இதை அவர் மருத்துவமனயில் மரணித்த சமயத்தில் அங்கிருந்த சகோதரர்களிடம் நான் தடா ரஹீம் உள்ளிட்ட சகோதர்கள் பேசிய போது இதுதான் சிறந்த முடிவாக இருக்கும் என்பதை மற்ற தலைவர்களிடமும் சொல்லி ஒருமித்த கருத்துக்கு வர வலியுறுத்துவோம் ஆனாலும் கூட்டமைப்பின் இறுதி முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று கூறினோம்.
அல்லாஹ்வின் கிருபையால் மருத்துவமனையில் எடுத்த முடிவே மசுராவின் முடிவாகவும் அமைந்து அழகிய முறையில் அப்துல்லாஹ் அவர்களின் ஜனாஸா தொழுகை நடைபெற்றது! இது முஸ்லிம்களின் மேல் மதிப்பையும் , இஸ்லாத்தின் பால் மற்ற மக்களுக்கு ஈர்ப்பையும் ஏற்படுத்தியது.
இதுவல்லாமல் நாம் விட்டுக் கொடுக்காமல் போராடி அவர் உடலை எடுத்து அடக்க முற்பட்டிருப்போமானால் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும் !
1] காவல்துறை தலையிடும் அளவுக்கு சட்டம் ஒழுங்க பிரச்சனையாக ஆகி இருக்கும்.
2] அதன் மூலம் அவரின் இறுதி விருப்பத்தை ஒரு உயர்ந்த உடல் தானத்தைக் கூட அனுமதிக்காத பிற்போக்கானவர்கள் முஸ்லிம்கள் என இஸ்லாத்தின் எதிரிகளால் விமர்சிக்கப்பட்டிருக்கும் !
3] முஸ்லிம்கள் விஷயத்தில் வெறும் வாயை மெல்லும் அனைத்து ஊடகங்களுக்கும் அவல் கிடைத்தது போல் இது விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கும்!
4] இன்றைக்கு நமக்கு ஆதரவாக இருந்த மதிமுக , விடுதலை சிறுத்தைகள் கூட வேறுபட்டு நின்று இருக்கும் !
5] இழவு வீட்டில் இப்படி நடந்து கொள்கிறார்களே என அவரின் குடும்பத்தார் மத்தியில் இஸ்லாம் குறித்த வெறுப்புணர்வு மட்டுமே மிஞ்சி இருக்கும் !
அவர் எழுதி வைத்ததாக தெரியவில்லையே ! குடுமபத்தினர் கூறுவதில் உண்மை இல்லாமல் இருக்கலாம் இல்லையா! அப்படி இருக்கும் போது அதற்காக அடக்கம் செய்யாமல் மார்கத்தை விட்டுக் கொடுக்க முடியுமா ? எனக் கேட்கலாம் ! இது அவர்களின் குடும்பத்தார் எடுத்த முடிவு ! இதில் நாம் தலையிடுவதற்கும் போராடுவதற்கும் சட்ட ரீதியாக எந்த உரிமையும் இல்லை !
அது பற்றி அல்லாஹ் தீர்ப்பளிப்பான் ! எப்படி பின்லேடன் உடல் விஷயத்தில் அமெரிக்கா நடந்து கொண்ட முறை பற்றி நமக்கு கேள்வி இல்லையோ அப்சல் குரு விஷயத்தில் இந்திய அரசு நடந்து கொண்ட முறை நமக்கு கேள்வி இல்லையோ அது போலவே அப்துல்லாஹ் உடல் விஷயத்திலும் நமக்கு கேள்வி இல்லை ! சமுதாயக் கடமையான ஜனாஸா தொழுகையை நாம் நடத்தி விட்டோம்.
அவர்கள் எரிக்கவோ அல்லது வேறு முறைப்படி அடக்கவோ செய்தால் அதை எதிர்ப்பதில் அர்த்தம் இருக்கும் ! உடல் தானம் எனும் முடிவில் மார்க்க அறிஞர்களே ஒருமித்த முடிவுக்கு வராத நிலையில் இதுதான் சிறந்த முடிவாக இருக்கும்!
ஆனால் இன்றைக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல்
குடும்பத்தார் மத்தியில், முஸ்லிமல்லாத வைகோ, திருமா போன்றவர்கள் 'முஸ்லிம்களாகிய நீங்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டீர்கள்' என பாரட்டும் அளவில், இஸ்லாத்தின் இறுதிச் சடங்கு என்ன என்பதை ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து முஸ்லிமல்லாதவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் , ஒரு அழைப்பு நிகழ்ச்சியாக அமைத்து தந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் ! இதில் ஒரு மித்த கருத்தை உருவாக்க அனைவரின் உள்ளங்களையும் ஒன்றிணைத்த ஒரிறைக்கே பெருமை அனைத்தும்.
- செங்கிஸ் கான்
No comments:
Post a Comment