏன் இந்த உலகம் ஏதோ சில தீவிரவாதிகளைக் கொண்டு இஸ்லாத்தைத் தீவிரவாதம் என்று முத்திரை குத்த நினைக்கிறது?

Tuesday, August 20, 2013

அப்துல்லாஹ் உடலை விட்டுக் கொடுத்தது இஸ்லாமிய கூட்டமைப்பின் தவறா?

டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் உடலை விட்டுக் கொடுத்தது தவறான முன்னுதாரணம் என சிலர் வாதிடுகின்றனர். ஆனால் இது சூழ்நிலை கருதி எடுக்கப்பட்ட சரியான முடிவு ஆகும் !

இதை அவர் மருத்துவமனயில் மரணித்த சமயத்தில் அங்கிருந்த சகோதரர்களிடம் நான் தடா ரஹீம் உள்ளிட்ட சகோதர்கள் பேசிய போது இதுதான் சிறந்த முடிவாக இருக்கும் என்பதை மற்ற தலைவர்களிடமும் சொல்லி ஒருமித்த கருத்துக்கு வர வலியுறுத்துவோம் ஆனாலும் கூட்டமைப்பின் இறுதி முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று கூறினோம்.

அல்லாஹ்வின் கிருபையால் மருத்துவமனையில் எடுத்த முடிவே மசுராவின் முடிவாகவும் அமைந்து அழகிய முறையில் அப்துல்லாஹ் அவர்களின் ஜனாஸா தொழுகை நடைபெற்றது! இது முஸ்லிம்களின் மேல் மதிப்பையும் , இஸ்லாத்தின் பால் மற்ற மக்களுக்கு ஈர்ப்பையும் ஏற்படுத்தியது.

இதுவல்லாமல் நாம் விட்டுக் கொடுக்காமல் போராடி அவர் உடலை எடுத்து அடக்க முற்பட்டிருப்போமானால் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும் !

உயிலும் உடலும் (மரண சாசனம்)

 “‘(மரண சாசனம் செய்ய) ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றிருக்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் அவர் தன்னுடைய மரண சாசனத்தை எழுதித் தன்னிடம் வைத்திருக்காமல் இரண்டு இரவுகள் கூட கழிப்பதற்கு அனுமதியில்லை’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார். (சஹீஹ் புகாரி. பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2738)

இந்த நபிமொழிக்கு முக்கியத்துவம் அளித்து இந்தியா போன்ற நாடுகளில் எத்தனை முஸ்லிம் மக்கள் உயில் எழுதி வைத்துக் கொள்கிறார்கள் எனத் தெரியவில்லை. பெரும்பாலானவர்களுக்கு காசு, பணம், துட்டு, சல்லி, டப்பு, money என்று வெவ்வேறு பெயர்களில் ஓடத்தான் நேரம் சரியாக இருக்கிறதே தவிர, ஏது இதற்கு பொழுது? தவிர, சேர்ப்பவற்றை காலா காலத்திற்கும் நமக்கு நாமே ஆண்டு அனுபவிக்கப் போகிறோம்; நூறு என்றில்லா விட்டாலும் தொண்ணூறைத் தாண்டுவோம் போன்ற அபத்த எண்ணங்கள் மனத்தை ஆக்கிரமித்துள்ளன.

Sunday, August 18, 2013

என் அன்புக்குரிய சகோதரனே அப்துல்லா வாகவே மரணித்தவனே

என் அன்புக்குரிய சகோதரனே
அப்துல்லா வாகவே மரணித்தவனே

அப்துல்லாவிர்க்கு முன் பெரியார்தாசன்
ஒரு போதம் இல்லை பெரியவன்
அப்துல்லாவே பெரியவன்

அல்ஹம்திரில்லாஹ் .......

என்று மேடை தோறும் முழங்கி
இறைவனுக்கு இணங்கி
இணைந்தாய் இஸ்லாத்தில் மனம் விரும்பி

எப்படியேனும் TV ல் முகம் காட்ட முடியாத
பேசுவதற்கு ஒரு மேடை கிடைக்காதா

என்று அலைபவர்களுக்கு மத்தியில்
அதையெல்லாம் துறந்து விட்டு வந்தாய் ஒத்தையில்

காச்சி ஊடகங்களில் நீ கலக்கிய காலம்
மேடைகளில் நீ ஆற்றிய இலக்கிய சாரம்

இஸ்லாத்திர்க்காய் அத்தனையும் துறந்தாய்
இஸ்லாம்தான் சரியான மார்க்கம் என வாய் திறந்தாய்

என் அண்ணனே என் அன்புக்குரியவனே
அதிகம் நா வாற்றல் பெற்றவனே

இழந்தோமடா உன்னை நாங்கள்
உனக்காக துவா கேட்க ஏந்துகிறது எங்கள் கரங்கள்

பொருந்தி கொள்வான்
உன்னை இறைவன்

காரணம் அல்லா தான் என் இறைவன்
என்று நீ ஏற்று கொண்டவன்

Wednesday, August 14, 2013

சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள்

மகாத்மாவை அதிர வைத்த மாமனிதர்

 wபோராடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 - ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிட்டனர்.

 அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பாயிலும் மீதமுள்ள 40 லட்சத்தைப் பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி அறிவித்தார். பம்பாயின் மிகப் பெரிய தொழில் அதிபர்களான ஏ.பி. காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாராயணன் இந்து மல்தானி ஐந்து லட்சமும், ஆனந்திலால் இரண்டு லட்சமும் நிதி வழங்கினர்.

முஸ்லிம் பெண்களை ஏன் பீவீ என்று அழைக்கிறார்கள்?

நான் பிறந்த ஊர் ஒரத்தநாடு. அது தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறது.

தஞ்சாவூருக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடையில் ஒரத்தநாடு ஒய்யாரமாய் உட்கார்ந்திருக்கிறது.

எனக்கு அப்போது வயது ஒரு 20 இருக்கும். என் அக்கா வீட்டிற்கு அருகில் ஒரு மாதா கோவில் இருக்கிறது. அதை மடம் என்று சொல்வார்கள்.

அங்கே நிறைய அனாதைக் குழந்தைகள் படிக்கிறார்கள். எல்லாம் இலவசம். அந்தச் சேவையை நினைத்தமாத்திரம் என் நெஞ்சம் நெகிழும்.

அனாதைகளை ஆதரிக்கும் எவரையும் எனக்குப் பிடிக்கும் கூடவே அவர்களுக்குக் கல்வி வழங்கினால் எத்தனை கருணை மனம் அது. போற்ற வார்த்தைகள் இல்லை.

மடத்தின் நிர்வாகியை அம்மாங்க என்றும் மற்ற மடத்துக் கன்னிகளை சிஸ்டர் என்றும் அங்கே அழைப்பார்கள். இந்த சிஸ்டர் என்பதை ஏன் தமிழ்ப்படுத்தவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.

நான் ஒரு விசயமாக அம்மாங்கவைச் சந்திக்கச் சென்றிருந்தேன். என்னை அன்போடு விசாரித்த அவர், பீவி எங்கே வரவில்லையா என்றார்கள்.

எனக்குத் திருமணம் ஆகி இருக்கவில்லை. அவர்கள் பீவி என்று மரியாதையாகச் சொன்னது என் மூத்த சகோதரியை. என் சகோதரிமீது அவர்களுக்கு மரியாதை அதிகம்.

Thursday, August 8, 2013

துபாயில் பெருநாள் தொழுகை (2013)

துபாயில் பெருநாள் தொழுகை (2013) - 1 துபாயில் பெருநாள் தொழுகை (2013) - 2 துபாயில் பெருநாள் தொழுகை (2013) - 3 துபாயில் பெருநாள் தொழுகை (2013) - 4 பெருநாள் வாழ்த்துகள் May ALMIGHTY ALLAH give Peace & shower HIS Blessings to you and to all
"May Allâh reward you [with] goodness."
S.E.A.Mohamed Ali (Jinnah), Nidur,Tamilnadu,India. Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah. Every mistake is from me, and any Truth is from Allah, The Enduring One, He is the Enduring One, I know nothing save that which He hath taught me.

Saturday, August 3, 2013

மாணவர்களுக்கு CBSE வழங்கும் உதவித்தொகை

CBSE (Central Board of Secondary Education) எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் CBSE வழங்கும் கல்வி உதவித்தொகை பெற தகுதியுடைய மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பள்ளி மாணவிகள், கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் படிக்கும் சிறந்த மாணவர்களுக்கும் CBSE உதவித்தொகை வழங்குகிறது. ஏற்கனவே உதவித்தொகை பெறும் மாணவர்கள் தொடர்ந்து உதவித்தொகை பெற விண்ணப்பங்களை புதுப்பித்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Friday, August 2, 2013

கல்விப் பணியில் முஸ்லிம் பெண்கள்- வரலாற்றின் ஒளியில்..! சிராஜுல்ஹஸன்

ஒரு மலாலா அல்ல, ஓராயிரம் மலாலாக்கள்-

அதாவது முஸ்லிம் பெண்கள் கல்விக்காக
பெரும் பங்காற்றியுள்ளனர்.
இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது
எந்தத் தாலிபான்களும்
அவர்களைத் தடுக்கவும் இல்லை. சுடவும் இல்லை.
இதோ அந்தக் கல்வி வைரங்கள்.
மிக நீண்ட கட்டுரையைச் சுருக்கமாக தருகிறேன்.


·குர்ஆன் அறிவிலும் நபிமொழிக் கலையிலும் சிறந்து விளங்கிய
பெண் அறிஞர்கள்: ஆயிஷா, ஹப்ஸா, உம்மு மைமூனா,
உம்மு தர்தா, உம்மு சல்மா, உம்மு ஹபீபா.

Thursday, August 1, 2013

பாவ மன்னிப்பு (வீடியோ உரை)

"பாவ மன்னிப்பு" எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காமிற்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி ஷரஃபுத்தீன் உமரி.

  "எவர் ஒருவர் ரமளான் மாதத்தை அடைந்தும் அல்லாஹ்விடமிருந்து பாவமன்னிப்பு கோரவில்லையோ அவரும் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாகட்டும்" என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் துவா செய்தபோது நபி (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறியதாகக் கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது. இதுவும் நமக்கு ரமலானின் துவாக்களில் பாவமன்னிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது:மகத்தான நற்பாக்கியங்கள் !!!!

1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்

2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.

3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்‘ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்.

4) அல்கஹ்ப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களை மனனமிட்டால் தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு பெற்று விட்டார்.

5) எவர் கடமையான தொழுகைகளுக்கு முன் பின் உள்ள பன்னிரண்டு ரக்அத் சுன்னத்தை தொழுது வருவாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகின்றான்

6) எவர் நபியின் மீது ஒரு தடவை ஸலவாத்துச் சொல்வாரோ அல்லாஹ் அவருக்கு பத்து முறை அருள் புரிகின்றான்

7) எவர் மஸ்ஜிதுக்கு செல்வாரோ அல்லது மஸ்ஜிதில் இருந்து திரும்புவாரோ மஸ்ஜிதுக்கு செல்லும் போது அல்லது திரும்பும் போது வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் சுவர்க்கத்தில் அந்தஸ்துகள் உயர்த்தப்படும்.

8.) எவர் அதிகாலை (ஃபஜ்ரு)த் தொழுகையை பெனுகிறாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் வந்து விடுகிறார்...

9) எவர் கடமையான தொழுகையின் பின் ஆயதுல் குர்ஸியை ஓதி வருவாரோ அவருக்கு சுவர்க்கம் நுழைவதற்கு மரணத்தை தவிர வேறெதுவும் தடையாக இருக்காது.

10) எவர் அழகான முறையில் ஒழுச் செய்து பிறகு ஜும்ஆவுக்கு வந்து மொளனமாக செவி தாழ்த்தி உரையை செவிமடுப்பாரோ அவரது ஜும்ஆவுக்கு இடைபட்ட பாவங்களும், மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்படும்.

11) எவர் உறவினர்களுடன் சேர்ந்து வாழ்கின்றாரோ அல்லாஹ் அவரது ரிஸ்கை விஸ்தீர்ணப்படுத்துவதோடு, அவரது ஆயுளையும் நீட்டுகிறான்.

தலைச்சிறந்த உயிரியல் விஞ்ஞானியான உபைத் சித்திகி மரணம் - விபத்து ஏற்படுத்தியவரை மன்னித்த குடும்பத்தினர்...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சுவையும், வாசமும் மூலையில் எப்படி உணரப்படுகின்றது என்பதில் அற்புதமான முன்னேற்றத்தை உலகிற்கு காட்டியவர் உபைத் சித்திகி (வயது 81). அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர், இந்திய தேசிய உயிரியல் மையத்தில் பேராசிரியராக பணியில் இருந்தார். கடந்த புதன்கிழமை, அவரது வீட்டருகே, பைக்கில் வந்த ஒரு இளைஞர் உபைத் சித்திகியை மோதிவிட்டார். காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உபைத், சிகிச்சை பலனளிக்காமல் மரணத்தை தழுவினார் (இன்னாலில்லாஹி).

விபத்து ஏற்படுத்திய அந்த இளைஞரின் எதிர்கால வாழ்வை மனதில் கொண்டு அவர் மீது வழக்கு தொடுக்க சித்திகியின் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். இந்தியாவின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான உபைத்தின் மரணம் குறித்து தி ஹிந்துவில் வெளிவந்துள்ள செய்தி http://m.thehindu.com/news/national/acclaimed-biologist-obaid-siddiqi-dies-aged-81/article4957261.ece/?maneref=http%3A%2F%2Fen.m.wikipedia.org%2Fwiki%2FObaid_Siddiqi

இப்படியான அருமையான ஆய்வாளர்களை அவர்கள் இறக்கும் தருவாயில்  தான் அறிந்துக்கொள்ள முடிகின்றது... #என்னத்த சொல்ல :-(

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

LinkWithin

Related Posts with Thumbnails