Wednesday, August 21, 2013

எம்.பி.பி.எஸ். படிப்பில் 3 தங்கப் பதக்கங்கள் பெற்று முஸ்லிம் மாணவி சாதனை

M.B.B.S.-ல் 3 தங்கப் பதக்கங்கள் பெற்று முஸ்லிம் மாணவி சாதனை

எம்.பி.பி.எஸ். படிப்பில் 3 தங்கப் பதக்கங்கள் மற்றும் 2 வெள்ளிப்பதக்கங்களைப் பெற்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தஹ்ஸின் நிலோஃபர் சாதனை படைத்துள்ளார்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர் ஃபயீஸ் முஹம்மது அலீ, எம்.டி. (பொது மருத்துவம்) படிப்பில் 2 தங்கப்பதக்கங்கள் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

நேற்று (20.8.2013), சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பட்டங்களை வழங்கினார்.

  தஹ்ஸின் நிலோஃபர் 

மதுரை மருத்துவக் கல்லூரி மாணவி தஹ்ஸின் நிலோஃபர், கடந்த 2007-ல் சேர்ந்து 2013-ல் மருத்துவப் படிப்பை முடித்தார். முதலாம் ஆண்டு தேர்வில் உடற்கூறியியலிலும், இரண்டாம் ஆண்டில் மருந்தியல் பாடத்திலும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக அளவில் முதலிடத்தைப் பெற்றவராவார்.

தற்போது மருத்துவக் கல்வியை முடித்துள்ள மாணவி தஹ்ஸின் நிலோஃபர், அறுவைச் சிகிச்சை, மருந்தியல் தங்கப் பதக்கங்களையும், நோய்க் குறியியல், நுண்ணுயிரியல் சிறப்புத் தகுதிச் சான்றுகளையும் பெற்றுள்ளார். இவரின் தந்தை ஜ அஃபர் சாதிக் ராமநாதபுரத்தில் நரம்பியல் துறை மருத்துவ நிபுணராக உள்ளார். இம்மாணவியின் தாயார் சாதிக்கா சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணராக உள்ளார்.

தஹ்ஸின் நிலோஃபரரின் சகோதரிகளில் ஒருவரான பாய்க்கா மதுரை மருத்துவக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். மற்றொரு சகோதரியான ஜுமானா கோவையில் தனியார் மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

மருத்துவக் கல்வியில் பதக்கங்களைக் குவித்துள்ள தஹ்ஸின் நிலோஃபர் பிளஸ் 2 தேர்வில் 1200 க்கு 1184 மதிப்பெண்கள் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

அதுமட்டுமின்றி கடந்த 2007-ல் மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை வகித்தவர்.

தஹ்ஸின் நிலோஃபர் அகச் சுரப்பியல் சிகிச்சைத் துறையில் மருத்துவப் பட்ட மேற்படிப்பைத் தொடர உள்ளதாக தெரிவித்தார்.

  நெல்லை மாணவர் ஃபயீஸ் முஹம்மது அலீ 

நெல்லை மாணவர் ஃபயீஸ் முஹம்மது அலீ, எம்.பி.பி.எஸ். படிப்பை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியிலும், எம்.டி. படிப்பை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியிலும் படித்தார்.

இவருக்கு அப்போலோ தங்கப் பதக்கம்,

டாக்டர் ஆர்.வி. தங்கப் பதக்கம்,

இறையடிமை இ.ஏ.ஜியாவுத்தீன் நினைவுப் பரிசு,

பேராசிரியர் டாக்டர் ஜி.ப்.வெஸ்ட் நினைவுப் பரிசு

ஆகியவை பட்டமளிப்பு விழாவில் வழகப்பட உள்ளன.

சாதனை படைத்துள்ள மாணவ மாணவிகளுக்கும்,

அவர்களை ஈன்றெடுத்த பெற்றோர்களுக்கும்,

பயிற்றுவித்த ஆசிரியப் பெருமக்களுக்கும்

நமது வாழ்த்துக்கள்.

www.nidur.info

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails